9
Nov.2014
0890. உடம்பாடு இலாதவர் வாழ்க்கை
0890. Udambaadu Ilaathavar Vaazhkkai
-
குறள் #0890
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்உட்பகை (Utpagai)
Enmity Within
-
குறள்உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடனுறைந் தற்று. -
விளக்கம்மனப்பொருத்தம் இல்லாதவரோடு ஒருவன் கூடி வாழ்வது, ஒரு குடிசையுள் ஒருவன் பாம்போடு வாழ்வது போலாகும்.
-
Translation
in EnglishDomestic life with those who don’t agree,
Is dwelling in a shed with snake for company. -
MeaningLiving with those who do not agree (with one) is like dwelling with a cobra (in the same) hut.
9
Nov.2014
0889. எட்பக வன்ன சிறுமைத்தே
0889. Etpaga Vanna Sirumaiththe
-
குறள் #0889
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்உட்பகை (Utpagai)
Enmity Within
-
குறள்எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்
உட்பகை உள்ளதாங் கேடு. -
விளக்கம்எள்ளின் பிளவைப் போன்ற சிறுமை உடையதாயினும், உட்பகை கேடு உள்ளதாகும்.
-
Translation
in EnglishThough slight as shred of ‘seasame’ seed it be,
Destruction lurks in hidden enmity. -
MeaningAlthough internal hatred be as small as the fragment of the sesamum (seed), still does destruction dwell in it.
9
Nov.2014
0888. அரம்பொருத பொன்போலத் தேயும்
0888. Aramporutha Ponpolath Theyum
-
குறள் #0888
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்உட்பகை (Utpagai)
Enmity Within
-
குறள்அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது
உட்பகை உற்ற குடி. -
விளக்கம்அரம் இரும்பினைத் தேய்த்துக் குறைப்பதுபோல, உட்பகை கொண்ட குடியும் அப்பகையால் தேய்வுண்டு வலிமை குறையும்.
-
Translation
in EnglishAs gold with which the file contends is worn away,
So strength of house declines where hate concealed hath sway. -
MeaningA family subject to internal hatred will wear out and lose its strength like iron that has been filed away.
9
Nov.2014
0887. செப்பின் புணர்ச்சிபோல் கூடினும்
0887. Seppin Punarchchipol Koodinum
-
குறள் #0887
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்உட்பகை (Utpagai)
Enmity Within
-
குறள்செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே
உட்பகை உற்ற குடி. -
விளக்கம்செப்பும் அதன் மூடியும் காண்பதற்கு ஒன்றுபட்டிருப்பது போல் தோன்றினும் வேறுபட்டிருப்பது போல் உட்பகை கொண்டவர்களும் உள்ளத்தால் கூடியிருக்க மாட்டார்; பிரிந்தே இருப்பார்.
-
Translation
in EnglishAs casket with its cover, though in one they live alway,
No union to the house where hate concealed hath sway. -
MeaningNever indeed will a family subject to internal hatred unite (really) though it may present an apparent union like that of a casket and its lid.
9
Nov.2014
0886. ஒன்றாமை ஒன்றியார் கட்படின்
0886. Ondraamai Ondriyaar Katpadin
-
குறள் #0886
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்உட்பகை (Utpagai)
Enmity Within
-
குறள்ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்
பொன்றாமை ஒன்றல் அரிது. -
விளக்கம்அரசனைச் சேர்ந்திருப்பவரிடத்தில் உட்பகை தோன்றினால், இறவாது நிலைபெறுதல் எப்பொழுதும் அரிதாகும்.
-
Translation
in EnglishIf discord finds a place midst those who dwelt at one before,
‘Tis ever hard to keep destruction from the door. -
MeaningIf hatred arises among (one’s) own people, it will be hardly possible (for one) to escape death.
