9
Nov.2014
0950. உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச்
0950. Utravan Theerppaan Marundhuzhaich
-
குறள் #0950
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்மருந்து (Marundhu)
Medicine
-
குறள்உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பால் நாற்கூற்றே மருந்து. -
விளக்கம்நோயாளி, நோயைத் தீர்க்கும் மருத்துவன், அவனுக்கு உதவியாகிய மருந்து, அம்மருந்தை அருகில் இருந்து தருபவன் என்று அந்த நான்கு பகுதியை உடையது மருத்துவ முறையாகும்.
-
Translation
in EnglishFor patient, leech, and remedies, and him who waits by patient’s side,
The art of medicine must fourfold code of laws provide. -
MeaningMedical science consists of four parts, viz., patient, physician, medicine and compounder; and each of these (again) contains four sub-divisions.
9
Nov.2014
0949. உற்றான் அளவும் பிணியளவும்
0949. Utraan Alavum Piniyalavum
-
குறள் #0949
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்மருந்து (Marundhu)
Medicine
-
குறள்உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல். -
விளக்கம்மருத்துவம் கற்றவன் நோயாளியின் நிலை, நோயின் அளவு, மருந்து கொடுக்கும் காலம் அறிந்து மருத்துவம் செய்யவேண்டும்.
-
Translation
in EnglishThe habitudes of patient and disease, the crises of the ill
These must the learned leech think over well, then use his skill. -
MeaningThe learned (physician) should ascertain the condition of his patient; the nature of his disease, and the season (of the year) and (then) proceed (with his treatment).
9
Nov.2014
0948. நோய்நாடி நோய்முதல் நாடி
0948. Noinaadi Noimuthal Naadi
-
குறள் #0948
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்மருந்து (Marundhu)
Medicine
-
குறள்நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல். -
விளக்கம்நோய் தணிக்கும் மருத்துவன் நோயை இன்னதென்று அறிந்து, நோயின் காரணத்தை ஆராய்ந்து, அதைத் தீர்க்கும் வழியையும் அறிந்து, பிழைபடாமல் செய்தல் வேண்டும்.
-
Translation
in EnglishDisease, its cause, what may abate the ill:
Let leech examine these, then use his skill. -
MeaningLet the physician enquire into the (nature of the) disease, its cause and its method of cure and treat it faithfully according to (medical rule).
9
Nov.2014
0947. தீயள வன்றித் தெரியான்
0947. Theeyala Vandrith Theriyaan
-
குறள் #0947
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்மருந்து (Marundhu)
Medicine
-
குறள்தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும். -
விளக்கம்ஒருவன் தன் வயிற்றுச் சூட்டின் அளவினை அறியாமல் அதிக உணவை உட்கொண்டால், நோய்கள் அளவில்லாமல் உண்டாகும்.
-
Translation
in EnglishWho largely feeds, nor measure of the fire within maintains,
That thoughtless man shall feel unmeasured pains. -
MeaningHe will be afflicted with numberless diseases, who eats immoderately, ignorant (of the rules of health).
9
Nov.2014
0946. இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல்
0946. Izhivarindhu Unbaankan Inbampol
-
குறள் #0946
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்மருந்து (Marundhu)
Medicine
-
குறள்இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய். -
விளக்கம்குறைவாக உண்பவனிடத்தில் இன்பம் நிலைத்து நிற்றல்போல, மிகுதியாக உண்பவனிடத்தில் நோய் நீங்காமல் நிற்கும்.
-
Translation
in EnglishOn modest temperance as pleasures pure,
So pain attends the greedy epicure. -
MeaningAs pleasure dwells with him who eats moderately, so disease (dwells) with the glutton who eats voraciously.
9
Nov.2014
0945. மாறுபாடு இல்லாத உண்டி
0945. Maarupaadu Illaatha Undi
-
குறள் #0945
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்மருந்து (Marundhu)
Medicine
-
குறள்மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு. -
விளக்கம்உடம்போடு மாறுபடுதல் இல்லாத உணவினை அளவோடு உண்பாராயின், அவரது உயிர்க்கு நோயினால் துன்பம் உண்டாகாது.
-
Translation
in EnglishWith self-denial take the well-selected meal;
So shall thy frame no sudden sickness feel. -
MeaningThere will be no disaster to one’s life if one eats with moderation, food that is not disagreeable.
9
Nov.2014
0944. அற்றது அறிந்து கடைப்பிடித்து
0944. Atrathu Arindhu Kadaippidiththu
-
குறள் #0944
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்மருந்து (Marundhu)
Medicine
-
குறள்அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து. -
விளக்கம்முன் உண்ணப்பட்ட உணவு செரித்ததனை அறிந்து, தன் உடம்போடு மாறுபடாத உணவுகளைத் தெளிவாக அறிந்து நன்றாகப் பசித்தபின் உண்ணுதல் வேண்டும்.
-
Translation
in EnglishKnowing the food digested well, when hunger prompteth thee,
With constant care, the viands choose that well agree. -
Meaning(First) assure yourself that your food has been digested and never fail to eat, when very hungry, whatever is not disagreeable (to you).
9
Nov.2014
0943. அற்றால் அறவறிந்து உண்க
0943. Atraal Aravarindhu Unga
-
குறள் #0943
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்மருந்து (Marundhu)
Medicine
-
குறள்அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு. -
விளக்கம்முன் உணவு செரித்ததை அறிந்து, பின் உணவை அது செரிக்கும் அளவு அறிந்து உண்ண வேண்டும். அவ்வாறு செய்தால், உடம்பை நெடுங்காலம் போற்றி வாழலாம்.
-
Translation
in EnglishWho has a body gained may long the gift retain,
If, food digested well, in measure due he eat again. -
MeaningIf (one’s food has been) digested let one eat with moderation; (for) that is the way to prolong the life of an embodied soul.
9
Nov.2014
0942. மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு
0942. Marundhena Vendaavaam Yaakkaikku
-
குறள் #0942
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்மருந்து (Marundhu)
Medicine
-
குறள்மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின். -
விளக்கம்ஒருவன் முன்வேளை உண்ணப்பட்டது சீரனித்த அளவை அறிந்து, பின் உண்பானாயின், அவனது உடம்புக்கு மருந்து என ஒன்று வேண்டியதில்லை.
-
Translation
in EnglishNo need of medicine to heal your body’s pain,
If, what you ate before digested well, you eat again. -
MeaningNo medicine is necessary for him who eats after assuring (himself) that what he has (already) eaten has been digested.
9
Nov.2014
0941. மிகினும் குறையினும் நோய்செய்யும்
0941. Miginum Kuraiyinum Noiseiyum
-
குறள் #0941
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்மருந்து (Marundhu)
Medicine
-
குறள்மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று. -
விளக்கம்மருத்துவ நூல் வல்லார் வாதம் முதலாக (வாதம், பித்தம், கபம்) வகுத்துச் சொல்லும் மூன்றும் உடம்புக்கு ஏற்ற அளவில் இல்லாமல் மிகுமானாலும் குறையுமானாலும் நோயை உண்டாக்கும்.
-
Translation
in EnglishThe learned books count three, with wind as first; of these,
As any one prevail, or fail; ’twill cause disease. -
MeaningIf (food and work are either) excessive or deficient, the three things enumerated by (medical) writers, flatulence, biliousness, and phlegm, will cause (one) disease.
9
Nov.2014
0940. இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல்
0940. Izhaththorooum Kaathalikkum Soothepol
-
குறள் #0940
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்சூது (Soothu)
Gaming (Gambling)
-
குறள்இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
உழத்தொறூஉம் காதற்று உயிர். -
விளக்கம்பொருளை இழக்குந்தோறும் மேன்மேலும் விருப்பந்தரும் சூதைப்போல், உயிர், உடம்பால் துன்பங்களை அனுபவிக்குந் தோறும் உடம்பின் மீது ஆசையை உடையதாகும்.
-
Translation
in EnglishHowe’er he lose, the gambler’s heart is ever in the play;
E’en so the soul, despite its griefs, would live on earth alway. -
MeaningAs the gambler loves (his vice) the more he loses by it, so does the soul love (the body) the more it suffers through it.
