9
Nov.2014
0300. யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை
0300. Yaameiyaak Kandavatrul Illai
-
குறள் #0300
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்வாய்மை(Vaaimai)
Veracity
-
குறள்யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற. -
விளக்கம்யாம் உண்மை என்று கண்ட பலவற்றுள் உண்மையைக் காட்டிலும் சிறந்ததாக வேறு யாதொன்றும் இல்லை.
-
Translation
in EnglishOf all good things we’ve scanned with studious care,
There’s nought that can with truthfulness compare. -
MeaningAmidst all that we have seen (described) as real (excellence), there is nothing so good as truthfulness.
9
Nov.2014
0299. எல்லா விளக்கும் விளக்கல்ல
0299. Ellaa Vilakkum Vilakkalla
-
குறள் #0299
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்வாய்மை(Vaaimai)
Veracity
-
குறள்எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு. -
விளக்கம்புற இருளைப் போக்கும் விளக்குகளெல்லாம் விளக்குகள் ஆகா; குணத்தால் நிறைந்தவருக்கு மன இருள் போக்கும் பொய் பேசாமையாகிய விளக்கே சிறந்த விளக்கு ஆகும்.
-
Translation
in EnglishEvery lamp is not a lamp in wise men’s sight;
That’s the lamp with truth’s pure radiance bright. -
MeaningAll lamps of nature are not lamps; the lamp of truth is the lamp of the wise.
9
Nov.2014
0298. புறள்தூய்மை நீரான் அமையும்
0298. Puralthooimai Neeraan Amaiyum
-
குறள் #0298
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்வாய்மை(Vaaimai)
Veracity
-
குறள்புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும். -
விளக்கம்உடலின் வெளித் தூய்மை நீராடுவதால் உண்டாகும்; மனத் தூய்மை உண்மை பேசுவதால் உண்டாகும்.
-
Translation
in EnglishOutward purity the water will bestow;
Inward purity from truth alone will flow. -
MeaningPurity of body is produced by water and purity of mind by truthfulness.
9
Nov.2014
0297. பொய்யாமை பொய்யாமை ஆற்றின்
0297. Poiyaamai Poiyaamai Aatrin
-
குறள் #0297
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்வாய்மை(Vaaimai)
Veracity
-
குறள்பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று. -
விளக்கம்ஒருவன் பொய் பெசாமையாகிய அறத்தை இடைவிடாமல் எப்பொழுதும் செய்து வந்தால், அவன் மற்ற அறங்களைச் செய்ய வேண்டியதில்லை.
-
Translation
in EnglishIf all your life be utter truth, the truth alone,
‘Tis well, though other virtuous acts be left undone. -
MeaningIf a man has the power to abstain from falsehood, it will be well with him, even though he practise no other virtue.
9
Nov.2014
0296. பொய்யாமை அன்ன புகழில்லை
0296. Poiyaamai Anna Pugazhillai
-
குறள் #0296
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்வாய்மை(Vaaimai)
Veracity
-
குறள்பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமுந் தரும். -
விளக்கம்ஒருவனுக்குப் பொய் பேசாமலிருப்பது போல் புகழுக்குக் காரணம் வேறு எதுவும் இல்லை; அஃது அவன் வருந்தாமல் இருக்க எல்லா நலன்களையும் கொடுக்கும்.
-
Translation
in EnglishNo praise like that of words from falsehood free;
This every virtue yields spontaneously. -
MeaningThere is no praise like the praise of never uttering a falsehood: without causing any suffering, it will
lead to every virtue.
9
Nov.2014
0295. மனத்தொடு வாய்மை மொழியின்
0295. Manaththodu Vaaimai Mozhiyin
-
குறள் #0295
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்வாய்மை(Vaaimai)
Veracity
-
குறள்மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை. -
விளக்கம்ஒருவன் மனமார உண்மை சொல்வானானால், அவன் தவத்தோடு அறத்தையும் செய்பவரை விடச் சிறந்தவனாவான்.
-
Translation
in EnglishGreater is he who speaks the truth with full consenting mind.
Than men whose lives have penitence and charity combined. -
MeaningHe, who speaks truth with all his heart, is superior to those who make gifts and practise austerities.
9
Nov.2014
0294. உள்ளத்தாற் பொய்யா தொழுகின்
0294. Ullaththaar Poiyaa Thozhugin
-
குறள் #0294
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்வாய்மை(Vaaimai)
Veracity
-
குறள்உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன். -
விளக்கம்மனத்தினால் பொய்யை நினைக்காமல் நடப்பவன், உலகத்தவர் மனத்திலெல்லாம் நிலைத்திருப்பான்.
-
Translation
in EnglishTrue to his inmost soul who lives,- enshrined
He lives in souls of all mankind. -
MeaningHe who, in his conduct, preserves a mind free from deceit, will dwell in the minds of all men.
9
Nov.2014
0293. தன்நெஞ் சறிவது பொய்யற்க
0293. Thannenj Charivathu Poiyarka
-
குறள் #0293
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்வாய்மை(Vaaimai)
Veracity
-
குறள்தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும். -
விளக்கம்ஒருவன் தான் பொய்யென்று அறிந்த ஒன்றைப் பிறர் அறியவில்லை என்று மறைப்பது தவறு; மறைத்தபின் அவனது நெஞ்சே அவனை வருத்தும்.
-
Translation
in EnglishSpeak not a word which false thy own heart knows
Self-kindled fire within the false one’s spirit glows. -
MeaningLet not a man knowingly tell a lie; for after he has told the lie, his mind will burn him (with the memory of his guilt).
9
Nov.2014
0292. பொய்மையும் வாய்மை யிடத்த
0292. Poimaiyum Vaaimai Yidaththa
-
குறள் #0292
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்வாய்மை(Vaaimai)
Veracity
-
குறள்பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின். -
விளக்கம்குற்றமற்ற நன்மையை உண்டாக்குமானால், பொய்யான சொற்களும் உண்மை என்று நினைக்கத்தக்க இடத்தைப் பெறுவனவாகும்.
-
Translation
in EnglishFalsehood may take the place of truthful word,
If blessing, free from fault, it can afford. -
MeaningEven falsehood has the nature of truth, if it confer a benefit that is free from fault.
9
Nov.2014
0291. வாய்மை எனப்படுவது யாதெனின்
0291. Vaaimai Enappaduvathu Yaathenin
-
குறள் #0291
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
-
அதிகாரம்வாய்மை(Vaaimai)
Veracity
-
குறள்வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல். -
விளக்கம்உண்மை என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது எது என்றால் எந்த உயிர்க்கும் யாதொரு சிறு தீங்கும் செய்யாத சொற்களைச் சொல்லுதலேயாகும்.
-
Translation
in EnglishYou ask, in lips of men what ‘truth’ may be;
‘Tis speech from every taint of evil free. -
MeaningTruth is the speaking of such words as are free from the least degree of evil (to others).