9
Nov.2014
1330. ஊடுதல் காமத்திற்கு இன்பம்
1330. Ooduthal Kaamaththirku Inbam
- குறள் #1330
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
- இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
- அதிகாரம்ஊடலுவகை (Oodaloovagai)
 The Pleasure of Temporary Variance
- குறள்ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
 கூடி முயங்கப் பெறின்.
- விளக்கம்காதலுக்கு இன்பமாவது ஊடுதல்; கூடித் தழுவப்பெறுதல் அவ்வூடலுக்கு இன்பம்.
- Translation
 in EnglishA ‘feigned aversion’ coy to pleasure gives a zest;
 The pleasure’s crowned when breast is clasped to breast.
- MeaningDislike adds delight to love; and a hearty embrace (thereafter) will add delight to dislike.
 Read more 
Category:Thirukural
9
Nov.2014
1329. ஊடுக மன்னோ ஒளியிழை
1329. Ooduga Manno Oliyizhai
- குறள் #1329
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
- இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
- அதிகாரம்ஊடலுவகை (Oodaloovagai)
 The Pleasure of Temporary Variance
- குறள்ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப
 நீடுக மன்னோ இரா.
- விளக்கம்விளங்குகின்ற அணிகள் அணிந்தவள் ஊடுவாளாக; அந்த ஊடலைத் தீர்க்கும் பொருட்டு நாம் இரந்து நிற்க இரவு நீடித்தல் வேண்டும்.
- Translation
 in EnglishLet her, whose jewels brightly shine, aversion feign!
 That I may still plead on, O night, prolong thy reign!
- MeaningMay the bright-jewelled one feign dislike, and may the night be prolonged for me to implore her!
 Read more 
Category:Thirukural
9
Nov.2014
1328. ஊடிப் பெறுகுவம் கொல்லோ
1328. Oodip Perukuvam Kollo
- குறள் #1328
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
- இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
- அதிகாரம்ஊடலுவகை (Oodaloovagai)
 The Pleasure of Temporary Variance
- குறள்ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
 கூடலில் தோன்றிய உப்பு.
- விளக்கம்தலைவியின் நெற்றி வியர்க்குமாறு, அவளைக் கூடியதனால், பெற்ற இன்பத்தினை, மீண்டுமொருமுறை அவள் பிணங்குவதன் மூலம் பெறுவோமோ?
- Translation
 in EnglishAnd shall we ever more the sweetness know of that embrace
 With dewy brow; to which ‘feigned anger’ lent its piquant grace.
- MeaningWill I enjoy once more through her dislike, the pleasure of that love that makes her forehead perspire?
 Read more 
Category:Thirukural
9
Nov.2014
1327. ஊடலில் தோற்றவர் வென்றார்
1327. Oodalil Thotravar Vendraar
- குறள் #1327
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
- இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
- அதிகாரம்ஊடலுவகை (Oodaloovagai)
 The Pleasure of Temporary Variance
- குறள்ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
 கூடலிற் காணப் படும்.
- விளக்கம்ஊடலில் தோற்றவர் வென்றவராவர்; முன்பு தோற்றதுபோல் காணப்பட்டாலும் அது வெற்றியென்பது சேர்க்கையில் அவரால் அறியப்படும்.
- Translation
 in EnglishIn lovers’ quarrels, ’tis the one that first gives way,
 That in re-union’s joy is seen to win the day.
- MeaningThose are conquerors whose dislike has been defeated and that is proved by the love (which follows).
 Read more 
Category:Thirukural
9
Nov.2014
1326. உணலினும் உண்டது அறல்இனிது
1326. Unalinum Undathu Aralinithu
- குறள் #1326
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
- இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
- அதிகாரம்ஊடலுவகை (Oodaloovagai)
 The Pleasure of Temporary Variance
- குறள்உணலினும் உண்டது அறல்இனிது காமம்
 புணர்தலின் ஊடல் இனிது.
- விளக்கம்மேன்மேல் உண்ணுவதைவிட உண்ட உணவு செரித்தல் இன்பந்தருவதாகும்; அதுபோலக் காதலுக்குச் சேர்தலைவிட ஊடல் இன்பம் தருவதாகும்.
- Translation
 in English‘Tis sweeter to digest your food than ’tis to eat;
 In love, than union’s self is anger feigned more sweet.
- MeaningTo digest what has been eaten is more delightful than to eat more; likewise love is more delightful in dislike than intercourse.
 Read more 
Category:Thirukural
9
Nov.2014
1325. தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார்
1325. Thavarilar Aayinum Thaamveezhvaar
- குறள் #1325
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
- இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
- அதிகாரம்ஊடலுவகை (Oodaloovagai)
 The Pleasure of Temporary Variance
- குறள்தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்
 அகறலின் ஆங்கொன் றுடைத்து.
- விளக்கம்காதலர் தவறில்லாதவராயினும் அவரால் விரும்பப்படும் மகளிர் ஊடி, தம்மெல்லிய தோள்களால் தழுவப்பெறாத சமயத்திலும் ஓர் இன்பம் உண்டு.
- Translation
 in EnglishThough free from fault, from loved one’s tender arms
 To be estranged a while hath its own special charms.
- MeaningThough free from defects, men feel pleased when they cannot embrace the delicate shoulders of those whom they love.
 Read more 
Category:Thirukural
9
Nov.2014
1324. புல்லி விடாஅப் புலவியுள்
1324. Pulli Vidaaap Pulaviyul
- குறள் #1324
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
- இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
- அதிகாரம்ஊடலுவகை (Oodaloovagai)
 The Pleasure of Temporary Variance
- குறள்புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்
 உள்ளம் உடைக்கும் படை.
- விளக்கம்காதலரைத் தழுவிப் பின் விடாமலிருப்பதற்க்குக் காரணமான பிணக்கத்துள்ளே என் மனத்தை உடைக்கும் ஆயுதம் தோன்றும்.
- Translation
 in English‘Within the anger feigned’ that close love’s tie doth bind,
 A weapon lurks, which quite breaks down my mind.
- MeaningIn prolonged dislike after an embrace there is a weapon that can break my heart.
 Read more 
Category:Thirukural
9
Nov.2014
1323. புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ
1323. Pulaththalin Puththelnaadu Undo
- குறள் #1323
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
- இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
- அதிகாரம்ஊடலுவகை (Oodaloovagai)
 The Pleasure of Temporary Variance
- குறள்புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
 நீரியைந் தன்னார் அகத்து.
- விளக்கம்நிலத்தோடு நீர் சேர்ந்தாற்போல், ஒற்றுமையுடையவரிடத்துப் பிணங்குதலைவிட இன்பம் தேவருலகத்தில் உண்டோ?
- Translation
 in EnglishIs there a bliss in any world more utterly divine,
 Than ‘coyness’ gives, when hearts as earth and water join?
- MeaningIs there a celestial land that can please like the feigned dislike of those whose union resembles that of earth and water?
 Read more 
Category:Thirukural
9
Nov.2014
1322. ஊடலின் தோன்றும் சிறுதுனி
1322. Oodalin Thondrum Siruthuni
- குறள் #1322
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
- இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
- அதிகாரம்ஊடலுவகை (Oodaloovagai)
 The Pleasure of Temporary Variance
- குறள்ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி
 வாடினும் பாடு பெறும்.
- விளக்கம்ஊடற்காலத்தில் தோன்றும் சிறிய துன்பத்தால், அவர் செய்யும் கருணை குறைவுபட்டாலும் அது பெருமை அடையும்.
- Translation
 in EnglishMy ‘anger feigned’ gives but a little pain;
 And when affection droops, it makes it bloom again.
- MeaningHis love will increase though it may (at first seem to) fade through the short-lived distress caused by (my) dislike.
 Read more 
Category:Thirukural
9
Nov.2014
1321. இல்லை தவறவர்க்கு ஆயினும்
1321. Illai Thavaravarkku Aayinum
- குறள் #1321
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
- இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
- அதிகாரம்ஊடலுவகை (Oodaloovagai)
 The Pleasure of Temporary Variance
- குறள்இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்
 வல்லது அவர்அளக்கு மாறு.
- விளக்கம்தலைவரிடத்தில் குற்றமில்லையாயினும், அவரோடு ஊடுதல் அவர் நம்மீது மிகுந்த அன்பு செலுத்துமாறு செய்ய வல்லது.
- Translation
 in EnglishAlthough there be no fault in him, the sweetness of his love
 Hath power in me a fretful jealousy to move.
- MeaningAlthough my husband is free from defects, the way in which he embraces me is such as to make me feign dislike.
 Read more 
Category:Thirukural
9
Nov.2014
1320. நினைத்திருந்து நோக்கினும் காயும்
1320. Ninaththirundhu Nokkinum Kaayum
- குறள் #1320
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
- இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
- அதிகாரம்புலவி நுணுக்கம் (Pulavi Nunukkam)
 Feigned Anger
- குறள்நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
 யாருள்ளி நோக்கினீர் என்று.
- விளக்கம்தலைவியின் அழகையே நினைத்திருந்து பார்த்தாலும், ‘வேறு எப்பெண்களின் உறுப்பு அழகை நினைத்து அவற்றோடு ஒப்பிட்டுப் பார்க்கின்றீர்’ என்று சினம் கொள்வாள்.
- Translation
 in EnglishI silent sat, but thought the more, And gazed on her. Then she
 Cried out, ‘While thus you eye me o’er, Tell me whose form you see’.
- MeaningEven when I look on her contemplating (her beauty), she is displeased and says, “With whose thought have you (thus) looked on my person?”
9
Nov.2014
1319. தன்னை உணர்த்தினும் காயும்
1319. Thannai Unarththinum Kaayum
- குறள் #1319
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
- இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
- அதிகாரம்புலவி நுணுக்கம் (Pulavi Nunukkam)
 Feigned Anger
- குறள்தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்
 இந்நீரர் ஆகுதிர் என்று.
- விளக்கம்தலைவியின் பிணக்கைத் தீர்த்தாலும், ‘பிற பெண்களிடத்தும் இவ்வாறு பிணக்குத் தீர்ப்பீர்’ என்று கோபிக்கிறாள்.
- Translation
 in EnglishI then began to soothe and coax, To calm her jealous mind;
 ‘I see’, quoth she, ‘to other folks How you are wondrous kind’
- MeaningEven when I try to remove her dislike, she is displeased and says, “This is the way you behave towards (other women).”
