9
Nov.2014
0380. ஊழிற் பெருவலி யாவுள
0380. Oozhir Peruvali Yaavula
-
குறள் #0380
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்ஊழியல் (Oozhiyal) – Fate
-
அதிகாரம்ஊழ் (Oozh)
Destiny
-
குறள்ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். -
விளக்கம்ஊழைவிட மிகுந்த வலிமையுடையவை எவை இருக்கின்றன? அதைத் தவிர்ப்பதற்கு ஏற்ற உபாயத்தைச் செய்தாலும், அது அதனைத் தடைப்படுத்திக் கொண்டு முன் வந்து நிற்கும்.
-
Translation
in EnglishWhat powers so great as those of Destiny? Man’s skill
Some other thing contrives; but fate’s beforehand still. -
MeaningWhat is stronger than fate ? If we think of an expedient (to avert it), it will itself be with us before (the thought).
9
Nov.2014
0379. நன்றாங்கால் நல்லவாக் காண்பவர்
0379. Nandraankaal Nallavaak Kaanbavar
-
குறள் #0379
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்ஊழியல் (Oozhiyal) – Fate
-
அதிகாரம்ஊழ் (Oozh)
Destiny
-
குறள்நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன். -
விளக்கம்நல்வினையால் உண்டாகும் இன்பங்களை இனியவை என்று விரும்பி அனுபவிக்கின்றவர், தீவினை உண்டாகும் காலத்தில் துன்பங்களை அவ்வாறே மகிழுந்து அனுபவிக்காமல் வருந்துவது ஏன்?
-
Translation
in EnglishWhen good things come, men view them all as gain;
When evils come, why then should they complain? -
MeaningHow is it that those, who are pleased with good fortune, trouble themselves when evil comes, (since both are equally the decree of fate) ?
9
Nov.2014
0378. துறப்பார்மன் துப்புர வில்லார்
0378. Thurappaarman Thuppura Villaar
-
குறள் #0378
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்ஊழியல் (Oozhiyal) – Fate
-
அதிகாரம்ஊழ் (Oozh)
Destiny
-
குறள்துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியு மெனின். -
விளக்கம்ஊழால் வரும் துன்பங்கள் வராமல் நீங்குமானால், பொருளில்லாதவர் துறவியர் ஆய்விடுவார்.
-
Translation
in EnglishThe destitute with ascetics merit share,
If fate to visit with predestined ills would spare. -
MeaningThe destitute will renounce desire (and become ascetics), if (fate) do not make them suffer the hindrances to which they are liable, and they pass away.
9
Nov.2014
0377. வகுத்தான் வகுத்த வகையல்லால்
0377. Vaguththaan Vaguththa Vagaiyallaal
-
குறள் #0377
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்ஊழியல் (Oozhiyal) – Fate
-
அதிகாரம்ஊழ் (Oozh)
Destiny
-
குறள்வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது. -
விளக்கம்ஒருவன் கோடி பொருள்களை முயன்று சேர்த்து வைத்தாலும், அவனால் அவற்றை விதிப் பயனாலல்லது அனுபவித்தல் முடியாது.
-
Translation
in EnglishSave as the ‘sharer’ shares to each in due degree,
To those who millions store enjoyment scarce can be. -
MeaningEven those who gather together millions will only enjoy them, as it has been determined by the disposer (of all things).
9
Nov.2014
0376. பரியினும் ஆகாவாம் பாலல்ல
0376. Pariyinum Aagaavaam Paalalla
-
குறள் #0376
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்ஊழியல் (Oozhiyal) – Fate
-
அதிகாரம்ஊழ் (Oozh)
Destiny
-
குறள்பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம. -
விளக்கம்தம்முடையதல்லாத பொருளை வருந்திக் காப்பாற்றினாலும் ஊழால் நில்லாமற் போய்விடும்; தம்முடைய பொருளை வெளியே கொண்டுபோய்க் கொட்டினாலும் ஊழால் போகாது.
-
Translation
in EnglishThings not your own will yield no good, howe’er you guard with pain;
Your own, howe’er you scatter them abroad, will yours remain. -
MeaningWhatever is not conferred by fate cannot be preserved although it be guarded with most painful care; and that, which fate has made his, cannot be lost, although one should even take it and throw it away.
9
Nov.2014
0375. நல்லவை எல்லாஅந் தீயவாம்
0375. Nallavai Ellaaand Theeyavaam
-
குறள் #0375
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்ஊழியல் (Oozhiyal) – Fate
-
அதிகாரம்ஊழ் (Oozh)
Destiny
-
குறள்நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு. -
விளக்கம்தீய ஊழ் உடையவர் பொருளை ஈட்டுவதற்கு, நல்ல செயல்களைச் செய்தாலும் அவை தீமையாக முடியும். நல்ல ஊழ் உடையவர் தீய செயல் செய்தாலும் அவை நல்லவையாகப் பயன்படும்.
-
Translation
in EnglishAll things that good appear will oft have ill success;
All evil things prove good for gain of happiness. -
MeaningIn the acquisition of property, every thing favourable becomes unfavourable, and (on the other hand) everything unfavourable becomes favourable, (through the power of fate).
9
Nov.2014
0374. இருவேறு உலகத்து இயற்கை
0374. Iruveru Ulagaththu Iyarkai
-
குறள் #0374
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்ஊழியல் (Oozhiyal) – Fate
-
அதிகாரம்ஊழ் (Oozh)
Destiny
-
குறள்இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு. -
விளக்கம்உலகத்தின் இயல்பு இரண்டு வேறுபட்ட தன்மைகளையுடையது. செல்வராவதற்குரிய ஊழ் வேறு; அறிவுடையராதற்குரிய ஊழ் வேறு.
-
Translation
in EnglishTwo fold the fashion of the world: some live in fortune’s light;
While other some have souls in wisdom’s radiance bright. -
MeaningThere are (through fate) two different natures in the world, hence the difference (observable in men) in (their acquisition of) wealth, and in their attainment of knowledge.
9
Nov.2014
0373. நுண்ணிய நூல்பல கற்பினும்
0373. Nunniya Noolpal Karpinum
-
குறள் #0373
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்ஊழியல் (Oozhiyal) – Fate
-
அதிகாரம்ஊழ் (Oozh)
Destiny
-
குறள்நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும். -
விளக்கம்ஒருவன் நுட்பமான பல நூல்களைக் கற்றாலும், அவனுக்குத் தனது ஊழினாளாகிய அறிவே மேம்பட்டு நிற்கும்.
-
Translation
in EnglishIn subtle learning manifold though versed man be,
‘The wisdom, truly his, will gain supremacy. -
MeaningAlthough (a man) may study the most polished treatises, the knowledge which fate has decreed to him will still prevail.
9
Nov.2014
0372. பேதைப் படுக்கும் இழவூழ்
0372. Pethaip Padukkum Izhavoozh
-
குறள் #0372
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்ஊழியல் (Oozhiyal) – Fate
-
அதிகாரம்ஊழ் (Oozh)
Destiny
-
குறள்பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை. -
விளக்கம்பொருளை இழந்ததற்குக் காரணமாக உள்ள ஊழ் அறியாமையைக் கொடுக்கும்; செல்வம் பெருகுவதற்குக் காரணமாயுள்ள ஊழ் விரிந்த அறிவைக் கொடுக்கும்.
-
Translation
in EnglishThe fate that loss ordains makes wise men’s wisdom foolishness;
The fate that gain bestows with ampler powers will wisdom bless. -
MeaningAn adverse fate produces folly, and a prosperous fate produces enlarged knowledge.
9
Nov.2014
0371. ஆகூழால் தோன்றும் அசைவின்மை
0371. Aakoozhaal Thondrum Asaivinmai
-
குறள் #0371
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்ஊழியல் (Oozhiyal) – Fate
-
அதிகாரம்ஊழ் (Oozh)
Destiny
-
குறள்ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி. -
விளக்கம்ஒருவனுக்குப் பொருள் உண்டாவதற்குக் காரணமாகிய ஊழினால் முயற்சி உண்டாகும்; பொருள் அழிவதற்குக் காரணமாகிய ஊழினால் சோம்பல் உண்டாகும்.
-
Translation
in EnglishWealth-giving fate power of unflinching effort brings;
From fate that takes away idle remissness springs. -
MeaningPerseverance comes from a prosperous fate, and idleness from an adverse fate.
9
Nov.2014
0370. ஆரா இயற்கை அவாநீப்பின்
0370. Aaraa Iyarkai Avaaneeppin
-
குறள் #0370
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்அவா அறுத்தல் (Avaa Aruththal)
The Extirpation of Desire
-
குறள்ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும். -
விளக்கம்ஒரு போதும் நிரம்பாத இயல்புடைய அவாவை ஒருவன் ஒழித்தால், அந்நிலை, அப்பொழுதே அவனுக்கு எப்பொழுதும் ஒரே நிலைமையுடையதாகிய இன்பத்தைத் தரும்.
-
Translation
in EnglishDrive from thy soul desire insatiate;
Straight’way is gained the moveless blissful state. -
MeaningThe removal of desire, whose nature it is never to be satisfied, will immediately confer a nature that can never be changed.
Read more
Category:Thirukural
9
Nov.2014
0369. இன்பம் இடையறா தீண்டும்
0369. Inbam Idaiyaraa Theendum
-
குறள் #0369
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்அவா அறுத்தல் (Avaa Aruththal)
The Extirpation of Desire
-
குறள்இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின். -
விளக்கம்அவா என்று சொல்லப்படுகின்ற துன்பங்களுள் மிகுந்த துன்பமானது கெடுமானால், இவ்வுலகத்திலும் இன்பம் இடையறாது வரும்.
