9
Nov.2014
1320. நினைத்திருந்து நோக்கினும் காயும்
1320. Ninaththirundhu Nokkinum Kaayum
-
குறள் #1320
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்புலவி நுணுக்கம் (Pulavi Nunukkam)
Feigned Anger
-
குறள்நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
யாருள்ளி நோக்கினீர் என்று. -
விளக்கம்தலைவியின் அழகையே நினைத்திருந்து பார்த்தாலும், ‘வேறு எப்பெண்களின் உறுப்பு அழகை நினைத்து அவற்றோடு ஒப்பிட்டுப் பார்க்கின்றீர்’ என்று சினம் கொள்வாள்.
-
Translation
in EnglishI silent sat, but thought the more, And gazed on her. Then she
Cried out, ‘While thus you eye me o’er, Tell me whose form you see’. -
MeaningEven when I look on her contemplating (her beauty), she is displeased and says, “With whose thought have you (thus) looked on my person?”
9
Nov.2014
1319. தன்னை உணர்த்தினும் காயும்
1319. Thannai Unarththinum Kaayum
-
குறள் #1319
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்புலவி நுணுக்கம் (Pulavi Nunukkam)
Feigned Anger
-
குறள்தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்
இந்நீரர் ஆகுதிர் என்று. -
விளக்கம்தலைவியின் பிணக்கைத் தீர்த்தாலும், ‘பிற பெண்களிடத்தும் இவ்வாறு பிணக்குத் தீர்ப்பீர்’ என்று கோபிக்கிறாள்.
-
Translation
in EnglishI then began to soothe and coax, To calm her jealous mind;
‘I see’, quoth she, ‘to other folks How you are wondrous kind’ -
MeaningEven when I try to remove her dislike, she is displeased and says, “This is the way you behave towards (other women).”
9
Nov.2014
1318. தும்முச் செறுப்ப அழுதாள்
1318. Thummuch Cheruppa Azhuthaal
-
குறள் #1318
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்புலவி நுணுக்கம் (Pulavi Nunukkam)
Feigned Anger
-
குறள்தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்
எம்மை மறைத்திரோ என்று. -
விளக்கம்நான் தும்மலை அடக்கியபோது, ‘உமக்கு வேண்டியவர் நினைப்பதை எனக்கு மறைத்தீரோ’ என்று சொல்லி அழுதாள்.
-
Translation
in EnglishAnd so next time I checked my sneeze; She forthwith wept and cried,
(That woman difficult to please), ‘Your thoughts from me you hide’. -
MeaningWhen I suppressed my sneezing, she wept saying, “I suppose you (did so) to hide from me your own people’s remembrance of you”.
9
Nov.2014
1317. வழுத்தினாள் தும்மினேன் ஆக
1317. Vazhuththinaal Thumminen Aaga
-
குறள் #1317
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்புலவி நுணுக்கம் (Pulavi Nunukkam)
Feigned Anger
-
குறள்வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று. -
விளக்கம்நான் தும்மினேன்; உடனே வாழ்த்தினாள்; பின்னர் ‘யார் நினைத்ததால் தும்மினீர்?’ என்று சொல்லி அழுதாள்.
-
Translation
in EnglishShe hailed me when I sneezed one day; But straight with anger seized,
She cried; ‘Who was the woman, pray, Thinking of whom you sneezed?’ -
MeaningWhen I sneezed she blessed me, but at once changed (her mind) and wept, asking, “At the thought of whom did you sneeze?”
9
Nov.2014
1316. உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர்
1316. Ullinen Endrenmat Renmarantheer
-
குறள் #1316
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்புலவி நுணுக்கம் (Pulavi Nunukkam)
Feigned Anger
-
குறள்உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்
புல்லாள் புலத்தக் கனள். -
விளக்கம்‘நினைத்தேன்’ என்று கூறினேன்; ‘என்னை இங்ஙனம் நினைக்கு முன் மறந்தீர்’ என்று சொல்லி என்னைத் தழுவாது பிணங்கினாள்.
-
Translation
in English‘Each day I called to mind your charms,’ ‘O, then, you had forgot,’
She cried, and then her opened arms, Forthwith embraced me not. -
MeaningWhen I said I had remembered her, she said I had forgotten her and relaxing her embrace, began to feign dislike.