9
Nov.2014
1318. தும்முச் செறுப்ப அழுதாள்
1318. Thummuch Cheruppa Azhuthaal
- குறள் #1318
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
- இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
- அதிகாரம்புலவி நுணுக்கம் (Pulavi Nunukkam)
 Feigned Anger
- குறள்தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்
 எம்மை மறைத்திரோ என்று.
- விளக்கம்நான் தும்மலை அடக்கியபோது, ‘உமக்கு வேண்டியவர் நினைப்பதை எனக்கு மறைத்தீரோ’ என்று சொல்லி அழுதாள்.
- Translation
 in EnglishAnd so next time I checked my sneeze; She forthwith wept and cried,
 (That woman difficult to please), ‘Your thoughts from me you hide’.
- MeaningWhen I suppressed my sneezing, she wept saying, “I suppose you (did so) to hide from me your own people’s remembrance of you”.
9
Nov.2014
1317. வழுத்தினாள் தும்மினேன் ஆக
1317. Vazhuththinaal Thumminen Aaga
- குறள் #1317
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
- இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
- அதிகாரம்புலவி நுணுக்கம் (Pulavi Nunukkam)
 Feigned Anger
- குறள்வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
 யாருள்ளித் தும்மினீர் என்று.
- விளக்கம்நான் தும்மினேன்; உடனே வாழ்த்தினாள்; பின்னர் ‘யார் நினைத்ததால் தும்மினீர்?’ என்று சொல்லி அழுதாள்.
- Translation
 in EnglishShe hailed me when I sneezed one day; But straight with anger seized,
 She cried; ‘Who was the woman, pray, Thinking of whom you sneezed?’
- MeaningWhen I sneezed she blessed me, but at once changed (her mind) and wept, asking, “At the thought of whom did you sneeze?”
9
Nov.2014
1316. உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர்
1316. Ullinen Endrenmat Renmarantheer
- குறள் #1316
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
- இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
- அதிகாரம்புலவி நுணுக்கம் (Pulavi Nunukkam)
 Feigned Anger
- குறள்உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்
 புல்லாள் புலத்தக் கனள்.
- விளக்கம்‘நினைத்தேன்’ என்று கூறினேன்; ‘என்னை இங்ஙனம் நினைக்கு முன் மறந்தீர்’ என்று சொல்லி என்னைத் தழுவாது பிணங்கினாள்.
- Translation
 in English‘Each day I called to mind your charms,’ ‘O, then, you had forgot,’
 She cried, and then her opened arms, Forthwith embraced me not.
- MeaningWhen I said I had remembered her, she said I had forgotten her and relaxing her embrace, began to feign dislike.
9
Nov.2014
1315. இம்மைப் பிறப்பில் பிரியலம்
1315. Immaip Pirappil Piriyalam
- குறள் #1315
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
- இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
- அதிகாரம்புலவி நுணுக்கம் (Pulavi Nunukkam)
 Feigned Anger
- குறள்இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
 கண்நிறை நீர்கொண் டனள்.
- விளக்கம்‘இப்பிறப்பில் பிரிய மாட்டேன்’ என்று சொன்னபோது, ‘மறுபிறப்பிலே பிரிவேன்’ என்று பொருள் கொண்டு கண்கள் நிறைந்த நீரைக் கொண்டாள்.
- Translation
 in English‘While here I live, I leave you not,’ I said to calm her fears.
 She cried, ‘There, then, I read your thought’; And straight dissolved in tears.
- MeaningWhen I said I would never part from her in this life her eyes were filled with tears.
9
Nov.2014
1314. யாரினும் காதலம் என்றேனா
1314. Yaarinum Kaathalam Endrenaa
- குறள் #1314
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
- இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
- அதிகாரம்புலவி நுணுக்கம் (Pulavi Nunukkam)
 Feigned Anger
- குறள்யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
 யாரினும் யாரினும் என்று.
- விளக்கம்நான் எல்லோரையும் விட உன்னைக் காதலிக்கின்றேன் என்று சொன்ன பொது, காதலி ‘யாரினும் யாரினும்’ என்று சொல்லி என்னோடு பிணங்கினாள்.
- Translation
 in English‘I love you more than all beside,’ ‘T was thus I gently spoke;
 ‘What all, what all?’ she instant cried; And all her anger woke.
- MeaningWhen I said I loved her more than any other woman, she said “more than others, yes, more than others,” and remained sulky.
9
Nov.2014
1313. கோட்டுப்பூச் சூடினும் காயும்
1313. Kottuppooch Choodinum Kaayum
- குறள் #1313
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
- இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
- அதிகாரம்புலவி நுணுக்கம் (Pulavi Nunukkam)
 Feigned Anger
- குறள்கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
 காட்டிய சூடினீர் என்று.
- விளக்கம்நான் கிளைகளில் மலர்ந்த மலர்களால் ஆன மாலையைச் சூடினாலும், ‘நீர் விரும்பும் ஒருத்திக்கு இதனைக் காட்டும் பொருட்டுச் சூடினீர்’ என்று கூறிக் கோபிப்பாள்.
- Translation
 in EnglishI wreathed with flowers one day my brow, The angry tempest lowers;
 She cries, ‘Pray, for what woman now Do you put on your flowers?’
- MeaningEven if I were adorned with a garland of branch-flowers, she would say I did so to show it to another woman.
9
Nov.2014
1312. ஊடி இருந்தேமாத் தும்மினார்
1312. Oodi Irunthemaath Thumminaar
- குறள் #1312
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
- இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
- அதிகாரம்புலவி நுணுக்கம் (Pulavi Nunukkam)
 Feigned Anger
- குறள்ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
 நீடுவாழ் கென்பாக் கறிந்து.
- விளக்கம்யாம் ஊடியிருந்தபோது, நான் ஊடல் தீர்ந்து அவரை ‘நெடிது வாழ்க’ என்று வாழ்த்துவேன் என்று கருதி, அவர் தும்மினார்.
- Translation
 in EnglishOne day we silent sulked; he sneezed: The reason well I knew;
 He thought that I, to speak well pleased, Would say, ‘Long life to you!’
- MeaningWhen I continued to be sulky he sneezed and thought I would (then) wish him a long life.
9
Nov.2014
1311. பெண்ணியலார் எல்லாரும் கண்ணின்
1311. Penniyalaar Ellaarum Kannin
- குறள் #1311
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
- இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
- அதிகாரம்புலவி நுணுக்கம் (Pulavi Nunukkam)
 Feigned Anger
- குறள்பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்
 நண்ணேன் பரத்தநின் மார்பு.
- விளக்கம்பரத்தைமை உடையானே! பெண் தன்மையுடையவர் எல்லாரும் தமது கண்களால் பொதுவாக உன்னை அனுபவிப்பர்; ஆகையால், நான் உன் மார்பைச் சேரமாட்டேன்.
- Translation
 in EnglishFrom thy regard all womankind Enjoys an equal grace;
 O thou of wandering fickle mind, I shrink from thine embrace!
- MeaningYou are given to prostitution; all those who are born as womankind enjoy you with their eyes in an ordinary way. I will not embrace you.
9
Nov.2014
1310. ஊடல் உணங்க விடுவாரோடு
1310. Oodal Unanga Viduvaarodu
- குறள் #1310
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
- இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
- அதிகாரம்புலவி (Pulavi)
 Pouting
- குறள்ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம்
 கூடுவேம் என்பது அவா.
- விளக்கம்நான் பிணங்கியிருக்க, அதைத் தீர்க்காது என்னை விட்டுச் செல்பவரோடு என்மனம் கூடுவேன் என்று கருதுவதற்குக் காரணம் ஆசையே.
- Translation
 in EnglishOf her who leaves me thus in variance languishing,
 To think within my heart with love is fond desire.
- MeaningIt is nothing but strong desire that makes her mind unite with me who can leave her to her own dislike.
9
Nov.2014
1309. நீரும் நிழலது இனிதே
1309. Neerum Nizhalathu Inithe
- குறள் #1309
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
- இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
- அதிகாரம்புலவி (Pulavi)
 Pouting
- குறள்நீரும் நிழலது இனிதே புலவியும்
 வீழுநர் கண்ணே இனிது.
- விளக்கம்நீரும் நிழலினிடத்தில் இருந்தால் குடிக்க இனியதாகும்; அது போல ஊடலும் அன்புடையவரிடத்தில் இனியதாகும்.
- Translation
 in EnglishWater is pleasant in the cooling shade;
 So coolness for a time with those we love.
- MeaningLike water in the shade, dislike is delicious only in those who love.
9
Nov.2014
1308. நோதல் எவன்மற்று நொந்தாரென்று
1308. Nothal Evanmatru Nonthaarendru
- குறள் #1308
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
- இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
- அதிகாரம்புலவி (Pulavi)
 Pouting
- குறள்நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும்
 காதலர் இல்லா வழி.
- விளக்கம்இவர் வருந்தினாரென்று அத்துன்பத்தை அறியும் காதலியைப் பெறாதவருக்குப் பிணங்குதலால் பயனில்லை.
- Translation
 in EnglishWhat good can grieving do, when none who love
 Are there to know the grief thy soul endures?
- MeaningWhat avails sorrow when I am without a wife who can understand the cause of my sorrow?
9
Nov.2014
1307. ஊடலின் உண்டாங்கோர் துன்பம்
1307. Oodalin Undaangor Thunbam
- குறள் #1307
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
- இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
- அதிகாரம்புலவி (Pulavi)
 Pouting
- குறள்ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது
 நீடுவ தன்றுகொல் என்று.
- விளக்கம்தலைவி ஊடும்பொழுது, இனி இவளுடன் புணர்ச்சி நீட்டிக்காதோ என்ற ஏக்கம் உண்டாதலால், அவ்வூடற்கண்ணும் ஒரு துன்பம் உண்டு.
- Translation
 in EnglishA lovers’ quarrel brings its pain, when mind afraid
 Asks doubtful, ‘Will reunion sweet be long delayed?’
- MeaningThe doubt as to whether intercourse would take place soon or not, creates a sorrow (even) in feigned dislike.
9
Nov.2014
1306. துனியும் புலவியும் இல்லாயின்
1306. Thuniyum Pulaviyum Illaayin
- குறள் #1306
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
- இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
- அதிகாரம்புலவி (Pulavi)
 Pouting
- குறள்துனியும் புலவியும் இல்லாயின் காமம்
 கனியும் கருக்காயும் அற்று.
- விளக்கம்பெரும் பிணக்கும் சிறுபிணக்கும் இல்லையாயின் காதல் இன்பம், மிகப்பழுத்த கனியும் இளங்காயும் போலாகும்.