-
Translation
in EnglishWhen dies away desire, that woe of woes
Ev’n here the soul unceasing rapture knows. -
MeaningEven while in this body, joy will never depart (from the mind, in which) desire, that sorrow of sorrows, has been destroyed.
Read more
Category:Thirukural
9
Nov.2014
0368. அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம்
0368. Avaaillaark Killaagund Thunbam
-
குறள் #0368
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்அவா அறுத்தல் (Avaa Aruththal)
The Extirpation of Desire
-
குறள்அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல்
தவாஅது மேன்மேல் வரும். -
விளக்கம்அவா இல்லாதவர்க்குத் துன்பங்கள் இல்லை; அவா ஒன்று மட்டும் இருந்தால் எல்லாத் துன்பங்களும் முடிவில்லாமல் மேன்மேலும் வரும்.
-
Translation
in EnglishAffliction is not known where no desires abide;
Where these are, endless rises sorrow’s tide. -
MeaningThere is no sorrow to those who are without desire; but where that is, (sorrow) will incessantly come, more and more.
Read more
Category:Thirukural
9
Nov.2014
0367. அவாவினை ஆற்ற அறுப்பின்
0367. Avaavinai Aatra Aruppin
-
குறள் #0367
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்அவா அறுத்தல் (Avaa Aruththal)
The Extirpation of Desire
-
குறள்அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டு மாற்றான் வரும். -
விளக்கம்ஒருவன் அவாவை முழுதும் ஒழிக்கவள்ளவனானால், அவன் கேடாமைகுக் காரணமாகிய செயல் அவன் விரும்பும் படியே உண்டாகும்.
-
Translation
in EnglishWho thoroughly rids his life of passion-prompted deed,
Deeds of unfailing worth shall do, which, as he plans, succeed. -
MeaningIf a man thoroughly cut off all desire, the deeds, which confer immortality, will come to him, in the path in which he seeks them.
Read more
Category:Thirukural
9
Nov.2014
0366. அஞ்சுவ தோரும் அறனே
0366. Anjuva Thorum Arane
-
குறள் #0366
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்அவா அறுத்தல் (Avaa Aruththal)
The Extirpation of Desire
-
குறள்அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை
வஞ்சிப்ப தோரும் அவா. -
விளக்கம்ஒருவன் அவாவிற்கு அஞ்சி வாழ்வதே அறமாகும். ஏனென்றால் ஒருவனைச் சோர்வு கண்டு வஞ்சிப்பது அந்த அவாவே ஆகும்.
-
Translation
in EnglishDesire each soul beguiles;
True virtue dreads its wiles. -
MeaningIt is the chief duty of (an ascetic) to watch against desire with (jealous) fear; for it has power to deceive (and destroy) him.
Read more
Category:Thirukural
9
Nov.2014
0365. அற்றவர் என்பார் அவாஅற்றார்
0365. Atravar Enbaar Avaaatraar
-
குறள் #0365
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்அவா அறுத்தல் (Avaa Aruththal)
The Extirpation of Desire
-
குறள்அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்
அற்றாக அற்றது இலர். -
விளக்கம்உலகப்பற்று அற்றவர் என்று சொல்லப்படுவோர் அவாவை ஒழித்தவர்; மற்றவர் அவர்போல உலகப் பற்று அற்றவர் அல்லர்.
-
Translation
in EnglishMen freed from bonds of strong desire are free;
None other share such perfect liberty. -
MeaningThey are said to be free (from future birth) who are freed from desire; all others (who, whatever else they may be free from, are not freed from desire) are not thus free.
Read more
Category:Thirukural
9
Nov.2014
0364. தூஉய்மை என்பது அவாவின்மை
0364. Thoouimai Enbathu Avaavinmai
-
குறள் #0364
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்அவா அறுத்தல் (Avaa Aruththal)
The Extirpation of Desire
-
குறள்தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும். -
விளக்கம்ஒருவருக்குத் தூய்மை என்று சொல்லப்படுவது ஆசைஇன்மை; அது மெய்ப் பொருளான கடவுளை விரும்பத் தானே உண்டாகும்.
-
Translation
in EnglishDesire’s decease as purity men know;
That, too, from yearning search for truth will grow. -
MeaningPurity (of mind) consists in freedom from desire; and that (freedom from desire) is the fruit of the love of truth.
Read more
Category:Thirukural
9
Nov.2014
0363. வேண்டாமை அன்ன விழுச்செல்வம்
0363. Vendaamai Anna Vizhuchchelvam
-
குறள் #0363
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்அவா அறுத்தல் (Avaa Aruththal)
The Extirpation of Desire
-
குறள்வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
ஆண்டும் அஃதொப்பது இல். -
விளக்கம்ஒரு பொருளையும் விரும்பாமையைப் போன்ற மேலான செல்வம் இவ்வுலகத்தில் இல்லை; வேறு எந்த உலகத்திலும் அது போன்றது இல்லை.
-
Translation
in EnglishNo glorious wealth is here like freedom from desire;
To bliss like this not even there can soul aspire. -
MeaningThere is in this world no excellence equal to freedom from desire; and even in that world, there is nothing like it.
Read more
Category:Thirukural
9
Nov.2014
0362. வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை
0362. Vendunkaal Vendum Piravaamai
-
குறள் #0362
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்அவா அறுத்தல் (Avaa Aruththal)
The Extirpation of Desire
-
குறள்வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும். -
விளக்கம்ஒன்றை விரும்பவேண்டுமானால் பிறவாமையை விரும்ப வேண்டும்; ஒரு பொருளையும் விரும்பாமையை விரும்பப் பிறவாமை உண்டாகும்.
-
Translation
in EnglishIf desire you feel, freedom from changing birth require!
‘I’ will come, if you desire to ‘scape, set free from all desire. -
MeaningIf anything be desired, freedom from births should be desired; that (freedom from births) will be attained by desiring to be without desire.
Read more
Category:Thirukural
9
Nov.2014
0361. அவாஎன்ப எல்லா உயிர்க்கும்
0361. Avaaenba Ellaa Uyirkkum
-
குறள் #0361
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்அவா அறுத்தல் (Avaa Aruththal)
The Extirpation of Desire
-
குறள்அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து. -
விளக்கம்ஆசை, வெறுப்பு, மயக்கம் என்னும் மூன்றின் பெயரும் அழியுமாறு ஒழுகினால் அவர்க்குத் துன்பங்கள் வராமல் ஒழிந்து நீங்கும்.
-
Translation
in EnglishThe wise declare, through all the days, to every living thing.
That ceaseless round of birth from seed of strong desire doth spring. -
Meaning(The wise) say that the seed, which produces unceasing births, at all times, to all creatures, is desire.
Read more
Category:Thirukural
9
Nov.2014
0360. காமம் வெகுளி மயக்கம்
0360. Kamam Veguli Mayakkam
-
குறள் #0360
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்மெய்யுணர்தல் (Meiunarthal)
Knowledge of the True
-
குறள்காமம் வெகுளி மயக்கம் இவ்முன்றன்
நாமம் கெடக்கெடும் நோய். -
விளக்கம்ஆசை, வெறுப்பு, மயக்கம் என்னும் மூன்றின் பெயரும் அழியுமாறு ஒழுகினால் அவர்க்குத் துன்பங்கள் வராமல் ஒழிந்து நீங்கும்.
-
Translation
in EnglishWhen lust and wrath and error’s triple tyranny is o’er,
Their very names for aye extinct, then pain shall be no more. -
MeaningIf the very names of these three things, desire, anger, and confusion of mind, be destroyed, then will also perish evils (which flow from them).
9
Nov.2014
0359. சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின்
0359. Saarbunarndhu Saarbu Kedaozhugin
-
குறள் #0359
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்மெய்யுணர்தல் (Meiunarthal)
Knowledge of the True
-
குறள்சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய். -
விளக்கம்ஒருவன் எல்லாப் பொருட்களுக்கும் சார்பாகிய மெய்ப்பொருளை உணர்ந்து, பற்று அற நடக்க வல்லவனானால், அவனைச் சாரக்கூடிய துன்பங்கள் அவனது உணர்வைக் கெடுத்து அவனை வந்து அடைய மாட்டா.
-
Translation
in EnglishThe true ‘support’ who knows- rejects ‘supports’ he sought before-
Sorrow that clings all destroys, shall cling to him no more. -
MeaningHe who so lives as to know Him who is the support of all things and abandon all desire, will be freed from the evils which would otherwise cleave to him and destroy (his efforts after absorption).
9
Nov.2014
0358. பிறப்பென்னும் பேதைமை நீங்கச்
0358. Pirappennum Pethaimai Neengach
-
குறள் #0358
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்மெய்யுணர்தல் (Meiunarthal)
Knowledge of the True
-
குறள்பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு. -
விளக்கம்பிறவிக்குக் காரணமாகிய அறியாமை நீங்கும் பொருட்டு, வீட்டிற்குக் காரணமாகிய மெய்ப்பொருளைக் காண்பதே மெய்யறிவாகும்.
-
Translation
in EnglishWhen folly, cause of births, departs; and soul can view
The truth of things, man’s dignity- ’tis wisdom true. -
MeaningTrue knowledge consists in the removal of ignorance; which is (the cause of) births, and the perception of the True Being who is (the bestower of) heaven.
