1290. கண்ணின் துனித்தே கலங்கினாள்
1290. Kannin Thuniththe Kalanginaal
-
குறள் #1290
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்புணர்ச்சி விதும்பல் (Punarchchi Vithumbal)
Desire for Reunion
-
குறள்கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
என்னினும் தான்விதுப் புற்று. -
விளக்கம்காதலி கண்ணினால் பிணக்கிக் கலங்கினாள்; பின்னர் அதனை மறந்து, என்னைவிட விரைவாகத் தழுவினாள்.
-
Translation
in EnglishHer eye, as I drew nigh one day, with anger shone:
By love o’erpowered, her tenderness surpassed my own. -
MeaningShe once feigned dislike in her eyes, but the warmth of her embrace exceeded my own.
Category:Thirukural
Tags: 1330, Desire for Reunion, Love, The Post-Marital Love, tirukural
1289. மலரினும் மெல்லிது காமம்
1289. Malarinum Mellithu Kaamam
-
குறள் #1289
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்புணர்ச்சி விதும்பல் (Punarchchi Vithumbal)
Desire for Reunion
-
குறள்மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார். -
விளக்கம்காதலின்பம் மலரைவிட மேல்லியதாயிருக்கும்; இவ்வாறிருப்பதை அறிந்து, அதன் நயத்தைப் பெறுகிறவர் உலகில் சிலரேயாவர்.
-
Translation
in EnglishLove is tender as an opening flower. In season due
To gain its perfect bliss is rapture known to few. -
MeaningSexual delight is more delicate than a flower, and few are those who understand its real nature.
Category:Thirukural
Tags: 1330, Desire for Reunion, Love, The Post-Marital Love, tirukural
1288. இளித்தக்க இன்னா செயினும்
1288. Iliththakka Inna Seyinum
-
குறள் #1288
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்புணர்ச்சி விதும்பல் (Punarchchi Vithumbal)
Desire for Reunion
-
குறள்இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்
கள்ளற்றே கள்வநின் மார்பு. -
விளக்கம்கள்வனே! உனது மார்பானது, உண்டுகளித்தவர்க்கு இழிவு வரத்தக்க துன்பத்தைக் கொடுத்தாலும் அவரால் விரும்பப்படும் கள்ளைப் போன்றதாகும்.
-
Translation
in EnglishThough shameful ill it works, dear is the palm-tree wine
To drunkards; traitor, so to me that breast of thine! -
MeaningO you rogue! your breast is to me what liquor is to those who rejoice in it, though it only gives them an unpleasant disgrace.
Category:Thirukural
Tags: 1330, Desire for Reunion, Love, The Post-Marital Love, tirukural
1287. உய்த்தல் அறிந்து புனல்பாய்
1287. Uyiththal Arindhu Punalpaai
-
குறள் #1287
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்புணர்ச்சி விதும்பல் (Punarchchi Vithumbal)
Desire for Reunion
-
குறள்உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து. -
விளக்கம்தம்மை இழுத்துக் கொண்டு போகும் என்பதை அறிந்திருந்தும் ஓடுகின்ற நீரிலே குதித்தவரைப் போல, பிணக்கம் நிலையாதது என்று அறிந்தும் பிணங்குவது ஏன்?
-
Translation
in EnglishAs those of rescue sure, who plunge into the stream,
So did I anger feign, though it must falsehood seem? -
MeaningLike those who leap into a stream which they know will carry them off, why should a wife feign dislike which she knows cannot hold out long?
Category:Thirukural
Tags: 1330, Desire for Reunion, Love, The Post-Marital Love, tirukural
1286. காணுங்கால் காணேன் தவறாய
1286. Kaanunkaal Kaanen Thavaraaya
-
குறள் #1286
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்புணர்ச்சி விதும்பல் (Punarchchi Vithumbal)
Desire for Reunion
-
குறள்காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை. -
விளக்கம்கணவரைக் காணும்போது அவரிடத்தில் உள்ள குற்றங்களை நான் காண்பதில்லை. அவரைக் காணாதபோது, குற்றங்களல்லாதவற்றைக் காண்கின்றிலேன்.
-
Translation
in EnglishWhen him I see, to all his faults I ‘m blind;
But when I see him not, nothing but faults I find. -
MeaningWhen I see my husband, I do not see any faults; but when I do not see him, I do not see anything but faults.