- Translation
 in EnglishLove without hatred is ripened fruit;
 Without some lesser strife, fruit immature.
- MeaningSexual pleasure, without prolonged and short-lived dislike, is like too ripe, and unripe fruit.
9
Nov.2014
1305. நலத்தகை நல்லவர்க்கு ஏஎர்
1305. Nalaththagai Nallavarkku Yeyar
- குறள் #1305
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
- இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
- அதிகாரம்புலவி (Pulavi)
 Pouting
- குறள்நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை
 பூஅன்ன கண்ணார் அகத்து.
- விளக்கம்நற்குணங்களால் தகுதியுடைய தலைவர்க்கு அழகாவது, பூப்போன்ற கண்ணையுடைய பெண்ணின் மனத்திலுண்டாகும் பிணக்கமேயாகும்.
- Translation
 in EnglishEven to men of good and worthy mind, the petulance
 Of wives with flowery eyes lacks not a lovely grace.
- MeaningAn increased shyness in those whose eyes are like flowers is beautiful even to good and virtuous husbands.
9
Nov.2014
1304. ஊடி யவரை உணராமை
1304. Oodi Yavarai Unaraamai
- குறள் #1304
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
- இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
- அதிகாரம்புலவி (Pulavi)
 Pouting
- குறள்ஊடி யவரை உணராமை வாடிய
 வள்ளி முதலரிந் தற்று.
- விளக்கம்பிணங்கிய பெண்களைப் பிணக்கை நீக்கி கூடாதிருத்தல், வாடிய வள்ளிக்கொடியை அடியிலே அறுத்தார் போன்றது.
- Translation
 in EnglishTo use no kind conciliating art when lover grieves,
 Is cutting out the root of tender winding plant that droops.
- MeaningNot to reconcile those who have feigned dislike is like cutting a faded creeper at its root.
9
Nov.2014
1303. அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால்
1303. Alanthaarai Allalnoi Seithatraal
- குறள் #1303
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
- இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
- அதிகாரம்புலவி (Pulavi)
 Pouting
- குறள்அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
 புலந்தாரைப் புல்லா விடல்.
- விளக்கம்தம்மோடு பிணங்கிய பெண்களைப் பிணக்கினை நீக்கித் தழுவாதுவிடுதல், முன்பே துன்பமுற்று வருந்துகின்றவர்களுக்கு மேலும் துன்பம் இழைப்பது போலாகும்.
- Translation
 in English‘Tis heaping griefs on those whose hearts are grieved;
 To leave the grieving one without a fond embrace.
- MeaningFor men not to embrace those who have feigned dislike is like torturing those already in agony.
9
Nov.2014
1302. உப்பமைந் தற்றால் புலவி
1302. Uppamaindh Thatraal Pulavi
- குறள் #1302
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
- இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
- அதிகாரம்புலவி (Pulavi)
 Pouting
- குறள்உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
 மிக்கற்றால் நீள விடல்.
- விளக்கம்பிணக்கம், உணவுக்குச் சுவைதரும் உப்புப் போன்றது; அதனை அளவுக்குமேல் அதிகரித்தல், உணவில் உப்புச் சிறிது மிகுந்தது போலாகும்.
- Translation
 in EnglishA cool reserve is like the salt that seasons well the mess,
 Too long maintained, ’tis like the salt’s excess.
- MeaningA little dislike is like salt in proportion; to prolong it a little is like salt a little too much.
9
Nov.2014
1301. புல்லா திராஅப் புலத்தை
1301. Pullaa Thiraaap Pulaththai
- குறள் #1301
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
- இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
- அதிகாரம்புலவி (Pulavi)
 Pouting
- குறள்புல்லா திராஅப் புலத்தை அவர்உறும்
 அல்லல்நோய் காண்கம் சிறிது.
- விளக்கம்தலைவி! நீ காதலரோடு விரைவில் தழுவாது இருந்து பிணங்கு; அப்போது காதலை அடையும் துன்ப நோயினைச் சிறிது காண்போம்.
- Translation
 in EnglishBe still reserved, decline his profferred love;
 A little while his sore distress we ‘ll prove.
- MeaningLet us witness awhile his keen suffering; just feign dislike and embrace him not.
9
Nov.2014
1300. தஞ்சம் தமரல்லர் ஏதிலார்
1300. Thanjam Thamarallar Yethilaar
- குறள் #1300
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
- இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
- அதிகாரம்நெஞ்சோடு புலத்தல் (Nenjodu Pulaththal)
 Exploration with Oneself
- குறள்தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய
 நெஞ்சம் தமரல் வழி.
- விளக்கம்ஒருவர்க்குத் தம்முடைய மனம் தம்மோடு இணங்காத போது, அயலவர் உறவினரல்லராதல் எளிதே.
- Translation
 in EnglishA trifle is unfriendliness by aliens shown,
 When our own heart itself is not our own!
- MeaningIt is hardly possible for strangers to behave like relations, when one’s own soul acts like a stranger.
 Read more 
Category:Thirukural
9
Nov.2014
1299. துன்பத்திற்கு யாரே துணையாவார்
1299. Thunbaththirku Yaare Thunaiyaavaar
- குறள் #1299
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
- இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
- அதிகாரம்நெஞ்சோடு புலத்தல் (Nenjodu Pulaththal)
 Exploration with Oneself
- குறள்துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய
 நெஞ்சந் துணையல் வழி.
- விளக்கம்ஒருவர்க்குத் துன்பம் வந்தபோது, அதை நீக்குதற்குத் தமது மனம் துணையாகாதபோது, வேறு துணையாவார் யார்?
- Translation
 in EnglishAnd who will aid me in my hour of grief,
 If my own heart comes not to my relief?
- MeaningWho would help me out of one’s distress, when one’s own soul refuses help to one?
 Read more 
Category:Thirukural
9
Nov.2014
1298. எள்ளின் இளிவாம்என்று எண்ணி
1298. Ellin Ilivaamendru Enni
- குறள் #1298
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
- இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
- அதிகாரம்நெஞ்சோடு புலத்தல் (Nenjodu Pulaththal)
 Exploration with Oneself
- குறள்எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம்
 உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.
- விளக்கம்உயிர்மேல் ஆசையுடைய என்மனம், காதலரை இழந்தால் தாழ்வு உண்டாகும் என்று கருதி, அவரது நல்ல திறங்களையே நினைக்கும்.
- Translation
 in EnglishIf I contemn him, then disgrace awaits me evermore;
 My soul that seeks to live his virtues numbers o’er.
- MeaningMy soul which clings to life thinks only of his (own) gain in the belief that it would be disgraceful for it to despise him.
 Read more 
Category:Thirukural
9
Nov.2014
1297. நாணும் மறந்தேன் அவர்மறக்
1297. Naanum Maranthen Avarmarak
- குறள் #1297
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
- இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
- அதிகாரம்நெஞ்சோடு புலத்தல் (Nenjodu Pulaththal)
 Exploration with Oneself
- குறள்நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்
 மாணா மடநெஞ்சிற் பட்டு.
- விளக்கம்காதலரை மறக்கமுடியாத எனது இழிந்த அறிவில்லாத மனத்தோடு கூடி நாணத்தையும் மறந்துவிட்டேன்.
- Translation
 in EnglishFall’n ‘neath the sway of this ignoble foolish heart,
 Which will not him forget, I have forgotten shame.
- MeaningI have even forgotten my modesty, having been caught in my foolish mind which is not dignified enough to forget him.
 Read more 
Category:Thirukural
9
Nov.2014
1296. தனியே இருந்து நினைத்தக்கால்
1296. Thaniye Irundhu Ninaiththakkaal
- குறள் #1296
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
- இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
- அதிகாரம்நெஞ்சோடு புலத்தல் (Nenjodu Pulaththal)
 Exploration with Oneself
- குறள்தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
 தினிய இருந்ததென் நெஞ்சு.
- விளக்கம்காதலரைப் பிரிந்து அவரது கொடுமைகளை நினைத்தபோது என்னைத் தின்பதுபோல் வருத்துவதற்கென்றே என் மனம் இருந்தது.
- Translation
 in EnglishMy heart consumes me when I ponder lone,
 And all my lover’s cruelty bemoan.
- MeaningMy mind has been (here) in order to eat me up (as it were) whenever I think of him in my solitude.
 Read more 
Category:Thirukural
9
Nov.2014
1295. பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு
1295. Peraaamai Anjum Perinpirivu
- குறள் #1295
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
- இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
- அதிகாரம்நெஞ்சோடு புலத்தல் (Nenjodu Pulaththal)
 Exploration with Oneself
- குறள்பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும்
 அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு.
- விளக்கம்தலைவரைக் காணாதபோது காணவில்லையே என்று எனது மனம் அஞ்சும்; கண்டால் அவரது பிரிவை எண்ணி அஞ்சும். இவ்வாறு என் மனம் நீங்காத துன்பமுடையது.
- Translation
 in EnglishI fear I shall not gain, I fear to lose him when I gain;
 And thus my heart endures unceasing pain.
- MeaningMy soul fears when it is without him; it also fears when it is with him; it is subject to incessant sorrow.
 Read more 
Category:Thirukural
9
Nov.2014
1294. இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார்
1294. Inianna Ninnodu Soozhvaaryaar
- குறள் #1294
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
- இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
- அதிகாரம்நெஞ்சோடு புலத்தல் (Nenjodu Pulaththal)
 Exploration with Oneself
- குறள்இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே
 துனிசெய்து துவ்வாய்காண் மற்று.
- விளக்கம்மனமே! காதலரோடு முதலில் ஊடி, பின் இன்பம் அனுபவிக்கக் கருதாய்; இனி அத்தகைய செயல் பற்றி உன்னோடு கலந்து ஆராய்பவர் யார்?
- Translation
 in English‘See, thou first show offended pride, and then submit,’ I bade;
 Henceforth such council who will share with thee my heart?
- MeaningO my soul! you would not first seem sulky and then enjoy (him); who then would in future consult you about such things?
 Read more 
Category:Thirukural
9
Nov.2014
1293. கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ
1293. Kettaarkku Nattaaril Enbatho
- குறள் #1293
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
- இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
- அதிகாரம்நெஞ்சோடு புலத்தல் (Nenjodu Pulaththal)
 Exploration with Oneself
- குறள்கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ
 பெட்டாங்கு அவர்பின் செலல்.
