முல்லாவின் கதைகள் – உண்மை என்பது என்ன?

4/5 - (5 votes)

ஒரு தடவை முல்லா சில பொருட்கள் வாங்குவதற்காக சந்தைக்குச் சென்றார்.

அங்கே ஒரிடத்தில் பத்துப் பதினைந்து பேர் கும்பலாகக் கூடி எதைப்பற்றியோ விவாதித்துக் கொண்டிருந்தனர்.

” இங்கே என்ன நடக்கிறது?” என்று முல்லா விசாரித்தார்.

” நல்ல சமயத்தில் வந்தீர் முல்லா அவர்களே.. நாங்கள் ஒரு விஷயத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறோம், ஆனால் எங்களில் யாருக்குமே எங்கள் ஆராய்ச்சி பற்றி ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. எங்கள் சந்தேகத்தைத் தீர்த்து வைக்கிறீரா?” என்று கூட்டத்திலிருந்த ஒருவர் கேட்டார்.

” உங்கள் சந்தேகம் என்ன?” என்று முல்லா கேட்டார்.

” உண்மை .. .. .. உண்மை என்ற எல்லோரும் பிரமாதமாகப் பேசுகிறார்களே, அந்த உண்மை என்பது என்ன?” என்று கூட்டத்திலிருந்த ஒருவர் வினா எழுப்பினார்.

முல்லா பெரிதாகச் சிரித்தார், ” இந்தச் சின்ன விஷயம் உங்களுக்கு விளங்கவில்லையா? உலகத்தில் எந்த ஒரு மனிதனும் சிந்திக்கவோ – பேசவோ – செயற்படவோ விரும்பாத ஒரு வரட்டுத் தத்துவந்தான் உண்மை” என்று கூறிவிட்டு முல்லா அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.

Leave a comment