9
Nov.2014
0939. உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று
0939. Udaiselvam Oonoli Kalviendru
-
குறள் #0939
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்சூது (Soothu)
Gaming (Gambling)
-
குறள்உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்
அடையாவாம் ஆயங் கொளின். -
விளக்கம்ஒருவன் சூதினைக் கொண்டால் புகழ், கல்வி, பொருள், உணவு, உடை என்னும் ஐந்தும் அவனைச் சேராதனவாகும்.
-
Translation
in EnglishClothes, wealth, food, praise, and learning, all depart
From him on gambler’s gain who sets his heart. -
MeaningThe habit of gambling prevents the attainment of these five: clothing, wealth, food, fame and learning.
9
Nov.2014
0938. பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ
0938. Porulkeduththup Poimer Koliee
-
குறள் #0938
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்சூது (Soothu)
Gaming (Gambling)
-
குறள்பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து
அல்லல் உழப்பிக்கும் சூது. -
விளக்கம்சூதானது பொருளை அழித்து, பொய்யை மேற்கொள்ளச் செய்து, இறக்கக் குணத்தைக் கெடுத்துத் துன்பத்தை அடைவிக்கும்.
-
Translation
in EnglishGambling wastes wealth, to falsehood bends the soul: it drives away
All grace, and leaves the man to utter misery a prey. -
MeaningGambling destroys property, teaches falsehood, puts an end to benevolence, and brings in misery (here and hereafter).
9
Nov.2014
0937. பழகிய செல்வமும் பண்பும்
0937. Pazhagiya Selvamum Panbum
-
குறள் #0937
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்சூது (Soothu)
Gaming (Gambling)
-
குறள்பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின். -
விளக்கம்இளமையில் சூதாடும் இடத்தில் காலம் கழியுமானால், அது பழமையால் வந்த செல்வத்தையும் நற்குணங்களையும் கெடுக்கும்.
-
Translation
in EnglishAncestral wealth and noble fame to ruin haste,
If men in gambler’s halls their precious moments waste. -
MeaningTo waste time at the place of gambling will destroy inherited wealth and goodness of character.
9
Nov.2014
0936. அகடாரார் அல்லல் உழப்பர்சூ
0936. Agadaaraar Allal Uzhapparsoo
-
குறள் #0936
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்சூது (Soothu)
Gaming (Gambling)
-
குறள்அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும்
முகடியான் மூடப்பட் டார். -
விளக்கம்சூது என்று சொல்லப்படும் மூதேவியால் ஆட்கொள்ளப்பட்டவர், வயிறு நிறைய உண்ணப் பெற மாட்டார்; துன்பத்தை அனுபவிப்பர்.
-
Translation
in EnglishGambling’s Misfortune’s other name: o’er whom she casts her veil,
They suffer grievous want, and sorrows sore bewail. -
MeaningThose who are swallowed by the goddess called “gambling” will never have their hunger satisfied, but suffer the pangs of hell in the next world.
9
Nov.2014
0935. கவறும் கழகமும் கையும்
0935. Kavarum Kazhakamum Kaiyum
-
குறள் #0935
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்சூது (Soothu)
Gaming (Gambling)
-
குறள்கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார். -
விளக்கம்சூதாடும் காய்களையும் அது நடைபெறும் இடத்தையும், ஆடும் கைத்திறமையையும் மேற்கொண்டு அதனைக் கைவிடாதவர் திண்ணமாக வறியவராவார்.
-
Translation
in EnglishThe dice, and gaming-hall, and gamester’s art, they eager sought,
Thirsting for gain- the men in other days who came to nought. -
MeaningPenniless are those who by reason of their attachment would never forsake gambling, the gambling place and the handling (of dice).
9
Nov.2014
0934. சிறுமை பலசெய்து சீரழிக்கும்
0934. Sirumai Palaseithu Seerazhikkum
-
குறள் #0934
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்சூது (Soothu)
Gaming (Gambling)
-
குறள்சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்
வறுமை தருவதொன்று இல். -
விளக்கம்தன்னை விரும்பியவனுக்குத் துன்பங்கள் பலவற்றையும் உண்டாக்கிப் புகழையும் கெடுக்கும் சூதுபோல் வறுமையைக் கொடுப்பது வேறொன்றில்லை.
-
Translation
in EnglishGaming brings many woes, and ruins fair renown;
Nothing to want brings men so surely down. -
MeaningThere is nothing else that brings (us) poverty like gambling which causes many a misery and destroys (one’s) reputation.
9
Nov.2014
0933. உருளாயம் ஓவாது கூறின்
0933. Urulaayam Ovaathu Koorin
-
குறள் #0933
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்சூது (Soothu)
Gaming (Gambling)
-
குறள்உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம்
போஒய்ப் புறமே படும். -
விளக்கம்இலாபத்தை இடைவிடாது சொல்லிச் சூதடுவானாயின், அவனது பொருளும் வருவாயும் அவனை விட்டுச் சென்று, பகைவரிடம் தங்கும்.
-
Translation
in EnglishIf prince unceasing speak of nought but play,
Treasure and revenue will pass from him away. -
MeaningIf the king is incessantly addicted to the rolling dice in the hope of gain, his wealth and the resources thereof will take their departure and fall into other’s hands.
9
Nov.2014
0932. ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும்
0932. Ondreithi Noorizhakkum Sootharkkum
-
குறள் #0932
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்சூது (Soothu)
Gaming (Gambling)
-
குறள்ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு. -
விளக்கம்ஒன்றைப் பெற்று, நூற்றை இழக்கச் செய்யும் சூதாடுவோருக்கு, நன்மையைப் பெற்று வாழ்வதற்கு ஒரு வழி உண்டாகுமோ?
-
Translation
in EnglishIs there for gamblers, too, that gaining one a hundred lose, some way
That they may good obtain, and see a prosperous day? -
MeaningIs there indeed a means of livelihood that can bestow happiness on gamblers who gain one and lose a hundred ?
9
Nov.2014
0931. வேண்டற்க வென்றிடினும் சூதினை
0931. Vendarka Vendridinum Soothinai
-
குறள் #0931
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்சூது (Soothu)
Gaming (Gambling)
-
குறள்வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று. -
விளக்கம்ஒருவன் வெற்றி தருமாயினும் சூதை விரும்புதல் கூடாது. சூதில் வெற்றியாகக் கிடைத்த பொருளும், தூண்டிலிரும்பை இரையெனக் கருதி மீன் விழுங்குவது போலாகும்.
-
Translation
in EnglishSeek not the gamester’s play; though you should win,
Your gain is as the baited hook the fish takes in. -
MeaningThough able to win, let not one desire gambling; (for) even what is won is like a fish swallowing the iron in fish-hook.
9
Nov.2014
0930. கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக்
0930. Kallunnaap Pozhthir Kaliththaanaik
-
குறள் #0930
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்கள்ளுண்ணாமை (Kallunnaamai)
Not Drinking Palm-Wine
-
குறள்கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு. -
விளக்கம்ஒருவன் கள்ளுண்ணாத காலத்தில், கள் உண்டவனது சோர்வைக் காணும்போது, தனக்கும் இத்தகைய சோர்வுதானே உண்டாகும் என்று அவன் நினைக்க மாட்டானோ?
-
Translation
in EnglishWhen one, in sober interval, a drunken man espies,
Does he not think, ‘Such is my folly in my revelries’? -
MeaningWhen (a drunkard) who is sober sees one who is not, it looks as if he remembered not the evil effects of his (own) drink.
9
Nov.2014
0929. களித்தானைக் காரணம் காட்டுதல்
0929. Kaliththaanaik Kaaranam Kaattuthal
-
குறள் #0929
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்கள்ளுண்ணாமை (Kallunnaamai)
Not Drinking Palm-Wine
-
குறள்களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ அற்று. -
விளக்கம்கள் குடித்துக் களித்த ஒருவனைக் காரணம் காட்டித் தெளிவித்தல் நீருக்குள்ளே மூழ்கிய ஒருவனை விளக்கினால் தேடுதலை ஒக்கும்.
