9
Nov.2014
0130. கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான்
0130. Kadangaaththuk Katradangal Aatruvaan
-
குறள் #0130
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்இல்லறவியல்(Illaraviyal) – Domestic Virtue
-
அதிகாரம்அடக்கமுடைமை (Adakkamudaimai)
The Possession of Self-Restraint
-
குறள்கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து. -
விளக்கம்மனத்தில் சினம் உண்டாகாமல் தடுத்துக் கற்க வேண்டியவற்றைக் கற்று அடக்கம் உடையவனாக இருப்பவனிடம், அறக்கடவுள் சென்றடையும் சமயத்தை எதிர் பார்த்திருக்கும்.
-
Translation
in EnglishWho learns restraint, and guards his soul from wrath,
Virtue, a timely aid, attends his path. -
MeaningVirtue, seeking for an opportunity, will come into the path of that man who, possessed of learning and self-control, guards himself against anger.
Read more
Category:Thirukural
9
Nov.2014
0129. தீயினாற் சுட்டபுண் உள்ளாறும்
0129. Theeyinaar Chuttapun Ullaarum
-
குறள் #0129
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்இல்லறவியல்(Illaraviyal) – Domestic Virtue
-
அதிகாரம்அடக்கமுடைமை (Adakkamudaimai)
The Possession of Self-Restraint
-
குறள்தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு. -
விளக்கம்நெருப்பினால் சுட்டபுன்னால் உடம்பில் தழும்பு ஏற்பட்டாலும், மனத்தில் ஆறும். நாவினால் தீய சொல் சொல்லிச் சுட்ட தழும்பு மனத்திலே ஒருபோதும் ஆறாது.
-
Translation
in EnglishIn flesh by fire inflamed, nature may thoroughly heal the sore;
In soul by tongue inflamed, the ulcer healeth never more. -
MeaningThe wound which has been burnt in by fire may heal, but a wound burnt in by the tongue will never heal.
Read more
Category:Thirukural
9
Nov.2014
0128. ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன்
0128. Ondraanun Theechchol Porutpayan
-
குறள் #0128
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்இல்லறவியல்(Illaraviyal) – Domestic Virtue
-
அதிகாரம்அடக்கமுடைமை (Adakkamudaimai)
The Possession of Self-Restraint
-
குறள்ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும். -
விளக்கம்தீய சொற்களின் பொருளால் விளையும் தீமையானது ஒருவனிடம் உண்டானால் அதனால் மற்ற அறங்களாலும் பயன் இல்லாது போகும்.
-
Translation
in EnglishThough some small gain of good it seem to bring,
The evil word is parent still of evil thing. -
MeaningIf a man’s speech be productive of a single evil, all the good by him will be turned into evil.
Read more
Category:Thirukural
9
Nov.2014
0127. யாகாவா ராயினும் நாகாக்க
0127. Yaagaavaa Raayinum Naakaakka
-
குறள் #0127
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்இல்லறவியல்(Illaraviyal) – Domestic Virtue
-
அதிகாரம்அடக்கமுடைமை (Adakkamudaimai)
The Possession of Self-Restraint
-
குறள்யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. -
விளக்கம்ஒருவர் எவற்றைக் காக்காவிட்டாலும் நாவைக் காத்தல் வேண்டும்; அவ்வாறு காக்கவில்லைஎன்றால் குற்றமான சொற்களைச் சொல்லி தாமே துன்பம் அடைவர்.
-
Translation
in EnglishWhate’er they fail to guard, o’er lips men guard should keep;
If not, through fault of tongue, they bitter tears shall weep. -
MeaningWhatever besides you leave unguarded, guard your tongue; otherwise errors of speech and the consequent misery will ensue.
Read more
Category:Thirukural
9
Nov.2014
0126. ஒருநம்யுள் ஆமைபோல் ஐந்தடக்கல்
0126. Orunamyul Aamaipol Aindhadakkal
-
குறள் #0126
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்இல்லறவியல்(Illaraviyal) – Domestic Virtue
-
அதிகாரம்அடக்கமுடைமை (Adakkamudaimai)
The Possession of Self-Restraint
-
குறள்ஒருநம்யுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுநம்யும் ஏமாப் புடைத்து. -
விளக்கம்ஆமை தன் உறுப்புகளை உள்ளே இழுப்பதுபோல ஒருவன் ஒரு பிறப்பில் ஐம்பொறிகளையும் அடக்குவானெனில் அஃது அவனை அடுத்த ஏழு பிறப்புகளிலும் தீமையிலிருந்து பாதுகாக்கும்.