9
Nov.2014
0357. ஓர்த்துள்ளம் உள்ளது உணரின்
0357. Oorththullam Ullathu Unarin
-
குறள் #0357
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்மெய்யுணர்தல் (Meiunarthal)
Knowledge of the True
-
குறள்ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு. -
விளக்கம்ஒருவனது உள்ளம், உண்மைப் பொருளைச் சிந்தித்து அறிந்தால், அவனுக்கு மீண்டும் பிறவி உள்ளதாக நினைக்க வேண்டா.
-
Translation
in EnglishThe mind that knows with certitude what is, and ponders well,
Its thoughts on birth again to other life need not to dwell. -
MeaningLet it not be thought that there is another birth for him whose mind having thoroughly considered (all it has been taught) has known the True Being.
9
Nov.2014
0356. கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார்
0356. Katreendu Meipporul Kandaar
-
குறள் #0356
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்மெய்யுணர்தல் (Meiunarthal)
Knowledge of the True
-
குறள்கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி. -
விளக்கம்இப்பிறப்பில் குருவின் மூலமாகக் கேட்டறிந்து மெய்யறிவைப் பெற்றவர், மீண்டும் பிறவி எடுக்காத பெருநெறியை அடைவர்.
-
Translation
in EnglishWho learn, and here the knowledge of the true obtain,
Shall find the path that hither cometh not again. -
MeaningThey, who in this birth have learned to know the True Being, enter the road which returns not into this world.
9
Nov.2014
0355. எப்பொருள் எத்தன்மைத் தாயினும்
0355. Epporul Eththanmaith Thaayinum
-
குறள் #0355
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்மெய்யுணர்தல் (Meiunarthal)
Knowledge of the True
-
குறள்எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு. -
விளக்கம்எந்தப் பொருள் என்ன இயல்புடையதாகக் காணப்பட்டாலும், அந்தப் பொருளின் உள்ளே உள்ள உண்மைப் பொருளை அறிந்து கொள்வதே தெளிந்த அறிவாகும்.
-
Translation
in EnglishWhatever thing, of whatsoever kind it be,
‘Tis wisdom’s part in each the very thing to see. -
Meaning(True) knowledge is the perception concerning every thing of whatever kind, that that thing is the true thing.
9
Nov.2014
0354. ஐயுணர்வு எய்தியக் கண்ணும்
0354. Aiyunarvu Eithiyak Kannum
-
குறள் #0354
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்மெய்யுணர்தல் (Meiunarthal)
Knowledge of the True
-
குறள்ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு. -
விளக்கம்ஐம்புலன்களையும் அடக்கித் தம் வசப்படுத்தியவர்க்கும் மெய்யறிவு இல்லையென்றால் அதனால் பயனில்லையாகும்.
-
Translation
in EnglishFive-fold perception gained, what benefits accrue
To them whose spirits lack perception of the true? -
MeaningEven those who have all the knowledge which can be attained by the five senses, will derive no benefit from it, if they are without a knowledge of the true nature of things.
9
Nov.2014
0353. ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு
0353. Aiyaththin Neengith Thelindhaarkku
-
குறள் #0353
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்மெய்யுணர்தல் (Meiunarthal)
Knowledge of the True
-
குறள்ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணிய துடைத்து. -
விளக்கம்மயக்கம் நீங்கி மெய்ப்பொருளைக் கண்டவர்க்கு இவ்வுலகத்தை விட வீட்டு உலகம் அண்மையதாகும்.
-
Translation
in EnglishWhen doubts disperse, and mists of error roll
Away, nearer is heav’n than earth to sage’s soul. -
MeaningHeaven is nearer than earth to those men of purified minds who are freed from from doubt.
9
Nov.2014
0352. இருள்நீங்கி இன்பம் பயக்கும்
0352. Irulneengi Inbam Payakkum
-
குறள் #0352
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்மெய்யுணர்தல் (Meiunarthal)
Knowledge of the True
-
குறள்இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு. -
விளக்கம்மயக்கத்தினின்று தெளிந்து குற்றந் தீர்ந்த மெய்யறிவுடையவருக்கு அம்மெய்யறிவு துன்பத்தை நீக்கி இன்பத்தைக் கொடுக்கும்.
-
Translation
in EnglishDarkness departs, and rapture springs to men who see,
The mystic vision pure, from all delusion free. -
MeaningA clear, undimmed vision of things will deliver its possessors from the darkness of future births, and confer the felicity (of heaven).
9
Nov.2014
0351. பொருளல்ல வற்றைப் பொருளென்று
0351. Porulalla Vatraip Porulendru
-
குறள் #0351
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்மெய்யுணர்தல் (Meiunarthal)
Knowledge of the True
-
குறள்பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு. -
விளக்கம்உண்மைப் பொருளல்லாதவற்றை உண்மைப் பொருள் என்று அறியும் மயக்கத்தினால் சிறப்பில்லாத பிறப்பு உண்டாகும்.
-
Translation
in EnglishOf things devoid of truth as real things men deem;-
Cause of degraded birth the fond delusive dream! -
MeaningInglorious births are produced by the confusion (of mind) which considers those things to be real which are not real.
9
Nov.2014
0350. பற்றுக பற்றற்றான் பற்றினை
0350. Patruga Patratraan Patrinai
-
குறள் #0350
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்துறவு (Thuravu)
Renunciation
-
குறள்பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு. -
விளக்கம்பற்றற்ற கடவுளின் பக்தியை மனத்திற் கொள்ளுதல் வேண்டும். ஆசாபாசங்களை விடுவதற்குப் பற்றப் படுவதாகிய கடவுளைப் பக்தி செய்தல் வேண்டும்.
-
Translation
in EnglishCling thou to that which He, to Whom nought clings, hath bid thee cling,
Cling to that bond, to get thee free from every clinging thing. -
MeaningDesire the desire of Him who is without desire; in order to renounce desire, desire that desire.
9
Nov.2014
0349. பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும்
0349. Patratra Kanne Pirapparukkum
-
குறள் #0349
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்துறவு (Thuravu)
Renunciation
-
குறள்பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும். -
விளக்கம்பற்றுக்கள் அற்றபொழுது ஒருவனுடைய பிறப்பு அறும்; பற்றுக்கள் அறாவிட்டால் பிறந்து துன்பப்படுவதாகிய நிலையில்லாத் தன்மை காணப்படும்.
-
Translation
in EnglishWhen that which clings falls off, severed is being’s tie;
All else will then be seen as instability. -
MeaningAt the moment in which desire has been abandoned, (other) births will be cut off; when that has not been done, instability will be seen.
9
Nov.2014
0348. தலைப்பட்டார் தீரத் துறந்தார்
0348. Thalaippattaar Theerath Thurandhaar
-
குறள் #0348
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்துறவு (Thuravu)
Renunciation
-
குறள்தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர். -
விளக்கம்முழுதும் துறந்தவர் வீட்டினை அடைந்தவராவர்; அவ்வாறு துறவாதவர் மயக்கமடைந்து பிறப்பாகிய வலையில் அகப்பட்டவராவர்.
-
Translation
in EnglishWho thoroughly ‘renounce’ on highest height are set;
The rest bewildered, lie entangled in the net. -
MeaningThose who have entirely renounced (all things and all desire) have obtained (absorption into God); all others wander in confusion, entangled in the net of (many) births.
9
Nov.2014
0347. பற்றி விடாஅ இடும்பைகள்
0347. Patri Vidaaa Idumbaigal
-
குறள் #0347
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்துறவு (Thuravu)
Renunciation
-
குறள்பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு. -
விளக்கம்பற்றுக்களை விரும்பி அவற்றைத் துறக்காதவர்களைத் துன்பங்கள் விடாமல் இறுகப் பற்றி நிற்கும்.
-
Translation
in EnglishWho cling to things that cling and eager clasp,
Griefs cling to them with unrelaxing grasp. -
MeaningSorrows will never let go their hold of those who give not up their hold of desire.
9
Nov.2014
0346. யான்எனது என்னும் செருக்குஅறுப்பான்
0346. Yaanenathu Ennum Serukkuaruppaan
-
குறள் #0346
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்துறவு (Thuravu)
Renunciation
-
குறள்யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும். -
விளக்கம்தானல்லாத உடம்பைத் தான் என்றும், தன்னுடையதல்லாத பொருளைத் தன்னுடையது என்றும் நினைத்து மயங்காதவன், வானவருக்கும் எட்டாத வீட்டுலகத்தை அடைவான்.
-
Translation
in EnglishWho kills conceit that utters ‘I’ and ‘mine’,
Shall enter realms above the powers divine. -
MeaningHe who destroys the pride which says “I”, “mine” will enter a world which is difficult even to the Gods to attain.
9
Nov.2014
0345. மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல்
0345. Matrum Thodarppaadu Evankol
-
குறள் #0345
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்துறவு (Thuravu)
Renunciation
-
குறள்மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை. -
விளக்கம்பிறப்பறுக்க விரும்புபவர்க்கு, அதற்குத் துணையாகிய உடம்பும் வேண்டாத பொருளாகும்; அவ்வாறாயின், உடம்பினால் அனுபவிக்கப்படும் பொருள்களில் தொடர்பு எதற்கு?
