9
Nov.2014
1120. அனிச்சமும் அன்னத்தின் தூவியும்
1120. Anichchamum Annaththin Thooviyum
-
குறள் #1120
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்களவியல் (Kalaviyal) – The Pre-Marital Love
-
அதிகாரம்நலம் புனைந்துரைத்தல் (Nalam Punaindhuraiththal)
The Praise of her Beauty
-
குறள்அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம். -
விளக்கம்அனிச்சம்பூவும், அன்னப் பறவையின் இறகும் இப்பெண்ணின் பாதங்களை (முள்ளுடன் சேர்ந்த) நெருஞ்சிப்பழம் போல வருத்தும்.
-
Translation
in EnglishThe flower of the sensitive plant, and the down on the swan’s white breast,
As the thorn are harsh, by the delicate feet of this maiden pressed. -
MeaningThe anicham and the feathers of the swan are to the feet of females, like the fruit of the (thorny) Nerunji.
Read more
Category:Thirukural
9
Nov.2014
1119. மலரன்ன கண்ணாள் முகமொத்தி
1119. Malaranna Kannaal Mugamoththi
-
குறள் #1119
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்களவியல் (Kalaviyal) – The Pre-Marital Love
-
அதிகாரம்நலம் புனைந்துரைத்தல் (Nalam Punaindhuraiththal)
The Praise of her Beauty
-
குறள்மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி. -
விளக்கம்சந்திரனே, மலர் போன்ற கண்கள் உடையவளது முகத்தை ஒத்திருக்க விரும்பினால் நீ பலர் காணும்படி தோன்றாதிருக்க வேண்டும்.
-
Translation
in EnglishIf as her face, whose eyes are flowers, thou wouldst have charms for me,
Shine for my eyes alone, O moon, shine not for all to see! -
MeaningO moon, if you wish to resemble the face of her whose eyes are like (these) flowers, do not appear so as to be seen by all.
Read more
Category:Thirukural
9
Nov.2014
1118. மாதர் முகம்போல் ஒளிவிட
1118. Maathar Mugampol Olivida
-
குறள் #1118
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்களவியல் (Kalaviyal) – The Pre-Marital Love
-
அதிகாரம்நலம் புனைந்துரைத்தல் (Nalam Punaindhuraiththal)
The Praise of her Beauty
-
குறள்மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி. -
விளக்கம்சந்திரனே, வாழ்வாயாக! இப்பெண்ணின் முகம் போல ஒளிவிடக் கூடுமாயின், நீயும் என்னால் விரும்பப்படத்தக்காய்.
-
Translation
in EnglishFarewell, O moon! If that thine orb could shine
Bright as her face, thou shouldst be love of mine. -
MeaningIf you can indeed shine like the face of women, flourish, O moon, for then would you be worth loving?
Read more
Category:Thirukural
9
Nov.2014
1117. அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப்
1117. Aruvaai Niraindha Avirmathikkup
-
குறள் #1117
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்களவியல் (Kalaviyal) – The Pre-Marital Love
-
அதிகாரம்நலம் புனைந்துரைத்தல் (Nalam Punaindhuraiththal)
The Praise of her Beauty
-
குறள்அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து. -
விளக்கம்முன்பு குறைந்த கலையுடன் வந்து நிறைந்து விளங்கும் சந்திரனைப்போல, இப்பெண் முகத்தில் களங்கம் உளதோ? இல்லை.
-
Translation
in EnglishIn moon, that waxing waning shines, as sports appear,
Are any spots discerned in face of maiden here? -
MeaningCould there be spots in the face of this maid like those in the bright full moon ?
Read more
Category:Thirukural
9
Nov.2014
1116. மதியும் மடந்தை முகனும்
1116. Mathiyum Madanthai Muganum
-
குறள் #1116
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்களவியல் (Kalaviyal) – The Pre-Marital Love
-
அதிகாரம்நலம் புனைந்துரைத்தல் (Nalam Punaindhuraiththal)
The Praise of her Beauty
-
குறள்மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன். -
விளக்கம்விண்மீன்கள் சந்திரனுக்கும் இவளது முகத்துக்கும் வேறுபாடு அறிய முடியாமல் தம் இடங்களினின்று தடுமாறித் திரியலாயின.
-
Translation
in EnglishThe stars perplexed are rushing wildly from their spheres;
For like another moon this maiden’s face appears. -
MeaningThe stars have become confused in their places not being able to distinguish between the moon and the maid’s countenance.