-
Translation
in EnglishLike him who, lamp in hand, would seek one sunk beneath the wave.
Is he who strives to sober drunken man with reasonings grave. -
MeaningReasoning with a drunkard is like going under water with a torch in search of a drowned man.
9
Nov.2014
0928. களித்தறியேன் என்பது கைவிடுக
0928. Kaliththariyen Enbathu Kaividuga
-
குறள் #0928
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்கள்ளுண்ணாமை (Kallunnaamai)
Not Drinking Palm-Wine
-
குறள்களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும். -
விளக்கம்மறைவில் கள்ளுண்டு ‘கள்ளுண்டறியேன்’ என்று சொல்வதைக் கைவிடுதல் வேண்டும். குடித்ததும் மனத்தில் ஒளித்து வைத்திருக்கும் குற்றம் வெளிப்பட்டு விடும்.
-
Translation
in EnglishNo more in secret drink, and then deny thy hidden fraud;
What in thy mind lies hid shall soon be known abroad. -
MeaningLet (the drunkard) give up saying “I have never drunk”; (for) the moment (he drinks) he will simply betray his former attempt to conceal.
9
Nov.2014
0927. உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர்
0927. Ullotri Ulloor Nagappaduvar
-
குறள் #0927
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்கள்ளுண்ணாமை (Kallunnaamai)
Not Drinking Palm-Wine
-
குறள்உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
கள்ளொற்றிக் கண்சாய் பவர். -
விளக்கம்கள்ளை மறைவாகக் குடித்து அறிவு மயங்குபவர் உள்ளூரில் உள்ளவரால் அறிந்து எந்நாளும் சிரிக்கப் படுவர்.
-
Translation
in EnglishWho turn aside to drink, and droop their heavy eye,
Shall be their townsmen’s jest, when they the fault espy. -
MeaningThose who always intoxicate themselves by a private (indulgence in) drink; will have their secrets detected and laughed at by their fellow-townsmen.
9
Nov.2014
0926. துஞ்சினார் செத்தாரின் வேறல்லர்
0926. Thunchinaar Seththaarin Verallar
-
குறள் #0926
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்கள்ளுண்ணாமை (Kallunnaamai)
Not Drinking Palm-Wine
-
குறள்துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர். -
விளக்கம்உறங்குகின்றவர் செத்தவரை விட வேறுபட்டவர் அல்லர். அங்ஙனமே கள்ளுண்பவர் அறிவு மயங்கியிருத்தலால் நஞ்சுண்பவரேயாவர்.
-
Translation
in EnglishSleepers are as the dead, no otherwise they seem;
Who drink intoxicating draughts, they poison quaff, we deem. -
MeaningThey that sleep resemble the deed; (likewise) they that drink are no other than poison-eaters.
9
Nov.2014
0925. கையறி யாமை உடைத்தே
0925. Kaiyari Yaamai Udaiththe
-
குறள் #0925
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்கள்ளுண்ணாமை (Kallunnaamai)
Not Drinking Palm-Wine
-
குறள்கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல். -
விளக்கம்ஒருவன் விலைப் பொருளைக் கொடுத்து, தன் உடலைத் தான் அறியாத நிலையை மேற்கொள்வது, செய்வது இன்னது என்று அறியாத அறியாமை உடையதாகும்.
-
Translation
in EnglishWith gift of goods who self-oblivion buys,
Is ignorant of all that man should prize. -
MeaningTo give money and purchase unconsciousness is the result of one’s ignorance of (one’s own actions).
9
Nov.2014
0924. நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும்
0924. Naanennum Nallaal Purankodukkum
-
குறள் #0924
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்கள்ளுண்ணாமை (Kallunnaamai)
Not Drinking Palm-Wine
-
குறள்நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு. -
விளக்கம்யாவரும் இகழும்படியான கட்குடி என்னும் குற்றமுடையவரை, நாண் என்னும் உயர்ந்தவள் பார்ப்பதற்கு அஞ்சி, அவருக்கு எதிரே நிற்க மாட்டாள்.
-
Translation
in EnglishShame, goodly maid, will turn her back for aye on them
Who sin the drunkard’s grievous sin, that all condemn. -
MeaningThe fair maid of modesty will turn her back on those who are guilty of the great and abominable crime of drunkenness.
9
Nov.2014
0923. ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால்
0923. Eendraal Mugaththeyum Innaathaal
-
குறள் #0923
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்கள்ளுண்ணாமை (Kallunnaamai)
Not Drinking Palm-Wine
-
குறள்ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி. -
விளக்கம்யாது செய்தாலும் மகிழும் தாய் முன்பானாலும் கள்ளுண்டு மயங்குதல் துன்பந்தருவதாகும்; குற்றம் எதையும் பொறுக்காத அறிவுடையோர் முன்பு மயங்குதல் மிக்க வெறுப்பைத் தரும்.
-
Translation
in EnglishThe drunkard’s joy is sorrow to his mother’s eyes;
What must it be in presence of the truly wise? -
MeaningIntoxication is painful even in the presence of (one’s) mother; what will it not then be in that of the wise ?
9
Nov.2014
0922. உண்ணற்க கள்ளை உணில்உண்க
0922. Unnarka Kallai Unilunga
-
குறள் #0922
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்கள்ளுண்ணாமை (Kallunnaamai)
Not Drinking Palm-Wine
-
குறள்உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்
எண்ணப் படவேண்டா தார். -
விளக்கம்கள்ளை உண்ணுதல் கூடாது; உண்ண வேண்டுமாயின் நல்லவரால் மதிக்கப்படுதலை விரும்பாதார் உண்ணுக.
-
Translation
in EnglishDrink not inebriating draught. Let him count well the cost.
Who drinks, by drinking, all good men’s esteem is lost. -
MeaningLet no liquor be drunk; if it is desired, let it be drunk by those who care not for esteem of the great.
9
Nov.2014
0921. உட்கப் படாஅர் ஒளியிழப்பர்
0921. Utkap Padaaar Oliyizhappar
-
குறள் #0921
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்கள்ளுண்ணாமை (Kallunnaamai)
Not Drinking Palm-Wine
-
குறள்உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு வார். -
விளக்கம்கள்ளின் மீது ஆசை கொண்டு நடப்பவர், எப்பொழுதும் அச்சப்பட மாட்டார். அதோடன்றி, முன் பெற்றுள்ள புகழையும் இழப்பார்.
-
Translation
in EnglishWho love the palm’s intoxicating juice, each day,
No rev’rence they command, their glory fades away. -
MeaningThose who always thirst after drink will neither inspire fear (in others) nor retain the light (of their fame).
9
Nov.2014
0920. இருமனப் பெண்டிரும் கள்ளும்
0920. Irumanap Pendirum Kallum
-
குறள் #0920
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்வரைவின் மகளிர் (Varaivin Magalir)
Wanton Women
-
குறள்இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு. -
விளக்கம்இருமனமுடைய விலைமாதரும், கள்ளும், சூதும் ஆகிய மூன்றும், திருமகளால் விலக்கப்பட்டவர்கள் தொடர்பு கொள்ளுதற்கு உரியவையாகும்.
-
Translation
in EnglishWomen of double minds, strong drink, and dice; to these giv’n o’er,
Are those on whom the light of Fortune shines no more. -
MeaningTreacherous women, liquor, and gambling are the associates of such as have forsaken by Fortune.
9
Nov.2014
0919. வரைவிலா மாணிழையார் மென்தோள்
0919. Varaivilaa Maanizhaiyaar Menkol
-
குறள் #0919
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்வரைவின் மகளிர் (Varaivin Magalir)
Wanton Women
-
குறள்வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்
பூரியர்கள் ஆழும் அளறு. -
விளக்கம்கட்டுப்பாடில்லாத, அழகிய அணிகள் அணிந்த பொது மகளிரின் மெல்லிய தோள்கள், அறிவில்லாத கீழ்மக்கள் அழுந்தும் நரகமாகும்.
