9
Nov.2014
0070. மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி
0070. Maganthandhaikku Aatrum Udhavi
-
குறள் #0070
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்இல்லறவியல்(Illaraviyal) – Domestic Virtue
-
அதிகாரம்மக்கட்பேறு (Makkatperu)
The obtaining of Sons
-
குறள்மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல். -
விளக்கம்தன்னைக் கல்வியுடையவனாகிய தந்தைக்கு மகன் செய்யும் பதில் உதவி என்னவென்றால், ‘இவனுடைய தந்தை இவனைப் பெறுவதற்கு என்ன தவம் செய்தானோ’ என்று சொல்லும்படி நடத்தலாகும்.
-
Translation
in EnglishTo sire, what best requital can by grateful child be done?
To make men say, ‘What merit gained the father such a son?’ -
Meaning(So to act) that it may be said “by what great penance did his father beget him,” is the benefit which a son should render to his father.
9
Nov.2014
0069. ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்
0069. Eendra Pozhuthin Perithuvakkum
-
குறள் #0069
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்இல்லறவியல்(Illaraviyal) – Domestic Virtue
-
அதிகாரம்மக்கட்பேறு (Makkatperu)
The obtaining of Sons
-
குறள்ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய். -
விளக்கம்தன் மகனைப் பிறர் ‘அறிவொழுக்கங்களில் சிறந்தவன்’ என்று சொல்லக் கேட்ட தாய், அவனைப் பெற்றபொழுது அடைந்த மகிழ்ச்சியை விட மிக்க மகிழ்ச்சி அடைவாள்.
-
Translation
in EnglishWhen mother hears him named ‘fulfill’d of wisdom’s lore,’
Far greater joy she feels, than when her son she bore. -
MeaningThe mother who hears her son called “a wise man” will rejoice more than she did at his birth.
9
Nov.2014
0068. தம்மின்தம் மக்கள் அறிவுடைமை
0068. Thammintham Makkal Arivudaimai
-
குறள் #0068
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்இல்லறவியல்(Illaraviyal) – Domestic Virtue
-
அதிகாரம்மக்கட்பேறு (Makkatperu)
The obtaining of Sons
-
குறள்தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது. -
விளக்கம்தம் மக்கள், தம்மை விடக் கல்வி அறிவுடையவராக இருப்பது, தம்மை விட உலகிலுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
-
Translation
in EnglishTheir children’s wisdom greater than their own confessed,
Through the wide world is sweet to every human breast. -
MeaningThat their children should possess knowledge is more pleasing to all men of this great earth than to themselves.
9
Nov.2014
0067. தந்தை மகற்காற்று நன்றி
0067. Thanthai Magarkaatru Nandri
-
குறள் #0067
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்இல்லறவியல்(Illaraviyal) – Domestic Virtue
-
அதிகாரம்மக்கட்பேறு (Makkatperu)
The obtaining of Sons
-
குறள்தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல். -
விளக்கம்தந்தை மகனுக்குச் செய்யும் நன்மை என்னவென்றால், அவனைக் கற்றவர் சபையில் முதன்மை அடையுமாறு செய்தலாகும்.
-
Translation
in EnglishSire greatest boon on son confers, who makes him meet,
In councils of the wise to fill the highest seat. -
MeaningThe benefit which a father should confer on his son is to give him precedence in the assembly of the
learned.
9
Nov.2014
0066. குழல்இனிது யாழ்இனிது என்பதம்
0066. Kuzhalinithu Yaazhinidhu Enbatham
-
குறள் #0066
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்இல்லறவியல்(Illaraviyal) – Domestic Virtue
-
அதிகாரம்மக்கட்பேறு (Makkatperu)
The obtaining of Sons
-
குறள்குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர். -
விளக்கம்தம் குழந்தைகளின் மழலைச் சொற்களைக் கேட்டு மகிழாதவர், குழல் ஓசையும் யாழ் ஓசையும் இனியவை எனக்கூறுவர்.
-
Translation
in English‘The pipe is sweet,’ ‘the lute is sweet,’ by them’t will be averred,
Who music of their infants’ lisping lips have never heard. -
Meaning“The pipe is sweet, the lute is sweet,” say those who have not heard the prattle of their own children.
