9
Nov.2014
0510. தேரான் தெளிவும் தெளிந்தான்கண்
0510. Theraan Thelivum Thelindhaankan
-
குறள் #0510
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரசியல் (Arasiyal) – Royalty
-
அதிகாரம்தெரிந்து தெளிதல் (Therindhu Thelithal)
Selection and Confidence
-
குறள்தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும். -
விளக்கம்ஒருவனை ஆராயாது தெளிதலும் ஆராய்ந்து தெளிந்தவனிடம் ஐயப்படுதலும் ஆகிய இவ்விரண்டும் அரசனுக்கு நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்.
-
Translation
in EnglishTrust where you have not tried, doubt of a friend to feel,
Once trusted, wounds inflict that nought can heal. -
MeaningTo make choice of one who has not been examined, and to entertain doubts respecting one who has been chosen, will produce irremediable sorrow.
9
Nov.2014
0509. தேறற்க யாரையும் தேராது
0509. Therarka Yaaraiyum Theraathu
-
குறள் #0509
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரசியல் (Arasiyal) – Royalty
-
அதிகாரம்தெரிந்து தெளிதல் (Therindhu Thelithal)
Selection and Confidence
-
குறள்தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள். -
விளக்கம்நன்றாக ஆராயாமல் யாரையும் தெளிதல் கூடாது. ஆராய்ந்து தெளிந்த பின்னர் அவரிடம் எந்தச் செயலைப் பற்றி ஆராய்ந்து தெளியலாமோ அதைப் பற்றி ஆராய்ந்து தெளிய வேண்டும்.
-
Translation
in EnglishTrust no man whom you have not fully tried,
When tested, in his prudence proved confide. -
MeaningLet (a king) choose no one without previous consideration; after he has made his choice, let him unhesitatingly select for each such duties as are appropriate.
9
Nov.2014
0508. தேரான் பிறனைத் தெளிந்தான்
0508. Theraan Piranaith Thelindhaan
-
குறள் #0508
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரசியல் (Arasiyal) – Royalty
-
அதிகாரம்தெரிந்து தெளிதல் (Therindhu Thelithal)
Selection and Confidence
-
குறள்தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும். -
விளக்கம்அயலான் ஒருவனைச் சிறிதும் ஆராயாமல் அவன் மீது நம்பிக்கை வைக்கும் ஒருவனால் அவன் துன்பப்படுவதல்லாமல் அவன் சந்ததியினரும் துன்பத்தை அனுபவிக்க நேரும்.
-
Translation
in EnglishWho trusts an untried stranger, brings disgrace,
Remediless, on all his race. -
MeaningSorrow that will not leave even his posterity will come upon him chooses a stranger whose character he has not known.
9
Nov.2014
0507. காதன்மை கந்தா அறிவறியார்த்
0507. Kaathanmai Kandhaa Arivariyaarth
-
குறள் #0507
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரசியல் (Arasiyal) – Royalty
-
அதிகாரம்தெரிந்து தெளிதல் (Therindhu Thelithal)
Selection and Confidence
-
குறள்காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாந் தரும். -
விளக்கம்அறிவில்லாதவனை அவனிடத்துள்ள அன்பு காரணமாகத் தேர்ந்தெடுத்தல், அரசனுக்கு எல்லா அறியாமையையும் கொடுக்கும்.
-
Translation
in EnglishBy fond affection led who trusts in men of unwise soul,
Yields all his being up to folly’s blind control. -
MeaningTo choose ignorant men, through partiality, is the height of folly.
9
Nov.2014
0506. அற்றாரைத் தேறுதல் ஓம்புக
0506. Atraaraith Theruthal Ombuga
-
குறள் #0506
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரசியல் (Arasiyal) – Royalty
-
அதிகாரம்தெரிந்து தெளிதல் (Therindhu Thelithal)
Selection and Confidence
-
குறள்அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி. -
விளக்கம்சுற்றம் இல்லாதவரை நம்புதல் ஆகாது. ஏனென்றால், அவர் வேறு சம்பந்தமில்லாதவர், ஆதலால் பழிக்கு அஞ்ச மாட்டார்.
-
Translation
in EnglishBeware of trusting men who have no kith of kin;
No bonds restrain such men, no shame deters from sin. -
MeaningLet (a king) avoid choosing men who have no relations; such men have no attachment, and thereforehave no fear of crime.
