Glossary
The glossary of this blog of Agaram-Thirukkural has been arranged in alphabetical order and shall be sorted ascending / descending order (columnwise) by clicking on the column header titles.
Click on the chapter number to view the Thirukkural meaning and explanations of the respective chapters.
in English | in Tamil | Chapter | ||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Absence of Terrorism | வெருவந்த செய்யாமை | 57 | ||||||||||||
Acting After Due Consideration | தெரிந்து செயல்வகை | 47 | ||||||||||||
Agriculture | உழவு | 104 | ||||||||||||
Assertion of the Strength of Virtue | அரண் வலியுறுத்தல் | 4 | ||||||||||||
Avoiding Mean Associations | சிற்றினம் சேராமை | 46 | ||||||||||||
Baseness | கயமை | 108 | ||||||||||||
Beauty’s Dart | தகையணங்குறுத்தல் | 109 | ||||||||||||
Being Led by Women | பெண்வழிச் சேரல் | 91 | ||||||||||||
Benignity | கண்ணோட்டம் | 58 | ||||||||||||
Cherishing Guests | விருந்தோம்பல் | 9 | ||||||||||||
Cherishing One’s Kindred | சுற்றந் தழால் | 53 | ||||||||||||
Complainings | படர்மெலிந் திரங்கல் | 117 | ||||||||||||
Conduct in the Presence of the King | மன்னரைச் சேர்ந்தொழுகல் | 70 | ||||||||||||
Courtesy | பண்புடைமை | 100 | ||||||||||||
Declaration of Love’s Special Excellence | காதற் சிறப்புரைத்தல் | 113 | ||||||||||||
Desire for Reunion | புணர்ச்சி விதும்பல் | 129 | ||||||||||||
Destiny | ஊழ் | 38 | ||||||||||||
Detectives | ஒற்றாடல் | 59 | ||||||||||||
Domestic Life | இல்வாழ்க்கை | 5 | ||||||||||||
Dread of Devil Deeds | தீவினையச்சம் | 21 | ||||||||||||
Energy | ஊக்கம் உடைமை | 60 | ||||||||||||
Enmity Within | உட்பகை | 89 | ||||||||||||
Evil Friendship | தீ நட்பு | 82 | ||||||||||||
Exploration with Oneself | நெஞ்சோடு புலத்தல் | 130 | ||||||||||||
Eyes Consumed with Grief | கண்விதுப்பழிதல் | 118 | ||||||||||||
Familiarity | பழைமை | 81 | ||||||||||||
Feigned Anger | புலவி நுணுக்கம் | 132 | ||||||||||||
Folly | பேதைமை | 84 | ||||||||||||
Friendship | நட்பு | 79 | ||||||||||||
Gaming (Gambling) | சூது | 94 | ||||||||||||
Giving | ஈகை | 23 | ||||||||||||
Greatness | பெருமை | 98 | ||||||||||||
Hearing | கேள்வி | 42 | ||||||||||||
Helpless in Trouble | இடுக்கண் அழியாமை | 63 | ||||||||||||
Honour | மானம் | 97 | ||||||||||||
Hostility | இகல் | 86 | ||||||||||||
Ignorance | கல்லாமை | 41 | ||||||||||||
Impartiality | நடுவு நிலைமை | 12 | ||||||||||||
Inconsistent Conduct | கூடா ஒழுக்கம் | 28 | ||||||||||||
Instability | நிலையாமை | 34 | ||||||||||||
Investigation in Forming Friendship | நட்பாராய்தல் | 80 | ||||||||||||
Knowing the Fitting Time | காலம் அறிதல் | 49 | ||||||||||||
Knowing the Place | இடன் அறிதல் | 50 | ||||||||||||
Knowing the Quality of Hate | பகைத்திறம் தெரிதல் | 88 | ||||||||||||
Knowledge of the True | மெய்யுணர்தல் | 36 | ||||||||||||
Lamentations at Eventide | பொழுதுகண்டு இரங்கல் | 123 | ||||||||||||
Learning | கல்வி | 40 | ||||||||||||
Manly Effort | ஆள்வினை உடைமை | 62 | ||||||||||||
Medicine | மருந்து | 95 | ||||||||||||
Mendicancy | இரவு | 106 | ||||||||||||
Military Spirit | படைச் செருக்கு | 78 | ||||||||||||
Modes of Action | வினைசெயல்வகை | 68 | ||||||||||||
Mutual Desire | அவர்வயின் விதும்பல் | 127 | ||||||||||||
Nobility | குடிமை | 96 | ||||||||||||
Not Backbiting | புறங்கூறாமை | 19 | ||||||||||||
Not Coveting | வெஃகாமை | 18 | ||||||||||||
Not Coveting Another’s Wife | பிறனில் விழையாமை | 15 | ||||||||||||
Not Doing Evil | இன்னா செய்யாமை | 32 | ||||||||||||
Not Drinking Palm-Wine | கள்ளுண்ணாமை | 93 | ||||||||||||
Not Envying | அழுக்காறாமை | 17 | ||||||||||||
Not Killing | கொல்லாமை | 33 | ||||||||||||
Not Offending the Great | பெரியாரைப் பிழையாமை | 90 | ||||||||||||
Not to Dread the Council | அவை அஞ்சாமை | 73 | ||||||||||||
Penance | தவம் | 27 | ||||||||||||
Perfectness | சான்றாண்மை | 99 | ||||||||||||
Petty Conceit | புல்லறிவாண்மை | 85 | ||||||||||||
Pouting | புலவி | 131 | ||||||||||||
Poverty | நல்குரவு | 105 | ||||||||||||
Power in Action | வினைத்திட்பம் | 67 | ||||||||||||
Power in Speech | சொல்வன்மை | 65 | ||||||||||||
Purity in Action | வினைத்தூய்மை | 66 | ||||||||||||
Recognition of the Signs (of Mutual Love) | குறிப்பறிதல் | 110 | ||||||||||||
Rejoicing in the Embrace | புணர்ச்சி மகிழ்தல் | 111 | ||||||||||||
Renown | புகழ் | 24 | ||||||||||||
Renunciation | துறவு | 35 | ||||||||||||
Reserve Overcome | நிறையழிதல் | 126 | ||||||||||||
Sad Memories | நினைந்தவர் புலம்பல் | 121 | ||||||||||||
Seeking the Aid of Great Men | பெரியாரைத் துணைக்கோடல் | 45 | ||||||||||||
Selection and Confidence | தெரிந்து தெளிதல் | 51 | ||||||||||||
Selection and Employment | தெரிந்து வினையாடல் | 52 | ||||||||||||
Separation Unendurable | பிரிவாற்றாமை | 116 | ||||||||||||
Shame | நாணுடைமை | 102 | ||||||||||||
Soliloquy | நெஞ்சோடு கிளத்தல் | 125 | ||||||||||||
The Abandonment of Reserve | நாணுத் துறவுரைத்தல் | 114 | ||||||||||||
The Absence of Fraud | கள்ளாமை | 29 | ||||||||||||
The Announcement of the Rumour | அலர் அறிவுறுத்தல் | 115 | ||||||||||||
The Correction of Faults | குற்றங்கடிதல் | 44 | ||||||||||||
The Cruel Sceptre | கொடுங்கோன்மை | 56 | ||||||||||||
The Dread of Mendicancy | இரவச்சம் | 107 | ||||||||||||
The Envoy | தூது | 69 | ||||||||||||
The Excellence of an Army | படைமாட்சி | 77 | ||||||||||||
The Excellence of Rain | வான் சிறப்பு | 2 | ||||||||||||
The Extirpation of Desire | அவா அறுத்தல் | 37 | ||||||||||||
The Fortification | அரண் | 75 | ||||||||||||
The Goodness of the help to Domestic Life | வாழ்க்கைத் துணைநலம் | 6 | ||||||||||||
The Greatness of a King | இறைமாட்சி | 39 | ||||||||||||
The Greatness of Ascetics | நீத்தார் பெருமை | 3 | ||||||||||||
The Knowledge of Benefits Conferred: Gratitude | செய்ந்நன்றி அறிதல் | 11 | ||||||||||||
The Knowledge of Indications | குறிப்பறிதல் | 71 | ||||||||||||
The Knowledge of Power | வலியறிதல் | 48 | ||||||||||||
The Knowledge of the Council Chamber | அவை அறிதல் | 72 | ||||||||||||
The Knowledge of What is Benefitting a Man’s Position | ஒப்புரவறிதல் | 22 | ||||||||||||
The Land | நாடு | 74 | ||||||||||||
The Might of Hatred | பகைமாட்சி | 87 | ||||||||||||
The Not Being Angry | வெகுளாமை | 31 | ||||||||||||
The Not Speaking Profitless Words | பயனில சொல்லாமை | 20 | ||||||||||||
The obtaining of Sons | மக்கட்பேறு | 7 | ||||||||||||
The Office of Minister of State | அமைச்சு | 64 | ||||||||||||
The Pallid Hue | பசப்புறு பருவரல் | 119 | ||||||||||||
The Pleasure of Temporary Variance | ஊடலுவகை | 133 | ||||||||||||
The Possession of Benevolence | அருளுடைமை | 25 | ||||||||||||
The Possession of Decorum | ஒழுக்கமுடைமை | 14 | ||||||||||||
The Possession of King | அறிவுடைமை | 43 | ||||||||||||
The Possession of Love | அன்புடைமை | 8 | ||||||||||||
The Possession of Patience: Forbearance | பொறையுடைமை | 16 | ||||||||||||
The Possession of Self-Restraint | அடக்கமுடைமை | 13 | ||||||||||||
The Praise of God | கடவுள் வாழ்த்து | 1 | ||||||||||||
The Praise of her Beauty | நலம் புனைந்துரைத்தல் | 112 | ||||||||||||
The Reading of the Signs | குறிப்பறிவுறுத்தல் | 128 | ||||||||||||
The Renunciation of Flesh | புலால் மறுத்தல் | 26 | ||||||||||||
The Right Sceptre | செங்கோன்மை | 55 | ||||||||||||
The Solitary Anguish | தனிப்படர் மிகுதி | 120 | ||||||||||||
The Utterance of Pleasant Words | இனியவை கூறல் | 10 | ||||||||||||
The Visions of the Night | கனவுநிலை உரைத்தல் | 122 | ||||||||||||
The Way of Maintaining the Family | குடிசெயல் வகை | 103 | ||||||||||||
Unforgetfulness | பொச்சாவாமை | 54 | ||||||||||||
Unreal Friendship | கூடா நட்பு | 83 | ||||||||||||
Unsluggishness | மடி இன்மை | 61 | ||||||||||||
Veracity | வாய்மை | 30 | Wanton Women | வரைவின் மகளிர் | 92 | Wasting Away | உறுப்புநலன் அழிதல் | 124 | Way of Accumulating Wealth | பொருள் செயல் வகை | 76 | Wealth Without Benefaction | நன்றியில் செல்வம் | 101 |
TAG CLOUD (in Alphabetical Order)
திருக்குறள் – ஒரு அறிமுகம்
தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள்.
இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மனித வாழ்வின் முக்கிய அங்கங்களாகிய அறம் அல்லது தர்மம், பொருள், இன்பம் அல்லது காமம் ஆகியவற்றைப் பற்றி விளக்கும் நூல்.
