9
Nov.2014
0440. காதல காதல் அறியாமை
0440. Kaathala Kaathal Ariyaamai
-
குறள் #0440
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரசியல் (Arasiyal) – Royalty
-
அதிகாரம்குற்றங்கடிதல் (Kutrankadithal)
The Correction of Faults
-
குறள்காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல். -
விளக்கம்மன்னன், தான் விரும்பிய போருளிடத்துத் தனக்குள்ள விருப்பத்தைப் பிறர் அறியாவண்ணம் அனுபவிக்க வல்லவனாயின், அவனை வஞ்சிக்க எண்ணும் பகைவரது சூழ்ச்சி பயனற்றதாகும்.
-
Translation
in EnglishIf, to your foes unknown, you cherish what you love,
Counsels of men who wish you harm will harmless prove. -
MeaningIf (a king) enjoys, privately the things which he desires, the designs of his enemies will be useless.
9
Nov.2014
0439. வியவற்க எஞ்ஞான்றும் தன்னை
0439. Viyavarka Enjaandrum Thannai
-
குறள் #0439
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரசியல் (Arasiyal) – Royalty
-
அதிகாரம்குற்றங்கடிதல் (Kutrankadithal)
The Correction of Faults
-
குறள்வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை. -
விளக்கம்எக்காலத்தும் தன்னை மதித்து வியப்படையக் கூடாது. நன்மை தராத செயலை விரும்பவும் கூடாது.
-
Translation
in EnglishNever indulge in self-complaisant mood,
Nor deed desire that yields no gain of good. -
MeaningLet no (one) praise himself, at any time; let him not desire to do useless things.
9
Nov.2014
0438. பற்றுள்ளம் என்னும் இவறன்மை
0438. Patrullam Ennum Ivaranmai
-
குறள் #0438
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரசியல் (Arasiyal) – Royalty
-
அதிகாரம்குற்றங்கடிதல் (Kutrankadithal)
The Correction of Faults
-
குறள்பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப் படுவதொன் றன்று. -
விளக்கம்பொருள் மீது உள்ள பற்றுள்ளம் என்று சொல்லப்படுகின்ற உலோப குணமானது, குற்றங்கள் எல்லாவற்றுள்ளும் ஒன்றாக வைத்து எண்ணத்தக்கதன்று; அவற்றைவிடக் கொடியது.
-
Translation
in EnglishThe greed of soul that avarice men call,
When faults are summed, is worst of all. -
MeaningGriping avarice is not to be reckoned as one among other faults; (it stands alone – greater than all).
9
Nov.2014
0437. செயற்பால செய்யா திவறியான்
0437. Seyarpaala Seiyaa Thivariyaan
-
குறள் #0437
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரசியல் (Arasiyal) – Royalty
-
அதிகாரம்குற்றங்கடிதல் (Kutrankadithal)
The Correction of Faults
-
குறள்செயற்பால செய்யா திவறியான் செல்வம்
உயற்பால தன்றிக் கெடும். -
விளக்கம்பொருளால் தனக்குச் செய்து கொள்ள வேண்டிய வசதிகளைச் செய்து கொள்ளாது, அதன் மீது பற்று வைத்துச் செலவிடாதவனின் செல்வம், எஞ்சியிருக்கும் தன்மையின்றிக் கெட்டுவிடும்.
-
Translation
in EnglishWho leaves undone what should be done, with niggard mind,
His wealth shall perish, leaving not a wrack behind. -
MeaningThe wealth of the avaricious man, who does not expend it for the purposes for which he ought to expend it will waste away and not continue.
9
Nov.2014
0436. தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங்
0436. Thankutram Neekkip Pirarkutrang
-
குறள் #0436
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரசியல் (Arasiyal) – Royalty
-
அதிகாரம்குற்றங்கடிதல் (Kutrankadithal)
The Correction of Faults
-
குறள்தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு. -
விளக்கம்தன் குற்றத்தை முதலில் போக்கிப் பிறகு பிறரது குற்றத்தைக் கண்டு ஆராய்வானானால், மன்னனுக்கு யாதொரு குற்றமும் உண்டாகாது.
-
Translation
in EnglishFaultless the king who first his own faults cures, and then
Permits himself to scan faults of other men. -
MeaningWhat fault will remain in the king who has put away his own evils, and looks after the evils of others.