-
Translation
in EnglishThe wanton’s tender arm, with gleaming jewels decked,
Is hell, where sink degraded souls of men abject. -
MeaningThe delicate shoulders of prostitutes with excellent jewels are a hell into which are plunged the ignorant base.
9
Nov.2014
0918. ஆயும் அறிவினர் அல்லார்க்கு
0918. Aayam Arivinar Allaarkku
-
குறள் #0918
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்வரைவின் மகளிர் (Varaivin Magalir)
Wanton Women
-
குறள்ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப
மாய மகளிர் முயக்கு. -
விளக்கம்வஞ்சகமகளிரது சேர்க்கை, ஆராய்ந்து அறிந்து விலகும் அறிவில்லாதவர்களுக்குப் பேய் பிடித்தது போலாகும் என்று கூறுவர்.
-
Translation
in EnglishAs demoness who lures to ruin woman’s treacherous love
To men devoid of wisdom’s searching power will prove. -
MeaningThe wise say that to such as are destitute of discerning sense the embraces of faithless women are (as ruinous as those of) the celestail female.
9
Nov.2014
0917. நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வார்
0917. Nirainenjam Illavar Thoivaar
-
குறள் #0917
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்வரைவின் மகளிர் (Varaivin Magalir)
Wanton Women
-
குறள்நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வார் பிறநெஞ்சிற்
பேணிப் புணர்பவர் தோள். -
விளக்கம்மனத்திலே பிறவற்றை விரும்பி, உடம்பினால் சேர்கின்ற மகளிரது தோள்களைச் செம்மையான மனம் இல்லாதவர்களே சேர்வர்.
-
Translation
in EnglishWho cherish alien thoughts while folding in their feigned embrace,
These none approach save those devoid of virtue’s grace. -
MeaningThose who are destitute of a perfectly (reformed) mind will covet the shoulders of those who embrace (them) while their hearts covet other things.
9
Nov.2014
0916. தந்நலம் பாரிப்பார் தோயார்
0916. Thannalam Paarippaar Thoyaar
-
குறள் #0916
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்வரைவின் மகளிர் (Varaivin Magalir)
Wanton Women
-
குறள்தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்
புன்னலம் பாரிப்பார் தோள். -
விளக்கம்ஆடல், பாடல், அழகு என்பவைகளால் களித்துத் தமது இழிவான இன்பத்தைப் பரப்புகின்ற மகளிரின் தோள்களை, தமது புகழைப் பரப்ப நினைப்பவர் சேரமாட்டார்.
-
Translation
in EnglishFrom touch of those who worthless charms, with wanton arts, display,
The men who would their own true good maintain will turn away. -
MeaningThose who would spread (the fame of) their own goodness will not desire the shoulders of those,who rejoice in their accomplishments and bestow their despicable favours (on all who pay).
9
Nov.2014
0915. பொதுநலத்தார் புன்னலம் தோயார்
0915. Pothunalaththaar Punnalam Thoyaar
-
குறள் #0915
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்வரைவின் மகளிர் (Varaivin Magalir)
Wanton Women
-
குறள்பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின்
மாண்ட அறிவி னவர். -
விளக்கம்அறிவின் சிறப்பினால் பெருமையடைந்த அறிவினையுடையவர், எல்லார் தம் பொதுவாக இன்பம் தருவாரது இழிந்த இன்பத்தைத் தீண்டமாட்டார்.
-
Translation
in EnglishFrom contact with their worthless charms, whose charms to all are free,
The men with sense of good and lofty wisdom blest will flee. -
MeaningThose whose knowledge is made excellent by their (natural) sense will not covet the trffling delights of those whose favours are common (to all).
9
Nov.2014
0914. பொருட்பொருளார் புன்னலந் தோயார்
0914. Porutporulaar Punnaland Thoyaar
-
குறள் #0914
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்வரைவின் மகளிர் (Varaivin Magalir)
Wanton Women
-
குறள்பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்
ஆயும் அறிவி னவர். -
விளக்கம்அருளாகிய பொருளை ஆராயும் அறிவினையுடையவர், செல்வப்பொருள் ஒன்றையே பொருளாக மதிக்கும் விலை மகளிரின் இழிந்த இன்பத்தில் படிய மாட்டார்.
-
Translation
in EnglishTheir worthless charms, whose only weal is wealth of gain,
From touch of these the wise, who seek the wealth of grace, abstain. -
MeaningThe wise who seek the wealth of grace will not desire the base favours of those who regard wealth (and not pleasure) as (their) riches.
9
Nov.2014
0913. பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம்
0913. Porutpendir Poimmai Muyakkam
-
குறள் #0913
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்வரைவின் மகளிர் (Varaivin Magalir)
Wanton Women
-
குறள்பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதல் பிணந்தழீஇ அற்று. -
விளக்கம்பொருளையே விரும்பும் விலைமகளின் பொய்யான தழுவுதல், பிணம் எடுப்பவர் பொருளுக்காக முன் அறியாத பிணத்தை இருட்டறையில் தழுவி எடுத்தது போலாகும்.
-
Translation
in EnglishAs one in darkened room, some stranger corpse inarms,
Is he who seeks delight in mercenary women’s charms! -
MeaningThe false embraces of wealth-loving women are like (hired men) embracing a strange corpse in a dark room.
9
Nov.2014
0912. பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின்
0912. Payanthookkip Panburaikkum Panbin
-
குறள் #0912
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்வரைவின் மகளிர் (Varaivin Magalir)
Wanton Women
-
குறள்பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்
நயன்தூக்கி நள்ளா விடல். -
விளக்கம்ஒருவனது பொருளை அளந்தறிந்து, அதனைப் பெற இனிய சொற்கள் பேசும் பண்பற்ற பெண்களின் தன்மைகளை ஆராய்ந்தறிந்து, அவர்களைச் சேராதிருக்க வேண்டும்.
-
Translation
in EnglishWho weigh the gain, and utter virtuous words with vicious heart,
Weighing such women’s worth, from their society depart. -
MeaningOne must ascertain the character of the ill-natured women who after ascertaining the wealth (of a man) speak (as if they were) good natured-ones, and avoid intercourse (with them).
9
Nov.2014
0911. அன்பின் விழையார் பொருள்விழையும்
0911. Anbin Vizhaiyaar Porulvizhaiyum
-
குறள் #0911
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்வரைவின் மகளிர் (Varaivin Magalir)
Wanton Women
-
குறள்அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
இன்சொல் இழுக்குத் தரும். -
விளக்கம்ஒருவனை அன்பினால் விரும்பாமல், பொருள் காரணமாக விரும்புகின்ற பெண்களின் இனிய சொற்கள் தீமையைக் கொடுக்கும்.
-
Translation
in EnglishThose that choice armlets wear who seek not thee with love,
But seek thy wealth, their pleasant words will ruin prove. -
MeaningThe sweet words of elegant braceleted (prostitutes) who desire (a man) not from affection but from avarice, will cause sorrow.
9
Nov.2014
0910. எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு
0910. Enserndha Nenjath Thidanudaiyaarkku
-
குறள் #0910
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்பெண்வழிச் சேரல் (Penvazhich Cheral)
Being Led by Women
-
குறள்எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும்
பெண்சேர்ந்தாம் பேதைமை இல். -
விளக்கம்ஆலோசனை செய்யும் மனமும், செல்வமும் உடையவர்க்கு, மனைவியின் விருப்பபடியே நடக்கும் அறியாமை எக்காலத்திலும் உண்டாதல் இல்லை.
-
Translation
in EnglishWhere pleasures of the mind, that dwell in realms of thought, abound,
Folly, that springs from overweening woman’s love, is never found. -
MeaningThe foolishness that results from devotion to a wife will never be found in those who possess a reflecting mind and a prosperity (flowing) therefrom.