-
Translation
in EnglishTo those who sev’rance seek from being’s varied strife,
Flesh is burthen sore; what then other bonds of life? -
MeaningWhat means the addition of other things those who are attempting to cut off (future) births, when even their body is too much (for them).
9
Nov.2014
0344. இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை
0344. Iyalbaagum Nonbirkondru Inmai
-
குறள் #0344
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்துறவு (Thuravu)
Renunciation
-
குறள்இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்து. -
விளக்கம்தவம் செய்பவர்க்கு ஒரு பற்றும் இல்லாதிருத்தலே இயல்பாகும். பற்று உடையவராய் இருத்தல் மீண்டும் மயங்குதற்குக் காரணமாகும்.
-
Translation
in English‘Privation absolute’ is penance true;
‘Possession’ brings bewilderment anew. -
MeaningTo be altogether destitute is the proper condition of those who perform austerities; if they possess anything, it will change (their resolution) and bring them back to their confused state.
9
Nov.2014
0343. அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை
0343. Adalvendum Aindhan Pulaththai
-
குறள் #0343
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்துறவு (Thuravu)
Renunciation
-
குறள்அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய வெல்லாம் ஒருங்கு. -
விளக்கம்ஐம்புலன்களையும் அடக்கி வெல்லுதல் வேண்டும்; ஐம்புல நுகர்ச்சிக்கு வேண்டியவற்றையெல்லாம் ஒருமிக்க விட்டுவிடல் வேண்டும்.
-
Translation
in English‘Perceptions of the five’ must all expire;
Relinquished in its order each desire. -
MeaningLet the five senses be destroyed; and at the same time, let everything be abandoned that (the ascetic) has (formerly) desired.
9
Nov.2014
0342. வேண்டின்உண் டாகத் துறக்க
0342. Vendinun Daagath Thurakka
-
குறள் #0342
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்துறவு (Thuravu)
Renunciation
-
குறள்வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டுஇயற் பால பல. -
விளக்கம்துறந்தவர் அடையும் இன்பங்கள் பல. அவற்றை அடைய வேண்டும் என்று விரும்புகின்றவன் அவ்வின்பங்களை அனுபவிக்கக் காலம் இருக்கும்படி விரைவிலே துறத்தல் வேண்டும்.
-
Translation
in English‘Renunciation’ made- ev’n here true pleasures men acquire;
‘Renounce’ while time is yet, if to those pleasures you aspire. -
MeaningAfter a man has renounced (all things), there will still be many things in this world (which he may enjoy); if he should desire them, let him, while it is time abandon. (the world).
9
Nov.2014
0341. யாதனின் யாதனின் நீங்கியான்
0341. Yaathanin Yaathanin Neengiyaan
-
குறள் #0341
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்துறவு (Thuravu)
Renunciation
-
குறள்யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன். -
விளக்கம்எவன் எவ்வெப்பொருளில் ஆசையை ஒழித்தானோ, அவனுக்கு அவ்வப் பொருளால் துன்பம் உண்டாவதில்லை.
-
Translation
in EnglishFrom whatever, aye, whatever, man gets free,
From what, aye, from that, no more of pain hath he! -
MeaningWhatever thing, a man has renounced, by that thing; he cannot suffer pain.
9
Nov.2014
0340. புக்கில் அமைந்தின்று கொல்லோ
0340. Pukkil Amaindhindru Kollo
-
குறள் #0340
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்நிலையாமை(Nilaiyaamai)
Instability
-
குறள்புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு. -
விளக்கம்உடம்பினுள்ளே குடியிருந்து வருகின்ற உயிருக்குப் புகுந்து புகுந்து செல்கின்ற உடம்பு நிலைபெறாது.
-
Translation
in EnglishThe soul in fragile shed as lodger courts repose:-
Is it because no home’s conclusive rest it knows? -
MeaningIt seems as if the soul, which takes a temporary shelter in a body, had not attained a home.
9
Nov.2014
0339. உறங்கு வதுபோலுஞ் சாக்காடு
0339. Urangu Vathupolunj Chaakkaadu
-
குறள் #0339
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்நிலையாமை(Nilaiyaamai)
Instability
-
குறள்உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு. -
விளக்கம்சாவு என்பது உறக்கம் வருதல் போன்றது; பிறத்தல் என்பது உறங்கி விழித்தல் போன்றது.
-
Translation
in EnglishDeath is sinking into slumbers deep;
Birth again is waking out of sleep. -
MeaningDeath is like sleep; birth is like awaking from it.
9
Nov.2014
0338. குடம்பை தனித்துஒழியப் புள்பறந்
0338. Kudambai Thaniththuozhiyap Pulparandh
-
குறள் #0338
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்நிலையாமை(Nilaiyaamai)
Instability
-
குறள்குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு. -
விளக்கம்உடம்புக்கும் உயிருக்கும் உள்ள உறவு, தான் வாழ்ந்த கூடு தனித்துக் கிடக்க அதைவிட்டு வேறிடத்துக்குப் பறவை பறந்து போனாற் போன்றது.
-
Translation
in EnglishBirds fly away, and leave the nest deserted bare;
Such is the short-lived friendship soul and body share. -
MeaningThe love of the soul to the body is like (the love of) a bird to its egg which it flies away from and leaves empty.
9
Nov.2014
0337. ஒருபொழுதும் வாழ்வது அறியார்
0337. Orupozhuthum Vaazhvathu Ariyaar
-
குறள் #0337
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்நிலையாமை(Nilaiyaamai)
Instability
-
குறள்ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல. -
விளக்கம்‘அடுத்த நொடியில் நாம் வாழ்வோமா’ என்பதனை அறிய மாட்டாதவர்கள், கோடிக்கு மேற்பட்ட பலவகை நினைவுகளை நினைப்பார்கள்.
-
Translation
in EnglishWho know not if their happy lives shall last the day,
In fancies infinite beguile the hours away! -
MeaningInnumerable are the thoughts which occupy the mind of (the unwise), who know not that they shall live another moment.
9
Nov.2014
0336. நெருநல் உளனொருவன் இன்றில்லை
0336. Nerunal Ulanoruvan Indrillai
-
குறள் #0336
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்நிலையாமை(Nilaiyaamai)
Instability
-
குறள்நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு. -
விளக்கம்ஒருவன் ‘நேற்று உயிரோடு இருந்தான்; இன்று மறைந்தான்’ என்று சொல்லும் நிலையற்ற தன்மையையுடையது இவ்வுலகம்.
-
Translation
in EnglishExisting yesterday, today to nothing hurled!-
Such greatness owns this transitory world. -
MeaningThis world possesses the greatness that one who yesterday was is not today.
9
Nov.2014
0335. நாச்செற்று விக்குள்மேல் வாராமுன்
0335. Naachchetru Vikkulmel Vaaraamun
-
குறள் #0335
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்நிலையாமை(Nilaiyaamai)
Instability
-
குறள்நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும். -
விளக்கம்பேச முடியாதபடி நாவை அடக்கும் விக்கலானது தோன்றுவதற்கு முன்னே அறத்தை விரைந்து செய்ய வேண்டும்.
-
Translation
in EnglishBefore the tongue lie powerless, ‘mid the gasp of gurgling breath,
Arouse thyself, and do good deeds beyond the power of death. -
MeaningLet virtuous deeds be done quickly, before the biccup comes making the tongue silent.
9
Nov.2014
0334. நாளென ஒன்றுபோற் காட்டி
0334. Naalena Ondrupor Kaatti
-
குறள் #0334
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்நிலையாமை(Nilaiyaamai)
Instability
-
குறள்நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின். -
விளக்கம்காலத்தின் உண்மைத் தன்மையை அறிந்தவர், அது நாள் என்னும் சிறுகால அளவைப் போல் காட்டி உயிரின் வாழ்நாளைச் சிறிது சிறிதாக அறுத்துச் செல்லும் வாளாகும் என அறிவர்.
-
Translation
in EnglishAs ‘day’ it vaunts itself; well understood, ’tis knife’,
That daily cuts away a portion from thy life. -
MeaningTime, which shows itself (to the ignorant) as if it were something (real) is in the estimation of the wise (only) a saw which cuts down life.
9
Nov.2014
0333. அற்கா இயல்பிற்றுச் செல்வம்
0333. Arkaa Iyalbitruch Chelvam
-
குறள் #0333
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்நிலையாமை(Nilaiyaamai)
Instability
-
குறள்அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல். -
விளக்கம்செல்வம் நிலையில்லாத இயல்பினையுடையது. ஆகையால் அச்செல்வத்தைப் பெற்றால் நிலையான அறங்களை அப்பொழுதே செய்தல் வேண்டும்.
-
Translation
in EnglishUnenduring is all wealth; if you wealth enjoy,
Enduring works in working wealth straightway employ. -
MeaningWealth is perishable; let those who obtain it immediately practise those (virtues) which are imperishable.
9
Nov.2014
0332. கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே
0332. Kooththaattu Avaikkuzhaath Thatre
-
குறள் #0332
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்நிலையாமை(Nilaiyaamai)
Instability
-
குறள்கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று. -
விளக்கம்ஒருவனிடத்தில் பெருஞ்செல்வம் உண்டாதல், கூத்தாடுகின்ற சபையில் அதனைப் பார்க்கக் கூட்டம் வந்து கூடினாற் போன்றது; அச்செல்வம் கெட்டுப் போதல், கூத்தாட்டம் முடிந்ததும் அக்கூட்டம் கலைந்து போவதைப் போன்றது.
