9
Nov.2014
0190. ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங்
0190. Yethilaar Kutrampol Thangutrang
-
குறள் #0190
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
-
அதிகாரம்புறங்கூறாமை (Purangkooraamai)
Not Backbiting
-
குறள்ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு. -
விளக்கம்புறங்கூறுவதற்காகப் பிறர் குற்றங்களைக் காண்பது போலப் புறங்கூறுதலாகிய தம் குற்றத்தையும் காண்பாராயின், அவர்க்கு எத்தீங்கும் உண்டாகாது.
-
Translation
in EnglishIf each his own, as neighbours’ faults would scan,
Could any evil hap to living man? -
MeaningIf they observed their own faults as they observe the faults of others, would any evil happen to men?
9
Nov.2014
0189. அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம்
0189. Arannokki Aatrunkol Vaiyam
-
குறள் #0189
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
-
அதிகாரம்புறங்கூறாமை (Purangkooraamai)
Not Backbiting
-
குறள்அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்
புன்சொல் உரைப்பான் பொறை. -
விளக்கம்ஒருவன் இல்லாத சமயம் பார்த்து, அவனைப் பழித்துக் கூறுபவரின் உடலை இவ்வுலகம் அறத்தை எண்ணிச் சுமக்கிறது போலும்!
-
Translation
in English‘Tis charity, I ween, that makes the earth sustain their load.
Who, neighbours’ absence watching, tales or slander tell abroad. -
MeaningThe world through charity supports the weight of those who reproach others observing their absence.
9
Nov.2014
0188. துன்னியார் குற்றமும் தூற்றும்
0188. Thunniyaar Kutramum Thootrum
-
குறள் #0188
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
-
அதிகாரம்புறங்கூறாமை (Purangkooraamai)
Not Backbiting
-
குறள்துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு. -
விளக்கம்தம்மோடு நெருங்கிப் பழகுவோரது குற்றத்தையும் புறங்கூறிப் பரப்புகின்றவர், அயலாரது குற்றத்தை எவ்வாறு தூற்றாமலிருப்பார்?
-
Translation
in EnglishWhose nature bids them faults of closest friends proclaim
What mercy will they show to other men’s good name? -
MeaningWhat will those not do to strangers whose nature leads them to publish abroad the faults of their intimate friends ?
9
Nov.2014
0187. பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர்
0187. Pagachchollik Kelirp Pirippar
-
குறள் #0187
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
-
அதிகாரம்புறங்கூறாமை (Purangkooraamai)
Not Backbiting
-
குறள்பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர். -
விளக்கம்கூடி மகிழும்படி இனிய சொற்கள் பேசி நட்புக் கொள்ளுதலை அறியாதவர், தம் உறவினரையும் புறங்கூறிப் பிரிந்து போகுமாறு செய்து விடுவார்.
-
Translation
in EnglishWith friendly art who know not pleasant words to say,
Speak words that sever hearts, and drive choice friends away. -
MeaningThose who know not to live in friendship with amusing conversation will by back-biting estrange even their relatives.
9
Nov.2014
0186. பிறன்பழி கூறுவான் தன்பழி
0186. Piranpazhi Kooruvaan Thanpazhi
-
குறள் #0186
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
-
அதிகாரம்புறங்கூறாமை (Purangkooraamai)
Not Backbiting
-
குறள்பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும். -
விளக்கம்பிறருடைய குற்றங்களைக் கூறுகின்றவனது இழி செயல்களுள், மிகவும் இழிந்தவற்றைப் பிறர் ஆராய்ந்து எடுத்துக் கூறுவர்.
-
Translation
in EnglishWho on his neighbours’ sins delights to dwell,
The story of his sins, culled out with care, the world will tell. -
MeaningThe character of the faults of that man who publishes abroad the faults of others will be sought out and published.