- விளக்கம்மனமே! நீ விரும்பியபடி அவரிடம் செல்லுதல், உலகத்தில் கெட்டார்க்கு நண்பர் இல்லை என்ற நினைவினாலோ?
- Translation
 in English‘The ruined have no friends, ‘they say; and so, my heart,
 To follow him, at thy desire, from me thou dost depart.
- MeaningO my soul! do you follow him at pleasure under the belief that the ruined have no friends?
 Read more 
Category:Thirukural
9
Nov.2014
1292. உறாஅ தவர்க்கண்ட கண்ணும்
1292. Uraaa Thavarkkanda Kannum
- குறள் #1292
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
- இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
- அதிகாரம்நெஞ்சோடு புலத்தல் (Nenjodu Pulaththal)
 Exploration with Oneself
- குறள்உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்
 செறாஅரெனச் சேறியென் நெஞ்சு.
- விளக்கம்மனமே! நம்மிடத்தில் அன்பில்லாதவரின் குணத்தை நன்றாக அறிந்த பின்னரும், யான் சென்றால் சினம் கொள்ள மாட்டார் என்று நினைத்து நீ அவரிடம் செல்கின்றாய்.
- Translation
 in English‘Tis plain, my heart, that he ‘s estranged from thee;
 Why go to him as though he were not enemy?
- MeaningO my soul! although you have known him who does not love me, still do you go to him, saying “he will not be displeased.”
 Read more 
Category:Thirukural
9
Nov.2014
1291. அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும்
1291. Avarnenju Avarkkaathal Kandum
- குறள் #1291
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
- இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
- அதிகாரம்நெஞ்சோடு புலத்தல் (Nenjodu Pulaththal)
 Exploration with Oneself
- குறள்அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
 நீஎமக்கு ஆகா தது.
- விளக்கம்மனமே! அவருடைய மனம் நம்மை நினையாதிருப்பதை அறிந்தும், நீ எமக்காக நில்லாமல் அவரையே நினைத்ததற்குக் காரணம் என்ன?
- Translation
 in EnglishYou see his heart is his alone
 O heart, why not be all my own?
- MeaningO my soul! although you have seen how his soul stands by him, how is it you do not stand by me?
 Read more 
Category:Thirukural
9
Nov.2014
1290. கண்ணின் துனித்தே கலங்கினாள்
1290. Kannin Thuniththe Kalanginaal
- குறள் #1290
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
- இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
- அதிகாரம்புணர்ச்சி விதும்பல் (Punarchchi Vithumbal)
 Desire for Reunion
- குறள்கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
 என்னினும் தான்விதுப் புற்று.
- விளக்கம்காதலி கண்ணினால் பிணக்கிக் கலங்கினாள்; பின்னர் அதனை மறந்து, என்னைவிட விரைவாகத் தழுவினாள்.
- Translation
 in EnglishHer eye, as I drew nigh one day, with anger shone:
 By love o’erpowered, her tenderness surpassed my own.
- MeaningShe once feigned dislike in her eyes, but the warmth of her embrace exceeded my own.
9
Nov.2014
1289. மலரினும் மெல்லிது காமம்
1289. Malarinum Mellithu Kaamam
- குறள் #1289
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
- இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
- அதிகாரம்புணர்ச்சி விதும்பல் (Punarchchi Vithumbal)
 Desire for Reunion
- குறள்மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
 செவ்வி தலைப்படு வார்.
- விளக்கம்காதலின்பம் மலரைவிட மேல்லியதாயிருக்கும்; இவ்வாறிருப்பதை அறிந்து, அதன் நயத்தைப் பெறுகிறவர் உலகில் சிலரேயாவர்.
- Translation
 in EnglishLove is tender as an opening flower. In season due
 To gain its perfect bliss is rapture known to few.
- MeaningSexual delight is more delicate than a flower, and few are those who understand its real nature.
9
Nov.2014
1288. இளித்தக்க இன்னா செயினும்
1288. Iliththakka Inna Seyinum
- குறள் #1288
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
- இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
- அதிகாரம்புணர்ச்சி விதும்பல் (Punarchchi Vithumbal)
 Desire for Reunion
- குறள்இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்
 கள்ளற்றே கள்வநின் மார்பு.
- விளக்கம்கள்வனே! உனது மார்பானது, உண்டுகளித்தவர்க்கு இழிவு வரத்தக்க துன்பத்தைக் கொடுத்தாலும் அவரால் விரும்பப்படும் கள்ளைப் போன்றதாகும்.
- Translation
 in EnglishThough shameful ill it works, dear is the palm-tree wine
 To drunkards; traitor, so to me that breast of thine!
- MeaningO you rogue! your breast is to me what liquor is to those who rejoice in it, though it only gives them an unpleasant disgrace.
9
Nov.2014
1287. உய்த்தல் அறிந்து புனல்பாய்
1287. Uyiththal Arindhu Punalpaai
- குறள் #1287
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
- இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
- அதிகாரம்புணர்ச்சி விதும்பல் (Punarchchi Vithumbal)
 Desire for Reunion
- குறள்உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
 பொய்த்தல் அறிந்தென் புலந்து.
- விளக்கம்தம்மை இழுத்துக் கொண்டு போகும் என்பதை அறிந்திருந்தும் ஓடுகின்ற நீரிலே குதித்தவரைப் போல, பிணக்கம் நிலையாதது என்று அறிந்தும் பிணங்குவது ஏன்?
- Translation
 in EnglishAs those of rescue sure, who plunge into the stream,
 So did I anger feign, though it must falsehood seem?
- MeaningLike those who leap into a stream which they know will carry them off, why should a wife feign dislike which she knows cannot hold out long?
9
Nov.2014
1286. காணுங்கால் காணேன் தவறாய
1286. Kaanunkaal Kaanen Thavaraaya
- குறள் #1286
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
- இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
- அதிகாரம்புணர்ச்சி விதும்பல் (Punarchchi Vithumbal)
 Desire for Reunion
- குறள்காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
 காணேன் தவறல் லவை.
- விளக்கம்கணவரைக் காணும்போது அவரிடத்தில் உள்ள குற்றங்களை நான் காண்பதில்லை. அவரைக் காணாதபோது, குற்றங்களல்லாதவற்றைக் காண்கின்றிலேன்.
- Translation
 in EnglishWhen him I see, to all his faults I ‘m blind;
 But when I see him not, nothing but faults I find.
- MeaningWhen I see my husband, I do not see any faults; but when I do not see him, I do not see anything but faults.
9
Nov.2014
1285. எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல்
1285. Ezhuthunkaal Kolkaanaak Kannepol
- குறள் #1285
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
- இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
- அதிகாரம்புணர்ச்சி விதும்பல் (Punarchchi Vithumbal)
 Desire for Reunion
- குறள்எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
 பழிகாணேன் கண்ட இடத்து.
- விளக்கம்மை தீட்டும்போது கோலைப் பார்க்க மாட்டாத கண்ணைப் போல், கணவரின் குற்றத்தை அவரைக் கண்டபோது காணமாட்டேன்.
- Translation
 in EnglishThe eye sees not the rod that paints it; nor can I
 See any fault, when I behold my husband nigh.
- MeaningLike the eyes which see not the pencil that paints it, I cannot see my husband’s fault (just) when I meet him.
9
Nov.2014
1284. ஊடற்கண் சென்றேன்மன் தோழி
1284. Oodarkan Sendrenman Thozhi
- குறள் #1284
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
- இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
- அதிகாரம்புணர்ச்சி விதும்பல் (Punarchchi Vithumbal)
 Desire for Reunion
- குறள்ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
 கூடற்கண் சென்றதுஎன் னெஞ்சு.
- விளக்கம்தோழியே, அவரோடு பிணங்க நினைத்துச் சென்றேன்; என் மனம் அதை மறந்து சேர்தலில் சென்றது.
- Translation
 in EnglishMy friend, I went prepared to show a cool disdain;
 My heart, forgetting all, could not its love restrain.
- MeaningO my friend! I was prepared to feign displeasure but my mind forgetting it was ready to embrace him.
9
Nov.2014
1283. பேணாது பெட்பவே செய்யினும்
1283. Penaathu Petpave Seiyinum
- குறள் #1283
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
- இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
- அதிகாரம்புணர்ச்சி விதும்பல் (Punarchchi Vithumbal)
 Desire for Reunion
- குறள்பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
 காணா தமையல கண்.
- விளக்கம்கணவர் என்னைப் பேணாது அவமதித்துத் தாம் விரும்பியவற்றையே செய்தாலும், கணவரைப் பார்க்காமல் என் கண்களால் இருக்க முடியவில்லை.
- Translation
 in EnglishAlthough his will his only law, he lightly value me,
 My heart knows no repose unless my lord I see.
- MeaningThough my eyes disregard me and do what is pleasing to my husband, still will they not be satisfied unless they see him.
9
Nov.2014
1282. தினைத்துணையும் ஊடாமை வேண்டும்
1282. Thinaiththunaiyum Oodaamai Vendum
- குறள் #1282
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
- இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
- அதிகாரம்புணர்ச்சி விதும்பல் (Punarchchi Vithumbal)
 Desire for Reunion
- குறள்தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்
 காமம் நிறைய வரின்.
- விளக்கம்காதல் பனைமரத்தின் அளவுக்கு அதிகமாகத் தோன்றினாலும், தினையளவு போன்ற சிறிதளவும் ஊடல் கொள்ளாமல் இருப்பது விரும்பத்தக்கது.
- Translation
 in EnglishWhen as palmyra tall, fulness of perfect love we gain,
 Distrust can find no place small as the millet grain.
- MeaningIf women have a lust that exceeds even the measure of the palmyra fruit, they will not desire (to feign) dislike even as much as the millet.
9
Nov.2014
1281. உள்ளக் களித்தலும் காண
1281. Ullak Kaliththalum Kaana
- குறள் #1281
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
- இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
- அதிகாரம்புணர்ச்சி விதும்பல் (Punarchchi Vithumbal)
 Desire for Reunion
- குறள்உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
 கள்ளுக்கில் காமத்திற் குண்டு.
- விளக்கம்நினைத்தவுடன் களித்தலும், கண்டவுடன் மகிழ்தலும், கள்ளினால் உண்டாவதில்லை; இவை காதலினால் உண்டாகும்.
- Translation
 in EnglishGladness at the thought, rejoicing at the sight,
 Not palm-tree wine, but love, yields such delight.
- MeaningTo please by thought and cheer by sight is peculiar, not to liquor but lust.
