9
Nov.2014
0500. காலாழ் களரில் நரியடும்
0500. Kaalaazh Kalaril Nariyadum
-
குறள் #0500
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரசியல் (Arasiyal) – Royalty
-
அதிகாரம்இடன் அறிதல் (Idan Arithal)
Knowing the Place
-
குறள்காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு. -
விளக்கம்பாகனுக்கு அடங்காதனவும், வேல் வீரர்களைக் குத்தி எடுத்த கொம்புடையனவுமாகிய யானைகள், கால் புதையும் சேற்றில் அகப்பட்டுக் கொண்டால் அவற்றை நரியும் கொன்று விடும்.
-
Translation
in EnglishThe jackal slays, in miry paths of foot-betraying fen,
The elephant of fearless eye and tusks transfixing armed men. -
MeaningA fox can kill a fearless, warrior-faced elephant, if it go into mud in which its legs sink down.
9
Nov.2014
0499. சிறைநலனும் சீரும் இலரெனினும்
0499. Sirainalanum Seerum Ilareninum
-
குறள் #0499
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரசியல் (Arasiyal) – Royalty
-
அதிகாரம்இடன் அறிதல் (Idan Arithal)
Knowing the Place
-
குறள்சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்
உறைநிலத்தோடு ஒட்டல் அரிது. -
விளக்கம்பகைவர் அழித்தற்கரிய கோட்டையும், ஆற்றலும் இலராயினும், அவரை அவர் இருக்கும் இடம் சென்று வெல்லுதல் அரிது.
-
Translation
in EnglishThough fort be none, and store of wealth they lack,
‘Tis hard a people’s homesteads to attack! -
MeaningIt is a hazardous thing to attack men in their own country, although they may neither have power nor a good fortress.
9
Nov.2014
0498. சிறுபடையான் செல்லிடம் சேரின்
0498. Sirupadaiyaan Sellidam Serin
-
குறள் #0498
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரசியல் (Arasiyal) – Royalty
-
அதிகாரம்இடன் அறிதல் (Idan Arithal)
Knowing the Place
-
குறள்சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும். -
விளக்கம்சிறிய படையை உடையவனாயினும் அவனுக்கு வாய்ப்பான இடத்தில், பெரும்படையுடையவன் சென்றால் தன் ஊக்கம் இழந்து கெடுவான்.
-
Translation
in EnglishIf lord of army vast the safe retreat assail
Of him whose host is small, his mightiest efforts fail. -
MeaningThe power of one who has a large army will perish, if he goes into ground where only a small army can act.
9
Nov.2014
0497. அஞ்சாமை அல்லால் துணைவேண்டா
0497. Anjaamai Allaal Thunaivendaa
-
குறள் #0497
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரசியல் (Arasiyal) – Royalty
-
அதிகாரம்இடன் அறிதல் (Idan Arithal)
Knowing the Place
-
குறள்அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தால் செயின். -
விளக்கம்நன்கு ஆராய்ந்து, ஏற்ற இடத்தில் நின்று போர் செய்தால், அவ்வரசர்க்கு அஞ்சாமையைத் தவிர வேறு துணை வேண்டியதில்லை.
-
Translation
in EnglishSave their own fearless might they need no other aid,
If in right place they fight, all due provision made. -
MeaningYou will need no other aid than fearlessness, if you thoroughly reflect (on what you are to do), and select (a suitable) place for your operations.
9
Nov.2014
0496. கடலோடா கால்வல் நெடுந்தேர்
0496. Kadalodaa Kaalval Nedunther
-
குறள் #0496
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரசியல் (Arasiyal) – Royalty
-
அதிகாரம்இடன் அறிதல் (Idan Arithal)
Knowing the Place
-
குறள்கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து. -
விளக்கம்வலிய சக்கரங்களை உடைய தேர் கடலில் ஓட இயலாது; கடலில் ஓடுகின்ற மரக்கலமும் நிலத்தில் ஓட இயலாது.
-
Translation
in EnglishThe lofty car, with mighty wheel, sails not o’er watery main,
The boat that skims the sea, runs not on earth’s hard plain. -
MeaningWide chariots, with mighty wheels, will not run on the ocean; neither will ships that the traverse ocean, move on the earth.