9
Nov.2014
0909. அறவினையும் ஆன்ற பொருளும்
0909. Aravinaiyum Aandra Porulum
-
குறள் #0909
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்பெண்வழிச் சேரல் (Penvazhich Cheral)
Being Led by Women
-
குறள்அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
பெண்ஏவல் செய்வார்கண் இல். -
விளக்கம்அறச்செயலும், சிறந்த போருளீட்டலும், இவையிரண்டின் வேறாகிய இன்பச் செயல்களும், மனைவியின் ஏவல்களைச் செய்பவனிடத்தில் உண்டாகா.
-
Translation
in EnglishNo virtuous deed, no seemly wealth, no pleasure, rests
With them who live obedient to their wives’ behests. -
MeaningFrom those who obey the commands of their wives are to be expected neither deeds of virtue, nor those of wealth nor (even) those of pleasure.
9
Nov.2014
0908. நட்டார் குறைமுடியார் நன்றாற்றார்
0908. Nattaar Kuraimudiyaar Nandraatraar
-
குறள் #0908
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்பெண்வழிச் சேரல் (Penvazhich Cheral)
Being Led by Women
-
குறள்நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்
பெட்டாங்கு ஒழுகு பவர். -
விளக்கம்நல்ல நெற்றியையுடைய மனைவியின் விருப்பப்படி நடப்பவன், நண்பரது குறைகளையும் நீக்கமாட்டான்; நல்ல அறத்தையும் செய்ய மாட்டான்.
-
Translation
in EnglishWho to the will of her with beauteous brow their lives conform,
Aid not their friends in need, nor acts of charity perform. -
MeaningThose who yield to the wishes of their wives will neither relieve the wants of (their) friends nor perform virtuous deeds.
9
Nov.2014
0907. பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின்
0907. Penneval Seithozhugum Aanmaiyin
-
குறள் #0907
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்பெண்வழிச் சேரல் (Penvazhich Cheral)
Being Led by Women
-
குறள்பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
பெண்ணே பெருமை உடைத்து. -
விளக்கம்மனைவி ஏவியதைச் செய்து திரிகின்றவரின் ஆண்மையைவிட, நாணமுடைய பெண் தன்மையே மேன்மை உடையது.
-
Translation
in EnglishThe dignity of modest womanhood excels
His manliness, obedient to a woman’s law who dwells. -
MeaningEven shame faced womanhood is more to be esteemed than the shameless manhood that performs the behests of a wife.
9
Nov.2014
0906. இமையாரின் வாழினும் பாடிலரே
0906. Imaiyaarin Vaazhinum Paadinare
-
குறள் #0906
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்பெண்வழிச் சேரல் (Penvazhich Cheral)
Being Led by Women
-
குறள்இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்
அமையார்தோள் அஞ்சு பவர். -
விளக்கம்மனைவியின் மூங்கில் போன்ற தோள்மீது உள்ள மயக்கத்தால் அவளுக்கு அஞ்சுகின்றவன், தேவரைப் போல் வாழ்பவனாயினும் பெருமை கொள்ள மாட்டான்.
-
Translation
in EnglishThough, like the demi-gods, in bliss they dwell secure from harm,
Those have no dignity who fear the housewife’s slender arm. -
MeaningThey that fear the bamboo-like shoulders of their wives will be destitute of manliness though they may flourish like the Gods.
9
Nov.2014
0905. இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற்
0905. Illaalai Anjuvaan Anjumat
-
குறள் #0905
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்பெண்வழிச் சேரல் (Penvazhich Cheral)
Being Led by Women
-
குறள்இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல். -
விளக்கம்மனைவிக்கு அஞ்சுகின்றவன் நல்லவர்க்கு நல்ல செயல்களைச் செய்ய எப்பொழுதும் அச்ச்சப்படுவான்.
-
Translation
in EnglishWho quakes before his wife will ever tremble too,
Good deeds to men of good deserts to do. -
MeaningHe that fears his wife will always be afraid of doing good deeds (even) to the good.
9
Nov.2014
0904. மனையாளை அஞ்சும் மறுமையி
0904. Manaiyaalai Anjum Marumaiyi
-
குறள் #0904
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்பெண்வழிச் சேரல் (Penvazhich Cheral)
Being Led by Women
-
குறள்மனையாளை அஞ்சும் மறுமையி லாளன்
வினையாண்மை வீறெய்த லின்று. -
விளக்கம்மனைவியை அஞ்சி ஒழுகும் மறுமைப்பயன் இல்லாதவனுடைய முயற்சித் திறமையை அறிவுடையோர் பாராட்டுவதில்லை.
-
Translation
in EnglishNo glory crowns e’en manly actions wrought
By him who dreads his wife, nor gives the other world a thought. -
MeaningThe undertaking of one, who fears his wife and is therefore destitute of (bliss), will never be applauded.
9
Nov.2014
0903. இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை
0903. Illaalkan Thaazhndha Iyalbinmai
-
குறள் #0903
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்பெண்வழிச் சேரல் (Penvazhich Cheral)
Being Led by Women
-
குறள்இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்
நல்லாருள் நாணுத் தரும். -
விளக்கம்ஒருவன் மனைவியிடத்து வணங்கி நடத்தற்க்குக் காரணமான அச்சமானது, நல்லவர் நடுவே செல்லுவதற்கு நாணத்தைக் கொடுக்கும்.
-
Translation
in EnglishWho to his wife submits, his strange, unmanly mood
Will daily bring him shame among the good. -
MeaningThe frailty that stoops to a wife will always make (her husband) feel ashamed among the good.
9
Nov.2014
0902. பேணாது பெண்விழைவான் ஆக்கம்
0902. Manaivizhaivaar Maanpayan Yeithaar
-
குறள் #0902
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்பெண்வழிச் சேரல் (Penvazhich Cheral)
Being Led by Women
-
குறள்பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்
நாணாக நாணுத் தரும். -
விளக்கம்தன் ஆண்மையைப் பாதுகாவாது பெண்மீது ஆசை வைப்பவனது செல்வம், எல்லார்க்கும் பெரிய வெட்கம் உண்டாக, பின் அவனையே நாணும்படி செய்யும்.
-
Translation
in EnglishWho gives himself to love of wife, careless of noble name
His wealth will clothe him with o’erwhelming shame. -
MeaningThe wealth of him who, regardless (of his manliness), devotes himself to his wife’s feminine nature will cause great shame (to ali men) and to himself;
9
Nov.2014
0901. மனைவிழைவார் மாண்பயன் எய்தார்
0901. Manaivizhaivaar Maanpayan Yeithaar
-
குறள் #0901
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்பெண்வழிச் சேரல் (Penvazhich Cheral)
Being Led by Women
-
குறள்மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார்
வேண்டாப் பொருளும் அது. -
விளக்கம்தன் மனைவியை விரும்பி, அவள் சொற்படி நடப்பவன் சிறந்த அறப்பயனை அடையமாட்டான். முயற்சி செய்பவர், அதற்குத் தடை என்று விரும்பாத பொருளும் அதுவே.
-
Translation
in EnglishWho give their soul to love of wife acquire not nobler gain;
Who give their soul to strenuous deeds such meaner joys disdain. -
MeaningThose who lust after their wives will not attain the excellence of virtue; and it is just this that is not desired by those who are bent on acquiring wealth.
9
Nov.2014
0900. இறந்தமைந்த சார்புடையர் ஆயினும்
0900. Irandhamaindha Saarbudaiyar Aayinum
-
குறள் #0900
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்பெரியாரைப் பிழையாமை (Periyaaraip Pilaiyaamai)
Not Offending the Great
-
குறள்இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்
சிறந்தமைந்த சீரார் செறின். -
விளக்கம்மிகச்சிறந்த தவமுடைய பெரியோர் சினந்தால் மிகப்பெரிய துணியை உடையவரும் பிழைக்க மாட்டார்.
-
Translation
in EnglishThough all-surpassing wealth of aid the boast,
If men in glorious virtue great are wrath, they’re lost. -
MeaningThough in possession of numerous auxiliaries, they will perish who are-exposed to the wrath of the noble whose penance is boundless.
