9
Nov.2014
0090. மோப்பக் குழையும் அனிச்சம்
0090. Moppak Kuzhaiyum Anichcham
-
குறள் #0090
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்இல்லறவியல்(Illaraviyal) – Domestic Virtue
-
அதிகாரம்விருந்தோம்பல் (Virundhombal)
Cherishing Guests
-
குறள்மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குநழ்யும் விருந்து. -
விளக்கம்அனிச்சப்பூ, மோந்து பார்த்தல் வாடும்; விருந்தினரோ, விருந்தளிப்பவரின் முகம் வேறுபட்டுத் தோன்றினாலே வாடுவர்.
-
Translation
in EnglishThe flower of ‘Anicha’ withers away, If you do but its fragrance inhale;
If the face of the host cold welcome convey, The guest’s heart within him will fail. -
MeaningAs the Anicham flower fades in smelling, so fades the guest when the face is turned away.
9
Nov.2014
0089. உடைமையுள் இன்மை விருந்தோம்பல்
0089. Udaimaiyul Inmai Virundhombal
-
குறள் #0089
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்இல்லறவியல்(Illaraviyal) – Domestic Virtue
-
அதிகாரம்விருந்தோம்பல் (Virundhombal)
Cherishing Guests
-
குறள்உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு. -
விளக்கம்பொருளுடையவராக இருக்குங்காலத்தில் வறுமையாவது, விருந்தினரை உபசரித்தல் மேற்கொள்ளாத அறியாமையாகும். இஃது அறிவில்லாதவரிடத்தில் காணப்படும்.
-
Translation
in EnglishTo turn from guests is penury, though worldly goods abound;
‘Tis senseless folly, only with the senseless found. -
MeaningThat stupidity which excercises no hospitality is poverty in the midst of wealth. It is the property of the stupid.
9
Nov.2014
0088. பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர்
0088. Parindhombip Patratrem enbar
-
குறள் #0088
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்இல்லறவியல்(Illaraviyal) – Domestic Virtue
-
அதிகாரம்விருந்தோம்பல் (Virundhombal)
Cherishing Guests
-
குறள்பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார். -
விளக்கம்விருந்தினரை உபசரித்து அதன் பயனை அடையாதவர், “பொருளை வருந்திப் பாதுகாத்து அதன் பயனை அடையாமற் போய்விட்டோமே” எனப் பின்னர் வருந்தும் நிலையை அடைவர்.
-
Translation
in EnglishWith pain they guard their stores, yet ‘All forlorn are we,’ they’ll cry,
Who cherish not their guests, nor kindly help supply. -
MeaningThose who have taken no part in the benevolence of hospitality shall (at length lament) saying, “we have laboured and laid up wealth and are now without support.”
9
Nov.2014
0087. இனைத்துணைத் தென்பதொன் றில்லை
0087. Inaiththunaith Thonbathon Drillai
-
குறள் #0087
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்இல்லறவியல்(Illaraviyal) – Domestic Virtue
-
அதிகாரம்விருந்தோம்பல் (Virundhombal)
Cherishing Guests
-
குறள்இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன். -
விளக்கம்விருந்து உபசரித்தலாகிய அறத்தின் பயன் இன்ன அளவினது என்று கூற முடியாது; விருந்தினரின் தகுதியளவுக் கேற்றவாறு அஃது அமையும்.
-
Translation
in EnglishTo reckon up the fruit of kindly deeds were all in vain;
Their worth is as the worth of guests you entertain. -
MeaningThe advantages of benevolence cannot be measured; the measure (of the virtue) of the guests (entertained) is the only measure.
9
Nov.2014
0086. செல்விருந்து ஓம்பி வருவிருந்து
0086. Selvirundhu Ombi Varuvirundhu
-
குறள் #0086
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்இல்லறவியல்(Illaraviyal) – Domestic Virtue
-
அதிகாரம்விருந்தோம்பல் (Virundhombal)
Cherishing Guests
-
குறள்செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்வருந்து வானத் தவர்க்கு. -
விளக்கம்வந்த விருந்தினரை உபசரித்துவிட்டு, இனிவரும் விருந்தினரை உபசரிக்கக் காத்திருப்பவன், தேவர்கட்கு நல்ல விருந்தினனாவான்.