9
Nov.2014
0435. வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை
0435. Varumunnark Kaavaathaan Vaazhkkai
-
குறள் #0435
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரசியல் (Arasiyal) – Royalty
-
அதிகாரம்குற்றங்கடிதல் (Kutrankadithal)
The Correction of Faults
-
குறள்வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும். -
விளக்கம்குற்றம் வருவதற்கு முன்னே, அதுவராமல் காத்துக் கொள்ளாத மன்னனது வாழ்க்கை, குற்றம் வந்தால், நெருப்பின் முன் நின்ற வைக்கோல் குவியல் போல அழிந்துவிடும்.
-
Translation
in EnglishHis joy who guards not ‘gainst the coming evil day,
Like straw before the fire shall swift consume away. -
MeaningThe prosperity of him who does not timely guard against faults, will perish like straw before fire.
9
Nov.2014
0434. குற்றமே காக்க பொருளாகக்
0434. Kutrame Kaakka Porulaagak
-
குறள் #0434
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரசியல் (Arasiyal) – Royalty
-
அதிகாரம்குற்றங்கடிதல் (Kutrankadithal)
The Correction of Faults
-
குறள்குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றந் த்ரூஉம் பகை. -
விளக்கம்தனக்கு அழிவைத் தரும் பகை குற்றமே ஆகும். ஆகையால், தன்னிடத்தில் அக்குற்றம் வராமல் கருத்தில் கொண்டு காக்க வேண்டும்.
-
Translation
in EnglishFreedom from faults is wealth; watch heedfully
‘Gainst these, for fault is fatal enmity. -
MeaningGuard against faults as a matter (of great consequence; for) faults are a deadly enemy.
9
Nov.2014
0433. தினைத்துணையாங் குற்றம் வரினும்
0433. Thinaiththunaiyaang Kutram Varinum
-
குறள் #0433
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரசியல் (Arasiyal) – Royalty
-
அதிகாரம்குற்றங்கடிதல் (Kutrankadithal)
The Correction of Faults
-
குறள்தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார். -
விளக்கம்பழிக்கு அஞ்சுவோர் தினையளவாகிய மிகச் சிறிய குற்றமே தமக்கு வந்தாலும், அதனைப் பனையளவு பெரிதாகக் கருதுவர்.
-
Translation
in EnglishThough small as millet-seed the fault men deem;
As palm tree vast to those who fear disgrace ’twill seem. -
MeaningThose who fear guilt, if they commit a fault small as a millet seed, will consider it to be as large as a palmyra tree.
9
Nov.2014
0432. இவறலும் மாண்பிறந்த மானமும்
0432. Ivaralum Maanpirandha Maanamum
-
குறள் #0432
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரசியல் (Arasiyal) – Royalty
-
அதிகாரம்குற்றங்கடிதல் (Kutrankadithal)
The Correction of Faults
-
குறள்இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு. -
விளக்கம்உலோப குணமும், நன்மை தருதலில்லாத மானமும், அளவு கடந்த மகிழ்ச்சியும் மன்னனுக்குக் குற்றமாகும்.
-
Translation
in EnglishA niggard hand, o’erweening self-regard, and mirth
Unseemly, bring disgrace to men of kingly brith. -
MeaningAvarice, undignified pride, and low pleasures are faults in a king.
9
Nov.2014
0431. செருக்குஞ் சினமும் சிறுமையும்
0431. Cherukkunj Chinamum Chirumaiyum
-
குறள் #0431
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரசியல் (Arasiyal) – Royalty
-
அதிகாரம்குற்றங்கடிதல் (Kutrankadithal)
The Correction of Faults
-
குறள்செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து. -
விளக்கம்அகந்தை, கோபம், காமம் ஆகிய குற்றங்கள் இல்லாத மன்னரது செல்வம், மற்றவர் செல்வத்தைக் காட்டிலும் மேம்பட்டுத் தோன்றும் தன்மையுடையது.
-
Translation
in EnglishWho arrogance, and wrath, and littleness of low desire restrain,
To sure increase of lofty dignity attain. -
MeaningTruly great is the excellence of those (kings) who are free from pride, anger, and lust.