9
Nov.2014
1040. இலமென்று அசைஇ இருப்பாரைக்
1040. Ilamendru Asaie Iruppaaraik
-
குறள் #1040
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
-
அதிகாரம்உழவு (Uzhavu)
Agriculture
-
குறள்இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும். -
விளக்கம்தம்மிடம் பொருளில்லை என்று சொல்லிச் சோம்பி இருப்பவரைக் கண்டால், நிலம் என்று சொல்லப் படுகின்ற நல்லவள் அவரது அறிவின்மையைக் கண்டு தன்னுள்ளே சிரிப்பாள்.
-
Translation
in EnglishThe earth, that kindly dame, will laugh to see,
Men seated idle pleading poverty. -
MeaningThe maiden, Earth, will laugh at the sight of those who plead poverty and lead an idle life.
9
Nov.2014
1039. செல்லான் கிழவன் இருப்பின்
1039. Sellaan Kizhavan Iruppin
-
குறள் #1039
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
-
அதிகாரம்உழவு (Uzhavu)
Agriculture
-
குறள்செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடி விடும். -
விளக்கம்நிலத்துக்கு உரியவன் சென்று நிலத்தைப் பார்க்காதிருந்தால் நிலம் மனைவியைப் போல் வெறுத்துப் பிணங்கிவிடும்.
-
Translation
in EnglishWhen master from the field aloof hath stood;
Then land will sulk, like wife in angry mood. -
MeaningIf the owner does not (personally) attend to his cultivation, his land will behave like an angry wife and yield him no pleasure.
9
Nov.2014
1038. ஏரினும் நன்றால் எருவிடுதல்
1038. Yerinum Nandraal Eruviduthal
-
குறள் #1038
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
-
அதிகாரம்உழவு (Uzhavu)
Agriculture
-
குறள்ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு. -
விளக்கம்நிலத்தின் உள்ள பயிருக்கு உழுவதைவிட எரு இடுதல் நல்லது. இவ்விரண்டுஞ்செய்து களை பிடுங்கிய பின்னர், அதனைக் காத்தல், தண்ணீர் பாய்ச்சுவதை விட நல்லது.
-
Translation
in EnglishTo cast manure is better than to plough;
Weed well; to guard is more than watering now. -
MeaningManuring is better than ploughing; after weeding, watching is better than watering (it).
9
Nov.2014
1037. தொடிப்புழுதி கஃசா உணக்கின்
1037. Thodippuzhuthi Kasaa Unakkin
-
குறள் #1037
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
-
அதிகாரம்உழவு (Uzhavu)
Agriculture
-
குறள்தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும். -
விளக்கம்உழவர் ஒருபலம் புழுதி கால் பலமாகும்படி நிலத்தைக் காயவிட்டால், ஒரு பிடி எருவும் இடவேண்டாம், பயிர் நிலத்தில் செழித்து விளையும்.
-
Translation
in EnglishReduce your soil to that dry state, When ounce is quarter-ounce’s weight;
Without one handful of manure, Abundant crops you thus secure. -
MeaningIf the land is dried so as to reduce one ounce of earth to a quarter, it will grow plentifully even without a handful of manure.
9
Nov.2014
1036. உழவினார் கைம்மடங்கின் இல்லை
1036. Uzhavinaar Kaimmadangin Illai
-
குறள் #1036
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
-
அதிகாரம்உழவு (Uzhavu)
Agriculture
-
குறள்உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கும் நிலை. -
விளக்கம்உழவர் உழாது கையை மடக்கி இருப்பார்களானால், விரும்பப்படும் உணவும் துறந்தேம் என்பார்க்குத் துறவு நிலையும் இல்லையாகும்.
-
Translation
in EnglishFor those who ‘ve left what all men love no place is found,
When they with folded hands remain who till the ground. -
MeaningIf the farmer’s hands are slackened, even the ascetic state will fail.
9
Nov.2014
1035. இரவார் இரப்பார்க்கொன்று ஈவர்
1035. Iravaar Irappaarkkondru Eevar
-
குறள் #1035
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
-
அதிகாரம்உழவு (Uzhavu)
Agriculture
-
குறள்இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர். -
விளக்கம்தமது கையால் உழுகின்றவர் பிறரை இரக்க மாட்டார்; இரப்பவர்க்கு வேண்டியவற்றை ஒளிக்காமல் கொடுப்பார்.
-
Translation
in EnglishThey nothing ask from others, but to askers give,
Who raise with their own hands the food on which they live. -
MeaningThose whose nature is to live by manual labour will never beg but give something to those who beg.
9
Nov.2014
1034. பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க்
1034. Palakudai Neezhalum Thangudaikkeezhk
-
குறள் #1034
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
-
அதிகாரம்உழவு (Uzhavu)
Agriculture
-
குறள்பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர். -
விளக்கம்உழுதலால் நெல்லையுடைய உழவர், உலகம் முழுவதிலுமுள்ள பல அரசர் நாட்டையும் தமது அரசரின் குடைக்கீழாகக் காண்பர்.
-
Translation
in EnglishO’er many a land they ‘ll see their monarch reign,
Whose fields are shaded by the waving grain. -
MeaningPatriotic farmers desire to bring all other states under the control of their own king.
9
Nov.2014
1033. உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற்
1033. Uzhuthundu Vaazhvaare Vaazhvaarmat
-
குறள் #1033
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
-
அதிகாரம்உழவு (Uzhavu)
Agriculture
-
குறள்உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர். -
விளக்கம்உழவினால் உணவைப் பெற்று உண்டு வாழ்கின்றவரே உயிர்வாழ்கின்றவராவர்; அவரல்லாத மற்றவர்களெல்லாரும் பிறரை வணங்கி உண்டு, அவர்பின்னே செல்கின்றவராவர்.
-
Translation
in EnglishWho ploughing eat their food, they truly live:
The rest to others bend subservient, eating what they give. -
MeaningThey alone live who live by agriculture; all others lead a cringing, dependent life.
9
Nov.2014
1032. உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ
1032. Uzhuvaar Ulagaththaarkku Aaniak
-
குறள் #1032
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
-
அதிகாரம்உழவு (Uzhavu)
Agriculture
-
குறள்உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து. -
விளக்கம்உழவுத்தொழிலைச் செய்யாமல் பிறதொழில்களின் மேல் செல்கின்றவர்களையெல்லாம் தாங்குதலால், உழுகின்றவர் உலகத்தவராகிய தேருக்கு அச்சாணி போன்றவராவர்.
-
Translation
in EnglishThe ploughers are the linch-pin of the world; they bear
Them up who other works perform, too weak its toils to share. -
MeaningAgriculturists are (as it were) the linch-pin of the world for they support all other workers who cannot till the soil.
9
Nov.2014
1031. சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம்
1031. Suzhandrumyerp Pinnathu Ulagam
-
குறள் #1031
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
-
அதிகாரம்உழவு (Uzhavu)
Agriculture
-
குறள்சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை. -
விளக்கம்உலகத்தவர் பிற தொழில்களைச் செய்து திரிந்தாலும், முடிவில் உணவின் பொருட்டு உழவரையே எதிர் பார்ப்பர்; ஆகையால், வருத்தம் அடைந்தாலும் உழவே தலையாய தொழில்.
-
Translation
in EnglishHowe’er they roam, the world must follow still the plougher’s team;
Though toilsome, culture of the ground as noblest toil esteem. -
MeaningAgriculture, though laborious, is the most excellent (form of labour); for people, though they go about (in search of various employments), have at last to resort to the farmer.