-
Translation
in EnglishAs crowds round dancers fill the hall, is wealth’s increase;
Its loss, as throngs dispersing, when the dances cease. -
MeaningThe acquisition of wealth is like the gathering together of an assembly for a theatre; its expenditure is like the breaking up of that assembly.
9
Nov.2014
0331. நில்லாத வற்றை நிலையின
0331. Nillaatha Vatrai Nilaiyina
-
குறள் #0331
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்நிலையாமை(Nilaiyaamai)
Instability
-
குறள்நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை. -
விளக்கம்நிலையிலாதவற்றை நிலைத்தன்மையுடையன என்று நினைக்கின்ற அற்ப அறிவு கீழ்ப்பட்ட தன்மையுடையதாகும்.
-
Translation
in EnglishLowest and meanest lore, that bids men trust secure,
In things that pass away, as things that shall endure! -
MeaningThat ignorance which considers those things to be stable which are not so, is dishonourable (to the wise).
9
Nov.2014
0330. உயிர் உடம்பின் நீக்கியார்
0330. Uyir Udambin Neekkiyaar
-
குறள் #0330
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்கொல்லாமை(Kollaamai)
Not Killing
-
குறள்உயிர் உடம்பின் நீக்கியார் என்ப
செயிர் உடம்பின் செல்லாத்தீவாழ்க்கையவர். -
விளக்கம்நோயுடம்போடு, வறுமை மிக்க தீய வாழ்க்கை உடையோரை, முற்பிறப்பில் உயிர்களை அவை பொருந்திநின்ற உடம்புகளிலிருந்து நீக்கியவர் என்று கூறுவர்.
-
Translation
in EnglishWho lead a loathed life in bodies sorely pained,
Are men, the wise declare, by guilt of slaughter stained. -
Meaning(The wise) will say that men of diseased bodies, who live in degradation and in poverty, are those who separated the life from the body of animals (in a former birth).
9
Nov.2014
0329. கொலைவினைய ராகிய மாக்கள்
0329. Kolaivinaiya Raagiya Maakkal
-
குறள் #0329
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்கொல்லாமை(Kollaamai)
Not Killing
-
குறள்கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவா ரகத்து. -
விளக்கம்கொலைத் தொழில் செய்பவர், தாம் அத்தொழிலின் சிறுமையை அறியாராயினும், அத்தொழிலின் சிறுமையை அறிந்தவர்க்கு அவர் இழி தொழிலினராகவே காணப்படுவர்.
-
Translation
in EnglishWhose trade is ‘killing’, always vile they show,
To minds of them who what is vileness know. -
MeaningMen who destroy life are base men, in the estimation of those who know the nature of meanness.
9
Nov.2014
0328. நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும்
0328. Nandraagum Aakkam Peritheninum
-
குறள் #0328
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்கொல்லாமை(Kollaamai)
Not Killing
-
குறள்நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கங் கடை. -
விளக்கம்கொலை செய்வதால் செல்வம் உண்டாகக் கூடியதாக இருந்தாலும், அது கொலையினால் வருதலால் அறிவுடையோர்க்கு அது இழிவுடையதாகவே காணப்படும்.
-
Translation
in EnglishThough great the gain of good should seem, the wise
Will any gain by staughter won despise. -
MeaningThe advantage which might flow from destroying life in sacrifice, is dishonourable to the wise (who renounced the world), even although it should be said to be productive of great good.
9
Nov.2014
0327. தன்னுயிர் நீப்பினும் செய்யற்க
0327. Thannuyir Neeppinum Seiyarka
-
குறள் #0327
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்கொல்லாமை(Kollaamai)
Not Killing
-
குறள்தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை. -
விளக்கம்ஒருவன், தன் உயிரே போவதாக இருந்தாலும், தான் பிறிதொன்றன் இனிய உயிரைப் போக்கும் செயலைச் செய்யக்கூடாது.
-
Translation
in EnglishThough thine own life for that spared life the price must pay,
Take not from aught that lives gift of sweet life away. -
MeaningLet no one do that which would destroy the life of another, although he should by so doing, lose his own life.
9
Nov.2014
0326. கொல்லாமை மேற்கொண் டொழுகுவான்
0326. Kollaamai Merkon Dozhuguvaan
-
குறள் #0326
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்கொல்லாமை(Kollaamai)
Not Killing
-
குறள்கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லாது உயிருண்ணுங் கூற்று. -
விளக்கம்உயிர்களைக் கொண்டு செல்லும் இயமன், கொல்லாமையாகிய விரதத்தைக் கடைப்பிடித்து நடப்பவனது உயிரைக் கவரமாட்டான்.
-
Translation
in EnglishEv’n death that life devours, their happy days shall spare,
Who law, ‘Thou shall not kill’, uphold with reverent care. -
MeaningYama, the destroyer of life, will not attack the life of him, who acts under the determination of never destroying life.
9
Nov.2014
0325. நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம்
0325. NilaiAnji Neeththaarul Ellaam
-
குறள் #0325
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்கொல்லாமை(Kollaamai)
Not Killing
-
குறள்நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை. -
விளக்கம்கொலைப் பாவத்திற்கு அஞ்சிக் கொல்லாமையாகிய அறத்தைப் போற்றுபவனே, பிறப்பிற்கு அஞ்சித் துறவறம் பூண்டார் எல்லாருள்ளும் சிறந்தவன்.
-
Translation
in EnglishOf those who ‘being’ dread, and all renounce, the chief are they,
Who dreading crime of slaughter, study nought to slay. -
MeaningOf all those who, fearing the permanence of earthly births, have abandoned desire, he is the chief who, fearing (the guilt of) murder, considers how he may avoid the destruction of life.
9
Nov.2014
0324. நல்லாறு எனப்படுவது யாதெனின்
0324. Nallaaru Enappaduvathu Yaathenin
-
குறள் #0324
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்கொல்லாமை(Kollaamai)
Not Killing
-
குறள்நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி. -
விளக்கம்நல்லொழுக்கநெறி என்று சொல்லப்படுவது எந்த ஓர் உயிரையும் கொல்லாமையாகிய அறத்தினை நினைக்கும் நேறியேயாகும்.
-
Translation
in EnglishYou ask, What is the good and perfect way?
‘Tis path of him who studies nought to slay. -
MeaningGood path is that which considers how it may avoid killing any creature.
9
Nov.2014
0323. ஒன்றாக நல்லது கொல்லாமை
0323. Ondraaga Nallathu Kollaamai
-
குறள் #0323
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்கொல்லாமை(Kollaamai)
Not Killing
-
குறள்ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று. -
விளக்கம்ஒப்பில்லாத ஓர் அறமாவது கொல்லாமை. அதற்கு அடுத்தபடியில் சிறந்தது பொய் பேசாதிருத்தல்.
-
Translation
in EnglishAlone, first of goods things, is ‘not to slay’;
The second is, no untrue word to say. -
MeaningNot to destroy life is an incomparably (great) good next to it in goodness ranks freedom from falsehood.
9
Nov.2014
1 Comments
0322. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்
0322. Paguththundu Palluyir Ombuthal
-
குறள் #0322
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்கொல்லாமை(Kollaamai)
Not Killing
-
குறள்பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை. -
விளக்கம்தான் உண்பதைப் பங்கிட்டுக் கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் பாதுகாத்தல், அறநூலார் தொகுத்துக் கூறிய அறங்கள் எல்லாவற்றுள்ளும் சிறந்த அறமாகும்.
-
Translation
in EnglishLet those that need partake your meal; guard every-thing that lives;
This the chief and sum of lore that hoarded wisdom gives. -
MeaningThe chief of all (the virtues) which authors have summed up, is the partaking of food that has been shared with others, and the preservation of the mainfold life of other creatures.
9
Nov.2014
0321. அறவினை யாதெனின் கொல்லாமை
0321. Aravinai Yaathenin Kollaamai
-
குறள் #0321
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்கொல்லாமை(Kollaamai)
Not Killing
-
குறள்அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும். -
விளக்கம்அறச்செயல் எது என்றால், எந்த ஓர் உயிரையும் கொல்லாமையே. கொல்லுதல், வேறு பாவச் செயல்கள் எல்லாவற்றையும் தானே தரும்.
-
Translation
in EnglishWhat is the work of virtue? ‘Not to kill’;
For ‘killing’ leads to every work of ill. -
MeaningNever to destroy life is the sum of all virtuous conduct. The destruction of life leads to every evil.
9
Nov.2014
0320. நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம்
0320. Noyellaam Noiseithaar Melavaam
-
குறள் #0320
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்இன்னா செய்யாமை(Innaa Seiyaamai)
Not Doing Evil
-
குறள்நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர். -
விளக்கம்துன்பங்களையெல்லாம் துன்பம் செய்தவரையே வந்தடையும். ஆகையால், துன்பமில்லாதிருக்க விரும்புவோர் எவ்வுயிர்க்கும் துன்பம் செய்ய மாட்டார்.
-
Translation
in EnglishO’er every evil-doer evil broodeth still;
He evil shuns who freedom seeks from ill. -
MeaningSorrow will come upon those who cause pain to others; therfore those, who desire to be free from sorrow, give no pain to others.
9
Nov.2014
0319. பிறர்க்கின்னா முற்பகல் செய்யின்
0319. Pirarkkinnaa Murpagal Seiyin
-
குறள் #0319
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்இன்னா செய்யாமை(Innaa Seiyaamai)
Not Doing Evil
-
குறள்பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும். -
விளக்கம்ஒருவன் பிறர்க்கு முற்போழுதில் துன்பம் செய்தால், அவனுக்குத் துன்பம் பிற்போழுதில் பிறர் செய்யாமல் தானே வரும்.