9
Nov.2014
1280. பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப
1280. Penninaal Penmai Udaiththenba
- குறள் #1280
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
- இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
- அதிகாரம்குறிப்பறிவுறுத்தல் (Kuripparivuruththal)
 The Reading of the Signs
- குறள்பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்
 காமநோய் சொல்லி இரவு.
- விளக்கம்காதல் நோயைக் கண்களால் அறிவித்து வேண்டுதல், பெண் தன்மையிலும் சிறந்த பெண் தன்மையை உடையது என்று கூறுவர்.
- Translation
 in EnglishTo show by eye the pain of love, and for relief to pray,
 Is womanhood’s most womanly device, men say.
- MeaningTo express their love-sickness by their eyes and resort to begging bespeaks more than ordinary female excellence.
 Read more 
Category:Thirukural
9
Nov.2014
1279. தொடிநோக்கி மென்தோளும் நோக்கி
1279. Thodinokki Mentholum Nokki
- குறள் #1279
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
- இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
- அதிகாரம்குறிப்பறிவுறுத்தல் (Kuripparivuruththal)
 The Reading of the Signs
- குறள்தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி
 அஃதாண் டவள்செய் தது.
- விளக்கம்வளையல்களைப் பார்த்து, மெல்லிய தோள்களையும் பார்த்து, பாதங்களையும் பார்த்து அவள் அவ்விடத்தில் செய்தது உடன்போக்கைக் குறித்தது.
- Translation
 in EnglishShe viewed her tender arms, she viewed the armlets from them slid;
 She viewed her feet: all this the lady did.
- MeaningShe looked at her bracelets, her tender shoulders, and her feet; this was what she did there (significantly).
 Read more 
Category:Thirukural
9
Nov.2014
1278. நெருநற்றுச் சென்றார்எம் காதலர்
1278. Nerunatruch Chendraarem Kaathalar
- குறள் #1278
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
- இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
- அதிகாரம்குறிப்பறிவுறுத்தல் (Kuripparivuruththal)
 The Reading of the Signs
- குறள்நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும்
 எழுநாளேம் மேனி பசந்து.
- விளக்கம்எம் காதலர் நேற்றுத்தான் பிரிந்து சென்றார்; நாமும் உடம்பு பசலை அடைந்து ஏழு நாட்கள் ஆனதுபோல் ஆயினோம்.
- Translation
 in EnglishMy loved one left me, was it yesterday?
 Days seven my pallid body wastes away!
- MeaningIt was but yesterday my lover departed (from me); and it is seven days since my complexion turned sallow.
 Read more 
Category:Thirukural
9
Nov.2014
1277. தண்ணந் துறைவன் தணந்தமை
1277. Thannan Thuraivan Thananthamai
- குறள் #1277
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
- இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
- அதிகாரம்குறிப்பறிவுறுத்தல் (Kuripparivuruththal)
 The Reading of the Signs
- குறள்தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்
 முன்னம் உணர்ந்த வளை.
- விளக்கம்குளிர்ந்த துறையையுடைய காதலர் நம்மை விட்டுப் பிரிய எண்ணியதை, நான் அறிவதன்முன் என் கைவளைகள் குறிப்பால் அறிந்தன.
- Translation
 in EnglishMy severance from the lord of this cool shore,
 My very armlets told me long before.
- MeaningMy bracelets have understood before me the (mental) separation of him who rules the cool seashore.
 Read more 
Category:Thirukural
9
Nov.2014
1276. பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல்
1276. Perithaatrip Petpak Kalaththal
- குறள் #1276
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
- இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
- அதிகாரம்குறிப்பறிவுறுத்தல் (Kuripparivuruththal)
 The Reading of the Signs
- குறள்பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி
 அன்பின்மை சூழ்வ துடைத்து.
- விளக்கம்காதலர் மிக்க அன்பு செய்து நாம் விரும்பியவாறு கூடுவது, அவர் பிரிவினை மேற்கொண்டு அன்பு இன்றிச் செல்ல நினைக்கும் குறிப்பினை உடையது.
- Translation
 in EnglishWhile lovingly embracing me, his heart is only grieved:
 It makes me think that I again shall live of love bereaved.
- MeaningThe embrace that fills me with comfort and gladness is capable of enduring (my former) sorrow and meditating on his want of love.
 Read more 
Category:Thirukural
9
Nov.2014
1275. செறிதொடி செய்திறந்த கள்ளம்
1275. Serithodi Seithirantha Kallam
- குறள் #1275
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
- இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
- அதிகாரம்குறிப்பறிவுறுத்தல் (Kuripparivuruththal)
 The Reading of the Signs
- குறள்செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்
 தீர்க்கும் மருந்தொன்று உடைத்து.
- விளக்கம்செறிந்த வளையல் அணிந்த இவள் என்னிடம் மறைவாகச் செய்துவிட்டுச் சென்ற குறிப்பு, எனது மிகுந்த நோயைத் தீர்க்கும் மருந்து ஒன்றினை உடையது.
- Translation
 in EnglishThe secret wiles of her with thronging armlets decked,
 Are medicines by which my raising grief is checked.
- MeaningThe well-meant departure of her whose bangles are tight-fitting contains a remedy that can cure my great sorrow.
 Read more 
Category:Thirukural
9
Nov.2014
1274. முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல்
1274. Mugaimokkul Ullathu Naatrampol
- குறள் #1274
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
- இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
- அதிகாரம்குறிப்பறிவுறுத்தல் (Kuripparivuruththal)
 The Reading of the Signs
- குறள்முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
 நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு.
- விளக்கம்மொட்டாக உள்ள மலரினுள் அடங்கிய நறுமணம் போல, இவளது புன்முறுவலின் தோற்றத்தில் தோன்றாது அடங்கியுள்ள குறிப்பு ஒன்று உண்டு.
- Translation
 in EnglishAs fragrance in the opening bud, some secret lies
 Concealed in budding smile of this dear damsel’s eyes.
- MeaningThere is something in the unmatured smile of this maid like the fragrance that is contained in an unblossomed bud.
 Read more 
Category:Thirukural
9
Nov.2014
1273. மணியில் திகழ்தரு நூல்போல்
1273. Maniyil Thgazhtharu Noolpol
- குறள் #1273
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
- இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
- அதிகாரம்குறிப்பறிவுறுத்தல் (Kuripparivuruththal)
 The Reading of the Signs
- குறள்மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை
 அணியில் திகழ்வதொன்று உண்டு.
- விளக்கம்மணியில் கோக்கப்பட்ட நூல் வெளியே தெரிவது போல, இவளது அழகில் தோன்றும் குறிப்பொன்று உண்டு.
- Translation
 in EnglishAs through the crystal beads is seen the thread on which they ‘re strung
 So in her beauty gleams some thought cannot find a tongue.
- MeaningThere is something that is implied in the beauty of this woman, like the thread that is visible in a garland of gems.
 Read more 
Category:Thirukural
9
Nov.2014
1272. கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட்
1272. Kanniraindha Kaarigaik Kaamperthot
- குறள் #1272
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
- இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
- அதிகாரம்குறிப்பறிவுறுத்தல் (Kuripparivuruththal)
 The Reading of the Signs
- குறள்கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்
 பெண்நிறைந்த நீர்மை பெரிது.
- விளக்கம்கண் நிறைந்த அழகினையும், மூங்கில் போன்ற தொளினையுமுடைய காதலிக்கு, பெண்களிடம் நிறைந்துள்ள நல்ல குணங்கள் மிக உள்ளன.
- Translation
 in EnglishThe simple one whose beauty fills mine eye, whose shoulders curve
 Like bambu stem, hath all a woman’s modest sweet reserve.
- MeaningUnusually great is the female simplicity of your maid whose beauty fills my eyes and whose shoulders resemble the bamboo.
 Read more 
Category:Thirukural
9
Nov.2014
1271. கரப்பினுங் கையிகந் தொல்லாநின்
1271. Karappinung Kaiyikand Thollaanin
- குறள் #1271
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
- இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
- அதிகாரம்குறிப்பறிவுறுத்தல் (Kuripparivuruththal)
 The Reading of the Signs
- குறள்கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்
 உரைக்கல் உறுவதொன் றுண்டு.
- விளக்கம்நீ மறைக்க விரும்பினாலும் உன் மையுண்ட கண்கள் உன்னை மீறி எனக்குச் சொல்ல விரும்புவது ஒன்று உண்டு.
- Translation
 in EnglishThou hid’st it, yet thine eye, disdaining all restraint,
 Something, I know not, what, would utter of complaint.
- MeaningThough you would conceal (your feelings), your painted eyes would not, for, transgressing (their bounds), they tell (me) something.
 Read more 
Category:Thirukural
9
Nov.2014
1270. பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம்
1270. Perinennaam Petrakkaal Ennaaam
- குறள் #1270
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
- இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
- அதிகாரம்அவர்வயின் விதும்பல் (Avarvayin Vithumbal)
 Mutual Desire
- குறள்பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்
 உள்ளம் உடைந்துக்கக் கால்.
- விளக்கம்பிரிவாற்றாமல் மனம் உடைந்து காதலி இறப்பாளாயின், பின் அவள் என்னைப் பெறுவதனால் என்ன பயன்? பெற்றால் தான் என்ன பயன்? தழுவினால் தான் என்ன பயன்?
- Translation
 in EnglishWhat’s my return, the meeting hour, the wished-for greeting worth,
 If she heart-broken lie, with all her life poured forth?
- MeaningAfter (my wife) has died of a broken heart, what good will there be if she is to receive me, has received me, or has even embraced me?
9
Nov.2014
1269. ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண்
1269. Orunaal Ezhunaalpol Sellumsen
- குறள் #1269
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
- இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
- அதிகாரம்அவர்வயின் விதும்பல் (Avarvayin Vithumbal)
 Mutual Desire
- குறள்ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்
 வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு.
- விளக்கம்தூரதேசம் சென்ற காதலர் திரும்ப வரும் நாளை நினைத்து ஏங்கும் மகளிர்க்கு, ஒருநாள் கழிவது ஏழு நாள் கழிவது போலத் தோன்றும்.
- Translation
 in EnglishOne day will seem like seven to those who watch and yearn
 For that glad day when wanderers from afar return.
- MeaningTo those who suffer waiting for the day of return of their distant lovers one day is as long as seven days.