9
Nov.2014
0185. அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை
0185. Aranjchollum Nenjaththaan Anmai
-
குறள் #0185
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
-
அதிகாரம்புறங்கூறாமை (Purangkooraamai)
Not Backbiting
-
குறள்அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையாற் காணப் படும். -
விளக்கம்ஒருவனது புறங்கூறும் குணத்தைக் கொண்டு அவன் அறத்தை நல்லதென்று போற்றும் உள்ளம் இல்லாதவன் என அறியலாம்.
-
Translation
in EnglishThe slanderous meanness that an absent friend defames,
‘This man in words owns virtue, not in heart,’ proclaims. -
MeaningThe emptiness of that man’s mind who (merely) praises virtue will be seen from the meanness of reviling another behind his back.
9
Nov.2014
0184. கண்ணின்று கண்ணறச் சொல்லினும்
0184. Kannindru Kannarach Chollinum
-
குறள் #0184
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
-
அதிகாரம்புறங்கூறாமை (Purangkooraamai)
Not Backbiting
-
குறள்கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்னின்று பின்நோக்காச் சொல். -
விளக்கம்ஒருவன் உன் முன்னிலையில் உனக்கு வருத்தம் தரத்தக்கதைச் சொன்னானாயினும், அவன் எதிரில் இல்லாத போது அவனை இகழ்ந்து பேசக் கூடாது.
-
Translation
in EnglishIn presence though unkindly words you speak, say not
In absence words whose ill result exceeds your thought. -
MeaningThough you speak without kindness before another’s face speak not in his absence words which regard not the evil subsequently resulting from it.
9
Nov.2014
0183. புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின்
0183. Purankoorip Poiththuyir Vaazhthalin
-
குறள் #0183
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
-
அதிகாரம்புறங்கூறாமை (Purangkooraamai)
Not Backbiting
-
குறள்புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூற்றும் ஆக்கத் தரும். -
விளக்கம்பிறனை காணாதவிடத்து அவனை இகழ்ந்து பேசி, கண்ட போது அவனைப் புகழ்ந்து வாழ்தலைவிட, அவ்வாறு செய்யாது இறப்பது மேலானது.
-
Translation
in English‘Tis greater gain of virtuous good for man to die,
Than live to slander absent friend, and falsely praise when nigh. -
MeaningDeath rather than life will confer upon the deceitful backbiter the profit which (the treatises on) virtue point out.
9
Nov.2014
0182. அறனழீஇ அல்லவை செய்தலின்
0182. Aranazhee Allavai Seithalin
-
குறள் #0182
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
-
அதிகாரம்புறங்கூறாமை (Purangkooraamai)
Not Backbiting
-
குறள்அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை. -
விளக்கம்ஒருவன் இல்லாத இடத்தில் அவனைப் புறங்கூறி, அவனைக் கண்டவிடத்துப் பொய்யாக அவனைப் புகழ்தல், அறத்தைக் கெடுத்துப் பாவம் செய்வதை விடத் தீமையுடையது ஆகும்.
-
Translation
in EnglishThan he who virtue scorns, and evil deeds performs, more vile,
Is he that slanders friend, then meets him with false smile. -
MeaningTo smile deceitfully (in another’s presence) after having reviled him to his destruction (behind his back) is a greater evil than the commission of (every other) sin and the destruction of (every) virtue.
9
Nov.2014
0181. அறங்கூறான் அல்ல செயினும்
0181. Arangooraan Alla Seyinum
-
குறள் #0181
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
-
அதிகாரம்புறங்கூறாமை (Purangkooraamai)
Not Backbiting
-
குறள்அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது. -
விளக்கம்ஒருவன் அறத்தைப் போற்றிச் சொல்லதவனைத் தீய செயல்களைச் செய்தொழுகுபவனானாலும், அவன் புறங்கூறாதவன் என்று மற்றவர் சொல்லும்படி நடத்தல் நல்லது.
-
Translation
in EnglishThough virtuous words his lips speak not, and all his deeds are ill.
If neighbour he defame not, there’s good within him still. -
MeaningThough one do not even speak of virtue and live in sin, it will be well if it be said of him “he does not backbite.”