-
Translation
in EnglishIf, ere the noontide, you to others evil do,
Before the eventide will evil visit you. -
MeaningIf a man inflict sorrow upon others in the morning, it will come upon him unsought in the very evening.
9
Nov.2014
0318. தன்னுயிர்க்கு ஏன்னாமை தானறிவான்
0318. Thannuyirkku Yennaamai Thaanarivaan
-
குறள் #0318
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்இன்னா செய்யாமை(Innaa Seiyaamai)
Not Doing Evil
-
குறள்தன்னுயிர்க்கு ஏன்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க்கு இன்னா செயல். -
விளக்கம்பிறர் செய்யும் துன்பம் தன்னுயிர்க்குத் துன்பம் தருவதை அறிந்தும், தான் பிற உயிர்க்கு அதனைச் செய்தல் என்ன காரணத்தால்?
-
Translation
in EnglishWhose soul has felt the bitter smart of wrong, how can
He wrongs inflict on ever-living soul of man? -
MeaningWhy does a man inflict upon other creatures those sufferings, which he has found by experience are sufferings to himself ?
9
Nov.2014
0317. எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும்
0317. Enaiththaanum Engjaandrum Yaarkkum
-
குறள் #0317
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்இன்னா செய்யாமை(Innaa Seiyaamai)
Not Doing Evil
-
குறள்எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை. -
விளக்கம்தன் மனமாரத் துன்பம் தருபவை என்று தன்னால் அறியப்பட்டவற்றை எவருக்கும், எவ்வளவு சிறிதும் செய்யாதிருத்தல் தலை சிறந்த அறமாகும்.
-
Translation
in EnglishTo work no wilful woe, in any wise, through all the days,
To any living soul, is virtue’s highest praise. -
MeaningIt is the chief of all virtues not knowingly to do any person evil, even in the lowest degree, and at any time.
9
Nov.2014
0316. இன்னா எனத்தான் உணர்ந்தவை
0316. Innaa Enaththaan Unarndhavai
-
குறள் #0316
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்இன்னா செய்யாமை(Innaa Seiyaamai)
Not Doing Evil
-
குறள்இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல். -
விளக்கம்துன்பம் தருவன என்று தான் அறிந்தவற்றைப் பிறரிடத்தில் செய்தலைப் புரியாதிருக்க வேண்டும்.
-
Translation
in EnglishWhat his own soul has felt as bitter pain,
From making others feel should man abstain. -
MeaningLet not a man consent to do those things to another which, he knows, will cause sorrow.
9
Nov.2014
0315. அறிவினான் ஆகுவ துண்டோ
0315. Arivinaan Aaguva Thundo
-
குறள் #0315
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்இன்னா செய்யாமை(Innaa Seiyaamai)
Not Doing Evil
-
குறள்அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை. -
விளக்கம்பிற உயிருக்கு வரும் துன்பத்தைத் தமக்கு வந்த துன்பமாகக் கருதி அதனைக் காப்பாற்றாதவிடத்து அறிவினால் பயன் உள்ளதோ?
-
Translation
in EnglishFrom wisdom’s vaunted lore what doth the learner gain,
If as his own he guard not others’ souls from pain? -
MeaningWhat benefit has he derived from his knowledge, who does not endeavour to keep off pain from another as much as from himself ?
9
Nov.2014
0314. இன்னாசெய் தாரை ஒறுத்தல்
0314. Innaasei Thaarai Oruththal
-
குறள் #0314
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்இன்னா செய்யாமை(Innaa Seiyaamai)
Not Doing Evil
-
குறள்இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல். -
விளக்கம்தனக்குத் துன்பம் செய்தவரைத் தண்டித்தலாவது, அவரே நாணும்படியாக அவருக்கு நன்மைகளைச் செய்து, அவர் செய்த தீமையையும் தான் செய்த நன்மையையும் மறத்தலாகும்.
-
Translation
in EnglishTo punish wrong, with kindly benefits the doers ply;
Thus shame their souls; but pass the ill unheeded by. -
MeaningThe (proper) punishment to those who have done evil (to you), is to put them to shame by showing them kindness, in return and to forget both the evil and the good done on both sides.
9
Nov.2014
0313. செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத
0313. Seiyaamal Setraarkkum Innaatha
-
குறள் #0313
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்இன்னா செய்யாமை(Innaa Seiyaamai)
Not Doing Evil
-
குறள்செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமந் தரும். -
விளக்கம்தான் முன்பு துன்பம் செய்யாதிருக்க, தன்மீது பகைகொண்டு தனக்குத் துன்பம் செய்தவர்க்குத் தான் எதிர்த்துன்பம் செய்தால், அது பிழைத்ததற்கரிய துன்பத்தைக் கொடுக்கும்.
-
Translation
in EnglishThough unprovoked thy soul malicious foes should sting,
Retaliation wrought inevitable woes will bring. -
MeaningIn an ascetic inflict suffering even on those who hate him, when he has not done them any evil, it will afterwards give him irretrievable sorrow.
9
Nov.2014
0312. கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும்
0312. Karuththuinnaa Seithavak Kannum
-
குறள் #0312
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்இன்னா செய்யாமை(Innaa Seiyaamai)
Not Doing Evil
-
குறள்கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள். -
விளக்கம்ஒருவன் தன்மீது பகை கொண்டு துன்பம் செய்த விடத்தும், அவனுக்குத் துன்பம் செய்யாமை, குற்றமற்றவரின் கொள்கையாகும்.
-
Translation
in EnglishThough malice work its worst, planning no ill return, to endure,
And work no ill, is fixed decree of men in spirit pure. -
MeaningIt is the determination of the spotless not to do evil, even in return, to those who have cherished enmity and done them evil.
9
Nov.2014
0311. சிறப்பீனும் செல்வம் பெறினும்
0311. Sirappeenum Selvam Perinum
-
குறள் #0311
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்இன்னா செய்யாமை(Innaa Seiyaamai)
Not Doing Evil
-
குறள்சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள். -
விளக்கம்சிறப்பைத் தரும்படியான செல்வத்தைப் பிறர்க்குத் துன்பம் செய்து பெறலாமாயினும், அதனைச் செய்யாமையே மனத்தூய்மை உடையவரின் கொள்கையாகும்.
-
Translation
in EnglishThough ill to neighbour wrought should glorious pride of wealth secure,
No ill to do is fixed decree of men in spirit pure. -
MeaningIt is the determination of the spotless not to cause sorrow to others, although they could (by so causing) obtain the wealth which confers greatness.
9
Nov.2014
0310. இறந்தார் இறந்தார் அனையர்
0310. Irandhaar Irandhaar Anaiyar
-
குறள் #0310
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்வெகுளாமை(Vegulaamai)
The Not Being Angry
-
குறள்இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை. -
விளக்கம்சினம்மிக்கவர், உயிருடையராயினும் செத்தாரோடு ஒப்பாவர்; சினத்தை ஒழித்தவர் சாதலை ஒழித்தவரோடு ஒப்பாவார்.
-
Translation
in EnglishMen of surpassing wrath are like the men who’ve passed away;
Who wrath renounce, equals of all-renouncing sages they. -
MeaningThose, who give way to excessive anger, are no better than dead men; but those, who are freed from it, are equal to those who are freed (from death).
9
Nov.2014
0309. உள்ளிய தெல்லாம் உடனெய்தும்
0309. Ulliya Thellaam Udaneithum
-
குறள் #0309
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்வெகுளாமை(Vegulaamai)
The Not Being Angry
-
குறள்உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின். -
விளக்கம்ஒருவன் தன் மனத்தினால் ஒருபோதும் சினத்தை நினைக்காமல் இருப்பானானால், அவனுக்கு நினைத்தவை எல்லாம் கைகூடும்.
-
Translation
in EnglishIf man his soul preserve from wrathful fires,
He gains with that whate’er his soul desires. -
MeaningIf a man never indulges anger in his heart, he will at once obtain whatever he has thought of.
9
Nov.2014
0308. இணர்எரி தோய்வன்ன இன்னா
0308. Inareri Thoivanna Innaa
-
குறள் #0308
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்வெகுளாமை(Vegulaamai)
The Not Being Angry
-
குறள்இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று. -
விளக்கம்பல சுடர்களை உடைய பேரு நெருப்பில் தோய்ந்தாற் போன்ற துன்பங்களை ஒருவன் செய்தானாயினும் அவனிடத்தில் சினம் கொள்ளாதிருந்தால் நல்லது.
-
Translation
in EnglishThough men should work thee woe, like touch of tongues of fire.
‘Tis well if thou canst save thy soul from burning ire. -
MeaningThough one commit things against you as painful (to bear) as if a bundle of fire had been thrust upon you, it will be well, to refrain, if possible, from anger.
9
Nov.2014
0307. சினத்தைப் பொருளென்று கொண்டவன்
0307. Sinaththaip Porulendru Kondavan
-
குறள் #0307
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்வெகுளாமை(Vegulaamai)
The Not Being Angry
-
குறள்சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று. -
விளக்கம்தனது வலிமையைக் காட்டுவதற்குச் சினத்தைக் கருவியாகக் கொண்டவன் அவ்வலிமையை இழத்தல், கையை நிலத்தில் அறைந்தவன் துன்பம் அடைதல் தவறாதது போன்றதாகும்.