இந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர். இவருடைய இயற்பெயர் என்ன என்பதுவும் மேற்கொண்ட விபரங்களும் சரிவரத்தெரியவில்லை. இவரைப்பற்றிச் செவிவழிமரபாகச் சில செய்திகள் விளங்குகின்றன. ஆனால் அறுதியான வரலாறு கிடையாது. அந்தச் செய்திகளின் வாயிலாகப்பெறும் தகவல்களின்படி, இவர் வள்ளுவ மரபைச்சேர்ந்தவர் என்றும், மயிலாப்பூரில் வசித்தவர் என்றும் தெரிகிறது; இவருடைய மனைவியார் வாசுகி அம்மையார்.கற்பியலுக்கு மிகச்சிறந்த இலக்கணமாக விளங்கியவர். வள்ளுவர் தாம் எழுதிய முப்பால் நூலை தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றம் செய்ய மிகவும் சிரமப்பட்டதாகவும், முடிவில் ஒளவையாரின் துணையோடு அரங்கேற்றியதாகவும் அச்செய்திகள் வாயிலாக அறிகிறோம்.
திருவள்ளுவரை நாயனார், தேவர், தெய்வப்புலவர், பெருநாவலர், பொய்யில் புலவர் என்றும் சில சிறப்புப்பெயர்களால் அழைப்பர்.
பிற்காலத்தில் திருவள்ளுவர் பெயரால் வேறு சிலநூல்களை வேறு சிலர் இயற்றியுள்ளனர். அவை சித்தர் இலக்கியத்தைச் சேர்ந்தவை.
திருக்குறள் இயற்றப்பட்ட காலம் இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை. கிருஸ்துவ சகாப்தத்தின் முன் பகுதியைச் சேர்ந்ததாகப் பலர் கருதுவர்.
பழந்தமிழ் நூல்களில் நான்கு பெரும் பகுப்புக்கள் உள்ளன.
1.எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியவை அடங்கிய பதினென்மேல்கணக்கு
2.பதினென்கீழ்க்கணக்கு
3.ஐம்பெருங்காப்பியங்கள்
4.ஐஞ்சிறு காப்பியங்கள்
ஆகியவை அவை. அவற்றில் பதினென்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் வரிசையில் “முப்பால்” என்னும் பெயரோடு இந்நூல் விளங்குகின்றது.
“அறம், பொருள், இன்பம்”, ஆகிய மூன்று பால்களும் கொண்டமையால் “முப்பால்” எனப் பெயர் பெற்றது. முப்பால்களாகிய இவை ஒவ்வொன்றும் “இயல்” என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட அதிகாரங்களைக் கொண்டதாக விளங்குகின்றது. ஒவ்வொரு அதிகாரமும் பத்துபாடல்களைத் தன்னுள் அடக்கியது.
இப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. இவ்வகை வெண்பாக்களால் ஆகிய அக்காலத்திய முதல் நூலும் ஒரே நூலும் இதுதான்.
குறள் வெண்பாக்களால் ஆனமையால் “குறள்’ என்றும் “திருக்குறள்” என்றும் இது பெயர் பெற்றது.
“பாயிரம்” என்னும் பகுதியுடன் முதலில் “அறத்துப்பால்” வருகிறது. அதிலும் முதலில் காணப்படுவது , “கடவுள் வாழ்த்து” என்னும் அதிகாரம். தொடர்ந்து, “வான் சிறப்பு”, “நீத்தார் பெருமை”, “அறன் வலியுறுத்தல்”, ஆகிய அதிகாரங்கள்.
அடுத்துவரும் “இல்லறவியல்” என்னும் இயலில் 25 அதிகாரங்கள்; அடுத்துள்ள துறவறவியலில் 13 அதிகாரங்களுடன் முதற்பாலாகிய அறத்துப்பால் பகுதி முடிவுறுகிறது.
அடுத்து வரும் “பொருட்பாலி”ல் அரசு இயல், அமைச்சு இயல், ஒழிபு இயல் ஆகிய இயல்கள் இருக்கின்றன. அரசு இயலில் 25 அதிகாரங்கள் உள்ளன. அமைச்சு இயலில் 32 அதிகாரங்களும், ஒழிபு இயலில் 13 அதிகாரங்களும் உள்ளன.
கடைசிப்பாலாகிய “இன்பத்துப்பால்” அல்லது “காமத்துப்பாலி”ல் இரண்டு இயல்கள்; களவியலில் 7 அதிகாரங்களும், கற்பியலில் 18 அதிகாரங்களும் உள்ளன. ஆகமொத்தம் 7 இயல்கள்; 133 அதிகாரங்கள்; 1330 பாடல்கள்.
திருக்குறளை மொத்தம் 12000 சொற்களில் வள்ளுவர் பாடியுள்ளார். ஆனால் இவற்றில் ஐம்பதுக்கும் குறைவான வடசொற்களே உள்ளன.
“அகரம் முதல வெழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே யுலகு….”
என்று தமிழ் நெடுங்கணக்கின் முதல் எழுத்தாகிய “அ” வில் ஆரம்பித்து, 1330 ஆம் குறளாகிய,
“ஊடுதல் காமத்திற்கின்பம்; அதற்கின்பம்,
கூடி முயங்கப்பெறின்”
என்று தமிழ் மொழியின் கடைசி எழுத்தாகிய “ன்” னுடன் முடித்திருக்கிறார்.
வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதால், அதைச் சிறப்பித்துப் பல பெயர்களால் அழைப்பர்: திருக்குறள், முப்பால், உத்தரவேதம், தெய்வநூல், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ் மறை, திருவள்ளுவம் என்ற பெயர்கள் அதற்குரியவை.
பழங்காலத்தில் இதற்குப் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் புகழ் வாய்ந்ததாக விளங்குவதும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதும் பரிமேலழகர் உரைதான். தற்காலத்திலும் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் தற்சமயம் சிறப்பாகக் கருதப் படுவது திருக்குறள் முனுசாமியின் உரை.
தனிமனிதனுக்கு உரிமையானது இன்பவாழ்வு; அதற்குத் துணையாக உள்ளது பொருளியல் வாழ்வு; அவற்றிற்கெல்லாம் அடிப்படையாக விளங்குவது அறவாழ்வு. மனதே எல்லாவற்றிற்கும் ஆதார நிலைக்கலன்; மனத்துக்கண் மாசிலன் ஆதலே அனைத்து அறம்; அறத்தால் வருவதே இன்பம். அறவழியில் நின்று பொருள் ஈட்டி, அதனைக்கொண்டு இன்பவாழ்வு வாழ வேண்டும். அவ்வாறு உலகமாந்தரும் இன்பமுறச் செய்யவேண்டும். பொருளியலாகிய பொதுவாழ்வுக்கும் இன்ப இயலாகிய தனிவாழ்வுக்கும் அடிப்படை அறம்தான் என்பது திருக்குறளின் மொத்தமான நோக்கு.
உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தைத் திருக்குறள் வகிக்கிறது. இதுவரை 80 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
“இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை
மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்
மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்”
A Short Introduction to Thirukural: Written by Dr.S.Jayabarathi for Project Madurai, Original in Inaimathi/Anjal font – Converted to Unicode
http://www.tamilnation.org/literature/kural/
1330. ஊடுதல் காமத்திற்கு இன்பம்
1330. Ooduthal Kaamaththirku Inbam
-
குறள் #1330
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்ஊடலுவகை (Oodaloovagai)
The Pleasure of Temporary Variance
-
குறள்ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின். -
விளக்கம்காதலுக்கு இன்பமாவது ஊடுதல்; கூடித் தழுவப்பெறுதல் அவ்வூடலுக்கு இன்பம்.
-
Translation
in EnglishA ‘feigned aversion’ coy to pleasure gives a zest;
The pleasure’s crowned when breast is clasped to breast. -
MeaningDislike adds delight to love; and a hearty embrace (thereafter) will add delight to dislike.
Category:Thirukural
1329. ஊடுக மன்னோ ஒளியிழை
1329. Ooduga Manno Oliyizhai
-
குறள் #1329
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்ஊடலுவகை (Oodaloovagai)
The Pleasure of Temporary Variance
-
குறள்ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப
நீடுக மன்னோ இரா. -
விளக்கம்விளங்குகின்ற அணிகள் அணிந்தவள் ஊடுவாளாக; அந்த ஊடலைத் தீர்க்கும் பொருட்டு நாம் இரந்து நிற்க இரவு நீடித்தல் வேண்டும்.
-
Translation
in EnglishLet her, whose jewels brightly shine, aversion feign!
That I may still plead on, O night, prolong thy reign! -
MeaningMay the bright-jewelled one feign dislike, and may the night be prolonged for me to implore her!
Category:Thirukural
1328. ஊடிப் பெறுகுவம் கொல்லோ
1328. Oodip Perukuvam Kollo
-
குறள் #1328
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்ஊடலுவகை (Oodaloovagai)
The Pleasure of Temporary Variance
-
குறள்ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலில் தோன்றிய உப்பு. -
விளக்கம்தலைவியின் நெற்றி வியர்க்குமாறு, அவளைக் கூடியதனால், பெற்ற இன்பத்தினை, மீண்டுமொருமுறை அவள் பிணங்குவதன் மூலம் பெறுவோமோ?
-
Translation
in EnglishAnd shall we ever more the sweetness know of that embrace
With dewy brow; to which ‘feigned anger’ lent its piquant grace. -
MeaningWill I enjoy once more through her dislike, the pleasure of that love that makes her forehead perspire?
Category:Thirukural
1327. ஊடலில் தோற்றவர் வென்றார்
1327. Oodalil Thotravar Vendraar
-
குறள் #1327
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்ஊடலுவகை (Oodaloovagai)
The Pleasure of Temporary Variance
-
குறள்ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலிற் காணப் படும். -
விளக்கம்ஊடலில் தோற்றவர் வென்றவராவர்; முன்பு தோற்றதுபோல் காணப்பட்டாலும் அது வெற்றியென்பது சேர்க்கையில் அவரால் அறியப்படும்.
-
Translation
in EnglishIn lovers’ quarrels, ’tis the one that first gives way,
That in re-union’s joy is seen to win the day. -
MeaningThose are conquerors whose dislike has been defeated and that is proved by the love (which follows).
Category:Thirukural
1326. உணலினும் உண்டது அறல்இனிது
1326. Unalinum Undathu Aralinithu
-
குறள் #1326
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்ஊடலுவகை (Oodaloovagai)
The Pleasure of Temporary Variance
-
குறள்உணலினும் உண்டது அறல்இனிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது. -
விளக்கம்மேன்மேல் உண்ணுவதைவிட உண்ட உணவு செரித்தல் இன்பந்தருவதாகும்; அதுபோலக் காதலுக்குச் சேர்தலைவிட ஊடல் இன்பம் தருவதாகும்.
-
Translation
in English‘Tis sweeter to digest your food than ’tis to eat;
In love, than union’s self is anger feigned more sweet. -
MeaningTo digest what has been eaten is more delightful than to eat more; likewise love is more delightful in dislike than intercourse.
Category:Thirukural
1325. தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார்
1325. Thavarilar Aayinum Thaamveezhvaar
-
குறள் #1325
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்ஊடலுவகை (Oodaloovagai)
The Pleasure of Temporary Variance
-
குறள்தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்
அகறலின் ஆங்கொன் றுடைத்து. -
விளக்கம்காதலர் தவறில்லாதவராயினும் அவரால் விரும்பப்படும் மகளிர் ஊடி, தம்மெல்லிய தோள்களால் தழுவப்பெறாத சமயத்திலும் ஓர் இன்பம் உண்டு.
-
Translation
in EnglishThough free from fault, from loved one’s tender arms
To be estranged a while hath its own special charms. -
MeaningThough free from defects, men feel pleased when they cannot embrace the delicate shoulders of those whom they love.
Category:Thirukural
1324. புல்லி விடாஅப் புலவியுள்
1324. Pulli Vidaaap Pulaviyul
-
குறள் #1324
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்ஊடலுவகை (Oodaloovagai)
The Pleasure of Temporary Variance
-
குறள்புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்
உள்ளம் உடைக்கும் படை. -
விளக்கம்காதலரைத் தழுவிப் பின் விடாமலிருப்பதற்க்குக் காரணமான பிணக்கத்துள்ளே என் மனத்தை உடைக்கும் ஆயுதம் தோன்றும்.