9
Nov.2014
1268. வினைகலந்து வென்றீக வேந்தன்
1268. Vinaikalanthu Venreega Venthan
- குறள் #1268
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
- இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
- அதிகாரம்அவர்வயின் விதும்பல் (Avarvayin Vithumbal)
 Mutual Desire
- குறள்வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
 மாலை அயர்கம் விருந்து.
- விளக்கம்அரசன் போர் செய்து வெற்றி பெறுவானாக; நானும் என் காதலியை அடைந்து மாலைக் காலத்தில் விருந்து உண்பேனாக.
- Translation
 in EnglishO would my king would fight, o’ercome, devide the spoil;
 At home, to-night, the banquet spread should crown the toil.
- MeaningLet the king fight and gain (victories); (but) let me be united to my wife and feast the evening.
9
Nov.2014
1267. புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ
1267. Pulappenkol Pulluven Kollo
- குறள் #1267
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
- இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
- அதிகாரம்அவர்வயின் விதும்பல் (Avarvayin Vithumbal)
 Mutual Desire
- குறள்புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்
 கண்அன்ன கேளிர் விரன்.
- விளக்கம்கண்போற் சிறந்த காதலர் வந்தால், நான் அப்பொழுது பிணங்குவேனோ, தழுவுவேனோ; அல்லது இரண்டையும் கலந்து செய்வேனோ தெரியவில்லை.
- Translation
 in EnglishShall I draw back, or yield myself, or shall both mingled be,
 When he returns, my spouse, dear as these eyes to me.
- MeaningOn the return of him who is as dear as my eyes, am I displeased or am I to embrace (him); or am I to do both?
9
Nov.2014
1266. வருகமன் கொண்கன் ஒருநாள்
1266. Varukaman Konkan Orunaal
- குறள் #1266
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
- இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
- அதிகாரம்அவர்வயின் விதும்பல் (Avarvayin Vithumbal)
 Mutual Desire
- குறள்வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன்
 பைதல்நோய் எல்லாம் கெட.
- விளக்கம்என் கணவன் என்றேனும் ஒருநாள் வருவானாக; வந்தால் இத்துன்பம் தரும் நோயெல்லாம் கெடுமாறு இன்பம் அனுபவிப்பேன்.
- Translation
 in EnglishO let my spouse but come again to me one day!
 I’ll drink that nectar: wasting grief shall flee away.
- MeaningMay my husband return some day; and then will I enjoy (him) so as to destroy all this agonizing sorrow.
9
Nov.2014
1265. காண்கமன் கொண்கனைக் கண்ணாரக்
1265. Kaankaman Konkanaik Kannaarak
- குறள் #1265
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
- இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
- அதிகாரம்அவர்வயின் விதும்பல் (Avarvayin Vithumbal)
 Mutual Desire
- குறள்காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்
 நீங்கும்என் மென்தோள் பசப்பு.
- விளக்கம்நான் என் கணவரைக் கண்ணாரக் காண்பேனாக; அவ்வாறு கண்டால் என் மெல்லிய தோலின் மீதுள்ள பசலை நீங்கும்.
- Translation
 in EnglishO let me see my spouse again and sate these longing eyes!
 That instant from my wasted frame all pallor flies.
- MeaningMay I look on my lover till I am satisfied and thereafter will vanish the sallowness of my slender shoulders.
9
Nov.2014
1264. கூடிய காமம் பிரிந்தார்
1264. Koodiya Kaamam Pirindhaar
- குறள் #1264
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
- இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
- அதிகாரம்அவர்வயின் விதும்பல் (Avarvayin Vithumbal)
 Mutual Desire
- குறள்கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்
 கோடுகொ டேறுமென் நெஞ்சு.
- விளக்கம்பிரிந்தவர் காதலால் கூடும்படி வருவார் என்று நினைத்து எனது மனம் மரத்தின் கிளை மீது ஏறிப் பார்க்கின்றது.
- Translation
 in English‘He comes again, who left my side, and I shall taste love’s joy,’-
 My heart with rapture swells, when thoughts like these my mind employ.
- MeaningMy heart is rid of its sorrow and swells with rapture to think of my absent lover returning with his love.
9
Nov.2014
1263. உரன்நசைஇ உள்ளம் துணையாகச்
1263. Urannasaie ullam Thunaiyaagach
- குறள் #1263
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
- இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
- அதிகாரம்அவர்வயின் விதும்பல் (Avarvayin Vithumbal)
 Mutual Desire
- குறள்உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
 வரல்நசைஇ இன்னும் உளேன்.
- விளக்கம்இன்பத்தைத் விரும்பாது வெற்றியை விரும்பித் தமது ஊக்கத்தைத் துணைக்கொண்டு சென்றவர், மீண்டும் வருவதை விரும்பி நான் உயிரை வைத்துக் கொண்டிருக்கின்றேன்.
- Translation
 in EnglishOn victory intent, His mind sole company he went;
 And I yet life sustain! And long to see his face again!
- MeaningI still live by longing for the arrival of him who has gone out of love for victory and with valour as his guide.
9
Nov.2014
1262. இலங்கிழாய் இன்று மறப்பின்என்
1262. Ilankizhaai Indru Marappinen
- குறள் #1262
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
- இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
- அதிகாரம்அவர்வயின் விதும்பல் (Avarvayin Vithumbal)
 Mutual Desire
- குறள்இலங்கிழாய் இன்று மறப்பின்என் தோள்மேல்
 கலங்கழியும் காரிகை நீத்து.
- விளக்கம்விளக்குகின்ற அணி அணிந்த தோழியே! இன்று என் காதலரை மறந்ததால், என் தோள்கள் அழகினை இழந்து மெலியும்; அதனால் வளையல்கள் கழன்று விடும்.
- Translation
 in EnglishO thou with gleaming jewels decked, could I forget for this one day,
 Henceforth these bracelets from my arms will slip, my beauty worn away.
- MeaningO you bright-jewelled maid, if I forget (him) today, my shoulders will lose their beauty even in the other life and make my bracelets loose.
9
Nov.2014
1261. வாளற்றுப் புற்கென்ற கண்ணும்
1261. Vaalatrup Purkendra Kannum
- குறள் #1261
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
- இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
- அதிகாரம்அவர்வயின் விதும்பல் (Avarvayin Vithumbal)
 Mutual Desire
- குறள்வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
 நாளொற்றித் தேய்ந்த விரல்.
- விளக்கம்காதலர் சென்ற நாட்களை உணர்த்தும் கோடுகளைத் தொட்டு எண்ணியமையால் என் விரல்கள் தேய்ந்தன. அவரது வருகையை எதிர்பார்த்து என் கண்களும் ஒளியிழந்து மங்கின.
- Translation
 in EnglishMy eyes have lost their brightness, sight is dimmed; my fingers worn,
 With nothing on the wall the days since I was left forlorn.
- MeaningMy finger has worn away by marking (on the wall) the days he has been absent while my eyes have lost their lustre and begin to fail.
9
Nov.2014
1260. நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு
1260. Ninantheeyil Ittanna Nenchinaarkku
- குறள் #1260
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
- இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
- அதிகாரம்நிறையழிதல் (Niraiyazhithal)
 Reserve Overcome
- குறள்நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ
 புணர்ந்தூடி நிற்பேம் எனல்.
- விளக்கம்கொழுப்பைத் தீயிலிட்டால் உருகுவது போன்ற நெஞ்சுடையவருக்கு, கூடி அதன்பின் ஓடி இருப்போம் என்னும் உறுதிப்பாடு உண்டோ?
- Translation
 in English‘We ‘ll stand aloof and then embrace’: is this for them to say,
 Whose hearts are as the fat that in the blaze dissolves away?
- MeaningIs it possible for those whose hearts melt like fat in the fire to say they can feign a strong dislike and remain so?
9
Nov.2014
1259. புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன்
1259. Pulappal Enachchendren Pullinen
- குறள் #1259
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
- இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
- அதிகாரம்நிறையழிதல் (Niraiyazhithal)
 Reserve Overcome
- குறள்புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
 கலத்தல் உறுவது கண்டு.
- விளக்கம்அவரோடு பிணங்குவேன் என்று நினைத்துச் சென்றேன்; என் மனம் அவரோடு கலக்கத் தொடங்குவதை அறிந்து தழுவிக் கொண்டேன்.
- Translation
 in English‘I ‘ll shun his greeting’; saying thus with pride away I went:
 I held him in my arms, for straight I felt my heart relent.
- MeaningI said I would feign dislike and so went (away); (but) I embraced him the moment I say my mind began to unite with him!
9
Nov.2014
1258. பன்மாயக் கள்வன் பணிமொழி
1258. Panmaayak Kalvan Panimozhi
- குறள் #1258
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
- இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
- அதிகாரம்நிறையழிதல் (Niraiyazhithal)
 Reserve Overcome
- குறள்பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்
 பெண்மை உடைக்கும் படை.
- விளக்கம்நமது மன அடக்கத்தை உடைக்கின்ற ஆயுதம், பல பொய் பேசவல்ல காதலனான கள்வனுடைய தாழ்ந்த சொற்களல்லவா?
- Translation
 in EnglishThe words of that deceiver, versed in every wily art,
 Are instruments that break through every guard of woman’s heart!
- MeaningAre not the enticing words of my trick-abounding roguish lover the weapon that breaks away my feminine firmness?
9
Nov.2014
1257. நாணென ஒன்றோ அறியலம்
1257. Naanena Ondro Ariyalam
- குறள் #1257
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
- இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
- அதிகாரம்நிறையழிதல் (Niraiyazhithal)
 Reserve Overcome
- குறள்நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்
 பேணியார் பெட்ப செயின்.
- விளக்கம்நம்மால் விரும்பப்பட்டவர், காதலினால் நாம் விரும்பியவற்றைச் செய்வாரானால் நாணம் என்ற ஒன்றை அறிய மாட்டோம்.
- Translation
 in EnglishNo sense of shame my gladdened mind shall prove,
 When he returns my longing heart to bless with love.
- MeaningI know nothing like shame when my beloved does from love (just) what is desired (by me).
9
Nov.2014
1256. செற்றவர் பின்சேறல் வேண்டி
1256. Setravar Pinseral Vendi
- குறள் #1256
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
- இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
- அதிகாரம்நிறையழிதல் (Niraiyazhithal)
 Reserve Overcome
- குறள்செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ
 எற்றென்னை உற்ற துயர்.
- விளக்கம்பிரிந்தவர் பின்னே செல்லும்படி செய்வதற்கு என்னை அடைந்த துன்பம் எத்தன்மை உடையது! இது மிகவும் இரங்கத்தக்கது.