Category:Thirukural
Tags: 1330, Desire for Reunion, Love, The Post-Marital Love, tirukural
1285. எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல்
1285. Ezhuthunkaal Kolkaanaak Kannepol
-
குறள் #1285
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்புணர்ச்சி விதும்பல் (Punarchchi Vithumbal)
Desire for Reunion
-
குறள்எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட இடத்து. -
விளக்கம்மை தீட்டும்போது கோலைப் பார்க்க மாட்டாத கண்ணைப் போல், கணவரின் குற்றத்தை அவரைக் கண்டபோது காணமாட்டேன்.
-
Translation
in EnglishThe eye sees not the rod that paints it; nor can I
See any fault, when I behold my husband nigh. -
MeaningLike the eyes which see not the pencil that paints it, I cannot see my husband’s fault (just) when I meet him.
Category:Thirukural
Tags: 1330, Desire for Reunion, Love, The Post-Marital Love, tirukural
1284. ஊடற்கண் சென்றேன்மன் தோழி
1284. Oodarkan Sendrenman Thozhi
-
குறள் #1284
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்புணர்ச்சி விதும்பல் (Punarchchi Vithumbal)
Desire for Reunion
-
குறள்ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றதுஎன் னெஞ்சு. -
விளக்கம்தோழியே, அவரோடு பிணங்க நினைத்துச் சென்றேன்; என் மனம் அதை மறந்து சேர்தலில் சென்றது.
-
Translation
in EnglishMy friend, I went prepared to show a cool disdain;
My heart, forgetting all, could not its love restrain. -
MeaningO my friend! I was prepared to feign displeasure but my mind forgetting it was ready to embrace him.
Category:Thirukural
Tags: 1330, Desire for Reunion, Love, The Post-Marital Love, tirukural
1283. பேணாது பெட்பவே செய்யினும்
1283. Penaathu Petpave Seiyinum
-
குறள் #1283
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்புணர்ச்சி விதும்பல் (Punarchchi Vithumbal)
Desire for Reunion
-
குறள்பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணா தமையல கண். -
விளக்கம்கணவர் என்னைப் பேணாது அவமதித்துத் தாம் விரும்பியவற்றையே செய்தாலும், கணவரைப் பார்க்காமல் என் கண்களால் இருக்க முடியவில்லை.
-
Translation
in EnglishAlthough his will his only law, he lightly value me,
My heart knows no repose unless my lord I see. -
MeaningThough my eyes disregard me and do what is pleasing to my husband, still will they not be satisfied unless they see him.
Category:Thirukural
Tags: 1330, Desire for Reunion, Love, The Post-Marital Love, tirukural
1282. தினைத்துணையும் ஊடாமை வேண்டும்
1282. Thinaiththunaiyum Oodaamai Vendum
-
குறள் #1282
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்புணர்ச்சி விதும்பல் (Punarchchi Vithumbal)
Desire for Reunion
-
குறள்தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்
காமம் நிறைய வரின். -
விளக்கம்காதல் பனைமரத்தின் அளவுக்கு அதிகமாகத் தோன்றினாலும், தினையளவு போன்ற சிறிதளவும் ஊடல் கொள்ளாமல் இருப்பது விரும்பத்தக்கது.
-
Translation
in EnglishWhen as palmyra tall, fulness of perfect love we gain,
Distrust can find no place small as the millet grain. -
MeaningIf women have a lust that exceeds even the measure of the palmyra fruit, they will not desire (to feign) dislike even as much as the millet.
Category:Thirukural
Tags: 1330, Desire for Reunion, Love, The Post-Marital Love, tirukural
1281. உள்ளக் களித்தலும் காண
1281. Ullak Kaliththalum Kaana
-
குறள் #1281
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்புணர்ச்சி விதும்பல் (Punarchchi Vithumbal)
Desire for Reunion
-
குறள்உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு. -
விளக்கம்நினைத்தவுடன் களித்தலும், கண்டவுடன் மகிழ்தலும், கள்ளினால் உண்டாவதில்லை; இவை காதலினால் உண்டாகும்.
-
Translation
in EnglishGladness at the thought, rejoicing at the sight,
Not palm-tree wine, but love, yields such delight. -
MeaningTo please by thought and cheer by sight is peculiar, not to liquor but lust.
Category:Thirukural
Tags: 1330, Desire for Reunion, Love, The Post-Marital Love, tirukural