9
Nov.2014
0899. ஏந்திய கொள்கையார் சீறின்
0899. Yendhiya Kolgaiyaar Seerin
-
குறள் #0899
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்பெரியாரைப் பிழையாமை (Periyaaraip Pilaiyaamai)
Not Offending the Great
-
குறள்ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும். -
விளக்கம்உயர்ந்த கொள்கையுடையோர் சினந்தால், அரசனும் தனது இடைக்காலத்திலேயே அரசநிலை கெட்டு அழிந்துவிடுவான்.
-
Translation
in EnglishWhen blazes forth the wrath of men of lofty fame,
Kings even fall from high estate and perish in the flame. -
MeaningIf those of exalted vows burst in a rage, even (Indra) the king will suffer a sudden loss and be entirely ruined.
9
Nov.2014
0898. குன்றன்னார் குன்ற மதிப்பின்
0898. Kundrannaar Kundra Mathippin
-
குறள் #0898
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்பெரியாரைப் பிழையாமை (Periyaaraip Pilaiyaamai)
Not Offending the Great
-
குறள்குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு
நின்றன்னார் மாய்வர் நிலத்து. -
விளக்கம்மலைபோன்ற பெருமையுடையவர், ஒருவனை அழிந்துபோக வேண்டும் என்று எண்ணினால், அவன் இவ்வுலகில் நிலை பெற்ற செல்வமுடையவனாயினும் தன் குடும்பத்தோடு அழிந்து விடுவான்.
-
Translation
in EnglishIf they, whose virtues like a mountain rise, are light esteemed;
They die from earth who, with their households, ever-during seemed. -
MeaningIf (the) hill-like (devotees) resolve on destruction, those who seemed to be everlasting will be destroyed root and branch from the earth.
9
Nov.2014
0897. வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும்
0897. Vagaimaanda Vaazhkkaiyum Vaanporulum
-
குறள் #0897
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்பெரியாரைப் பிழையாமை (Periyaaraip Pilaiyaamai)
Not Offending the Great
-
குறள்வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்
தகைமாண்ட தக்கார் செறின். -
விளக்கம்தவப்பெருமை மிக்க பெரியோர் கோபித்தால், எல்லா வகையாலும் மாட்சிமைப்பட்ட வாழ்க்கையும், மிக்க பொருளும் என்ன பயனுடையனவாகும்?
-
Translation
in EnglishThough every royal gift, and stores of wealth your life should crown,
What are they, if the worthy men of mighty virtue frown? -
MeaningIf a king incurs the wrath of the righteous great, what will become of his government with its splendid auxiliaries and (all) its untold wealth ?
9
Nov.2014
0896. எரியால் சுடப்படினும் உய்வுண்டாம்
0896. Eriyaal Sudappadinum Uyvundaam
-
குறள் #0896
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்பெரியாரைப் பிழையாமை (Periyaaraip Pilaiyaamai)
Not Offending the Great
-
குறள்எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார். -
விளக்கம்ஒருவன் தீயினால் சுடப்பட்டானாயினும் ஒருவாறு பிழைப்பான்; ஆனால், தவத்தால் பெரியவர்க்குப் பிழை செய்பவர் பிழைக்க மாட்டார்.
-
Translation
in EnglishThough in the conflagration caught, he may escape from thence:
He ‘scapes not who in life to great ones gives offence. -
MeaningThough burnt by a fire (from a forest), one may perhaps live; (but) never will he live who has shown disrespect to the great (devotees).
9
Nov.2014
0895. யாண்டுச்சென்று யாண்டும் உளராகார்
0895. Yaanduchchendru Yaandum Ularaagaar
-
குறள் #0895
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்பெரியாரைப் பிழையாமை (Periyaaraip Pilaiyaamai)
Not Offending the Great
-
குறள்யாண்டுச்சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின்
வேந்து செறப்பட் டவர். -
விளக்கம்கொடிய வலிய அரசனின் பகைக்கு உள்ளானவர், எங்கே சென்றாலும் எவ்விடத்தும் பிழைத்திருக்க முடியாது.
-
Translation
in EnglishWho dare the fiery wrath of monarchs dread,
Where’er they flee, are numbered with the dead. -
MeaningThose who have incurred the wrath of a cruel and mighty potentate will not prosper wherever they may go.
9
Nov.2014
0894. கூற்றத்தைக் கையால் விளித்தற்றால்
0894. Kootraththaik Kaiyaal Viliththatraal
-
குறள் #0894
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்பெரியாரைப் பிழையாமை (Periyaaraip Pilaiyaamai)
Not Offending the Great
-
குறள்கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல். -
விளக்கம்வலிமையுடையவருக்கு வலிமையில்லாதவர் தீங்கு செய்தல், தானே வரும் கூற்றுவனை அவன் வருவதற்கு முன்னே கைகாட்டி அழைப்பது போன்றதாகும்.
-
Translation
in EnglishWhen powerless man ‘gainst men of power will evil deeds essay,
Tis beck’ning with the hand for Death to seize them for its prey. -
MeaningThe weak doing evil to the strong is like beckoning Yama to come (and destroy them).
9
Nov.2014
0893. கெடல்வேண்டின் கேளாது செய்க
0893. Kedalvendin Kelaathu Seiga
-
குறள் #0893
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்பெரியாரைப் பிழையாமை (Periyaaraip Pilaiyaamai)
Not Offending the Great
-
குறள்கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்
ஆற்று பவர்கண் இழுக்கு. -
விளக்கம்ஒருவன், தான் கெட்டுப்போக விரும்பினால் பெரியாரைக் கேளாமலே ஒரு செயலைச் செய்க. தன்னைக் கொன்றுகொள்ள விரும்பினால் வலிமையுடையவருக்குக் குற்றம் செய்ய வேண்டும்.
-
Translation
in EnglishWho ruin covet let them shut their ears, and do despite
To those who, where they list to ruin have the might. -
MeaningIf a person desires ruin, let him not listen to the righteous dictates of law, but commit crimes against those who are able to slay (other sovereigns).
9
Nov.2014
0892. பெரியாரைப் பேணாது ஒழுகிற்
0892. Periyaaraip Penaathu Ozhugir
-
குறள் #0892
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்பெரியாரைப் பிழையாமை (Periyaaraip Pilaiyaamai)
Not Offending the Great
-
குறள்பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்
பேரா இடும்பை தரும். -
விளக்கம்ஆற்றல் மிக்க பெரியாரை மதியாமல் நடந்தால், அப்பெரியவரால் நீங்காத துன்பம் உண்டாகும்.
-
Translation
in EnglishIf men will lead their lives reckless of great men’s will,
Such life, through great men’s powers, will bring perpetual ill. -
MeaningTo behave without respect for the great (rulers) will make them do (us) irremediable evils.
9
Nov.2014
0891. ஆற்றுவார் ஆற்றல் இகழாமை
0891. Aatruvaar Aatral Igazhaamai
-
குறள் #0891
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்பெரியாரைப் பிழையாமை (Periyaaraip Pilaiyaamai)
Not Offending the Great
-
குறள்ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை. -
விளக்கம்எடுத்த செயலை முடிக்கும் வல்லமையுடையவரின் வல்லமையை இகழாதிருத்தல், தம்மைக் காப்பவர் செய்துகொள்ளும் காவல்களுக்கெல்லாம் மேலானது.
-
Translation
in EnglishThe chiefest care of those who guard themselves from ill,
Is not to slight the powers of those who work their mighty will. -
MeaningNot to disregard the power of those who can carry out (their wishes) is more important than all the watchfulness of those who guard (themselves against evil).
9
Nov.2014
0890. உடம்பாடு இலாதவர் வாழ்க்கை
0890. Udambaadu Ilaathavar Vaazhkkai
-
குறள் #0890
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்உட்பகை (Utpagai)
Enmity Within
-
குறள்உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடனுறைந் தற்று. -
விளக்கம்மனப்பொருத்தம் இல்லாதவரோடு ஒருவன் கூடி வாழ்வது, ஒரு குடிசையுள் ஒருவன் பாம்போடு வாழ்வது போலாகும்.
-
Translation
in EnglishDomestic life with those who don’t agree,
Is dwelling in a shed with snake for company. -
MeaningLiving with those who do not agree (with one) is like dwelling with a cobra (in the same) hut.