-
Translation
in English‘Within the anger feigned’ that close love’s tie doth bind,
A weapon lurks, which quite breaks down my mind. -
MeaningIn prolonged dislike after an embrace there is a weapon that can break my heart.
Category:Thirukural
1323. புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ
1323. Pulaththalin Puththelnaadu Undo
-
குறள் #1323
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்ஊடலுவகை (Oodaloovagai)
The Pleasure of Temporary Variance
-
குறள்புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னார் அகத்து. -
விளக்கம்நிலத்தோடு நீர் சேர்ந்தாற்போல், ஒற்றுமையுடையவரிடத்துப் பிணங்குதலைவிட இன்பம் தேவருலகத்தில் உண்டோ?
-
Translation
in EnglishIs there a bliss in any world more utterly divine,
Than ‘coyness’ gives, when hearts as earth and water join? -
MeaningIs there a celestial land that can please like the feigned dislike of those whose union resembles that of earth and water?
Category:Thirukural
1322. ஊடலின் தோன்றும் சிறுதுனி
1322. Oodalin Thondrum Siruthuni
-
குறள் #1322
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்ஊடலுவகை (Oodaloovagai)
The Pleasure of Temporary Variance
-
குறள்ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி
வாடினும் பாடு பெறும். -
விளக்கம்ஊடற்காலத்தில் தோன்றும் சிறிய துன்பத்தால், அவர் செய்யும் கருணை குறைவுபட்டாலும் அது பெருமை அடையும்.
-
Translation
in EnglishMy ‘anger feigned’ gives but a little pain;
And when affection droops, it makes it bloom again. -
MeaningHis love will increase though it may (at first seem to) fade through the short-lived distress caused by (my) dislike.
Category:Thirukural
1321. இல்லை தவறவர்க்கு ஆயினும்
1321. Illai Thavaravarkku Aayinum
-
குறள் #1321
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்ஊடலுவகை (Oodaloovagai)
The Pleasure of Temporary Variance
-
குறள்இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்லது அவர்அளக்கு மாறு. -
விளக்கம்தலைவரிடத்தில் குற்றமில்லையாயினும், அவரோடு ஊடுதல் அவர் நம்மீது மிகுந்த அன்பு செலுத்துமாறு செய்ய வல்லது.
-
Translation
in EnglishAlthough there be no fault in him, the sweetness of his love
Hath power in me a fretful jealousy to move. -
MeaningAlthough my husband is free from defects, the way in which he embraces me is such as to make me feign dislike.
Category:Thirukural
1320. நினைத்திருந்து நோக்கினும் காயும்
1320. Ninaththirundhu Nokkinum Kaayum
-
குறள் #1320
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்புலவி நுணுக்கம் (Pulavi Nunukkam)
Feigned Anger
-
குறள்நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
யாருள்ளி நோக்கினீர் என்று. -
விளக்கம்தலைவியின் அழகையே நினைத்திருந்து பார்த்தாலும், ‘வேறு எப்பெண்களின் உறுப்பு அழகை நினைத்து அவற்றோடு ஒப்பிட்டுப் பார்க்கின்றீர்’ என்று சினம் கொள்வாள்.
-
Translation
in EnglishI silent sat, but thought the more, And gazed on her. Then she
Cried out, ‘While thus you eye me o’er, Tell me whose form you see’. -
MeaningEven when I look on her contemplating (her beauty), she is displeased and says, “With whose thought have you (thus) looked on my person?”
1319. தன்னை உணர்த்தினும் காயும்
1319. Thannai Unarththinum Kaayum
-
குறள் #1319
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்புலவி நுணுக்கம் (Pulavi Nunukkam)
Feigned Anger
-
குறள்தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்
இந்நீரர் ஆகுதிர் என்று. -
விளக்கம்தலைவியின் பிணக்கைத் தீர்த்தாலும், ‘பிற பெண்களிடத்தும் இவ்வாறு பிணக்குத் தீர்ப்பீர்’ என்று கோபிக்கிறாள்.
-
Translation
in EnglishI then began to soothe and coax, To calm her jealous mind;
‘I see’, quoth she, ‘to other folks How you are wondrous kind’ -
MeaningEven when I try to remove her dislike, she is displeased and says, “This is the way you behave towards (other women).”
1318. தும்முச் செறுப்ப அழுதாள்
1318. Thummuch Cheruppa Azhuthaal
-
குறள் #1318
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்புலவி நுணுக்கம் (Pulavi Nunukkam)
Feigned Anger
-
குறள்தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்
எம்மை மறைத்திரோ என்று. -
விளக்கம்நான் தும்மலை அடக்கியபோது, ‘உமக்கு வேண்டியவர் நினைப்பதை எனக்கு மறைத்தீரோ’ என்று சொல்லி அழுதாள்.
-
Translation
in EnglishAnd so next time I checked my sneeze; She forthwith wept and cried,
(That woman difficult to please), ‘Your thoughts from me you hide’. -
MeaningWhen I suppressed my sneezing, she wept saying, “I suppose you (did so) to hide from me your own people’s remembrance of you”.
1317. வழுத்தினாள் தும்மினேன் ஆக
1317. Vazhuththinaal Thumminen Aaga
-
குறள் #1317
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்புலவி நுணுக்கம் (Pulavi Nunukkam)
Feigned Anger
-
குறள்வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று. -
விளக்கம்நான் தும்மினேன்; உடனே வாழ்த்தினாள்; பின்னர் ‘யார் நினைத்ததால் தும்மினீர்?’ என்று சொல்லி அழுதாள்.
-
Translation
in EnglishShe hailed me when I sneezed one day; But straight with anger seized,
She cried; ‘Who was the woman, pray, Thinking of whom you sneezed?’ -
MeaningWhen I sneezed she blessed me, but at once changed (her mind) and wept, asking, “At the thought of whom did you sneeze?”
1316. உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர்
1316. Ullinen Endrenmat Renmarantheer
-
குறள் #1316
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்புலவி நுணுக்கம் (Pulavi Nunukkam)
Feigned Anger
-
குறள்உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்
புல்லாள் புலத்தக் கனள். -
விளக்கம்‘நினைத்தேன்’ என்று கூறினேன்; ‘என்னை இங்ஙனம் நினைக்கு முன் மறந்தீர்’ என்று சொல்லி என்னைத் தழுவாது பிணங்கினாள்.
-
Translation
in English‘Each day I called to mind your charms,’ ‘O, then, you had forgot,’
She cried, and then her opened arms, Forthwith embraced me not. -
MeaningWhen I said I had remembered her, she said I had forgotten her and relaxing her embrace, began to feign dislike.
1315. இம்மைப் பிறப்பில் பிரியலம்
1315. Immaip Pirappil Piriyalam
-
குறள் #1315
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்புலவி நுணுக்கம் (Pulavi Nunukkam)
Feigned Anger
-
குறள்இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண் டனள். -
விளக்கம்‘இப்பிறப்பில் பிரிய மாட்டேன்’ என்று சொன்னபோது, ‘மறுபிறப்பிலே பிரிவேன்’ என்று பொருள் கொண்டு கண்கள் நிறைந்த நீரைக் கொண்டாள்.
-
Translation
in English‘While here I live, I leave you not,’ I said to calm her fears.
She cried, ‘There, then, I read your thought’; And straight dissolved in tears. -
MeaningWhen I said I would never part from her in this life her eyes were filled with tears.
1314. யாரினும் காதலம் என்றேனா
1314. Yaarinum Kaathalam Endrenaa
-
குறள் #1314
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்புலவி நுணுக்கம் (Pulavi Nunukkam)
Feigned Anger
-
குறள்யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று. -
விளக்கம்நான் எல்லோரையும் விட உன்னைக் காதலிக்கின்றேன் என்று சொன்ன பொது, காதலி ‘யாரினும் யாரினும்’ என்று சொல்லி என்னோடு பிணங்கினாள்.
-
Translation
in English‘I love you more than all beside,’ ‘T was thus I gently spoke;
‘What all, what all?’ she instant cried; And all her anger woke. -
MeaningWhen I said I loved her more than any other woman, she said “more than others, yes, more than others,” and remained sulky.
1313. கோட்டுப்பூச் சூடினும் காயும்
1313. Kottuppooch Choodinum Kaayum
-
குறள் #1313
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்புலவி நுணுக்கம் (Pulavi Nunukkam)
Feigned Anger
-
குறள்கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீர் என்று. -
விளக்கம்நான் கிளைகளில் மலர்ந்த மலர்களால் ஆன மாலையைச் சூடினாலும், ‘நீர் விரும்பும் ஒருத்திக்கு இதனைக் காட்டும் பொருட்டுச் சூடினீர்’ என்று கூறிக் கோபிப்பாள்.
-
Translation
in EnglishI wreathed with flowers one day my brow, The angry tempest lowers;
She cries, ‘Pray, for what woman now Do you put on your flowers?’ -
MeaningEven if I were adorned with a garland of branch-flowers, she would say I did so to show it to another woman.
1312. ஊடி இருந்தேமாத் தும்மினார்
1312. Oodi Irunthemaath Thumminaar
-
குறள் #1312
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்புலவி நுணுக்கம் (Pulavi Nunukkam)
Feigned Anger
-
குறள்ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
நீடுவாழ் கென்பாக் கறிந்து. -
விளக்கம்யாம் ஊடியிருந்தபோது, நான் ஊடல் தீர்ந்து அவரை ‘நெடிது வாழ்க’ என்று வாழ்த்துவேன் என்று கருதி, அவர் தும்மினார்.
-
Translation
in EnglishOne day we silent sulked; he sneezed: The reason well I knew;
He thought that I, to speak well pleased, Would say, ‘Long life to you!’ -
MeaningWhen I continued to be sulky he sneezed and thought I would (then) wish him a long life.
1311. பெண்ணியலார் எல்லாரும் கண்ணின்
1311. Penniyalaar Ellaarum Kannin
-
குறள் #1311
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்புலவி நுணுக்கம் (Pulavi Nunukkam)
Feigned Anger
-
குறள்பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு. -
விளக்கம்பரத்தைமை உடையானே! பெண் தன்மையுடையவர் எல்லாரும் தமது கண்களால் பொதுவாக உன்னை அனுபவிப்பர்; ஆகையால், நான் உன் மார்பைச் சேரமாட்டேன்.
-
Translation
in EnglishFrom thy regard all womankind Enjoys an equal grace;
O thou of wandering fickle mind, I shrink from thine embrace! -
MeaningYou are given to prostitution; all those who are born as womankind enjoy you with their eyes in an ordinary way. I will not embrace you.
1310. ஊடல் உணங்க விடுவாரோடு
1310. Oodal Unanga Viduvaarodu
-
குறள் #1310
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்புலவி (Pulavi)
Pouting
-
குறள்ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம்
கூடுவேம் என்பது அவா. -
விளக்கம்நான் பிணங்கியிருக்க, அதைத் தீர்க்காது என்னை விட்டுச் செல்பவரோடு என்மனம் கூடுவேன் என்று கருதுவதற்குக் காரணம் ஆசையே.
-
Translation
in EnglishOf her who leaves me thus in variance languishing,
To think within my heart with love is fond desire. -
MeaningIt is nothing but strong desire that makes her mind unite with me who can leave her to her own dislike.
