9
Nov.2014
1020. நாண்அகத் தில்லார் இயக்கம்
1020. Naanagath Thillaar Iyakkam
-
குறள் #1020
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
-
அதிகாரம்நாணுடைமை (Naanudaimai)
Shame
-
குறள்நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர்மருட்டி அற்று. -
விளக்கம்மனத்தில் நாணமில்லாதவரின் நடமாட்டம், மரப் பாவையைக் கயிற்றினால் ஆட்டி உயிருடையது என மயக்குவது போலாகும்.
-
Translation
in English‘Tis as with strings a wooden puppet apes life’s functions, when
Those void of shame within hold intercourse with men. -
MeaningThe actions of those who are without modesty at heart are like those of puppet moved by a string.
9
Nov.2014
1019. குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின்
1019. Kulanchudum Kolgai Pizhaippin
-
குறள் #1019
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
-
அதிகாரம்நாணுடைமை (Naanudaimai)
Shame
-
குறள்குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்
நாணின்மை நின்றக் கடை. -
விளக்கம்ஒழுக்கம் தவறினால் அது குடிப்பிறப்பைக் கெடுக்கும்; நாணம் இன்றாயின் அஃது அவனுடைய நலன்களை எல்லாம் கெடுக்கும்.
-
Translation
in English‘Twill race consume if right observance fail;
‘Twill every good consume if shamelessness prevail. -
MeaningWant of manners injures one’s family; but want of modesty injures one’s character.
9
Nov.2014
1018. பிறர்நாணத் தக்கது தான்நாணா
1018. Pirarnaanath Thakkathu Thaannaanaa
-
குறள் #1018
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
-
அதிகாரம்நாணுடைமை (Naanudaimai)
Shame
-
குறள்பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்
அறம்நாணத் தக்கது உடைத்து. -
விளக்கம்பிறர் நாணத்தக்க பழிச்செயலை ஒருவன் நாணாது செய்வானாயின், அவனிடம் அறம் இருக்க நாணும் இயல்புடையதாகும்.
-
Translation
in EnglishThough know’st no shame, while all around asha med must be:
Virtue will shrink away ashamed of thee! -
MeaningVirtue is likely to forsake him who shamelessly does what others are ashamed of.
9
Nov.2014
1017. நாணால் உயிரைத் துறப்பர்
1017. Naanaal Uyiraith Thurappar
-
குறள் #1017
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
-
அதிகாரம்நாணுடைமை (Naanudaimai)
Shame
-
குறள்நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
நாண்துறவார் நாணாள் பவர். -
விளக்கம்நாணத்தின் சிறப்பறிந்து அதனைவிடாது ஒழுகுபவர், நாணம் சிதையாமல் இருக்க வேண்டி உயிரை விடுவர்; உயிர் சிதையாமல் இருக்கும் பொருட்டு நாணினை நீக்கார்.
-
Translation
in EnglishThe men of modest soul for shame would life an offering make,
But ne’er abandon virtuous shame for life’s dear sake. -
MeaningThe modest would rather lose their life for the sake of modesty than lose modesty for the sake of life.
9
Nov.2014
1016. நாண்வேலி கொள்ளாது மன்னோ
1016. Naanveli Kollaathu Manno
-
குறள் #1016
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
-
அதிகாரம்நாணுடைமை (Naanudaimai)
Shame
-
குறள்நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்
பேணலர் மேலா யவர். -
விளக்கம்உயர்ந்தவர் தமக்கு நாணத்தைப் பாதுகாவலாகக் கொள்ளாமல், உலகில் வாழ்தலைப் போற்றமாட்டார்.
-
Translation
in EnglishUnless the hedge of shame inviolate remain,
For men of lofty soul the earth’s vast realms no charms retain. -
MeaningThe great make modesty their barrier (of defence) and not the wide world.