9
Nov.2014
0889. எட்பக வன்ன சிறுமைத்தே
0889. Etpaga Vanna Sirumaiththe
-
குறள் #0889
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்உட்பகை (Utpagai)
Enmity Within
-
குறள்எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்
உட்பகை உள்ளதாங் கேடு. -
விளக்கம்எள்ளின் பிளவைப் போன்ற சிறுமை உடையதாயினும், உட்பகை கேடு உள்ளதாகும்.
-
Translation
in EnglishThough slight as shred of ‘seasame’ seed it be,
Destruction lurks in hidden enmity. -
MeaningAlthough internal hatred be as small as the fragment of the sesamum (seed), still does destruction dwell in it.
9
Nov.2014
0888. அரம்பொருத பொன்போலத் தேயும்
0888. Aramporutha Ponpolath Theyum
-
குறள் #0888
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்உட்பகை (Utpagai)
Enmity Within
-
குறள்அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது
உட்பகை உற்ற குடி. -
விளக்கம்அரம் இரும்பினைத் தேய்த்துக் குறைப்பதுபோல, உட்பகை கொண்ட குடியும் அப்பகையால் தேய்வுண்டு வலிமை குறையும்.
-
Translation
in EnglishAs gold with which the file contends is worn away,
So strength of house declines where hate concealed hath sway. -
MeaningA family subject to internal hatred will wear out and lose its strength like iron that has been filed away.
9
Nov.2014
0887. செப்பின் புணர்ச்சிபோல் கூடினும்
0887. Seppin Punarchchipol Koodinum
-
குறள் #0887
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்உட்பகை (Utpagai)
Enmity Within
-
குறள்செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே
உட்பகை உற்ற குடி. -
விளக்கம்செப்பும் அதன் மூடியும் காண்பதற்கு ஒன்றுபட்டிருப்பது போல் தோன்றினும் வேறுபட்டிருப்பது போல் உட்பகை கொண்டவர்களும் உள்ளத்தால் கூடியிருக்க மாட்டார்; பிரிந்தே இருப்பார்.
-
Translation
in EnglishAs casket with its cover, though in one they live alway,
No union to the house where hate concealed hath sway. -
MeaningNever indeed will a family subject to internal hatred unite (really) though it may present an apparent union like that of a casket and its lid.
9
Nov.2014
0886. ஒன்றாமை ஒன்றியார் கட்படின்
0886. Ondraamai Ondriyaar Katpadin
-
குறள் #0886
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்உட்பகை (Utpagai)
Enmity Within
-
குறள்ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்
பொன்றாமை ஒன்றல் அரிது. -
விளக்கம்அரசனைச் சேர்ந்திருப்பவரிடத்தில் உட்பகை தோன்றினால், இறவாது நிலைபெறுதல் எப்பொழுதும் அரிதாகும்.
-
Translation
in EnglishIf discord finds a place midst those who dwelt at one before,
‘Tis ever hard to keep destruction from the door. -
MeaningIf hatred arises among (one’s) own people, it will be hardly possible (for one) to escape death.
9
Nov.2014
0885. உறல்முறையான் உட்பகை தோன்றின்
0885. Uralmuraiyaan Utpagai Thondrin
-
குறள் #0885
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்உட்பகை (Utpagai)
Enmity Within
-
குறள்உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்
ஏதம் பலவும் தரும். -
விளக்கம்அரசனுக்கு உறவின் முறையுடன் உட்பகை உண்டானால், அஃது இறந்துபோகுந் தன்மையுடைய குற்றம் பலவற்றையும் கொடுக்கும்.
-
Translation
in EnglishAmid one’s relatives if hidden hath arise,
‘Twill hurt inflict in deadly wise. -
MeaningIf there appears internal hatred in a (king’s) family; it will lead to many a fatal crime.
9
Nov.2014
0884. மனமாணா உட்பகை தோன்றின்
0884. Manamaanaa Utpagai Thondrin
-
குறள் #0884
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்உட்பகை (Utpagai)
Enmity Within
-
குறள்மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா
ஏதம் பலவும் தரும். -
விளக்கம்மனம் திருந்தாத உட்பகைவர் உண்டானால், சுற்றத்தார் கலவாமைக்குக் காரணமான குற்றங்கள் பலவற்றையும் அவர் செய்வர்.
-
Translation
in EnglishIf secret enmities arise that minds pervert,
Then even kin unkind will work thee grievous hurt. -
MeaningThe secret enmity of a person whose mind in unreformed will lead to many evils causing disaffection among (one’s) relations.
9
Nov.2014
0883. உட்பகை அஞ்சித்தற் காக்க
0883. Utpagai Anjiththar Kaakka
-
குறள் #0883
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்உட்பகை (Utpagai)
Enmity Within
-
குறள்உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து
மட்பகையின் மாணத் தெறும். -
விளக்கம்உட்பகை கொண்டிருப்பவருக்கு அஞ்சித் தன்னைக் காத்துக் கொள்ளுதல் வேண்டும். அவ்வாறு காத்துக் கொள்ளவில்லை யென்றால், அந்த உட்பகை மண்பாண்டத்தை அறுக்கும் கருவி போலத் தவறாமல் அழித்து விடும்.
-
Translation
in EnglishOf hidden hate beware, and guard thy life;
In troublous time ’twill deeper wound than potter’s knife. -
MeaningFear internal enmity and guard yourself; (if not) it will destroy (you) in an evil hour, as surely as the tool which cuts the potter’s clay.
9
Nov.2014
0882. வாள்போல பகைவரை அஞ்சற்க
0882. Vaalpola Pagaivarai Anjarka
-
குறள் #0882
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்உட்பகை (Utpagai)
Enmity Within
-
குறள்வாள்போல பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு. -
விளக்கம்வாள் போல வெளிப்படையாய்த் துன்பம் செய்யும் பகைவர்க்கு அஞ்ச வேண்டா; உறவினர் போன்று மறைந்து நிற்கும் பகைவர் நட்புக்கு அஞ்சுதல் வேண்டும்.
-
Translation
in EnglishDread not the foes that as drawn swords appear;
Friendship of foes, who seem like kinsmen, fear! -
MeaningFear not foes (who say they would cut) like a sword; (but) fear the friendship of foes (who seemingly act) like relations.
9
Nov.2014
0881. நிழல்நீரும் இன்னாத இன்னா
0881. Nizhalneerum Innaatha Innaa
-
குறள் #0881
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்உட்பகை (Utpagai)
Enmity Within
-
குறள்நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்
இன்னாவாம் இன்னா செயின். -
விளக்கம்இன்பந்தரும் நிழலும் நீரும் துன்பம் தருவனவாயின் தீயனவாகும்; அவை போன்றே சுற்றத்தாரின் இயல்புகளும் துன்பம் செய்யின் தீயவையாகும்.
-
Translation
in EnglishWater and shade, if they unwholesome prove, will bring you pain.
And qualities of friends who treacherous act, will be your bane. -
MeaningShade and water are not pleasant, (if) they cause disease; so are the qualities of (one’s) relations not agreeable, (if) they cause pain.
9
Nov.2014
0880. உயிர்ப்ப உளரல்லர் மன்ற
0880. Uyirppa Ularallar Mandra
-
குறள் #0880
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்பகைத்திறம் தெரிதல் (Pagaiththiram Therithal)
Knowing the Quality of Hate
-
குறள்உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலா தார். -
விளக்கம்பகைவரின் செருக்கை அழிக்கமுடியாத அரசர் மூச்சுவிடுகின்ற அளவிற்கும் உயிரோடிருப்பவராகார்; இது உறுதி.
-
Translation
in EnglishBut breathe upon them, and they surely die,
Who fail to tame the pride of angry enemy. -
MeaningThose who do not destroy the pride of those who hate (them) will certainly not exist even to breathe.