1309. நீரும் நிழலது இனிதே
1309. Neerum Nizhalathu Inithe
-
குறள் #1309
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்புலவி (Pulavi)
Pouting
-
குறள்நீரும் நிழலது இனிதே புலவியும்
வீழுநர் கண்ணே இனிது. -
விளக்கம்நீரும் நிழலினிடத்தில் இருந்தால் குடிக்க இனியதாகும்; அது போல ஊடலும் அன்புடையவரிடத்தில் இனியதாகும்.
-
Translation
in EnglishWater is pleasant in the cooling shade;
So coolness for a time with those we love. -
MeaningLike water in the shade, dislike is delicious only in those who love.
1308. நோதல் எவன்மற்று நொந்தாரென்று
1308. Nothal Evanmatru Nonthaarendru
-
குறள் #1308
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்புலவி (Pulavi)
Pouting
-
குறள்நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும்
காதலர் இல்லா வழி. -
விளக்கம்இவர் வருந்தினாரென்று அத்துன்பத்தை அறியும் காதலியைப் பெறாதவருக்குப் பிணங்குதலால் பயனில்லை.
-
Translation
in EnglishWhat good can grieving do, when none who love
Are there to know the grief thy soul endures? -
MeaningWhat avails sorrow when I am without a wife who can understand the cause of my sorrow?
1307. ஊடலின் உண்டாங்கோர் துன்பம்
1307. Oodalin Undaangor Thunbam
-
குறள் #1307
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்புலவி (Pulavi)
Pouting
-
குறள்ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது
நீடுவ தன்றுகொல் என்று. -
விளக்கம்தலைவி ஊடும்பொழுது, இனி இவளுடன் புணர்ச்சி நீட்டிக்காதோ என்ற ஏக்கம் உண்டாதலால், அவ்வூடற்கண்ணும் ஒரு துன்பம் உண்டு.
-
Translation
in EnglishA lovers’ quarrel brings its pain, when mind afraid
Asks doubtful, ‘Will reunion sweet be long delayed?’ -
MeaningThe doubt as to whether intercourse would take place soon or not, creates a sorrow (even) in feigned dislike.
1306. துனியும் புலவியும் இல்லாயின்
1306. Thuniyum Pulaviyum Illaayin
-
குறள் #1306
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்புலவி (Pulavi)
Pouting
-
குறள்துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்று. -
விளக்கம்பெரும் பிணக்கும் சிறுபிணக்கும் இல்லையாயின் காதல் இன்பம், மிகப்பழுத்த கனியும் இளங்காயும் போலாகும்.
-
Translation
in EnglishLove without hatred is ripened fruit;
Without some lesser strife, fruit immature. -
MeaningSexual pleasure, without prolonged and short-lived dislike, is like too ripe, and unripe fruit.
1305. நலத்தகை நல்லவர்க்கு ஏஎர்
1305. Nalaththagai Nallavarkku Yeyar
-
குறள் #1305
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்புலவி (Pulavi)
Pouting
-
குறள்நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை
பூஅன்ன கண்ணார் அகத்து. -
விளக்கம்நற்குணங்களால் தகுதியுடைய தலைவர்க்கு அழகாவது, பூப்போன்ற கண்ணையுடைய பெண்ணின் மனத்திலுண்டாகும் பிணக்கமேயாகும்.
-
Translation
in EnglishEven to men of good and worthy mind, the petulance
Of wives with flowery eyes lacks not a lovely grace. -
MeaningAn increased shyness in those whose eyes are like flowers is beautiful even to good and virtuous husbands.
1304. ஊடி யவரை உணராமை
1304. Oodi Yavarai Unaraamai
-
குறள் #1304
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்புலவி (Pulavi)
Pouting
-
குறள்ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி முதலரிந் தற்று. -
விளக்கம்பிணங்கிய பெண்களைப் பிணக்கை நீக்கி கூடாதிருத்தல், வாடிய வள்ளிக்கொடியை அடியிலே அறுத்தார் போன்றது.
-
Translation
in EnglishTo use no kind conciliating art when lover grieves,
Is cutting out the root of tender winding plant that droops. -
MeaningNot to reconcile those who have feigned dislike is like cutting a faded creeper at its root.
1303. அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால்
1303. Alanthaarai Allalnoi Seithatraal
-
குறள் #1303
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்புலவி (Pulavi)
Pouting
-
குறள்அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல். -
விளக்கம்தம்மோடு பிணங்கிய பெண்களைப் பிணக்கினை நீக்கித் தழுவாதுவிடுதல், முன்பே துன்பமுற்று வருந்துகின்றவர்களுக்கு மேலும் துன்பம் இழைப்பது போலாகும்.
-
Translation
in English‘Tis heaping griefs on those whose hearts are grieved;
To leave the grieving one without a fond embrace. -
MeaningFor men not to embrace those who have feigned dislike is like torturing those already in agony.
1302. உப்பமைந் தற்றால் புலவி
1302. Uppamaindh Thatraal Pulavi
-
குறள் #1302
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்புலவி (Pulavi)
Pouting
-
குறள்உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல். -
விளக்கம்பிணக்கம், உணவுக்குச் சுவைதரும் உப்புப் போன்றது; அதனை அளவுக்குமேல் அதிகரித்தல், உணவில் உப்புச் சிறிது மிகுந்தது போலாகும்.
-
Translation
in EnglishA cool reserve is like the salt that seasons well the mess,
Too long maintained, ’tis like the salt’s excess. -
MeaningA little dislike is like salt in proportion; to prolong it a little is like salt a little too much.
1301. புல்லா திராஅப் புலத்தை
1301. Pullaa Thiraaap Pulaththai
-
குறள் #1301
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்புலவி (Pulavi)
Pouting
-
குறள்புல்லா திராஅப் புலத்தை அவர்உறும்
அல்லல்நோய் காண்கம் சிறிது. -
விளக்கம்தலைவி! நீ காதலரோடு விரைவில் தழுவாது இருந்து பிணங்கு; அப்போது காதலை அடையும் துன்ப நோயினைச் சிறிது காண்போம்.
-
Translation
in EnglishBe still reserved, decline his profferred love;
A little while his sore distress we ‘ll prove. -
MeaningLet us witness awhile his keen suffering; just feign dislike and embrace him not.
1300. தஞ்சம் தமரல்லர் ஏதிலார்
1300. Thanjam Thamarallar Yethilaar
-
குறள் #1300
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்நெஞ்சோடு புலத்தல் (Nenjodu Pulaththal)
Exploration with Oneself
-
குறள்தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய
நெஞ்சம் தமரல் வழி. -
விளக்கம்ஒருவர்க்குத் தம்முடைய மனம் தம்மோடு இணங்காத போது, அயலவர் உறவினரல்லராதல் எளிதே.
-
Translation
in EnglishA trifle is unfriendliness by aliens shown,
When our own heart itself is not our own! -
MeaningIt is hardly possible for strangers to behave like relations, when one’s own soul acts like a stranger.
Category:Thirukural
1299. துன்பத்திற்கு யாரே துணையாவார்
1299. Thunbaththirku Yaare Thunaiyaavaar
-
குறள் #1299
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்நெஞ்சோடு புலத்தல் (Nenjodu Pulaththal)
Exploration with Oneself
-
குறள்துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய
நெஞ்சந் துணையல் வழி. -
விளக்கம்ஒருவர்க்குத் துன்பம் வந்தபோது, அதை நீக்குதற்குத் தமது மனம் துணையாகாதபோது, வேறு துணையாவார் யார்?
-
Translation
in EnglishAnd who will aid me in my hour of grief,
If my own heart comes not to my relief? -
MeaningWho would help me out of one’s distress, when one’s own soul refuses help to one?
Category:Thirukural
1298. எள்ளின் இளிவாம்என்று எண்ணி
1298. Ellin Ilivaamendru Enni
-
குறள் #1298
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்நெஞ்சோடு புலத்தல் (Nenjodu Pulaththal)
Exploration with Oneself
-
குறள்எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு. -
விளக்கம்உயிர்மேல் ஆசையுடைய என்மனம், காதலரை இழந்தால் தாழ்வு உண்டாகும் என்று கருதி, அவரது நல்ல திறங்களையே நினைக்கும்.
-
Translation
in EnglishIf I contemn him, then disgrace awaits me evermore;
My soul that seeks to live his virtues numbers o’er. -
MeaningMy soul which clings to life thinks only of his (own) gain in the belief that it would be disgraceful for it to despise him.
Category:Thirukural
1297. நாணும் மறந்தேன் அவர்மறக்
1297. Naanum Maranthen Avarmarak
-
குறள் #1297
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்நெஞ்சோடு புலத்தல் (Nenjodu Pulaththal)
Exploration with Oneself
-
குறள்நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்
மாணா மடநெஞ்சிற் பட்டு. -
விளக்கம்காதலரை மறக்கமுடியாத எனது இழிந்த அறிவில்லாத மனத்தோடு கூடி நாணத்தையும் மறந்துவிட்டேன்.
-
Translation
in EnglishFall’n ‘neath the sway of this ignoble foolish heart,
Which will not him forget, I have forgotten shame. -
MeaningI have even forgotten my modesty, having been caught in my foolish mind which is not dignified enough to forget him.
Category:Thirukural
1296. தனியே இருந்து நினைத்தக்கால்
1296. Thaniye Irundhu Ninaiththakkaal
-
குறள் #1296
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்நெஞ்சோடு புலத்தல் (Nenjodu Pulaththal)
Exploration with Oneself
-
குறள்தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்ததென் நெஞ்சு. -
விளக்கம்காதலரைப் பிரிந்து அவரது கொடுமைகளை நினைத்தபோது என்னைத் தின்பதுபோல் வருத்துவதற்கென்றே என் மனம் இருந்தது.
-
Translation
in EnglishMy heart consumes me when I ponder lone,
And all my lover’s cruelty bemoan. -
MeaningMy mind has been (here) in order to eat me up (as it were) whenever I think of him in my solitude.
Category:Thirukural
1295. பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு
1295. Peraaamai Anjum Perinpirivu
-
குறள் #1295
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்நெஞ்சோடு புலத்தல் (Nenjodu Pulaththal)
Exploration with Oneself
-
குறள்பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும்
அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு. -
விளக்கம்தலைவரைக் காணாதபோது காணவில்லையே என்று எனது மனம் அஞ்சும்; கண்டால் அவரது பிரிவை எண்ணி அஞ்சும். இவ்வாறு என் மனம் நீங்காத துன்பமுடையது.
-
Translation
in EnglishI fear I shall not gain, I fear to lose him when I gain;
And thus my heart endures unceasing pain. -
MeaningMy soul fears when it is without him; it also fears when it is with him; it is subject to incessant sorrow.
Category:Thirukural
1294. இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார்
1294. Inianna Ninnodu Soozhvaaryaar
-
குறள் #1294
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்நெஞ்சோடு புலத்தல் (Nenjodu Pulaththal)
Exploration with Oneself
-
குறள்இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே
துனிசெய்து துவ்வாய்காண் மற்று. -
விளக்கம்மனமே! காதலரோடு முதலில் ஊடி, பின் இன்பம் அனுபவிக்கக் கருதாய்; இனி அத்தகைய செயல் பற்றி உன்னோடு கலந்து ஆராய்பவர் யார்?
-
Translation
in English‘See, thou first show offended pride, and then submit,’ I bade;
Henceforth such council who will share with thee my heart? -
MeaningO my soul! you would not first seem sulky and then enjoy (him); who then would in future consult you about such things?
Category:Thirukural
1293. கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ
1293. Kettaarkku Nattaaril Enbatho
-
குறள் #1293
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்நெஞ்சோடு புலத்தல் (Nenjodu Pulaththal)
Exploration with Oneself
-
குறள்கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ
பெட்டாங்கு அவர்பின் செலல். -
விளக்கம்மனமே! நீ விரும்பியபடி அவரிடம் செல்லுதல், உலகத்தில் கெட்டார்க்கு நண்பர் இல்லை என்ற நினைவினாலோ?