-
Translation
in EnglishLike tortoise, who the five restrains
In one, through seven world bliss obtains. -
MeaningShould one throughout a single birth, like a tortoise keep in his five senses, the fruit of it will prove a safe-guard to him throughout the seven-fold births.
Read more
Category:Thirukural
9
Nov.2014
0125. எல்லார்க்கும் நன்றாம் பணிதல்
0125. Ellaarkkum Nandraam Panithal
-
குறள் #0125
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்இல்லறவியல்(Illaraviyal) – Domestic Virtue
-
அதிகாரம்அடக்கமுடைமை (Adakkamudaimai)
The Possession of Self-Restraint
-
குறள்எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து. -
விளக்கம்அடங்கி நடத்தல் எல்லோருக்கும் நல்லதாகும்; அவ்வெல்லாருள்ளும் செல்வர்க்கே அது மற்றொரு செல்வமாகும் சிறப்பினையுடையது.
-
Translation
in EnglishTo all humility is goodly grace; but chief to them
With fortune blessed, -’tis fortune’s diadem. -
MeaningHumility is good in all; but especially in the rich it is (the excellence of) higher riches.
Read more
Category:Thirukural
9
Nov.2014
0124. நிலையின் திரியாது அடங்கியான்
0124. Nilaiyin Thiriyaathu Adangiyaan
-
குறள் #0124
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்இல்லறவியல்(Illaraviyal) – Domestic Virtue
-
அதிகாரம்அடக்கமுடைமை (Adakkamudaimai)
The Possession of Self-Restraint
-
குறள்நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது. -
விளக்கம்இல்லற ஒழுக்கத்தில் மாறுபடாமல் நின்று அடங்கியிருப்பவனின் பெருமை, மலையை விட மிகப் பெரியதாகும்.
-
Translation
in EnglishIn his station, all unswerving, if man self subdue,
Greater he than mountain proudly rising to the view. -
MeaningMore lofty than a mountain will be the greatness of that man who without swerving from his domestic state, controls himself.
Read more
Category:Thirukural
9
Nov.2014
0123. செறிவறிந்து சீர்மை பயக்கும்
0123. Serivarindhu Seermai Payakkum
-
குறள் #0123
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்இல்லறவியல்(Illaraviyal) – Domestic Virtue
-
அதிகாரம்அடக்கமுடைமை (Adakkamudaimai)
The Possession of Self-Restraint
-
குறள்செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின். -
விளக்கம்அறிய வேண்டியவற்றை அறிந்து ஒருவன் அடங்கி நடந்தால், அவ்வடக்கம் பிறரால் மதிக்கப்பட்டு, அவனுக்குச் சிறப்பைத் தரும்.
-
Translation
in EnglishIf versed in wisdom’s lore by virtue’s law you self restrain.
Your self-repression known will yield you glory’s gain. -
MeaningKnowing that self-control is knowledge, if a man should control himself, in the prescribed course, such self-control will bring him distinction among the wise.
Read more
Category:Thirukural
9
Nov.2014
0122. காக்க பொருளா அடக்கத்தை
0122. Kaakka Porulaa Adakkaththai
-
குறள் #0122
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்இல்லறவியல்(Illaraviyal) – Domestic Virtue
-
அதிகாரம்அடக்கமுடைமை (Adakkamudaimai)
The Possession of Self-Restraint
-
குறள்காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு. -
விளக்கம்அடக்கம் என்ற குணத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு காப்பாற்ற வேண்டும். ஏனென்றால் அந்த அடக்கத்தை விடச் சிறந்த செல்வம் உயிர்க்கு இல்லை.
-
Translation
in EnglishGuard thou as wealth the power of self-control;
Than this no greater gain to living soul! -
MeaningLet self-control be guarded as a treasure; there is no greater source of good for man than that.
Read more
Category:Thirukural
9
Nov.2014
0121. அடக்கம் அமரருள் உய்க்கும்
0121. Adakkam Amararul Uikkum
-
குறள் #0121
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்இல்லறவியல்(Illaraviyal) – Domestic Virtue
-
அதிகாரம்அடக்கமுடைமை (Adakkamudaimai)
The Possession of Self-Restraint
-
குறள்அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும். -
விளக்கம்அடக்கம் என்னும் பண்பு ஒருவனைத் தேவர் நடுவே கொண்டு சேர்க்கும்; அடங்காமை என்னும் குணம் நரகத்தில் தள்ளி விடும்.
-
Translation
in EnglishControl of self does man conduct to bliss th’ immortals share;
Indulgence leads to deepest night, and leaves him there. -
MeaningSelf-control will place (a man) among the Gods; the want of it will drive (him) into the thickest darkness (of hell).
Read more
Category:Thirukural