9
Nov.2014
1315. இம்மைப் பிறப்பில் பிரியலம்
1315. Immaip Pirappil Piriyalam
-
குறள் #1315
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்புலவி நுணுக்கம் (Pulavi Nunukkam)
Feigned Anger
-
குறள்இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண் டனள். -
விளக்கம்‘இப்பிறப்பில் பிரிய மாட்டேன்’ என்று சொன்னபோது, ‘மறுபிறப்பிலே பிரிவேன்’ என்று பொருள் கொண்டு கண்கள் நிறைந்த நீரைக் கொண்டாள்.
-
Translation
in English‘While here I live, I leave you not,’ I said to calm her fears.
She cried, ‘There, then, I read your thought’; And straight dissolved in tears. -
MeaningWhen I said I would never part from her in this life her eyes were filled with tears.
9
Nov.2014
1314. யாரினும் காதலம் என்றேனா
1314. Yaarinum Kaathalam Endrenaa
-
குறள் #1314
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்புலவி நுணுக்கம் (Pulavi Nunukkam)
Feigned Anger
-
குறள்யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று. -
விளக்கம்நான் எல்லோரையும் விட உன்னைக் காதலிக்கின்றேன் என்று சொன்ன பொது, காதலி ‘யாரினும் யாரினும்’ என்று சொல்லி என்னோடு பிணங்கினாள்.
-
Translation
in English‘I love you more than all beside,’ ‘T was thus I gently spoke;
‘What all, what all?’ she instant cried; And all her anger woke. -
MeaningWhen I said I loved her more than any other woman, she said “more than others, yes, more than others,” and remained sulky.
9
Nov.2014
1313. கோட்டுப்பூச் சூடினும் காயும்
1313. Kottuppooch Choodinum Kaayum
-
குறள் #1313
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்புலவி நுணுக்கம் (Pulavi Nunukkam)
Feigned Anger
-
குறள்கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீர் என்று. -
விளக்கம்நான் கிளைகளில் மலர்ந்த மலர்களால் ஆன மாலையைச் சூடினாலும், ‘நீர் விரும்பும் ஒருத்திக்கு இதனைக் காட்டும் பொருட்டுச் சூடினீர்’ என்று கூறிக் கோபிப்பாள்.
-
Translation
in EnglishI wreathed with flowers one day my brow, The angry tempest lowers;
She cries, ‘Pray, for what woman now Do you put on your flowers?’ -
MeaningEven if I were adorned with a garland of branch-flowers, she would say I did so to show it to another woman.
9
Nov.2014
1312. ஊடி இருந்தேமாத் தும்மினார்
1312. Oodi Irunthemaath Thumminaar
-
குறள் #1312
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்புலவி நுணுக்கம் (Pulavi Nunukkam)
Feigned Anger
-
குறள்ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
நீடுவாழ் கென்பாக் கறிந்து. -
விளக்கம்யாம் ஊடியிருந்தபோது, நான் ஊடல் தீர்ந்து அவரை ‘நெடிது வாழ்க’ என்று வாழ்த்துவேன் என்று கருதி, அவர் தும்மினார்.
-
Translation
in EnglishOne day we silent sulked; he sneezed: The reason well I knew;
He thought that I, to speak well pleased, Would say, ‘Long life to you!’ -
MeaningWhen I continued to be sulky he sneezed and thought I would (then) wish him a long life.
9
Nov.2014
1311. பெண்ணியலார் எல்லாரும் கண்ணின்
1311. Penniyalaar Ellaarum Kannin
-
குறள் #1311
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்புலவி நுணுக்கம் (Pulavi Nunukkam)
Feigned Anger
-
குறள்பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு. -
விளக்கம்பரத்தைமை உடையானே! பெண் தன்மையுடையவர் எல்லாரும் தமது கண்களால் பொதுவாக உன்னை அனுபவிப்பர்; ஆகையால், நான் உன் மார்பைச் சேரமாட்டேன்.
-
Translation
in EnglishFrom thy regard all womankind Enjoys an equal grace;
O thou of wandering fickle mind, I shrink from thine embrace! -
MeaningYou are given to prostitution; all those who are born as womankind enjoy you with their eyes in an ordinary way. I will not embrace you.