9
Nov.2014
1015. பிறர்பழியும் தம்பழியும் நாணுவார்
1015. Pirarpazhiyum Thampazhiyum Naanuvaar
-
குறள் #1015
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
-
அதிகாரம்நாணுடைமை (Naanudaimai)
Shame
-
குறள்பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு
உறைபதி என்னும் உலகு. -
விளக்கம்பிறர் பழியையும் தம் பழியையும் ஒப்ப அஞ்சுகின்றவர்களை நாணத்துக்கு உறைவிடம் என்று உலகத்தவர் கூறுவர்.
-
Translation
in EnglishAs home of virtuous shame by all the world the men are known,
Who feel ashamed for others, guilt as for their own. -
MeaningThe world regards as the abode of modesty him who fear his own and other’s guilt.
9
Nov.2014
1014. அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு
1014. Aniandro Naanudaimai Sandrorkku
-
குறள் #1014
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
-
அதிகாரம்நாணுடைமை (Naanudaimai)
Shame
-
குறள்அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்
பிணிஅன்றோ பீடு நடை. -
விளக்கம்நிறைகுணமுடையவர்க்கு, செய்யத்தகாதவற்றைச் செய்ய நாணுதல் ஓர் அணி போன்றதாகும். தீமைக்கு அஞ்சாதவரின் கம்பீரமான நடை, கண்டார்க்குப் பொறுத்தற்கரிய நோய் போன்றதாகும்.
-
Translation
in EnglishAnd is not shame an ornament to men of dignity?
Without it step of stately pride is piteous thing to see. -
MeaningIs not the modesty ornament of the noble ? Without it, their haughtiness would be a pain (to others).
9
Nov.2014
1013. ஊனைக் குறித்த உயிரெல்லாம்
1013. Oonaik Kuriththa Uyirellaam
-
குறள் #1013
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
-
அதிகாரம்நாணுடைமை (Naanudaimai)
Shame
-
குறள்ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும்
நன்மை குறித்தது சால்பு. -
விளக்கம்உயிர்களெல்லாம் உடம்பை இருப்பிடமாகக் கொண்டுள்ளன; அதுபோல, நிறைந்த குணம் என்பது நாண் என்னும் நற்குணத்தை இருப்பிடமாகவுடையது.
-
Translation
in EnglishAll spirits homes of flesh as habitation claim,
And perfect virtue ever dwells with shame. -
MeaningAs the body is the abode of the spirit, so the excellence of modesty is the abode of perfection.
9
Nov.2014
1012. ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம்
1012. Oonudai Echcham Uyirkkellaam
-
குறள் #1012
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
-
அதிகாரம்நாணுடைமை (Naanudaimai)
Shame
-
குறள்ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல
நாணுடைமை மாந்தர் சிறப்பு. -
விளக்கம்உணவும் உடையும் அவை தவிர மற்றவையும் உயிர்க்கெல்லாம் பொதுவாகும்; நன்மக்களுக்குச் சிறப்பாவது நாணமுடைமையே.
-
Translation
in EnglishFood, clothing, and other things alike all beings own;
By sense of shame the excellence of men is known. -
MeaningFood, clothing and the like are common to all men but modesty is peculiar to the good.
9
Nov.2014
1011. கருமத்தால் நாணுதல் நாணுந்
1011. Karumaththaal Naanuthal Naanundh
-
குறள் #1011
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
-
அதிகாரம்நாணுடைமை (Naanudaimai)
Shame
-
குறள்கருமத்தால் நாணுதல் நாணுந் திருநுதல்
நல்லவர் நாணுப் பிற. -
விளக்கம்நாணம் என்பது தகாத செயலைச் செய்ய அஞ்சுவதாகும். வேறு வகையில் வரும் நாணங்கள், அழகிய நெற்றியையுடைய குலமகளிரது நாணங்கள் போன்றவையாகும்.
-
Translation
in EnglishTo shrink abashed from evil deed is ‘generous shame’;
Other is that of bright-browed one of virtuous fame. -
MeaningTrue modesty is the fear of (evil) deeds; all other modesty is (simply) the bashfulness of virtuous maids.