9
Nov.2014
0065. மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம்
0065. Makkalmei Theendal Udarkinbam
-
குறள் #0065
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்இல்லறவியல்(Illaraviyal) – Domestic Virtue
-
அதிகாரம்மக்கட்பேறு (Makkatperu)
The obtaining of Sons
-
குறள்மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு. -
விளக்கம்குழந்தைகள் தம் பெற்றோரின் உடம்பைத் தொடுதல் உடம்பிற்கு இன்பம் தரும். அக்குழந்தைகளின் மழலைச் சொற்களைக் கேட்டல் காதுக்கு இன்பம் தரும்.
-
Translation
in EnglishTo patent sweet the touch of children dear;
Their voice is sweetest music to his ear. -
MeaningThe touch of children gives pleasure to the body, and the hearing of their words, pleasure to the ear.
9
Nov.2014
0064. அமிழ்தினும் ஆற்ற இனிதேதம்
0064. Amizhthinum Aatra Inithetham
-
குறள் #0064
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்இல்லறவியல்(Illaraviyal) – Domestic Virtue
-
அதிகாரம்மக்கட்பேறு (Makkatperu)
The obtaining of Sons
-
குறள்அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ். -
விளக்கம்தம் குழந்தைகளின் கையால் அளையப்பட்ட சோறு, பெற்றோர்க்கு அமிழ்தத்தை விட மிக்க இனிமையுடையதாகும்.
-
Translation
in EnglishThan God’s ambrosia sweeter far the food before men laid,
In which the little hands of children of their own have play’d. -
MeaningThe rice in which the little hand of their children has dabbled will be far sweeter (to the parent) than
ambrosia.
9
Nov.2014
0063. தம்பொருள் என்பதம் மக்கள்
0063. Thamporul Enbatham Makkal
-
குறள் #0063
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்இல்லறவியல்(Illaraviyal) – Domestic Virtue
-
அதிகாரம்மக்கட்பேறு (Makkatperu)
The obtaining of Sons
-
குறள்தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும். -
விளக்கம்தம் பிள்ளைகளைப் பெறுதலாகிய அச்செல்வம், அவரவர் செய்யும் நல்வினைகளால் வரும்.
-
Translation
in English‘Man’s children are his fortune,’ say the wise;
From each one’s deeds his varied fortunes rise. -
MeaningMen will call their sons their wealth, because it flows to them through the deeds which they (sons) perform on their behalf.
9
Nov.2014
0062. எழுபிறப்பும் தீயவை தீண்டா
0062. Ezhupirappum Theeyavai Theendaa
-
குறள் #0062
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்இல்லறவியல்(Illaraviyal) – Domestic Virtue
-
அதிகாரம்மக்கட்பேறு (Makkatperu)
The obtaining of Sons
-
குறள்எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின். -
விளக்கம்பிறர் பழித்ததற்கு இடமில்லாத நல்ல பண்புடைய மக்களை ஒருவன் பெருவானானால், அவனை எழுவகைப் பிறப்புகளிலும் துன்பங்கள் சென்றடையா.
-
Translation
in EnglishWho children gain, that none reproach, of virtuous worth,
No evils touch them, through the sev’n-fold maze of birth. -
MeaningThe evils of the seven births shall not touch those who abtain children of a good disposition, free from vice.
9
Nov.2014
0061. பெறுமவற்றுள் யாமறிவது இல்லை
0061. Perumavatrul Yaamarivathu Illai
-
குறள் #0061
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்இல்லறவியல்(Illaraviyal) – Domestic Virtue
-
அதிகாரம்மக்கட்பேறு (Makkatperu)
The obtaining of Sons
-
குறள்பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற. -
விளக்கம்ஒருவன் அடையக்கூடியவற்றுள், அறிய வேண்டியவற்றை அறிய வல்ல மக்களைப் பெருவதைவிடச் சிறந்ததொன்று இருப்பதாக யாம் அறியவில்லை.
-
Translation
in EnglishOf all that men acquire, we know not any greater gain,
Than that which by the birth of learned children men obtain. -
MeaningAmong all the benefits that may be acquired, we know no greater benefit than the acquisition of intelligent children.