9
Nov.2014
0505. பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும்
0505. Perumaikkum Yenaich Chirumaikkum
-
குறள் #0505
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரசியல் (Arasiyal) – Royalty
-
அதிகாரம்தெரிந்து தெளிதல் (Therindhu Thelithal)
Selection and Confidence
-
குறள்பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல். -
விளக்கம்மக்களின் பெருமையை அறிவதற்கும் அவர்தம் சிறுமையை அறிவதற்கும் அவரவர் செய்யும் செயல்களே உரைகல்லாம்.
-
Translation
in EnglishOf greatness and of meanness too,
The deeds of each are touchstone true. -
MeaningA man’s deeds are the touchstone of his greatness and littleness.
9
Nov.2014
0504. குணம்நாடிக் குற்றமும் நாடி
0504. Gunamnaadik Kutramum Naadi
-
குறள் #0504
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரசியல் (Arasiyal) – Royalty
-
அதிகாரம்தெரிந்து தெளிதல் (Therindhu Thelithal)
Selection and Confidence
-
குறள்குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல். -
விளக்கம்ஒருவனது குணங்களையும் குற்றங்களையும் ஆராய்ந்து, குணம் அதிகம் இருந்தால் குணமுடையவன் என்றும், குற்றம் அதிகம் இருந்தால் குற்றமுடையவன் என்றும் கொள்ள வேண்டும்.
-
Translation
in EnglishWeigh well the good of each, his failings closely scan,
As these or those prevail, so estimate the man. -
MeaningLet (a king) consider (a man’s) good qualities, as well as his faults, and then judge (of his character) by that which prevails.
9
Nov.2014
0503. அரியகற்று ஆசற்றார் கண்ணும்
0503. Ariyagatru Aasatraar Kannum
-
குறள் #0503
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரசியல் (Arasiyal) – Royalty
-
அதிகாரம்தெரிந்து தெளிதல் (Therindhu Thelithal)
Selection and Confidence
-
குறள்அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு. -
விளக்கம்கற்றற்கரிய நூல்களைக் கற்றுக் குற்றமற்று விளங்குபவரிடத்தும், ஆராய்ந்து பார்த்தால் அறியாமை இல்லாதிருத்தல் அரிதாகும்.
-
Translation
in EnglishThough deeply learned, unflecked by fault, ’tis rare to see,
When closely scanned, a man from all unwisdom free. -
MeaningWhen even men, who have studied the most difficult works, and who are free from faults, are (carefully) examined, it is a rare thing to find them without ignorance.
9
Nov.2014
0502. குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி
0502. Kudippirandhu Kutraththin Neengi
-
குறள் #0502
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரசியல் (Arasiyal) – Royalty
-
அதிகாரம்தெரிந்து தெளிதல் (Therindhu Thelithal)
Selection and Confidence
-
குறள்குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாணுடையான் சுட்டே தெளிவு. -
விளக்கம்உயர்ந்த குடியில் பிறந்து, குற்றங்களிலிருந்து நீங்கித் தனக்குப் பழி என்று அஞ்சி நிற்கும் நாணமுடையவனிடத்தில் அரசனது நம்பிக்கை இருக்க வேண்டும்.
-
Translation
in EnglishOf noble race, of faultless worth, of generous pride
That shrinks from shame or stain; in him may king confide. -
Meaning(The king’s) choice should (fall) on him, who is of good family, who is free from faults, and who has the modesty which fears the wounds (of sin).
9
Nov.2014
0501. அறம்பொருள் இன்பம் உயிரச்சம்
0501. Aramporul Inbam Uyirachcham
-
குறள் #0501
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரசியல் (Arasiyal) – Royalty
-
அதிகாரம்தெரிந்து தெளிதல் (Therindhu Thelithal)
Selection and Confidence
-
குறள்அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும். -
விளக்கம்அறம், பொருள் ஆசை, காம இச்சை, தன் உயிருக்காக அஞ்சும் அச்சம் என்னும் நான்கினாலும் ஒருவனது மனநிலையை நன்கு சோதித்து, அவனிடத்தில் அரசன் நம்பிக்கை கொள்ள வேண்டும்.
-
Translation
in EnglishHow treats he virtue, wealth and pleasure? How, when life’s at stake,
Comports himself? This four-fold test of man will full assurance make. -
MeaningLet (a minister) be chosen, after he has been tried by means of these four things, viz,-his virtue, (love of) money, (love of) sexual pleasure, and tear of (losing) life.