-
Translation
in EnglishThe guest arrived he tends, the coming guest expects to see;
To those in heavenly homes that dwell a welcome guest is he. -
MeaningHe who, having entertained the guests that have come, looks out for others who may yet come, will be a welcome guest to the inhabitants of heaven.
9
Nov.2014
0085. வித்தும் இடல்வேண்டும் கொல்லோ
0085. Viththum Idalvendum Kollo
-
குறள் #0085
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்இல்லறவியல்(Illaraviyal) – Domestic Virtue
-
அதிகாரம்விருந்தோம்பல் (Virundhombal)
Cherishing Guests
-
குறள்வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம். -
விளக்கம்வந்த விருந்தினரை முதலில் உண்ணச் செய்து, மீதி உணவை உண்ணுகின்றவனுடைய விளை நிலத்தில் அவன் விதைக்காமலே பயிர் விளையும்.
-
Translation
in EnglishWho first regales his guest, and then himself supplies,
O’er all his fields, unsown, shall plenteous harvests rise. -
MeaningIs it necessary to sow the field of the man who, having feasted his guests, eats what may remain ?
9
Nov.2014
0084. அகனமர்ந்து செய்யாள் உறையும்
0084. Aganamarndhu Seiyaal Uraiyum
-
குறள் #0084
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்இல்லறவியல்(Illaraviyal) – Domestic Virtue
-
அதிகாரம்விருந்தோம்பல் (Virundhombal)
Cherishing Guests
-
குறள்அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல். -
விளக்கம்முகம் மலர்ந்து விருந்தினரை உபசரிப்பவனது வீட்டில், திருமகள் மனம் மகிழுந்து வாழ்வாள்.
-
Translation
in EnglishWith smiling face he entertains each virtuous guest,
‘Fortune’ with gladsome mind shall in his dwelling rest. -
MeaningLakshmi with joyous mind shall dwell in the house of that man who, with cheerful countenance, entertains the good as guests.
9
Nov.2014
0083. வருவிருந்து வைகலும் ஓம்புவான்
0083. Varuvirundhu Vaigalum Ombuvaan
-
குறள் #0083
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்இல்லறவியல்(Illaraviyal) – Domestic Virtue
-
அதிகாரம்விருந்தோம்பல் (Virundhombal)
Cherishing Guests
-
குறள்வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று. -
விளக்கம்நாள்தொறும் தன்னிடம் வருகின்ற விருந்தினரைப் பேணி உபசரிப்பவனின் வாழ்க்கை, வறுமையால் வருந்திக் கெடுவது இல்லை.
-
Translation
in EnglishEach day he tends the coming guest with kindly care;
Painless, unfailing plenty shall his household share. -
MeaningThe domestic life of the man that daily entertains the guests who come to him shall not be laid waste by poverty.
9
Nov.2014
0082. விருந்து புறத்ததாத் தானுண்டல்
0082. Virundhu Puraththathaath Thaanundal
-
குறள் #0082
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்இல்லறவியல்(Illaraviyal) – Domestic Virtue
-
அதிகாரம்விருந்தோம்பல் (Virundhombal)
Cherishing Guests
-
குறள்விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று. -
விளக்கம்விருந்தினர் வீட்டின் வெளியெயிருக்க, தான் மட்டும் தனித்திருந்து உண்பது அமிழ்தமேயானாலும், அது விரும்பத்தக்கதன்று.
-
Translation
in EnglishThough food of immortality should crown the board,
Feasting alone, the guests without unfed, is thing abhorred. -
MeaningIt is not fit that one should wish his guests to be outside (his house) even though he were eating the food of immortality.
9
Nov.2014
0081. இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம்
0081. Irundhombi Ilvaazhva Thellaam
-
குறள் #0081
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்இல்லறவியல்(Illaraviyal) – Domestic Virtue
-
அதிகாரம்விருந்தோம்பல் (Virundhombal)
Cherishing Guests
-
குறள்இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு. -
விளக்கம்மனைவியோடு வீட்டில் இருந்து, பொருளைப் பாதுகாத்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம், விருந்தினரை உபசரித்து, அவர்கட்கு உதவி செய்வதற்கே யாகும்.
-
Translation
in EnglishAll household cares and course of daily life have this in view.
Guests to receive with courtesy, and kindly acts to do. -
MeaningThe whole design of living in the domestic state and laying up (property) is (to be able) to exercise the benevolence of hospitality.