-
Translation
in EnglishThe hand that smites the earth unfailing feels the sting;
So perish they who nurse their wrath as noble thing. -
MeaningDestruction will come upon him who ragards anger as a good thing, as surely as the hand of him who strikes the ground will not fail.
9
Nov.2014
0306. சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி
0306. Sinamennum Serndhaaraik Kolli
-
குறள் #0306
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்வெகுளாமை(Vegulaamai)
The Not Being Angry
-
குறள்சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும். -
விளக்கம்சினம் என்னும் சேர்ந்தவரைக் கொல்லும் நெருப்பு, சினம் கொண்டவனை மட்டுமல்லாமல் அவனுக்கு இனம் என்ற தெப்பத்தையும் சுடும்.
-
Translation
in EnglishWrath, the fire that slayeth whose draweth near,
Will burn the helpful ‘raft’ of kindred dear. -
MeaningThe fire of anger will burn up even the pleasant raft of friendship.
9
Nov.2014
0305. தன்னைத்தான் காக்கின் சினங்காக்க
0305. Thannaiththaan Kaakkin Sinankaakka
-
குறள் #0305
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்வெகுளாமை(Vegulaamai)
The Not Being Angry
-
குறள்தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம். -
விளக்கம்ஒருவன் தன்னைத்தானே காத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்பினால், தன்மனத்தில் சினம் வராமல் காத்தல் வேண்டும்; அவ்வாறு காக்கவில்லை என்றால் அச்சினம் அவனைக் கெடுக்கும்.
-
Translation
in EnglishIf thou would’st guard thyself, guard against wrath alway;
‘Gainst wrath who guards not, him his wrath shall slay. -
MeaningIf a man would guard himself, let him guard against anger; if he do not guard it, anger will kill him.
9
Nov.2014
0304. நகையும் உவகையும் கொல்லும்
0304. Nagaiyum Uvagaiyum Kollum
-
குறள் #0304
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்வெகுளாமை(Vegulaamai)
The Not Being Angry
-
குறள்நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற. -
விளக்கம்முகமலர்ச்சியையும் மகிழ்ச்சியையும் கெடுத்து எழுகின்ற சினத்தை விட ஒருவனுக்கு வேறு பகை உண்டோ?
-
Translation
in EnglishWrath robs the face of smiles, the heart of joy,
What other foe to man works such annoy? -
MeaningIs there a greater enemy than anger, which kills both laughter and joy?
9
Nov.2014
0303. மறத்தல் வெகுளியை யார்மாட்டும்
0303. Maraththal Veguliyai Yaarmaattum
-
குறள் #0303
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்வெகுளாமை(Vegulaamai)
The Not Being Angry
-
குறள்மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும். -
விளக்கம்எவரிடத்தும் சினம் கொள்ளுதலை மறந்து விடுதல் வேண்டும். அச்சினத்தால் தீங்கு பயக்கும் செயல் உண்டாகும்.
-
Translation
in EnglishIf any rouse thy wrath, the trespass straight forget;
For wrath an endless train of evils will beget. -
MeaningForget anger towards every one, as fountains of evil spring from it.
9
Nov.2014
0302. செல்லா இடத்துச் சினந்தீது
0302. Sellaa Idaththuch Chinantheethu
-
குறள் #0302
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்வெகுளாமை(Vegulaamai)
The Not Being Angry
-
குறள்செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்அதனின் தீய பிற. -
விளக்கம்சினம் தன்னைவிட வலியவர் மீது சென்றால், அது தனக்கே தீமை ஆகும்; தன்னைவிட மெலியவர் மீது சென்றால் அச்சினத்தைவிடத் தீமை உடையது வேறு இல்லை.
-
Translation
in EnglishWhere power is none to wreak thy wrath, wrath importent is ill;
Where thou hast power thy will to work, ’tis greater, evil still. -
MeaningAnger is bad, even when it cannot injure; when it can injure; there is no greater evil.
9
Nov.2014
0301. செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான்
0301. Sellidaththuk Kaappaan Sinangaappaan
-
குறள் #0301
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்வெகுளாமை(Vegulaamai)
The Not Being Angry
-
குறள்செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கின்என் காவாக்கா -
விளக்கம்கோபம் பலிக்கக் கூடிய இடத்தில் சினம் உண்டாகாமல் தடுப்பவனே அதை அடக்கியவனாவான். பலிக்க முடியாத இடத்தில் சினத்தை அடக்கினால் என்ன? அடக்காவிட்டால் என்ன?
-
Translation
in EnglishWhere thou hast power thy angry will to work, thy wrath restrain;
Where power is none, what matter if thou check or give it rein? -
MeaningHe restrains his anger who restrains it when it can injure; when it cannot injure, what does it
matter whether he restrain it, or not ?
9
Nov.2014
0300. யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை
0300. Yaameiyaak Kandavatrul Illai
-
குறள் #0300
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்வாய்மை(Vaaimai)
Veracity
-
குறள்யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற. -
விளக்கம்யாம் உண்மை என்று கண்ட பலவற்றுள் உண்மையைக் காட்டிலும் சிறந்ததாக வேறு யாதொன்றும் இல்லை.
-
Translation
in EnglishOf all good things we’ve scanned with studious care,
There’s nought that can with truthfulness compare. -
MeaningAmidst all that we have seen (described) as real (excellence), there is nothing so good as truthfulness.
9
Nov.2014
0299. எல்லா விளக்கும் விளக்கல்ல
0299. Ellaa Vilakkum Vilakkalla
-
குறள் #0299
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்வாய்மை(Vaaimai)
Veracity
-
குறள்எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு. -
விளக்கம்புற இருளைப் போக்கும் விளக்குகளெல்லாம் விளக்குகள் ஆகா; குணத்தால் நிறைந்தவருக்கு மன இருள் போக்கும் பொய் பேசாமையாகிய விளக்கே சிறந்த விளக்கு ஆகும்.
-
Translation
in EnglishEvery lamp is not a lamp in wise men’s sight;
That’s the lamp with truth’s pure radiance bright. -
MeaningAll lamps of nature are not lamps; the lamp of truth is the lamp of the wise.
9
Nov.2014
0298. புறள்தூய்மை நீரான் அமையும்
0298. Puralthooimai Neeraan Amaiyum
-
குறள் #0298
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்வாய்மை(Vaaimai)
Veracity
-
குறள்புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும். -
விளக்கம்உடலின் வெளித் தூய்மை நீராடுவதால் உண்டாகும்; மனத் தூய்மை உண்மை பேசுவதால் உண்டாகும்.
-
Translation
in EnglishOutward purity the water will bestow;
Inward purity from truth alone will flow. -
MeaningPurity of body is produced by water and purity of mind by truthfulness.
9
Nov.2014
0297. பொய்யாமை பொய்யாமை ஆற்றின்
0297. Poiyaamai Poiyaamai Aatrin
-
குறள் #0297
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்வாய்மை(Vaaimai)
Veracity
-
குறள்பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று. -
விளக்கம்ஒருவன் பொய் பெசாமையாகிய அறத்தை இடைவிடாமல் எப்பொழுதும் செய்து வந்தால், அவன் மற்ற அறங்களைச் செய்ய வேண்டியதில்லை.
-
Translation
in EnglishIf all your life be utter truth, the truth alone,
‘Tis well, though other virtuous acts be left undone. -
MeaningIf a man has the power to abstain from falsehood, it will be well with him, even though he practise no other virtue.
9
Nov.2014
0296. பொய்யாமை அன்ன புகழில்லை
0296. Poiyaamai Anna Pugazhillai
-
குறள் #0296
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்வாய்மை(Vaaimai)
Veracity
-
குறள்பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமுந் தரும். -
விளக்கம்ஒருவனுக்குப் பொய் பேசாமலிருப்பது போல் புகழுக்குக் காரணம் வேறு எதுவும் இல்லை; அஃது அவன் வருந்தாமல் இருக்க எல்லா நலன்களையும் கொடுக்கும்.
-
Translation
in EnglishNo praise like that of words from falsehood free;
This every virtue yields spontaneously. -
MeaningThere is no praise like the praise of never uttering a falsehood: without causing any suffering, it will
lead to every virtue.
9
Nov.2014
0295. மனத்தொடு வாய்மை மொழியின்
0295. Manaththodu Vaaimai Mozhiyin
-
குறள் #0295
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்வாய்மை(Vaaimai)
Veracity
-
குறள்மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை. -
விளக்கம்ஒருவன் மனமார உண்மை சொல்வானானால், அவன் தவத்தோடு அறத்தையும் செய்பவரை விடச் சிறந்தவனாவான்.
-
Translation
in EnglishGreater is he who speaks the truth with full consenting mind.
Than men whose lives have penitence and charity combined. -
MeaningHe, who speaks truth with all his heart, is superior to those who make gifts and practise austerities.
9
Nov.2014
0294. உள்ளத்தாற் பொய்யா தொழுகின்
0294. Ullaththaar Poiyaa Thozhugin
-
குறள் #0294
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்வாய்மை(Vaaimai)
Veracity
-
குறள்உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன். -
விளக்கம்மனத்தினால் பொய்யை நினைக்காமல் நடப்பவன், உலகத்தவர் மனத்திலெல்லாம் நிலைத்திருப்பான்.