- Translation
 in EnglishMy grief how full of grace, I pray you see!
 It seeks to follow him that hateth me.
- MeaningThe sorrow I have endured by desiring to go after my absent lover, in what way is it excellent?
9
Nov.2014
1255. செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை
1255. Setraarpin Sellaap Perundhagaimai
- குறள் #1255
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
- இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
- அதிகாரம்நிறையழிதல் (Niraiyazhithal)
 Reserve Overcome
- குறள்செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்
 உற்றார் அறிவதொன்று அன்று.
- விளக்கம்பிரிந்தவர் பின்னே செல்லாது நிற்கும் பெருந்தன்மை, காதல் நோய் அடைந்தவரால் அறியப்படுவதொன்று அன்று.
- Translation
 in EnglishThe dignity that seeks not him who acts as foe,
 Is the one thing that loving heart can never know.
- MeaningThe dignity that would not go after an absent lover is not known to those who are sticken by love.
9
Nov.2014
1254. நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன்
1254. Niraiyudaiyen Enbenman Yaanoen
- குறள் #1254
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
- இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
- அதிகாரம்நிறையழிதல் (Niraiyazhithal)
 Reserve Overcome
- குறள்நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம்
 மறையிறந்து மன்று படும்.
- விளக்கம்நான் அடக்கமுடையவள் என்று என்னை நினைத்திருந்தேன். எனது காதல் மறைத்தலைக் கடந்து பலருமறிய வெளிப்படுகின்றது.
- Translation
 in EnglishIn womanly reserve I deemed myself beyond assail;
 But love will come abroad, and casts away the veil.
- MeaningI say I would be firm, but alas, my malady breaks out from its concealment and appears in public.
9
Nov.2014
1253. மறைப்பேன்மன் காமத்தை யானோ
1253. Maraippenman Kamaththai Yaano
- குறள் #1253
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
- இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
- அதிகாரம்நிறையழிதல் (Niraiyazhithal)
 Reserve Overcome
- குறள்மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்
 தும்மல்போல் தோன்றி விடும்.
- விளக்கம்நான் இந்தக் காதலை மறைக்க முயல்வேன்; ஆனால் அஃது என் எண்ணத்தின்படி அடங்கி நில்லாது தும்மல் போலத் தானே வெளிப்ப்பட்டு விடுகின்றது.
- Translation
 in EnglishI would my love conceal, but like a sneeze
 It shows itself, and gives no warning sign.
- MeaningI would conceal my lust, but alas, it yields not to my will but breaks out like a sneeze.
9
Nov.2014
1252. காமம் எனவொன்றோ கண்ணின்றென்
1252. Kaamam Enavendro Kanninren
- குறள் #1252
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
- இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
- அதிகாரம்நிறையழிதல் (Niraiyazhithal)
 Reserve Overcome
- குறள்காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
 யாமத்தும் ஆளும் தொழில்.
- விளக்கம்காதல் என்று சொல்லப்பட்ட ஒன்று, இரக்கமில்லாதது; நடு இரவிலும் என் மனத்தைத் துன்பப்படுத்தலாகிய தொழிலை மேற்கொள்ளச் செய்கின்றது.
- Translation
 in EnglishWhat men call love is the one thing of merciless power;
 It gives my soul no rest, e’en in the midnight hour.
- MeaningEven at midnight is my mind worried by lust, and this one thing, alas! is without mercy.
9
Nov.2014
1251. காமக் கணிச்சி உடைக்கும்
1251. Kaamak Kanichchi Udaikkum
- குறள் #1251
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
- இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
- அதிகாரம்நிறையழிதல் (Niraiyazhithal)
 Reserve Overcome
- குறள்காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
 நாணுத்தாழ் வீழ்த்த கதவு.
- விளக்கம்நாணம் என்னும் தாழ் இடப்பெற்ற மனஅடக்கம் என்னும் கதவை, காதல் என்னும் கோடரி உடைக்கும்.
- Translation
 in EnglishOf womanly reserve love’s axe breaks through the door,
 Barred by the bolt of shame before.
- MeaningThe axe of lust can break the door of chastity which is bolted with the bolt of modesty.
9
Nov.2014
1250. துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து
1250. Thunnaath Thuranthaarai Nenjaththu
- குறள் #1250
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
- இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
- அதிகாரம்நெஞ்சோடு கிளத்தல் (Nenchodu Kilaththal)
 Soliloquy
- குறள்துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா
 இன்னும் இழத்தும் கவின்.
- விளக்கம்கூடாமல் பிரிந்து சென்றவரை மனத்தில் வைத்திருப்போமானால் இன்னும் அழகை இழப்போம்.
- Translation
 in EnglishIf I should keep in mind the man who utterly renounces me,
 My soul must suffer further loss of dignity.
- MeaningIf I retain in my heart him who has left me without befriending me, I shall lose even the (inward) beauty that remains.
9
Nov.2014
1249. உள்ளத்தார் காத லவரால்
1249. Ullaththaar Kaatha Lavaraal
- குறள் #1249
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
- இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
- அதிகாரம்நெஞ்சோடு கிளத்தல் (Nenchodu Kilaththal)
 Soliloquy
- குறள்உள்ளத்தார் காத லவரால் உள்ளிநீ
 யாருழைச் சேறியென் நெஞ்சு.
- விளக்கம்என் மனமே! காதலர் உன்னுள்ளே இருக்க, நீ அவரைத் தேடி எங்கே செல்கின்றாய்?
- Translation
 in EnglishMy heart! my lover lives within my mind;
 Roaming, whom dost thou think to find?
- MeaningO my soul! to whom would you repair, while the dear one is within yourself?
9
Nov.2014
1248. பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப்
1248. Parindhavar Nalgaarendru Yengip
- குறள் #1248
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
- இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
- அதிகாரம்நெஞ்சோடு கிளத்தல் (Nenchodu Kilaththal)
 Soliloquy
- குறள்பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர்
 பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு.
- விளக்கம்எனது மனமே! அவர் இறக்கம் கொண்டு வந்து அருள் செய்யார் என்று நினைத்து, அவர் பின்னே ஏங்கிச் செல்கின்றாய்; நீ அறிவிலாதாய்.
- Translation
 in EnglishThou art befooled, my heart, thou followest him who flees from thee;
 And still thou yearning criest: ‘He will nor pity show nor love to me.’
- MeaningYou are a fool, O my soul! to go after my departed one, while you mourn that he is not kind enough tofavour you.
9
Nov.2014
1247. காமம் விடுஒன்றோ நாண்விடு
1247. Kaamam Viduondro Naanvidu
- குறள் #1247
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
- இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
- அதிகாரம்நெஞ்சோடு கிளத்தல் (Nenchodu Kilaththal)
 Soliloquy
- குறள்காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே
 யானோ பொறேன்இவ் விரண்டு.
- விளக்கம்நல்ல மனமே! ஒன்று காமத்தை விட்டுவிடு; அல்லது நாணத்தை விட்டுவிடு; ஒன்றுக்கொன்று மாறுபட்ட இவ்விரண்டையும் நான் தாங்கமாட்டேன்.
- Translation
 in EnglishOr bid thy love, or bid thy shame depart;
 For me, I cannot bear them both, my worthy heart!
- MeaningO my good soul, give up either lust or honour, as for me I can endure neither.
9
Nov.2014
1246. கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற்
1246. Kalanthunarththum Kaathalark Kandaar
- குறள் #1246
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
- இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
- அதிகாரம்நெஞ்சோடு கிளத்தல் (Nenchodu Kilaththal)
 Soliloquy
- குறள்கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்
 பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு.
- விளக்கம்மனமே! நம்மைச் சேர்ந்து ஊடலை நீக்குகின்ற காதலரைக் கண்டால் ஒருபோதும் வெறுக்காத நீ, இப்போது அவரைக் கொடியவர் என்று பொய்யாக வெறுக்கின்றாய்!
- Translation
 in EnglishMy heart, false is the fire that burns; thou canst not wrath maintain,
 If thou thy love behold, embracing, soothing all thy pain.
- MeaningO my soul! when you see the dear one who remove dislike by intercourse, you are displeased and continue to be so. Nay, your displeasure is (simply) false.
9
Nov.2014
1245. செற்றார் எனக்கை விடல்உண்டோ
1245. Setraar Enakkai Vidalundo
- குறள் #1245
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
- இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
- அதிகாரம்நெஞ்சோடு கிளத்தல் (Nenchodu Kilaththal)
 Soliloquy
- குறள்செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம்
 உற்றால் உறாஅ தவர்.
- விளக்கம்மனமே! நாம் விரும்ப, நம்மை விரும்பாத அவர், நம்மை வெறுத்தார் என்று, நாமும் அவரைக் கைவிட முடியுமோ?
- Translation
 in EnglishO heart, as a foe, can I abandon utterly
 Him who, though I long for him, longs not for me?
- MeaningO my soul! can he who loves not though he is beloved, be forsaken saying he hates me (now)?
9
Nov.2014
1244. கண்ணும் கொளச்சேறி நெஞ்சே
1244. Kannum Kolachcheri Nenje
- குறள் #1244
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
- இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
- அதிகாரம்நெஞ்சோடு கிளத்தல் (Nenchodu Kilaththal)
 Soliloquy
- குறள்கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்
 தின்னும் அவர்க்காணல் உற்று.
- விளக்கம்மனமே! நீ அவரிடம் சென்றால் இக்கண்களையும் உடன் கொண்டு செல்; இக்கண்கள் அவரைக் காண விரும்பி எனைத் தின்பவை போல் வருத்துகின்றன.
- Translation
 in EnglishO rid me of these eyes, my heart; for they,
 Longing to see him, wear my life away.
- MeaningO my soul! take my eyes also with you, (if not), these would eat me up (in their desire) to see him.
9
Nov.2014
1243. இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே
1243. Irunthulli Enbarithal Nenje
- குறள் #1243
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
- இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
- அதிகாரம்நெஞ்சோடு கிளத்தல் (Nenchodu Kilaththal)
 Soliloquy
- குறள்இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்
 பைதல்நோய் செய்தார்கண் இல்.
- விளக்கம்மனமே! நீ இருந்து நினைத்து வருந்துவது ஏன்? இம்மிகுந்த நோய் செய்தவரிடத்தில் நம்மை நினைத்து வருந்தும் நன்மை இல்லையே!
- Translation
 in EnglishWhat comes of sitting here in pining thought, O heart? He knows
 No pitying thought, the cause of all these wasting woes.