-
Translation
in English‘The ruined have no friends, ‘they say; and so, my heart,
To follow him, at thy desire, from me thou dost depart. -
MeaningO my soul! do you follow him at pleasure under the belief that the ruined have no friends?
Category:Thirukural
1292. உறாஅ தவர்க்கண்ட கண்ணும்
1292. Uraaa Thavarkkanda Kannum
-
குறள் #1292
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்நெஞ்சோடு புலத்தல் (Nenjodu Pulaththal)
Exploration with Oneself
-
குறள்உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்
செறாஅரெனச் சேறியென் நெஞ்சு. -
விளக்கம்மனமே! நம்மிடத்தில் அன்பில்லாதவரின் குணத்தை நன்றாக அறிந்த பின்னரும், யான் சென்றால் சினம் கொள்ள மாட்டார் என்று நினைத்து நீ அவரிடம் செல்கின்றாய்.
-
Translation
in English‘Tis plain, my heart, that he ‘s estranged from thee;
Why go to him as though he were not enemy? -
MeaningO my soul! although you have known him who does not love me, still do you go to him, saying “he will not be displeased.”
Category:Thirukural
1291. அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும்
1291. Avarnenju Avarkkaathal Kandum
-
குறள் #1291
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்நெஞ்சோடு புலத்தல் (Nenjodu Pulaththal)
Exploration with Oneself
-
குறள்அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
நீஎமக்கு ஆகா தது. -
விளக்கம்மனமே! அவருடைய மனம் நம்மை நினையாதிருப்பதை அறிந்தும், நீ எமக்காக நில்லாமல் அவரையே நினைத்ததற்குக் காரணம் என்ன?
-
Translation
in EnglishYou see his heart is his alone
O heart, why not be all my own? -
MeaningO my soul! although you have seen how his soul stands by him, how is it you do not stand by me?
Category:Thirukural
1290. கண்ணின் துனித்தே கலங்கினாள்
1290. Kannin Thuniththe Kalanginaal
-
குறள் #1290
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்புணர்ச்சி விதும்பல் (Punarchchi Vithumbal)
Desire for Reunion
-
குறள்கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
என்னினும் தான்விதுப் புற்று. -
விளக்கம்காதலி கண்ணினால் பிணக்கிக் கலங்கினாள்; பின்னர் அதனை மறந்து, என்னைவிட விரைவாகத் தழுவினாள்.
-
Translation
in EnglishHer eye, as I drew nigh one day, with anger shone:
By love o’erpowered, her tenderness surpassed my own. -
MeaningShe once feigned dislike in her eyes, but the warmth of her embrace exceeded my own.
Category:Thirukural
Tags: 1330, Desire for Reunion, Love, The Post-Marital Love, tirukural
1289. மலரினும் மெல்லிது காமம்
1289. Malarinum Mellithu Kaamam
-
குறள் #1289
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்புணர்ச்சி விதும்பல் (Punarchchi Vithumbal)
Desire for Reunion
-
குறள்மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார். -
விளக்கம்காதலின்பம் மலரைவிட மேல்லியதாயிருக்கும்; இவ்வாறிருப்பதை அறிந்து, அதன் நயத்தைப் பெறுகிறவர் உலகில் சிலரேயாவர்.
-
Translation
in EnglishLove is tender as an opening flower. In season due
To gain its perfect bliss is rapture known to few. -
MeaningSexual delight is more delicate than a flower, and few are those who understand its real nature.
Category:Thirukural
Tags: 1330, Desire for Reunion, Love, The Post-Marital Love, tirukural
1288. இளித்தக்க இன்னா செயினும்
1288. Iliththakka Inna Seyinum
-
குறள் #1288
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்புணர்ச்சி விதும்பல் (Punarchchi Vithumbal)
Desire for Reunion
-
குறள்இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்
கள்ளற்றே கள்வநின் மார்பு. -
விளக்கம்கள்வனே! உனது மார்பானது, உண்டுகளித்தவர்க்கு இழிவு வரத்தக்க துன்பத்தைக் கொடுத்தாலும் அவரால் விரும்பப்படும் கள்ளைப் போன்றதாகும்.
-
Translation
in EnglishThough shameful ill it works, dear is the palm-tree wine
To drunkards; traitor, so to me that breast of thine! -
MeaningO you rogue! your breast is to me what liquor is to those who rejoice in it, though it only gives them an unpleasant disgrace.
Category:Thirukural
Tags: 1330, Desire for Reunion, Love, The Post-Marital Love, tirukural
1287. உய்த்தல் அறிந்து புனல்பாய்
1287. Uyiththal Arindhu Punalpaai
-
குறள் #1287
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்புணர்ச்சி விதும்பல் (Punarchchi Vithumbal)
Desire for Reunion
-
குறள்உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து. -
விளக்கம்தம்மை இழுத்துக் கொண்டு போகும் என்பதை அறிந்திருந்தும் ஓடுகின்ற நீரிலே குதித்தவரைப் போல, பிணக்கம் நிலையாதது என்று அறிந்தும் பிணங்குவது ஏன்?
-
Translation
in EnglishAs those of rescue sure, who plunge into the stream,
So did I anger feign, though it must falsehood seem? -
MeaningLike those who leap into a stream which they know will carry them off, why should a wife feign dislike which she knows cannot hold out long?
Category:Thirukural
Tags: 1330, Desire for Reunion, Love, The Post-Marital Love, tirukural
1286. காணுங்கால் காணேன் தவறாய
1286. Kaanunkaal Kaanen Thavaraaya
-
குறள் #1286
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்புணர்ச்சி விதும்பல் (Punarchchi Vithumbal)
Desire for Reunion
-
குறள்காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை. -
விளக்கம்கணவரைக் காணும்போது அவரிடத்தில் உள்ள குற்றங்களை நான் காண்பதில்லை. அவரைக் காணாதபோது, குற்றங்களல்லாதவற்றைக் காண்கின்றிலேன்.
-
Translation
in EnglishWhen him I see, to all his faults I ‘m blind;
But when I see him not, nothing but faults I find. -
MeaningWhen I see my husband, I do not see any faults; but when I do not see him, I do not see anything but faults.
Category:Thirukural
Tags: 1330, Desire for Reunion, Love, The Post-Marital Love, tirukural
1285. எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல்
1285. Ezhuthunkaal Kolkaanaak Kannepol
-
குறள் #1285
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்புணர்ச்சி விதும்பல் (Punarchchi Vithumbal)
Desire for Reunion
-
குறள்எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட இடத்து. -
விளக்கம்மை தீட்டும்போது கோலைப் பார்க்க மாட்டாத கண்ணைப் போல், கணவரின் குற்றத்தை அவரைக் கண்டபோது காணமாட்டேன்.
-
Translation
in EnglishThe eye sees not the rod that paints it; nor can I
See any fault, when I behold my husband nigh. -
MeaningLike the eyes which see not the pencil that paints it, I cannot see my husband’s fault (just) when I meet him.
Category:Thirukural
Tags: 1330, Desire for Reunion, Love, The Post-Marital Love, tirukural
1284. ஊடற்கண் சென்றேன்மன் தோழி
1284. Oodarkan Sendrenman Thozhi
-
குறள் #1284
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்புணர்ச்சி விதும்பல் (Punarchchi Vithumbal)
Desire for Reunion
-
குறள்ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றதுஎன் னெஞ்சு. -
விளக்கம்தோழியே, அவரோடு பிணங்க நினைத்துச் சென்றேன்; என் மனம் அதை மறந்து சேர்தலில் சென்றது.
-
Translation
in EnglishMy friend, I went prepared to show a cool disdain;
My heart, forgetting all, could not its love restrain. -
MeaningO my friend! I was prepared to feign displeasure but my mind forgetting it was ready to embrace him.
Category:Thirukural
Tags: 1330, Desire for Reunion, Love, The Post-Marital Love, tirukural
1283. பேணாது பெட்பவே செய்யினும்
1283. Penaathu Petpave Seiyinum
-
குறள் #1283
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்புணர்ச்சி விதும்பல் (Punarchchi Vithumbal)
Desire for Reunion
-
குறள்பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணா தமையல கண். -
விளக்கம்கணவர் என்னைப் பேணாது அவமதித்துத் தாம் விரும்பியவற்றையே செய்தாலும், கணவரைப் பார்க்காமல் என் கண்களால் இருக்க முடியவில்லை.
-
Translation
in EnglishAlthough his will his only law, he lightly value me,
My heart knows no repose unless my lord I see. -
MeaningThough my eyes disregard me and do what is pleasing to my husband, still will they not be satisfied unless they see him.
Category:Thirukural
Tags: 1330, Desire for Reunion, Love, The Post-Marital Love, tirukural
1282. தினைத்துணையும் ஊடாமை வேண்டும்
1282. Thinaiththunaiyum Oodaamai Vendum
-
குறள் #1282
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்புணர்ச்சி விதும்பல் (Punarchchi Vithumbal)
Desire for Reunion
-
குறள்தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்
காமம் நிறைய வரின். -
விளக்கம்காதல் பனைமரத்தின் அளவுக்கு அதிகமாகத் தோன்றினாலும், தினையளவு போன்ற சிறிதளவும் ஊடல் கொள்ளாமல் இருப்பது விரும்பத்தக்கது.
-
Translation
in EnglishWhen as palmyra tall, fulness of perfect love we gain,
Distrust can find no place small as the millet grain. -
MeaningIf women have a lust that exceeds even the measure of the palmyra fruit, they will not desire (to feign) dislike even as much as the millet.
Category:Thirukural
Tags: 1330, Desire for Reunion, Love, The Post-Marital Love, tirukural
1281. உள்ளக் களித்தலும் காண
1281. Ullak Kaliththalum Kaana
-
குறள் #1281
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்புணர்ச்சி விதும்பல் (Punarchchi Vithumbal)
Desire for Reunion
-
குறள்உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு. -
விளக்கம்நினைத்தவுடன் களித்தலும், கண்டவுடன் மகிழ்தலும், கள்ளினால் உண்டாவதில்லை; இவை காதலினால் உண்டாகும்.
-
Translation
in EnglishGladness at the thought, rejoicing at the sight,
Not palm-tree wine, but love, yields such delight. -
MeaningTo please by thought and cheer by sight is peculiar, not to liquor but lust.
Category:Thirukural
Tags: 1330, Desire for Reunion, Love, The Post-Marital Love, tirukural
1280. பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப
1280. Penninaal Penmai Udaiththenba
-
குறள் #1280
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்குறிப்பறிவுறுத்தல் (Kuripparivuruththal)
The Reading of the Signs
-
குறள்பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்
காமநோய் சொல்லி இரவு. -
விளக்கம்காதல் நோயைக் கண்களால் அறிவித்து வேண்டுதல், பெண் தன்மையிலும் சிறந்த பெண் தன்மையை உடையது என்று கூறுவர்.
-
Translation
in EnglishTo show by eye the pain of love, and for relief to pray,
Is womanhood’s most womanly device, men say. -
MeaningTo express their love-sickness by their eyes and resort to begging bespeaks more than ordinary female excellence.
Category:Thirukural
1279. தொடிநோக்கி மென்தோளும் நோக்கி
1279. Thodinokki Mentholum Nokki
-
குறள் #1279
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்குறிப்பறிவுறுத்தல் (Kuripparivuruththal)
The Reading of the Signs
-
குறள்தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி
அஃதாண் டவள்செய் தது. -
விளக்கம்வளையல்களைப் பார்த்து, மெல்லிய தோள்களையும் பார்த்து, பாதங்களையும் பார்த்து அவள் அவ்விடத்தில் செய்தது உடன்போக்கைக் குறித்தது.