-
Translation
in EnglishTrue to his inmost soul who lives,- enshrined
He lives in souls of all mankind. -
MeaningHe who, in his conduct, preserves a mind free from deceit, will dwell in the minds of all men.
9
Nov.2014
0293. தன்நெஞ் சறிவது பொய்யற்க
0293. Thannenj Charivathu Poiyarka
-
குறள் #0293
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்வாய்மை(Vaaimai)
Veracity
-
குறள்தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும். -
விளக்கம்ஒருவன் தான் பொய்யென்று அறிந்த ஒன்றைப் பிறர் அறியவில்லை என்று மறைப்பது தவறு; மறைத்தபின் அவனது நெஞ்சே அவனை வருத்தும்.
-
Translation
in EnglishSpeak not a word which false thy own heart knows
Self-kindled fire within the false one’s spirit glows. -
MeaningLet not a man knowingly tell a lie; for after he has told the lie, his mind will burn him (with the memory of his guilt).
9
Nov.2014
0292. பொய்மையும் வாய்மை யிடத்த
0292. Poimaiyum Vaaimai Yidaththa
-
குறள் #0292
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்வாய்மை(Vaaimai)
Veracity
-
குறள்பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின். -
விளக்கம்குற்றமற்ற நன்மையை உண்டாக்குமானால், பொய்யான சொற்களும் உண்மை என்று நினைக்கத்தக்க இடத்தைப் பெறுவனவாகும்.
-
Translation
in EnglishFalsehood may take the place of truthful word,
If blessing, free from fault, it can afford. -
MeaningEven falsehood has the nature of truth, if it confer a benefit that is free from fault.
9
Nov.2014
0291. வாய்மை எனப்படுவது யாதெனின்
0291. Vaaimai Enappaduvathu Yaathenin
-
குறள் #0291
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்வாய்மை(Vaaimai)
Veracity
-
குறள்வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல். -
விளக்கம்உண்மை என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது எது என்றால் எந்த உயிர்க்கும் யாதொரு சிறு தீங்கும் செய்யாத சொற்களைச் சொல்லுதலேயாகும்.
-
Translation
in EnglishYou ask, in lips of men what ‘truth’ may be;
‘Tis speech from every taint of evil free. -
MeaningTruth is the speaking of such words as are free from the least degree of evil (to others).
9
Nov.2014
0290. கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை
0290. Kalvaarkkuth Thallum Uyirnilai
-
குறள் #0290
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்கள்ளாமை(Kallaamai)
The Absence of Fraud
-
குறள்கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத்
தள்ளாது புத்தே ளுளகு. -
விளக்கம்களவிலே பழகியவர்க்கு உடம்பும் தவறிப் போகும். களவிலே பழகாதவர்குத் தேவருலகும் தவறாது கிடைக்கும்.
-
Translation
in EnglishThe fraudful forfeit life and being here below;
Who fraud eschew the bliss of heavenly beings know. -
MeaningEven their body will fail the fraudulent; but even the world of the gods will not fail those who are free from fraud.
9
Nov.2014
0289. அளவல்ல செய்தாங்கே வீவர்
0289. Alavalla Seithaange Veevar
-
குறள் #0289
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்கள்ளாமை(Kallaamai)
The Absence of Fraud
-
குறள்அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர். -
விளக்கம்களவைத் தவிர வேறு எதையும் அறியாதவர், அளவு கடந்த தீமைகளைச் செய்து, அப்பொழுதே கெடுவர்.
-
Translation
in EnglishWho have no lore save that which fraudful arts supply,
Acts of unmeasured vice committing straightway die. -
MeaningThose, who are acquainted with nothing but fraud, will perish in the very commission of transgression.
9
Nov.2014
0288. அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல
0288. Alavarindhaar Nenjath Tharampola
-
குறள் #0288
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்கள்ளாமை(Kallaamai)
The Absence of Fraud
-
குறள்அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்
களவறிந்தார் நெஞ்சில் கரவு. -
விளக்கம்பொருளின் தன்மைகளை ஆராய்ந்து அறிந்தவரது நெஞ்சில் அறம் நிலை பெற்றிருப்பதுபோல், களவை அறிந்தவரின் மனத்தில் வஞ்சனை நிலை பெற்றிருக்கும்.
-
Translation
in EnglishAs virtue dwells in heart that ‘measured wisdom’ gains;
Deceit in hearts of fraudful men established reigns. -
MeaningDeceit dwells in the mind of those who are conversant with fraud, even as virtue in the minds of those who are conversant with rectitude.
9
Nov.2014
0287. களவென்னும் காரறி வாண்மை
0287. Kalavennum Kaarari Vaanmai
-
குறள் #0287
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்கள்ளாமை(Kallaamai)
The Absence of Fraud
-
குறள்களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்கண்ட இல். -
விளக்கம்தனக்குரிய அளவில் நிற்றல் என்னும் பெருமையை விரும்புகின்றவனிடத்தில், களவு என்னும் இருண்ட மயக்க அறிவு இருக்காது.
-
Translation
in EnglishPractice of fraud’s dark cunning arts they shun,
Who long for power by ‘measured wisdom’ won. -
MeaningThat black-knowledge which is called fraud, is not in those who desire that greatness which is called rectitude.
9
Nov.2014
0286. அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார்
0286. Alavinkan Nindrozhugal Aatraar
-
குறள் #0286
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்கள்ளாமை(Kallaamai)
The Absence of Fraud
-
குறள்அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர். -
விளக்கம்களவில் அதிக ஆசையுள்ளவர், தாம் நடப்பதற்குரிய அளவில் நின்று அதற்கேற்ப நடக்கமாட்டார்.
-
Translation
in EnglishThey cannot walk restrained in wisdom’s measured bound,
In whom inveterate lust of fraudful gain is found. -
MeaningThey cannot walk steadfastly, according to rule, who eagerly desire to defraud others.
9
Nov.2014
0285. அருள்கருதி அன்புடைய ராதல்
0285. Arulkaruthi Anbudaiya Raathal
-
குறள் #0285
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்கள்ளாமை(Kallaamai)
The Absence of Fraud
-
குறள்அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல். -
விளக்கம்பிறர் பொருளைக் கவர நினைத்து, அவர் தளர்ந்திருக்கும் நிலையைப் பார்த்திருப்பவரிடத்தில், அருளின் சிறப்பைக் கருதி, அன்புடையவராக நடத்தல் உண்டாகாது.
-
Translation
in English‘Grace’ is not in their thoughts, nor know they kind affection’s power,
Who neighbour’s goods desire, and watch for his unguarded hour. -
MeaningThe study of kindness and the exercise of benevolence is not with those who watch for another’s forgetfulness, though desire of his property.
9
Nov.2014
0284. களவின்கண் கன்றிய காதல்
0284. Kalavinkan Kandriya Kaathal
-
குறள் #0284
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்கள்ளாமை(Kallaamai)
The Absence of Fraud
-
குறள்களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும். -
விளக்கம்பிறர் பொருளைக் கவர நினைப்பதில் ஒருவனுக்கு உள்ள மிக்க விருப்பம், பயன் கொடுக்கும்போது நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்.
-
Translation
in EnglishThe lust inveterate of fraudful gain,
Yields as its fruit undying pain. -
MeaningThe eager desire of defrauding others will, when it brings forth its fruit, produce undying sorrow.
9
Nov.2014
0283. களவினால் ஆகிய ஆக்கம்
0283. Kalavinaal Aagiya Aakkam
-
குறள் #0283
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்கள்ளாமை(Kallaamai)
The Absence of Fraud
-
குறள்களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும். -
விளக்கம்பிறரை வஞ்சித்தலால் உண்டாகும் செல்வம் வளர்வது போல் தின்றினாலும், பின்னர்த் தன் அளவு கடந்து அழிந்து விடும்.
-
Translation
in EnglishThe gain that comes by fraud, although it seems to grow
With limitless increase, to ruin swift shall go. -
MeaningThe property, which is acquired by fraud, will entirely perish, even while it seems to increase.
9
Nov.2014
0282. உள்ளத்தால் உள்ளலும் தீதே
0282. Ullaththaal Ullalum Theethe
-
குறள் #0282
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்கள்ளாமை(Kallaamai)
The Absence of Fraud
-
குறள்உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல். -
விளக்கம்குற்றங்களை மனத்தினால் நினைத்தாலும் பாவம். ஆகையால், பிறன் பொருளை அவன் அறியாதபடி வஞ்சித்துக் கொள்வோம் என்று நினைத்தலுங் கூடாது.
-
Translation
in English‘Tis sin if in the mind man but thought conceive;
‘By fraud I will my neighbour of his wealth bereave.’ -
MeaningEven the thought (of sin) is sin; think not then of crafiily stealing the property of another.
9
Nov.2014
0281. எள்ளாமை வேண்டுவான் என்பான்
0281. Ellaamai Venduvaan Enbaan
-
குறள் #0281
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்கள்ளாமை(Kallaamai)
The Absence of Fraud
-
குறள்எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு. -
விளக்கம்தான்பிறரால் இகழப்படாமல் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றவன், பிறர் பொருளை வஞ்சித்துக் கொள்ள நினைக்காதபடி தனது நெஞ்சைக் காக்க வேண்டும்.
-
Translation
in EnglishWho seeks heaven’s joys, from impious levity secure,
Let him from every fraud preserve his spirit pure. -
MeaningLet him, who desires not to be despised, keep his mind from (the desire of) defrauding another of the smallest thing.