9
Nov.2014
0495. நெடும்புனலுள் வெல்லும் முதலை
0495. Nedumpunalul Vellum Muthalai
-
குறள் #0495
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரசியல் (Arasiyal) – Royalty
-
அதிகாரம்இடன் அறிதல் (Idan Arithal)
Knowing the Place
-
குறள்நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற. -
விளக்கம்ஆழமான நீரில் முதலை பிற உயிர்களை வெல்லும்; அந்நீரிலிருந்து அது நீங்குமானால் அதனைப் பிற உயிர்கள் வெல்லும்.
-
Translation
in EnglishThe crocodile prevails in its own flow of water wide,
If this it leaves, ’tis slain by anything beside. -
MeaningIn deep water, a crocodile will conquer (all other animals); but if it leave the water, other animals will conquer it.
9
Nov.2014
0494. எண்ணியார் எண்ணம் இழப்பர்
0494. Enniyaar Ennam Izhappar
-
குறள் #0494
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரசியல் (Arasiyal) – Royalty
-
அதிகாரம்இடன் அறிதல் (Idan Arithal)
Knowing the Place
-
குறள்எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின். -
விளக்கம்போர் செய்தற்கேற்ற இடமறிந்து சென்று போர் செய்வாராயின், அவரை வெல்லக் கருதிய பகைவர் அவ்வெண்ணத்தை இழப்பர்.
-
Translation
in EnglishThe foes who thought to triumph, find their thoughts were vain,
If hosts advance, seize vantage ground, and thence the fight maintain. -
MeaningIf they who draw near (to fight) choose a suitable place to approach (their enemy), the latter, will have to relinquish the thought which they once entertained, of conquering them.
9
Nov.2014
0493. ஆற்றாரும் ஆற்றி அடுப
0493. Aatraarum Aatri Aduba
-
குறள் #0493
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரசியல் (Arasiyal) – Royalty
-
அதிகாரம்இடன் அறிதல் (Idan Arithal)
Knowing the Place
-
குறள்ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின். -
விளக்கம்வெல்லுதற்கேற்ற இடத்தை அறிந்து, தம்மைக் காத்து, பகைவரோடு போர் செய்வாரானால் வலிமை இல்லாதவரும் வலிமையுடையவராகி வெல்வர்.
-
Translation
in EnglishE’en weak ones mightily prevail, if place of strong defence,
They find, protect themselves, and work their foes offence. -
MeaningEven the powerless will become powerful and conquer, if they select a proper field (of action), and guard themselves, while they make war on their enemies.
9
Nov.2014
0492. முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும்
0492. Muranserndha Moimbi Navarkkum
-
குறள் #0492
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரசியல் (Arasiyal) – Royalty
-
அதிகாரம்இடன் அறிதல் (Idan Arithal)
Knowing the Place
-
குறள்முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்
ஆக்கம் பலவுந் தரும். -
விளக்கம்அரசரோடு பகைகொள்ளத் தக்க வலிமையுடையவர்க்கும் அரணைச் சேர்ந்து நின்று செய்யும் போரானது, நன்மைகள் பலவற்றையும் கொடுக்கும்.
-
Translation
in EnglishThough skill in war combine with courage tried on battle-field,
The added gain of fort doth great advantage yield. -
MeaningEven to those who are men of power and expedients, an attack in connection with a fortification will yield many advantages.
9
Nov.2014
0491. தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க
0491. Thodangarkka Evvinaiyum Ellarka
-
குறள் #0491
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரசியல் (Arasiyal) – Royalty
-
அதிகாரம்இடன் அறிதல் (Idan Arithal)
Knowing the Place
-
குறள்தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்அல் லது. -
விளக்கம்பகைவரை வளைத்தற்கேற்ற இடம் வாய்ப்பதற்கு முன் அவரிடம் எந்த ஒரு செயலையும் தொடங்காதிருத்தல் வேண்டும்; அவரைச் சிறியர் என்று இகழாதிருத்தல் வேண்டும்.
-
Translation
in EnglishBegin no work of war, depise no foe,
Till place where you can wholly circumvent you know. -
MeaningLet not (a king) despise (an enemy), nor undertake any thing (against him), until he has obtained (a suitable) place for besieging him.