4.4/5 - (5 votes)
முல்லா ஒரு மாலை நேரத்தில் தன் நண்பர் ஒருவர் வீட்டிற்குச் சென்று அவருடன் நேரம் போனது தெரியாமல் பேசிக் கொண்டிருந்தார்.
இருட்டாகி விட்டது நண்பருக்கு மெழுகுவர்த்தியை எங்கு வைத்தேன் என்று தெரியவில்லை. இருட்டில் அங்குமிங்குமாக அலைந்து கொண்டிருந்தார்.
” என்ன சமாச்சாரம் ” என்று கேட்டார் முல்லா.
” மெழுகுவர்த்தியை எங்கோ வைத்து விட்டேன், இருட்டில் உட்கார்ந்தா நாம் பேசிக் கொண்டிருப்பது?” என்று நண்பர் வருத்தத்தோடு கூறினார்.
” இதற்காகவா, கவலைப்படுகிறீர்கள் நமது பேச்சு ஒலி இருட்டில் கூட நம் இருவர் காதுகளில் விழும் என்பதை மறந்து விட்டீரா?” என்றார்.
முல்லாவின் சந்தர்ப்பத்துக்கு ஏற்ற சாதுரியமான நகைச்சுவையை அனுபவித்து ரசித்த நண்பர் மகிழ்ச்சியோடு சிரித்துக் கொண்டார்.
Category: முல்லா கதைகள்
No Comments