9
Nov.2014
0290. கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை
0290. Kalvaarkkuth Thallum Uyirnilai
-
குறள் #0290
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்கள்ளாமை(Kallaamai)
The Absence of Fraud
-
குறள்கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத்
தள்ளாது புத்தே ளுளகு. -
விளக்கம்களவிலே பழகியவர்க்கு உடம்பும் தவறிப் போகும். களவிலே பழகாதவர்குத் தேவருலகும் தவறாது கிடைக்கும்.
-
Translation
in EnglishThe fraudful forfeit life and being here below;
Who fraud eschew the bliss of heavenly beings know. -
MeaningEven their body will fail the fraudulent; but even the world of the gods will not fail those who are free from fraud.
9
Nov.2014
0289. அளவல்ல செய்தாங்கே வீவர்
0289. Alavalla Seithaange Veevar
-
குறள் #0289
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்கள்ளாமை(Kallaamai)
The Absence of Fraud
-
குறள்அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர். -
விளக்கம்களவைத் தவிர வேறு எதையும் அறியாதவர், அளவு கடந்த தீமைகளைச் செய்து, அப்பொழுதே கெடுவர்.
-
Translation
in EnglishWho have no lore save that which fraudful arts supply,
Acts of unmeasured vice committing straightway die. -
MeaningThose, who are acquainted with nothing but fraud, will perish in the very commission of transgression.
9
Nov.2014
0288. அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல
0288. Alavarindhaar Nenjath Tharampola
-
குறள் #0288
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்கள்ளாமை(Kallaamai)
The Absence of Fraud
-
குறள்அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்
களவறிந்தார் நெஞ்சில் கரவு. -
விளக்கம்பொருளின் தன்மைகளை ஆராய்ந்து அறிந்தவரது நெஞ்சில் அறம் நிலை பெற்றிருப்பதுபோல், களவை அறிந்தவரின் மனத்தில் வஞ்சனை நிலை பெற்றிருக்கும்.
-
Translation
in EnglishAs virtue dwells in heart that ‘measured wisdom’ gains;
Deceit in hearts of fraudful men established reigns. -
MeaningDeceit dwells in the mind of those who are conversant with fraud, even as virtue in the minds of those who are conversant with rectitude.
9
Nov.2014
0287. களவென்னும் காரறி வாண்மை
0287. Kalavennum Kaarari Vaanmai
-
குறள் #0287
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்கள்ளாமை(Kallaamai)
The Absence of Fraud
-
குறள்களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்கண்ட இல். -
விளக்கம்தனக்குரிய அளவில் நிற்றல் என்னும் பெருமையை விரும்புகின்றவனிடத்தில், களவு என்னும் இருண்ட மயக்க அறிவு இருக்காது.
-
Translation
in EnglishPractice of fraud’s dark cunning arts they shun,
Who long for power by ‘measured wisdom’ won. -
MeaningThat black-knowledge which is called fraud, is not in those who desire that greatness which is called rectitude.
9
Nov.2014
0286. அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார்
0286. Alavinkan Nindrozhugal Aatraar
-
குறள் #0286
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்கள்ளாமை(Kallaamai)
The Absence of Fraud
-
குறள்அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர். -
விளக்கம்களவில் அதிக ஆசையுள்ளவர், தாம் நடப்பதற்குரிய அளவில் நின்று அதற்கேற்ப நடக்கமாட்டார்.
-
Translation
in EnglishThey cannot walk restrained in wisdom’s measured bound,
In whom inveterate lust of fraudful gain is found. -
MeaningThey cannot walk steadfastly, according to rule, who eagerly desire to defraud others.
9
Nov.2014
0285. அருள்கருதி அன்புடைய ராதல்
0285. Arulkaruthi Anbudaiya Raathal
-
குறள் #0285
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்கள்ளாமை(Kallaamai)
The Absence of Fraud
-
குறள்அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல். -
விளக்கம்பிறர் பொருளைக் கவர நினைத்து, அவர் தளர்ந்திருக்கும் நிலையைப் பார்த்திருப்பவரிடத்தில், அருளின் சிறப்பைக் கருதி, அன்புடையவராக நடத்தல் உண்டாகாது.
-
Translation
in English‘Grace’ is not in their thoughts, nor know they kind affection’s power,
Who neighbour’s goods desire, and watch for his unguarded hour. -
MeaningThe study of kindness and the exercise of benevolence is not with those who watch for another’s forgetfulness, though desire of his property.
9
Nov.2014
0284. களவின்கண் கன்றிய காதல்
0284. Kalavinkan Kandriya Kaathal
-
குறள் #0284
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்கள்ளாமை(Kallaamai)
The Absence of Fraud
-
குறள்களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும். -
விளக்கம்பிறர் பொருளைக் கவர நினைப்பதில் ஒருவனுக்கு உள்ள மிக்க விருப்பம், பயன் கொடுக்கும்போது நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்.
-
Translation
in EnglishThe lust inveterate of fraudful gain,
Yields as its fruit undying pain. -
MeaningThe eager desire of defrauding others will, when it brings forth its fruit, produce undying sorrow.
9
Nov.2014
0283. களவினால் ஆகிய ஆக்கம்
0283. Kalavinaal Aagiya Aakkam
-
குறள் #0283
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்கள்ளாமை(Kallaamai)
The Absence of Fraud
-
குறள்களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும். -
விளக்கம்பிறரை வஞ்சித்தலால் உண்டாகும் செல்வம் வளர்வது போல் தின்றினாலும், பின்னர்த் தன் அளவு கடந்து அழிந்து விடும்.
-
Translation
in EnglishThe gain that comes by fraud, although it seems to grow
With limitless increase, to ruin swift shall go. -
MeaningThe property, which is acquired by fraud, will entirely perish, even while it seems to increase.
9
Nov.2014
0282. உள்ளத்தால் உள்ளலும் தீதே
0282. Ullaththaal Ullalum Theethe
-
குறள் #0282
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்கள்ளாமை(Kallaamai)
The Absence of Fraud
-
குறள்உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல். -
விளக்கம்குற்றங்களை மனத்தினால் நினைத்தாலும் பாவம். ஆகையால், பிறன் பொருளை அவன் அறியாதபடி வஞ்சித்துக் கொள்வோம் என்று நினைத்தலுங் கூடாது.
-
Translation
in English‘Tis sin if in the mind man but thought conceive;
‘By fraud I will my neighbour of his wealth bereave.’ -
MeaningEven the thought (of sin) is sin; think not then of crafiily stealing the property of another.
9
Nov.2014
0281. எள்ளாமை வேண்டுவான் என்பான்
0281. Ellaamai Venduvaan Enbaan
-
குறள் #0281
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்கள்ளாமை(Kallaamai)
The Absence of Fraud
-
குறள்எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு. -
விளக்கம்தான்பிறரால் இகழப்படாமல் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றவன், பிறர் பொருளை வஞ்சித்துக் கொள்ள நினைக்காதபடி தனது நெஞ்சைக் காக்க வேண்டும்.
-
Translation
in EnglishWho seeks heaven’s joys, from impious levity secure,
Let him from every fraud preserve his spirit pure. -
MeaningLet him, who desires not to be despised, keep his mind from (the desire of) defrauding another of the smallest thing.