-
Translation
in EnglishShe viewed her tender arms, she viewed the armlets from them slid;
She viewed her feet: all this the lady did. -
MeaningShe looked at her bracelets, her tender shoulders, and her feet; this was what she did there (significantly).
Category:Thirukural
1278. நெருநற்றுச் சென்றார்எம் காதலர்
1278. Nerunatruch Chendraarem Kaathalar
-
குறள் #1278
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்குறிப்பறிவுறுத்தல் (Kuripparivuruththal)
The Reading of the Signs
-
குறள்நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும்
எழுநாளேம் மேனி பசந்து. -
விளக்கம்எம் காதலர் நேற்றுத்தான் பிரிந்து சென்றார்; நாமும் உடம்பு பசலை அடைந்து ஏழு நாட்கள் ஆனதுபோல் ஆயினோம்.
-
Translation
in EnglishMy loved one left me, was it yesterday?
Days seven my pallid body wastes away! -
MeaningIt was but yesterday my lover departed (from me); and it is seven days since my complexion turned sallow.
Category:Thirukural
1277. தண்ணந் துறைவன் தணந்தமை
1277. Thannan Thuraivan Thananthamai
-
குறள் #1277
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்குறிப்பறிவுறுத்தல் (Kuripparivuruththal)
The Reading of the Signs
-
குறள்தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்
முன்னம் உணர்ந்த வளை. -
விளக்கம்குளிர்ந்த துறையையுடைய காதலர் நம்மை விட்டுப் பிரிய எண்ணியதை, நான் அறிவதன்முன் என் கைவளைகள் குறிப்பால் அறிந்தன.
-
Translation
in EnglishMy severance from the lord of this cool shore,
My very armlets told me long before. -
MeaningMy bracelets have understood before me the (mental) separation of him who rules the cool seashore.
Category:Thirukural
1276. பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல்
1276. Perithaatrip Petpak Kalaththal
-
குறள் #1276
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்குறிப்பறிவுறுத்தல் (Kuripparivuruththal)
The Reading of the Signs
-
குறள்பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி
அன்பின்மை சூழ்வ துடைத்து. -
விளக்கம்காதலர் மிக்க அன்பு செய்து நாம் விரும்பியவாறு கூடுவது, அவர் பிரிவினை மேற்கொண்டு அன்பு இன்றிச் செல்ல நினைக்கும் குறிப்பினை உடையது.
-
Translation
in EnglishWhile lovingly embracing me, his heart is only grieved:
It makes me think that I again shall live of love bereaved. -
MeaningThe embrace that fills me with comfort and gladness is capable of enduring (my former) sorrow and meditating on his want of love.
Category:Thirukural
1275. செறிதொடி செய்திறந்த கள்ளம்
1275. Serithodi Seithirantha Kallam
-
குறள் #1275
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்குறிப்பறிவுறுத்தல் (Kuripparivuruththal)
The Reading of the Signs
-
குறள்செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்
தீர்க்கும் மருந்தொன்று உடைத்து. -
விளக்கம்செறிந்த வளையல் அணிந்த இவள் என்னிடம் மறைவாகச் செய்துவிட்டுச் சென்ற குறிப்பு, எனது மிகுந்த நோயைத் தீர்க்கும் மருந்து ஒன்றினை உடையது.
-
Translation
in EnglishThe secret wiles of her with thronging armlets decked,
Are medicines by which my raising grief is checked. -
MeaningThe well-meant departure of her whose bangles are tight-fitting contains a remedy that can cure my great sorrow.
Category:Thirukural
1274. முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல்
1274. Mugaimokkul Ullathu Naatrampol
-
குறள் #1274
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்குறிப்பறிவுறுத்தல் (Kuripparivuruththal)
The Reading of the Signs
-
குறள்முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு. -
விளக்கம்மொட்டாக உள்ள மலரினுள் அடங்கிய நறுமணம் போல, இவளது புன்முறுவலின் தோற்றத்தில் தோன்றாது அடங்கியுள்ள குறிப்பு ஒன்று உண்டு.
-
Translation
in EnglishAs fragrance in the opening bud, some secret lies
Concealed in budding smile of this dear damsel’s eyes. -
MeaningThere is something in the unmatured smile of this maid like the fragrance that is contained in an unblossomed bud.
Category:Thirukural
1273. மணியில் திகழ்தரு நூல்போல்
1273. Maniyil Thgazhtharu Noolpol
-
குறள் #1273
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்குறிப்பறிவுறுத்தல் (Kuripparivuruththal)
The Reading of the Signs
-
குறள்மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை
அணியில் திகழ்வதொன்று உண்டு. -
விளக்கம்மணியில் கோக்கப்பட்ட நூல் வெளியே தெரிவது போல, இவளது அழகில் தோன்றும் குறிப்பொன்று உண்டு.
-
Translation
in EnglishAs through the crystal beads is seen the thread on which they ‘re strung
So in her beauty gleams some thought cannot find a tongue. -
MeaningThere is something that is implied in the beauty of this woman, like the thread that is visible in a garland of gems.
Category:Thirukural
1272. கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட்
1272. Kanniraindha Kaarigaik Kaamperthot
-
குறள் #1272
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்குறிப்பறிவுறுத்தல் (Kuripparivuruththal)
The Reading of the Signs
-
குறள்கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்
பெண்நிறைந்த நீர்மை பெரிது. -
விளக்கம்கண் நிறைந்த அழகினையும், மூங்கில் போன்ற தொளினையுமுடைய காதலிக்கு, பெண்களிடம் நிறைந்துள்ள நல்ல குணங்கள் மிக உள்ளன.
-
Translation
in EnglishThe simple one whose beauty fills mine eye, whose shoulders curve
Like bambu stem, hath all a woman’s modest sweet reserve. -
MeaningUnusually great is the female simplicity of your maid whose beauty fills my eyes and whose shoulders resemble the bamboo.
Category:Thirukural
1271. கரப்பினுங் கையிகந் தொல்லாநின்
1271. Karappinung Kaiyikand Thollaanin
-
குறள் #1271
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்குறிப்பறிவுறுத்தல் (Kuripparivuruththal)
The Reading of the Signs
-
குறள்கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்
உரைக்கல் உறுவதொன் றுண்டு. -
விளக்கம்நீ மறைக்க விரும்பினாலும் உன் மையுண்ட கண்கள் உன்னை மீறி எனக்குச் சொல்ல விரும்புவது ஒன்று உண்டு.
-
Translation
in EnglishThou hid’st it, yet thine eye, disdaining all restraint,
Something, I know not, what, would utter of complaint. -
MeaningThough you would conceal (your feelings), your painted eyes would not, for, transgressing (their bounds), they tell (me) something.
Category:Thirukural
1270. பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம்
1270. Perinennaam Petrakkaal Ennaaam
-
குறள் #1270
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்அவர்வயின் விதும்பல் (Avarvayin Vithumbal)
Mutual Desire
-
குறள்பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்
உள்ளம் உடைந்துக்கக் கால். -
விளக்கம்பிரிவாற்றாமல் மனம் உடைந்து காதலி இறப்பாளாயின், பின் அவள் என்னைப் பெறுவதனால் என்ன பயன்? பெற்றால் தான் என்ன பயன்? தழுவினால் தான் என்ன பயன்?
-
Translation
in EnglishWhat’s my return, the meeting hour, the wished-for greeting worth,
If she heart-broken lie, with all her life poured forth? -
MeaningAfter (my wife) has died of a broken heart, what good will there be if she is to receive me, has received me, or has even embraced me?
1269. ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண்
1269. Orunaal Ezhunaalpol Sellumsen
-
குறள் #1269
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்அவர்வயின் விதும்பல் (Avarvayin Vithumbal)
Mutual Desire
-
குறள்ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்
வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு. -
விளக்கம்தூரதேசம் சென்ற காதலர் திரும்ப வரும் நாளை நினைத்து ஏங்கும் மகளிர்க்கு, ஒருநாள் கழிவது ஏழு நாள் கழிவது போலத் தோன்றும்.
-
Translation
in EnglishOne day will seem like seven to those who watch and yearn
For that glad day when wanderers from afar return. -
MeaningTo those who suffer waiting for the day of return of their distant lovers one day is as long as seven days.
1268. வினைகலந்து வென்றீக வேந்தன்
1268. Vinaikalanthu Venreega Venthan
-
குறள் #1268
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்அவர்வயின் விதும்பல் (Avarvayin Vithumbal)
Mutual Desire
-
குறள்வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
மாலை அயர்கம் விருந்து. -
விளக்கம்அரசன் போர் செய்து வெற்றி பெறுவானாக; நானும் என் காதலியை அடைந்து மாலைக் காலத்தில் விருந்து உண்பேனாக.
-
Translation
in EnglishO would my king would fight, o’ercome, devide the spoil;
At home, to-night, the banquet spread should crown the toil. -
MeaningLet the king fight and gain (victories); (but) let me be united to my wife and feast the evening.
1267. புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ
1267. Pulappenkol Pulluven Kollo
-
குறள் #1267
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்அவர்வயின் விதும்பல் (Avarvayin Vithumbal)
Mutual Desire
-
குறள்புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்
கண்அன்ன கேளிர் விரன். -
விளக்கம்கண்போற் சிறந்த காதலர் வந்தால், நான் அப்பொழுது பிணங்குவேனோ, தழுவுவேனோ; அல்லது இரண்டையும் கலந்து செய்வேனோ தெரியவில்லை.
-
Translation
in EnglishShall I draw back, or yield myself, or shall both mingled be,
When he returns, my spouse, dear as these eyes to me. -
MeaningOn the return of him who is as dear as my eyes, am I displeased or am I to embrace (him); or am I to do both?
1266. வருகமன் கொண்கன் ஒருநாள்
1266. Varukaman Konkan Orunaal
-
குறள் #1266
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்அவர்வயின் விதும்பல் (Avarvayin Vithumbal)
Mutual Desire
-
குறள்வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன்
பைதல்நோய் எல்லாம் கெட. -
விளக்கம்என் கணவன் என்றேனும் ஒருநாள் வருவானாக; வந்தால் இத்துன்பம் தரும் நோயெல்லாம் கெடுமாறு இன்பம் அனுபவிப்பேன்.
-
Translation
in EnglishO let my spouse but come again to me one day!
I’ll drink that nectar: wasting grief shall flee away. -
MeaningMay my husband return some day; and then will I enjoy (him) so as to destroy all this agonizing sorrow.
1265. காண்கமன் கொண்கனைக் கண்ணாரக்
1265. Kaankaman Konkanaik Kannaarak
-
குறள் #1265
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்அவர்வயின் விதும்பல் (Avarvayin Vithumbal)
Mutual Desire
-
குறள்காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்
நீங்கும்என் மென்தோள் பசப்பு. -
விளக்கம்நான் என் கணவரைக் கண்ணாரக் காண்பேனாக; அவ்வாறு கண்டால் என் மெல்லிய தோலின் மீதுள்ள பசலை நீங்கும்.
-
Translation
in EnglishO let me see my spouse again and sate these longing eyes!
That instant from my wasted frame all pallor flies. -
MeaningMay I look on my lover till I am satisfied and thereafter will vanish the sallowness of my slender shoulders.
1264. கூடிய காமம் பிரிந்தார்
1264. Koodiya Kaamam Pirindhaar
-
குறள் #1264
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்அவர்வயின் விதும்பல் (Avarvayin Vithumbal)
Mutual Desire
-
குறள்கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்
கோடுகொ டேறுமென் நெஞ்சு. -
விளக்கம்பிரிந்தவர் காதலால் கூடும்படி வருவார் என்று நினைத்து எனது மனம் மரத்தின் கிளை மீது ஏறிப் பார்க்கின்றது.