- MeaningO my soul! why remain (here) and suffer thinking (of him)? There are no lewd thoughts (of you) in him who has caused you this disease of sorrow.
9
Nov.2014
1242. காதல் அவரிலர் ஆகநீ
1242. Kaathal Avarilar Aaganee
- குறள் #1242
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
- இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
- அதிகாரம்நெஞ்சோடு கிளத்தல் (Nenchodu Kilaththal)
 Soliloquy
- குறள்காதல் அவரிலர் ஆகநீ நோவது
 பேதைமை வாழியென் நெஞ்சு.
- விளக்கம்எனது மனமே! வாழ்வாயாக! அவர் ஆசையில்லாமளிருக்க, நீ அவரது வருகையை எதிர்பார்த்து வருந்துவது அறியாமை.
- Translation
 in EnglishSince he loves not, thy smart
 Is folly, fare thee well my heart!
- MeaningMay you live, O my soul! While he is without love, for you to suffer is (simple) folly.
9
Nov.2014
1241. நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே
1241. Ninaiththondru Sollaayo Nenje
- குறள் #1241
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
- இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
- அதிகாரம்நெஞ்சோடு கிளத்தல் (Nenchodu Kilaththal)
 Soliloquy
- குறள்நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
 எவ்வநோய் தீர்க்கும் மருந்து.
- விளக்கம்மனமே! என்னுடைய தீராத நோயைத் தீர்க்கும் மருந்து ஒன்றை, எத்தகைய தொன்றாயினும் அறிந்து சொல்லமாட்டாயோ?
- Translation
 in EnglishMy heart, canst thou not thinking of some med’cine tell,
 Not any one, to drive away this grief incurable?
- MeaningO my soul, will you not think and tell me some medicine be it what it may, that can cure this incurable malady?
9
Nov.2014
1240. கண்ணின் பசப்போ பருவரல்
1240. Kannin Pasappo Paruvaral
- குறள் #1240
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
- இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
- அதிகாரம்உறுப்புநலன் அழிதல் (Uruppunalan Azhithal)
 Wasting Away
- குறள்கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
 ஒண்ணுதல் செய்தது கண்டு.
- விளக்கம்ஒளிபொருந்திய நெற்றியில் உண்டான நிற வேறுபாட்டைக் கண்டு கண்கள் பசப்புற்றுத் துன்பம் அடைந்தன.
- Translation
 in EnglishThe dimness of her eye felt sorrow now,
 Beholding what was done by that bright brow.
- MeaningWas it at the sight of what the bright forehead had done that the sallowness of her eyes became sad?
9
Nov.2014
1239. முயக்கிடைத் தண்வளி போழப்
1239. Muyakkidaith Thanvali Pozhap
- குறள் #1239
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
- இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
- அதிகாரம்உறுப்புநலன் அழிதல் (Uruppunalan Azhithal)
 Wasting Away
- குறள்முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
 பேதை பெருமழைக் கண்.
- விளக்கம்தழுவுதளுக்கிடையே குளிர்ந்த காற்று நுழைந்ததால், அவளது பெரிய குளிர்ந்த கண்கள் நிறம் வேறுபட்டன; இப்பொழுது அவை என்ன ஆயினவோ?
- Translation
 in EnglishAs we embraced a breath of wind found entrance there;
 The maid’s large liquid eyes were dimmed with care.
- MeaningWhen but a breath of breeze penetrated our embrace, her large cool eyes became sallow.
9
Nov.2014
1238. முயங்கிய கைகளை ஊக்கப்
1238. Muyangiya Kaikalai Ookkap
- குறள் #1238
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
- இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
- அதிகாரம்உறுப்புநலன் அழிதல் (Uruppunalan Azhithal)
 Wasting Away
- குறள்முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
 பைந்தொடிப் பேதை நுதல்.
- விளக்கம்தழுவிய கைகளைத் தளர்த்தியவுடன், பசுமையான பொன்வளை அணிந்த பெண்ணின் நெற்றி நிறம் வெளுத்தது; இப்பிரிவுக்கு அவள் என்ன ஆனாலோ? (இது தலைவன் கூற்று).
- Translation
 in EnglishOne day the fervent pressure of embracing arms I checked,
 Grew wan the forehead of the maid with golden armlet decked.
- MeaningWhen I once loosened the arms that were in embrace, the forehead of the gold-braceleted women turned sallow.
9
Nov.2014
1237. பாடுபெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்
1237. Paaduperuthiyo Nenche Kodiyaarkken
- குறள் #1237
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
- இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
- அதிகாரம்உறுப்புநலன் அழிதல் (Uruppunalan Azhithal)
 Wasting Away
- குறள்பாடுபெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென் வாடுதோட்
 பூசல் உரைத்து.
- விளக்கம்மனமே! கொடியவர்க்கு என் வாடுகின்ற தோள்களினால் உண்டாகின்ற ஆரவாரத்தைச் சொல்லிப் பெருமை கொள்ள மாட்டாயோ?
- Translation
 in EnglishMy heart! say ought of glory wilt thou gain,
 If to that cruel one thou of thy wasted arms complain?
- MeaningCan you O my soul! gain glory by relating to the (so-called) cruel one the clamour of my fading shoulders?
9
Nov.2014
1236. தொடியொடு தோள்நெகிழ நோவல்
1236. Thodiyodu Tholnegizha Noval
- குறள் #1236
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
- இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
- அதிகாரம்உறுப்புநலன் அழிதல் (Uruppunalan Azhithal)
 Wasting Away
- குறள்தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்
 கொடியர் எனக்கூறல் நொந்து.
- விளக்கம்‘வளைகள் கழலும்படி தோள்கள் வாடியதைக் கண்டு நீ அவரைக் கொடியவர் என்று சொல்லாதே; நீ அவ்வாறு சொல்லக் கேட்டுப் பொறுக்காமல் வருந்துகின்றேன்’, எனத் தலைவி தோழிக்குச் சொன்னாள்.
- Translation
 in EnglishI grieve, ’tis pain to me to hear him cruel chid,
 Because the armlet from my wasted arm has slid.
- MeaningI am greatly pained to hear you call him a cruel man, just because your shoulders are reduced and your bracelets loosened.
9
Nov.2014
1235. கொடியார் கொடுமை உரைக்கும்
1235. Kodiyaar Kodumai Uraikkum
- குறள் #1235
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
- இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
- அதிகாரம்உறுப்புநலன் அழிதல் (Uruppunalan Azhithal)
 Wasting Away
- குறள்கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
 தொல்கவின் வாடிய தோள்.
- விளக்கம்வளையல்கள் கழன்று பழைய இயற்கையழகிழந்த இத்தோல்கள், கொடிய காதலரின் கொடுமையை எடுத்துரைக்கின்றன.
- Translation
 in EnglishThese wasted arms, the bracelet with their wonted beauty gone,
 The cruelty declare of that most cruel one.
- MeaningThe (loosened) bracelets, and the shoulders from which the old beauty has faded, relate the cruelty of the pitiless one.
9
Nov.2014
1234. பணைநீங்கிப் பைந்தொடி சோரும்
1234. Panaineengip Painthodi Sorum
- குறள் #1234
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
- இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
- அதிகாரம்உறுப்புநலன் அழிதல் (Uruppunalan Azhithal)
 Wasting Away
- குறள்பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்
 தொல்கவின் வாடிய தோள்.
- விளக்கம்காதலரைப் பிரிந்தால் பழைய இயற்கை அழகு கெட்டுத் தோள்கள் மெலிந்தன; அவை பருமை குறைந்தமையால் பசுமையான பொன் வளையல்கள் கழலுகின்றன.
- Translation
 in EnglishWhen lover went, then faded all their wonted charms,
 And armlets’ golden round slips off from these poor wasted arms.
- MeaningIn the absence of your consort, your shoulders having lost their former beauty and fulness, your bracelets of pure gold have become loose.
9
Nov.2014
1233. தணந்தமை சால அறிவிப்ப
1233. Thananthamai Saala Arivippa
- குறள் #1233
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
- இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
- அதிகாரம்உறுப்புநலன் அழிதல் (Uruppunalan Azhithal)
 Wasting Away
- குறள்தணந்தமை சால அறிவிப்ப போலும்
 மணந்தநாள் வீங்கிய தோள்.
- விளக்கம்கூடி இன்புற்ற நாளில் இன்ப மிகுதியால் பூரித்த தோள்கள், இன்று அவர் பிரிந்தமையை நன்கு காட்டுவன போல் வாடுகின்றன.
- Translation
 in EnglishThese withered arms, desertion’s pangs abundantly display,
 That swelled with joy on that glad nuptial day.
- MeaningThe shoulders that swelled on the day of our union (now) seem to announce our separation clearly (to the public).
9
Nov.2014
1232. நயந்தவர் நல்காமை சொல்லுவ
1232. Nayanthavar Nalkaamai Solluva
- குறள் #1232
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
- இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
- அதிகாரம்உறுப்புநலன் அழிதல் (Uruppunalan Azhithal)
 Wasting Away
- குறள்நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
 பசந்து பனிவாரும் கண்.
- விளக்கம்நிறம் வேறுபட்டு நீர் ஒழுகுகின்ற கண்கள், விரும்பப்பட்டவர் அருள் செய்யாமையைப் பிறர்க்குச் சொல்லுவனபோல இருக்கின்றன.
- Translation
 in EnglishThe eye, with sorrow wan, all wet with dew of tears,
 As witness of the lover’s lack of love appears.
- MeaningThe discoloured eyes that shed tears profusely seem to betray the unkindness of our beloved.
9
Nov.2014
1231. சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார்
1231. Sirumai Namakkozhiyach Chetsendraar
- குறள் #1231
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
- இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
- அதிகாரம்உறுப்புநலன் அழிதல் (Uruppunalan Azhithal)
 Wasting Away
- குறள்சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
 நறுமலர் நாணின கண்.
- விளக்கம்இவ்வறுமை நம்மைவிட்டு நீங்கும்படி நெடுந்தூரம் சென்று தலைவரை நினைத்து அழுதலால் கண்கள் அழகிழந்து நல்ல மலர்களுக்கு நாணுகின்றன.
- Translation
 in EnglishThine eyes grown dim are now ashamed the fragrant flow’rs to see,
 Thinking on him, who wand’ring far, leaves us in misery.
- MeaningWhile we endure the unbearable sorrow, your eyes weep for him who is gone afar, and shun (the sight of) fragrant flowers.