Read more
Category:Thirukural
9
Nov.2014
1115. அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள்
1115. Anichchappook Kaalkalaiyaal Peithaal
-
குறள் #1115
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்களவியல் (Kalaviyal) – The Pre-Marital Love
-
அதிகாரம்நலம் புனைந்துரைத்தல் (Nalam Punaindhuraiththal)
The Praise of her Beauty
-
குறள்அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு
நல்ல படாஅ பறை. -
விளக்கம்இவள் தன்னுடைய மென்மைத் தன்மையை நினையாமல், அனிச்சம்பூவை காம்பு நீக்காமல் சூடினால்; அதன் சுமையைத் தாங்காது இவளது இடை ஒடிந்து போகும். எனவே, அதற்கு இனிச் சாப்பறையேயன்றி நல்ல பறைகள் ஒலிக்க மாட்டா.
-
Translation
in EnglishThe flowers of the sensitive plant as a girdle around her she placed;
The stems she forgot to nip off; they ‘ll weigh down the delicate waist. -
MeaningNo merry drums will be beaten for the (tender) waist of her who has adorned herself with the anicham without having removed its stem.
Read more
Category:Thirukural
9
Nov.2014
1114. காணின் குவளை கவிழ்ந்து
1114. Kaanin Kuvalai Kavizhndhu
-
குறள் #1114
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்களவியல் (Kalaviyal) – The Pre-Marital Love
-
அதிகாரம்நலம் புனைந்துரைத்தல் (Nalam Punaindhuraiththal)
The Praise of her Beauty
-
குறள்காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று. -
விளக்கம்குவளை மலர்களுக்குப் பார்க்கக்கூடிய தன்மை இருக்குமானால், அவை அழகிய அணிகள் அணிந்த இவளது கண்களுக்கு நாம் ஒப்பாகமாட்டோம் என்று எண்ணி நாணிக் குனிந்து நிலத்தைப் பார்க்கும்.
-
Translation
in EnglishThe lotus, seeing her, with head demiss, the ground would eye,
And say, ‘With eyes of her, rich gems who wears, we cannot vie.’ -
MeaningIf the blue lotus could see, it would stoop and look at the ground saying, “I can never resemble the eyes of this excellent jewelled one.”
Read more
Category:Thirukural
9
Nov.2014
1113. முறிமேனி முத்தம் முறுவல்
1113. Murimeni Muththam Muruval
-
குறள் #1113
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்களவியல் (Kalaviyal) – The Pre-Marital Love
-
அதிகாரம்நலம் புனைந்துரைத்தல் (Nalam Punaindhuraiththal)
The Praise of her Beauty
-
குறள்முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு. -
விளக்கம்மூங்கில் போன்ற திரண்ட தோளுடையவளுக்கு உடம்பு தளிர் நிறம்; பற்கள் முத்துப் போன்றவை; மணம் இயற்கையாய் அமைந்த மணம்; மை எழுதிய கண்கள் வேல் போன்றவை.
-
Translation
in EnglishAs tender shoot her frame; teeth, pearls; around her odours blend;
Darts are the eyes of her whose shoulders like the bambu bend. -
MeaningThe complexion of this bamboo-shouldered one is that of a shoot; her teeth, are pearls; her breath, fragrance; and her dyed eyes, lances.
Read more
Category:Thirukural
9
Nov.2014
1112. மலர்காணின் மையாத்தி நெஞ்சே
1112. Malarkaanin Maiyaaththi Nenje
-
குறள் #1112
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்களவியல் (Kalaviyal) – The Pre-Marital Love
-
அதிகாரம்நலம் புனைந்துரைத்தல் (Nalam Punaindhuraiththal)
The Praise of her Beauty
-
குறள்மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கும் என்று. -
விளக்கம்மனமே! இவளது கண்கள் பலராலும் காணப்படுகின்ற பூக்கள் ஒக்கும் என்று நினைத்து, மலர்களைக் கண்டால் மயங்குகின்றாய்.
-
Translation
in EnglishYou deemed, as you saw the flowers, her eyes were as flowers, my soul,
That many may see; it was surely some folly that over you stole! -
MeaningO my soul, fancying that flowers which are seen by many can resemble her eyes, you become confused at the sight of them.
Read more
Category:Thirukural
9
Nov.2014
1111. நன்னீரை வாழி அனிச்சமே
1111. Nanneerai Vaazhi Anichchame
-
குறள் #1111
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்களவியல் (Kalaviyal) – The Pre-Marital Love
-
அதிகாரம்நலம் புனைந்துரைத்தல் (Nalam Punaindhuraiththal)
The Praise of her Beauty
-
குறள்நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள். -
விளக்கம்அனிச்சம்பூவே, வாழ்வாயாக! நல்ல குணமுடையவளாகிய எம்மால் விரும்பப்படுகின்றவள், உன்னை விட மென்மையான தன்மையுடையவள்.
-
Translation
in EnglishO flower of the sensitive plant! than thee
More tender’s the maiden beloved by me. -
MeaningMay you flourish, O Anicham! you have a delicate nature. But my beloved is more delicate than you.
Read more
Category:Thirukural