-
Translation
in English‘He comes again, who left my side, and I shall taste love’s joy,’-
My heart with rapture swells, when thoughts like these my mind employ. -
MeaningMy heart is rid of its sorrow and swells with rapture to think of my absent lover returning with his love.
1263. உரன்நசைஇ உள்ளம் துணையாகச்
1263. Urannasaie ullam Thunaiyaagach
-
குறள் #1263
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்அவர்வயின் விதும்பல் (Avarvayin Vithumbal)
Mutual Desire
-
குறள்உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
வரல்நசைஇ இன்னும் உளேன். -
விளக்கம்இன்பத்தைத் விரும்பாது வெற்றியை விரும்பித் தமது ஊக்கத்தைத் துணைக்கொண்டு சென்றவர், மீண்டும் வருவதை விரும்பி நான் உயிரை வைத்துக் கொண்டிருக்கின்றேன்.
-
Translation
in EnglishOn victory intent, His mind sole company he went;
And I yet life sustain! And long to see his face again! -
MeaningI still live by longing for the arrival of him who has gone out of love for victory and with valour as his guide.
1262. இலங்கிழாய் இன்று மறப்பின்என்
1262. Ilankizhaai Indru Marappinen
-
குறள் #1262
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்அவர்வயின் விதும்பல் (Avarvayin Vithumbal)
Mutual Desire
-
குறள்இலங்கிழாய் இன்று மறப்பின்என் தோள்மேல்
கலங்கழியும் காரிகை நீத்து. -
விளக்கம்விளக்குகின்ற அணி அணிந்த தோழியே! இன்று என் காதலரை மறந்ததால், என் தோள்கள் அழகினை இழந்து மெலியும்; அதனால் வளையல்கள் கழன்று விடும்.
-
Translation
in EnglishO thou with gleaming jewels decked, could I forget for this one day,
Henceforth these bracelets from my arms will slip, my beauty worn away. -
MeaningO you bright-jewelled maid, if I forget (him) today, my shoulders will lose their beauty even in the other life and make my bracelets loose.
1261. வாளற்றுப் புற்கென்ற கண்ணும்
1261. Vaalatrup Purkendra Kannum
-
குறள் #1261
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்அவர்வயின் விதும்பல் (Avarvayin Vithumbal)
Mutual Desire
-
குறள்வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல். -
விளக்கம்காதலர் சென்ற நாட்களை உணர்த்தும் கோடுகளைத் தொட்டு எண்ணியமையால் என் விரல்கள் தேய்ந்தன. அவரது வருகையை எதிர்பார்த்து என் கண்களும் ஒளியிழந்து மங்கின.
-
Translation
in EnglishMy eyes have lost their brightness, sight is dimmed; my fingers worn,
With nothing on the wall the days since I was left forlorn. -
MeaningMy finger has worn away by marking (on the wall) the days he has been absent while my eyes have lost their lustre and begin to fail.
1260. நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு
1260. Ninantheeyil Ittanna Nenchinaarkku
-
குறள் #1260
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்நிறையழிதல் (Niraiyazhithal)
Reserve Overcome
-
குறள்நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ
புணர்ந்தூடி நிற்பேம் எனல். -
விளக்கம்கொழுப்பைத் தீயிலிட்டால் உருகுவது போன்ற நெஞ்சுடையவருக்கு, கூடி அதன்பின் ஓடி இருப்போம் என்னும் உறுதிப்பாடு உண்டோ?
-
Translation
in English‘We ‘ll stand aloof and then embrace’: is this for them to say,
Whose hearts are as the fat that in the blaze dissolves away? -
MeaningIs it possible for those whose hearts melt like fat in the fire to say they can feign a strong dislike and remain so?
1259. புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன்
1259. Pulappal Enachchendren Pullinen
-
குறள் #1259
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்நிறையழிதல் (Niraiyazhithal)
Reserve Overcome
-
குறள்புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டு. -
விளக்கம்அவரோடு பிணங்குவேன் என்று நினைத்துச் சென்றேன்; என் மனம் அவரோடு கலக்கத் தொடங்குவதை அறிந்து தழுவிக் கொண்டேன்.
-
Translation
in English‘I ‘ll shun his greeting’; saying thus with pride away I went:
I held him in my arms, for straight I felt my heart relent. -
MeaningI said I would feign dislike and so went (away); (but) I embraced him the moment I say my mind began to unite with him!
1258. பன்மாயக் கள்வன் பணிமொழி
1258. Panmaayak Kalvan Panimozhi
-
குறள் #1258
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்நிறையழிதல் (Niraiyazhithal)
Reserve Overcome
-
குறள்பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்
பெண்மை உடைக்கும் படை. -
விளக்கம்நமது மன அடக்கத்தை உடைக்கின்ற ஆயுதம், பல பொய் பேசவல்ல காதலனான கள்வனுடைய தாழ்ந்த சொற்களல்லவா?
-
Translation
in EnglishThe words of that deceiver, versed in every wily art,
Are instruments that break through every guard of woman’s heart! -
MeaningAre not the enticing words of my trick-abounding roguish lover the weapon that breaks away my feminine firmness?
1257. நாணென ஒன்றோ அறியலம்
1257. Naanena Ondro Ariyalam
-
குறள் #1257
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்நிறையழிதல் (Niraiyazhithal)
Reserve Overcome
-
குறள்நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்
பேணியார் பெட்ப செயின். -
விளக்கம்நம்மால் விரும்பப்பட்டவர், காதலினால் நாம் விரும்பியவற்றைச் செய்வாரானால் நாணம் என்ற ஒன்றை அறிய மாட்டோம்.
-
Translation
in EnglishNo sense of shame my gladdened mind shall prove,
When he returns my longing heart to bless with love. -
MeaningI know nothing like shame when my beloved does from love (just) what is desired (by me).
1256. செற்றவர் பின்சேறல் வேண்டி
1256. Setravar Pinseral Vendi
-
குறள் #1256
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்நிறையழிதல் (Niraiyazhithal)
Reserve Overcome
-
குறள்செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ
எற்றென்னை உற்ற துயர். -
விளக்கம்பிரிந்தவர் பின்னே செல்லும்படி செய்வதற்கு என்னை அடைந்த துன்பம் எத்தன்மை உடையது! இது மிகவும் இரங்கத்தக்கது.
-
Translation
in EnglishMy grief how full of grace, I pray you see!
It seeks to follow him that hateth me. -
MeaningThe sorrow I have endured by desiring to go after my absent lover, in what way is it excellent?
1255. செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை
1255. Setraarpin Sellaap Perundhagaimai
-
குறள் #1255
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்நிறையழிதல் (Niraiyazhithal)
Reserve Overcome
-
குறள்செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்
உற்றார் அறிவதொன்று அன்று. -
விளக்கம்பிரிந்தவர் பின்னே செல்லாது நிற்கும் பெருந்தன்மை, காதல் நோய் அடைந்தவரால் அறியப்படுவதொன்று அன்று.
-
Translation
in EnglishThe dignity that seeks not him who acts as foe,
Is the one thing that loving heart can never know. -
MeaningThe dignity that would not go after an absent lover is not known to those who are sticken by love.
1254. நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன்
1254. Niraiyudaiyen Enbenman Yaanoen
-
குறள் #1254
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்நிறையழிதல் (Niraiyazhithal)
Reserve Overcome
-
குறள்நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம்
மறையிறந்து மன்று படும். -
விளக்கம்நான் அடக்கமுடையவள் என்று என்னை நினைத்திருந்தேன். எனது காதல் மறைத்தலைக் கடந்து பலருமறிய வெளிப்படுகின்றது.
-
Translation
in EnglishIn womanly reserve I deemed myself beyond assail;
But love will come abroad, and casts away the veil. -
MeaningI say I would be firm, but alas, my malady breaks out from its concealment and appears in public.
1253. மறைப்பேன்மன் காமத்தை யானோ
1253. Maraippenman Kamaththai Yaano
-
குறள் #1253
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்நிறையழிதல் (Niraiyazhithal)
Reserve Overcome
-
குறள்மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்
தும்மல்போல் தோன்றி விடும். -
விளக்கம்நான் இந்தக் காதலை மறைக்க முயல்வேன்; ஆனால் அஃது என் எண்ணத்தின்படி அடங்கி நில்லாது தும்மல் போலத் தானே வெளிப்ப்பட்டு விடுகின்றது.
-
Translation
in EnglishI would my love conceal, but like a sneeze
It shows itself, and gives no warning sign. -
MeaningI would conceal my lust, but alas, it yields not to my will but breaks out like a sneeze.
1252. காமம் எனவொன்றோ கண்ணின்றென்
1252. Kaamam Enavendro Kanninren
-
குறள் #1252
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்நிறையழிதல் (Niraiyazhithal)
Reserve Overcome
-
குறள்காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில். -
விளக்கம்காதல் என்று சொல்லப்பட்ட ஒன்று, இரக்கமில்லாதது; நடு இரவிலும் என் மனத்தைத் துன்பப்படுத்தலாகிய தொழிலை மேற்கொள்ளச் செய்கின்றது.
-
Translation
in EnglishWhat men call love is the one thing of merciless power;
It gives my soul no rest, e’en in the midnight hour. -
MeaningEven at midnight is my mind worried by lust, and this one thing, alas! is without mercy.
1251. காமக் கணிச்சி உடைக்கும்
1251. Kaamak Kanichchi Udaikkum
-
குறள் #1251
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்நிறையழிதல் (Niraiyazhithal)
Reserve Overcome
-
குறள்காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
நாணுத்தாழ் வீழ்த்த கதவு. -
விளக்கம்நாணம் என்னும் தாழ் இடப்பெற்ற மனஅடக்கம் என்னும் கதவை, காதல் என்னும் கோடரி உடைக்கும்.
-
Translation
in EnglishOf womanly reserve love’s axe breaks through the door,
Barred by the bolt of shame before. -
MeaningThe axe of lust can break the door of chastity which is bolted with the bolt of modesty.
1250. துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து
1250. Thunnaath Thuranthaarai Nenjaththu
-
குறள் #1250
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்நெஞ்சோடு கிளத்தல் (Nenchodu Kilaththal)
Soliloquy
-
குறள்துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா
இன்னும் இழத்தும் கவின். -
விளக்கம்கூடாமல் பிரிந்து சென்றவரை மனத்தில் வைத்திருப்போமானால் இன்னும் அழகை இழப்போம்.
-
Translation
in EnglishIf I should keep in mind the man who utterly renounces me,
My soul must suffer further loss of dignity. -
MeaningIf I retain in my heart him who has left me without befriending me, I shall lose even the (inward) beauty that remains.
1249. உள்ளத்தார் காத லவரால்
1249. Ullaththaar Kaatha Lavaraal
-
குறள் #1249
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்நெஞ்சோடு கிளத்தல் (Nenchodu Kilaththal)
Soliloquy
-
குறள்உள்ளத்தார் காத லவரால் உள்ளிநீ
யாருழைச் சேறியென் நெஞ்சு. -
விளக்கம்என் மனமே! காதலர் உன்னுள்ளே இருக்க, நீ அவரைத் தேடி எங்கே செல்கின்றாய்?
-
Translation
in EnglishMy heart! my lover lives within my mind;
Roaming, whom dost thou think to find? -
MeaningO my soul! to whom would you repair, while the dear one is within yourself?