9
Nov.2014
0885. உறல்முறையான் உட்பகை தோன்றின்
0885. Uralmuraiyaan Utpagai Thondrin
-
குறள் #0885
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்உட்பகை (Utpagai)
Enmity Within
-
குறள்உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்
ஏதம் பலவும் தரும். -
விளக்கம்அரசனுக்கு உறவின் முறையுடன் உட்பகை உண்டானால், அஃது இறந்துபோகுந் தன்மையுடைய குற்றம் பலவற்றையும் கொடுக்கும்.
-
Translation
in EnglishAmid one’s relatives if hidden hath arise,
‘Twill hurt inflict in deadly wise. -
MeaningIf there appears internal hatred in a (king’s) family; it will lead to many a fatal crime.
9
Nov.2014
0884. மனமாணா உட்பகை தோன்றின்
0884. Manamaanaa Utpagai Thondrin
-
குறள் #0884
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்உட்பகை (Utpagai)
Enmity Within
-
குறள்மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா
ஏதம் பலவும் தரும். -
விளக்கம்மனம் திருந்தாத உட்பகைவர் உண்டானால், சுற்றத்தார் கலவாமைக்குக் காரணமான குற்றங்கள் பலவற்றையும் அவர் செய்வர்.
-
Translation
in EnglishIf secret enmities arise that minds pervert,
Then even kin unkind will work thee grievous hurt. -
MeaningThe secret enmity of a person whose mind in unreformed will lead to many evils causing disaffection among (one’s) relations.
9
Nov.2014
0883. உட்பகை அஞ்சித்தற் காக்க
0883. Utpagai Anjiththar Kaakka
-
குறள் #0883
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்உட்பகை (Utpagai)
Enmity Within
-
குறள்உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து
மட்பகையின் மாணத் தெறும். -
விளக்கம்உட்பகை கொண்டிருப்பவருக்கு அஞ்சித் தன்னைக் காத்துக் கொள்ளுதல் வேண்டும். அவ்வாறு காத்துக் கொள்ளவில்லை யென்றால், அந்த உட்பகை மண்பாண்டத்தை அறுக்கும் கருவி போலத் தவறாமல் அழித்து விடும்.
-
Translation
in EnglishOf hidden hate beware, and guard thy life;
In troublous time ’twill deeper wound than potter’s knife. -
MeaningFear internal enmity and guard yourself; (if not) it will destroy (you) in an evil hour, as surely as the tool which cuts the potter’s clay.
9
Nov.2014
0882. வாள்போல பகைவரை அஞ்சற்க
0882. Vaalpola Pagaivarai Anjarka
-
குறள் #0882
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்உட்பகை (Utpagai)
Enmity Within
-
குறள்வாள்போல பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு. -
விளக்கம்வாள் போல வெளிப்படையாய்த் துன்பம் செய்யும் பகைவர்க்கு அஞ்ச வேண்டா; உறவினர் போன்று மறைந்து நிற்கும் பகைவர் நட்புக்கு அஞ்சுதல் வேண்டும்.
-
Translation
in EnglishDread not the foes that as drawn swords appear;
Friendship of foes, who seem like kinsmen, fear! -
MeaningFear not foes (who say they would cut) like a sword; (but) fear the friendship of foes (who seemingly act) like relations.
9
Nov.2014
0881. நிழல்நீரும் இன்னாத இன்னா
0881. Nizhalneerum Innaatha Innaa
-
குறள் #0881
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்உட்பகை (Utpagai)
Enmity Within
-
குறள்நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்
இன்னாவாம் இன்னா செயின். -
விளக்கம்இன்பந்தரும் நிழலும் நீரும் துன்பம் தருவனவாயின் தீயனவாகும்; அவை போன்றே சுற்றத்தாரின் இயல்புகளும் துன்பம் செய்யின் தீயவையாகும்.
-
Translation
in EnglishWater and shade, if they unwholesome prove, will bring you pain.
And qualities of friends who treacherous act, will be your bane. -
MeaningShade and water are not pleasant, (if) they cause disease; so are the qualities of (one’s) relations not agreeable, (if) they cause pain.