1248. பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப்
1248. Parindhavar Nalgaarendru Yengip
-
குறள் #1248
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்நெஞ்சோடு கிளத்தல் (Nenchodu Kilaththal)
Soliloquy
-
குறள்பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர்
பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு. -
விளக்கம்எனது மனமே! அவர் இறக்கம் கொண்டு வந்து அருள் செய்யார் என்று நினைத்து, அவர் பின்னே ஏங்கிச் செல்கின்றாய்; நீ அறிவிலாதாய்.
-
Translation
in EnglishThou art befooled, my heart, thou followest him who flees from thee;
And still thou yearning criest: ‘He will nor pity show nor love to me.’ -
MeaningYou are a fool, O my soul! to go after my departed one, while you mourn that he is not kind enough tofavour you.
1247. காமம் விடுஒன்றோ நாண்விடு
1247. Kaamam Viduondro Naanvidu
-
குறள் #1247
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்நெஞ்சோடு கிளத்தல் (Nenchodu Kilaththal)
Soliloquy
-
குறள்காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே
யானோ பொறேன்இவ் விரண்டு. -
விளக்கம்நல்ல மனமே! ஒன்று காமத்தை விட்டுவிடு; அல்லது நாணத்தை விட்டுவிடு; ஒன்றுக்கொன்று மாறுபட்ட இவ்விரண்டையும் நான் தாங்கமாட்டேன்.
-
Translation
in EnglishOr bid thy love, or bid thy shame depart;
For me, I cannot bear them both, my worthy heart! -
MeaningO my good soul, give up either lust or honour, as for me I can endure neither.
1246. கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற்
1246. Kalanthunarththum Kaathalark Kandaar
-
குறள் #1246
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்நெஞ்சோடு கிளத்தல் (Nenchodu Kilaththal)
Soliloquy
-
குறள்கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்
பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு. -
விளக்கம்மனமே! நம்மைச் சேர்ந்து ஊடலை நீக்குகின்ற காதலரைக் கண்டால் ஒருபோதும் வெறுக்காத நீ, இப்போது அவரைக் கொடியவர் என்று பொய்யாக வெறுக்கின்றாய்!
-
Translation
in EnglishMy heart, false is the fire that burns; thou canst not wrath maintain,
If thou thy love behold, embracing, soothing all thy pain. -
MeaningO my soul! when you see the dear one who remove dislike by intercourse, you are displeased and continue to be so. Nay, your displeasure is (simply) false.
1245. செற்றார் எனக்கை விடல்உண்டோ
1245. Setraar Enakkai Vidalundo
-
குறள் #1245
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்நெஞ்சோடு கிளத்தல் (Nenchodu Kilaththal)
Soliloquy
-
குறள்செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம்
உற்றால் உறாஅ தவர். -
விளக்கம்மனமே! நாம் விரும்ப, நம்மை விரும்பாத அவர், நம்மை வெறுத்தார் என்று, நாமும் அவரைக் கைவிட முடியுமோ?
-
Translation
in EnglishO heart, as a foe, can I abandon utterly
Him who, though I long for him, longs not for me? -
MeaningO my soul! can he who loves not though he is beloved, be forsaken saying he hates me (now)?
1244. கண்ணும் கொளச்சேறி நெஞ்சே
1244. Kannum Kolachcheri Nenje
-
குறள் #1244
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்நெஞ்சோடு கிளத்தல் (Nenchodu Kilaththal)
Soliloquy
-
குறள்கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்
தின்னும் அவர்க்காணல் உற்று. -
விளக்கம்மனமே! நீ அவரிடம் சென்றால் இக்கண்களையும் உடன் கொண்டு செல்; இக்கண்கள் அவரைக் காண விரும்பி எனைத் தின்பவை போல் வருத்துகின்றன.
-
Translation
in EnglishO rid me of these eyes, my heart; for they,
Longing to see him, wear my life away. -
MeaningO my soul! take my eyes also with you, (if not), these would eat me up (in their desire) to see him.
1243. இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே
1243. Irunthulli Enbarithal Nenje
-
குறள் #1243
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்நெஞ்சோடு கிளத்தல் (Nenchodu Kilaththal)
Soliloquy
-
குறள்இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்
பைதல்நோய் செய்தார்கண் இல். -
விளக்கம்மனமே! நீ இருந்து நினைத்து வருந்துவது ஏன்? இம்மிகுந்த நோய் செய்தவரிடத்தில் நம்மை நினைத்து வருந்தும் நன்மை இல்லையே!
-
Translation
in EnglishWhat comes of sitting here in pining thought, O heart? He knows
No pitying thought, the cause of all these wasting woes. -
MeaningO my soul! why remain (here) and suffer thinking (of him)? There are no lewd thoughts (of you) in him who has caused you this disease of sorrow.
1242. காதல் அவரிலர் ஆகநீ
1242. Kaathal Avarilar Aaganee
-
குறள் #1242
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்நெஞ்சோடு கிளத்தல் (Nenchodu Kilaththal)
Soliloquy
-
குறள்காதல் அவரிலர் ஆகநீ நோவது
பேதைமை வாழியென் நெஞ்சு. -
விளக்கம்எனது மனமே! வாழ்வாயாக! அவர் ஆசையில்லாமளிருக்க, நீ அவரது வருகையை எதிர்பார்த்து வருந்துவது அறியாமை.
-
Translation
in EnglishSince he loves not, thy smart
Is folly, fare thee well my heart! -
MeaningMay you live, O my soul! While he is without love, for you to suffer is (simple) folly.
1241. நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே
1241. Ninaiththondru Sollaayo Nenje
-
குறள் #1241
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்நெஞ்சோடு கிளத்தல் (Nenchodu Kilaththal)
Soliloquy
-
குறள்நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
எவ்வநோய் தீர்க்கும் மருந்து. -
விளக்கம்மனமே! என்னுடைய தீராத நோயைத் தீர்க்கும் மருந்து ஒன்றை, எத்தகைய தொன்றாயினும் அறிந்து சொல்லமாட்டாயோ?
-
Translation
in EnglishMy heart, canst thou not thinking of some med’cine tell,
Not any one, to drive away this grief incurable? -
MeaningO my soul, will you not think and tell me some medicine be it what it may, that can cure this incurable malady?
1240. கண்ணின் பசப்போ பருவரல்
1240. Kannin Pasappo Paruvaral
-
குறள் #1240
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்உறுப்புநலன் அழிதல் (Uruppunalan Azhithal)
Wasting Away
-
குறள்கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
ஒண்ணுதல் செய்தது கண்டு. -
விளக்கம்ஒளிபொருந்திய நெற்றியில் உண்டான நிற வேறுபாட்டைக் கண்டு கண்கள் பசப்புற்றுத் துன்பம் அடைந்தன.
-
Translation
in EnglishThe dimness of her eye felt sorrow now,
Beholding what was done by that bright brow. -
MeaningWas it at the sight of what the bright forehead had done that the sallowness of her eyes became sad?
1239. முயக்கிடைத் தண்வளி போழப்
1239. Muyakkidaith Thanvali Pozhap
-
குறள் #1239
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்உறுப்புநலன் அழிதல் (Uruppunalan Azhithal)
Wasting Away
-
குறள்முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண். -
விளக்கம்தழுவுதளுக்கிடையே குளிர்ந்த காற்று நுழைந்ததால், அவளது பெரிய குளிர்ந்த கண்கள் நிறம் வேறுபட்டன; இப்பொழுது அவை என்ன ஆயினவோ?
-
Translation
in EnglishAs we embraced a breath of wind found entrance there;
The maid’s large liquid eyes were dimmed with care. -
MeaningWhen but a breath of breeze penetrated our embrace, her large cool eyes became sallow.
1238. முயங்கிய கைகளை ஊக்கப்
1238. Muyangiya Kaikalai Ookkap
-
குறள் #1238
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்உறுப்புநலன் அழிதல் (Uruppunalan Azhithal)
Wasting Away
-
குறள்முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
பைந்தொடிப் பேதை நுதல். -
விளக்கம்தழுவிய கைகளைத் தளர்த்தியவுடன், பசுமையான பொன்வளை அணிந்த பெண்ணின் நெற்றி நிறம் வெளுத்தது; இப்பிரிவுக்கு அவள் என்ன ஆனாலோ? (இது தலைவன் கூற்று).
-
Translation
in EnglishOne day the fervent pressure of embracing arms I checked,
Grew wan the forehead of the maid with golden armlet decked. -
MeaningWhen I once loosened the arms that were in embrace, the forehead of the gold-braceleted women turned sallow.
1237. பாடுபெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்
1237. Paaduperuthiyo Nenche Kodiyaarkken
-
குறள் #1237
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்உறுப்புநலன் அழிதல் (Uruppunalan Azhithal)
Wasting Away
-
குறள்பாடுபெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென் வாடுதோட்
பூசல் உரைத்து. -
விளக்கம்மனமே! கொடியவர்க்கு என் வாடுகின்ற தோள்களினால் உண்டாகின்ற ஆரவாரத்தைச் சொல்லிப் பெருமை கொள்ள மாட்டாயோ?
-
Translation
in EnglishMy heart! say ought of glory wilt thou gain,
If to that cruel one thou of thy wasted arms complain? -
MeaningCan you O my soul! gain glory by relating to the (so-called) cruel one the clamour of my fading shoulders?
1236. தொடியொடு தோள்நெகிழ நோவல்
1236. Thodiyodu Tholnegizha Noval
-
குறள் #1236
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்உறுப்புநலன் அழிதல் (Uruppunalan Azhithal)
Wasting Away
-
குறள்தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்
கொடியர் எனக்கூறல் நொந்து. -
விளக்கம்‘வளைகள் கழலும்படி தோள்கள் வாடியதைக் கண்டு நீ அவரைக் கொடியவர் என்று சொல்லாதே; நீ அவ்வாறு சொல்லக் கேட்டுப் பொறுக்காமல் வருந்துகின்றேன்’, எனத் தலைவி தோழிக்குச் சொன்னாள்.
-
Translation
in EnglishI grieve, ’tis pain to me to hear him cruel chid,
Because the armlet from my wasted arm has slid. -
MeaningI am greatly pained to hear you call him a cruel man, just because your shoulders are reduced and your bracelets loosened.
1235. கொடியார் கொடுமை உரைக்கும்
1235. Kodiyaar Kodumai Uraikkum
-
குறள் #1235
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்உறுப்புநலன் அழிதல் (Uruppunalan Azhithal)
Wasting Away
-
குறள்கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
தொல்கவின் வாடிய தோள். -
விளக்கம்வளையல்கள் கழன்று பழைய இயற்கையழகிழந்த இத்தோல்கள், கொடிய காதலரின் கொடுமையை எடுத்துரைக்கின்றன.
-
Translation
in EnglishThese wasted arms, the bracelet with their wonted beauty gone,
The cruelty declare of that most cruel one. -
MeaningThe (loosened) bracelets, and the shoulders from which the old beauty has faded, relate the cruelty of the pitiless one.
1234. பணைநீங்கிப் பைந்தொடி சோரும்
1234. Panaineengip Painthodi Sorum
-
குறள் #1234
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்உறுப்புநலன் அழிதல் (Uruppunalan Azhithal)
Wasting Away
-
குறள்பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள். -
விளக்கம்காதலரைப் பிரிந்தால் பழைய இயற்கை அழகு கெட்டுத் தோள்கள் மெலிந்தன; அவை பருமை குறைந்தமையால் பசுமையான பொன் வளையல்கள் கழலுகின்றன.
-
Translation
in EnglishWhen lover went, then faded all their wonted charms,
And armlets’ golden round slips off from these poor wasted arms. -
MeaningIn the absence of your consort, your shoulders having lost their former beauty and fulness, your bracelets of pure gold have become loose.