9
Nov.2014
0879. இளைதாக முள்மரம் கொல்க
0879. Ilayathaaga Mulmaram Kolga
-
குறள் #0879
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்பகைத்திறம் தெரிதல் (Pagaiththiram Therithal)
Knowing the Quality of Hate
-
குறள்இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து. -
விளக்கம்முள் மரத்தை அது சிறியதாய் இருக்கும்போதே களைந்து விடுதல் வேண்டும்; வளர்ந்து வைரம் அடைந்தால் அது வேட்டுவோரின் கையை வருத்தும்.
-
Translation
in EnglishDestroy the thorn, while tender point can work thee no offence;
Matured by time, ’twill pierce the hand that plucks it thence. -
MeaningA thorny tree should be felled while young, (for) when it is grown it will destroy the hand of the feller.
9
Nov.2014
0878. வகையறிந்து தற்செய்து தற்காப்ப
0878. Vagaiyarindhu Tharcheithu Tharkaappa
-
குறள் #0878
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்பகைத்திறம் தெரிதல் (Pagaiththiram Therithal)
Knowing the Quality of Hate
-
குறள்வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
பகைவர்கண் பட்ட செருக்கு. -
விளக்கம்ஒருவன் வெல்லும் வகையை அறிந்து பொருளைப் பெருக்கித் தன்னைக் காத்துக் கொள்வானாயின், பகைவரிடத்தில் உண்டான மகிழ்ச்சி ஒழியும்.
-
Translation
in EnglishKnow thou the way, then do thy part, thyself defend;
Thus shall the pride of those that hate thee have an end. -
MeaningThe joy of one’s foes will be destroyed if one guards oneself by knowing the way (of acting) and securing assistance.
9
Nov.2014
0877. நோவற்க நொந்தது அறியார்க்கு
0877. Novarka Nonthathu Ariyaarkku
-
குறள் #0877
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்பகைத்திறம் தெரிதல் (Pagaiththiram Therithal)
Knowing the Quality of Hate
-
குறள்நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க
மென்மை பகைவர் அகத்து. -
விளக்கம்தன்னுடைய வருத்தத்தை அறியாத ஒருவரிடம் தன் வருத்தத்தைச் சொல்லாதிருத்தல் வேண்டும்; அவ்வாறே தன் வலிமையின் குறைவைப் பகைவரிடம் காட்டாதிருத்தல் வேண்டும்.
-
Translation
in EnglishTo those who know them not, complain not of your woes;
Nor to your foeman’s eyes infirmities disclose. -
MeaningRelate not your suffering even to friends who are ignorant of it, nor refer to your weakness in the presence of your foes.
9
Nov.2014
0876. தேறனும் தேறா விடினும்
0876. Theranum Theraa Vidinum
-
குறள் #0876
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்பகைத்திறம் தெரிதல் (Pagaiththiram Therithal)
Knowing the Quality of Hate
-
குறள்தேறனும் தேறா விடினும் அழிவின்கண்
தேறான் பகாஅன் விடல். -
விளக்கம்முன்னம் ஒருவரைப் பற்றி ஆராய்ந்து தெளிந்திருந்தாலும் தெளியாதிருந்தாலும் தாழ்வு வந்தபோது அவனைக் கூடாமலும் நீக்காமலும் விட வேண்டும்.
-
Translation
in EnglishWhether you trust or not, in time of sore distress,
Questions of diff’rence or agreement cease to press. -
MeaningThough (one’s foe is) aware or not of one’s misfortune one should act so as neither to join nor separate (from him).
9
Nov.2014
0875. தன்துணை இன்றால் பகையிரண்டால்
0875. Thanthunai Indraal Pagaiyirandaal
-
குறள் #0875
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்பகைத்திறம் தெரிதல் (Pagaiththiram Therithal)
Knowing the Quality of Hate
-
குறள்தன்துணை இன்றால் பகையிரண்டால் தான்ஒருவன்
இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று. -
விளக்கம்தனக்குத் துணையோ இல்லை; பகையோ இரண்டு; அங்ஙனமாயின், ஒருவன் அப்பகைவர் இருவருள் ஒருவனைத் தனக்கு இனிய துணையாக்கிக் கொள்ளுதல் வேண்டும்.
-
Translation
in EnglishWithout ally, who fights with twofold enemy o’ermatched,
Must render one of these a friend attached. -
MeaningHe who is alone and helpless while his foes are two should secure one of them as an agreeable help (to himself).
9
Nov.2014
0874. பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை
0874. Pagainatpaak Kondozhugum Panbudai
-
குறள் #0874
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்பகைத்திறம் தெரிதல் (Pagaiththiram Therithal)
Knowing the Quality of Hate
-
குறள்பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
தகைமைக்கண் தங்கிற்று உலகு. -
விளக்கம்பகைவரையும் நண்பராக்கிக் கொண்டு நடக்கத்தக்க நல்லவனின் பெருமையுள் உலகம் அடங்கியிருக்கின்றது.
-
Translation
in EnglishThe world secure on his dexterity depends,
Whose worthy rule can change his foes to friends. -
MeaningThe world abides in the greatness of that good-natured man who behaves so as to turn hatred into friendship.
9
Nov.2014
0873. ஏமுற் றவரினும் ஏழை
0873. Aemut Ravarinum Yezhai
-
குறள் #0873
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்பகைத்திறம் தெரிதல் (Pagaiththiram Therithal)
Knowing the Quality of Hate
-
குறள்ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள் பவன். -
விளக்கம்தனியாக இருந்துகொண்டு, பலரோடு பகை கொள்பவன் பித்தங் கொண்டவரைவிட அறிவில்லாதவனாவன்.
-
Translation
in EnglishThan men of mind diseased, a wretch more utterly forlorn,
Is he who stands alone, object of many foeman’s scorn. -
MeaningHe who being alone, incurs the hatred of many is more infatuated than even mad men.
9
Nov.2014
0872. வில்லேர் உழவர் பகைகொளினும்
0872. Viller Uzhavar Pagaikolinum
-
குறள் #0872
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்பகைத்திறம் தெரிதல் (Pagaiththiram Therithal)
Knowing the Quality of Hate
-
குறள்வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லேர் உழவர் பகை. -
விளக்கம்வில்லை எராகவுடைய வீரரின் பகையைக் கொண்டாலும் சொல்லை எராக உடைய அறிஞரின் பகையைக் கொள்ளக் கூடாது.
-
Translation
in EnglishAlthough you hate incur of those whose ploughs are bows,
Make not the men whose ploughs are words your foes! -
MeaningThough you may incur the hatred of warriors whose ploughs are bows, incur not that of ministers whose ploughs are words.
9
Nov.2014
0871. பகைஎன்னும் பண்பி லதனை
0871. Pagaiennum Panbi Lathanai
-
குறள் #0871
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்பகைத்திறம் தெரிதல் (Pagaiththiram Therithal)
Knowing the Quality of Hate
-
குறள்பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன்
நகையேயும் வேண்டற்பாற்று அன்று. -
விளக்கம்பகை என்று சொல்லப்படுகின்ற பண்பற்ற தீமையை ஒருவன் நகைத்துப் பொழுதுபோக்கும் விளையாட்டாகவும் விரும்பக் கூடாது.
-
Translation
in EnglishFor Hate, that ill-conditioned thing not e’en in jest.
Let any evil longing rule your breast. -
MeaningThe evil of hatred is not of a nature to be desired by one even in sport.
9
Nov.2014
0870. கல்லான் வெகுளும் சிறுபொருள்
0870. Kallaan Vegulum Siruporul
-
குறள் #0870
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்பகைமாட்சி (Pagaimaatchi)
The Might of Hatred
-
குறள்கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்
ஒல்லானை ஒல்லா தொளி. -
விளக்கம்அறிவில்லாதவனை எதிர்த்துப் போர் செய்யும் சிறு முயிற்சியால் பொருளைப் பெறாதவனை, எக்காலத்தும் புகழ் அடையாது.
-
Translation
in EnglishThe task of angry war with men unlearned in virtue’s lore
Who will not meet, glory shall meet him never more. -
MeaningThe light (of fame) will never be gained by him who gains not the trifling reputation of having fought an unlearned (foe).
9
Nov.2014
0869. செறுவார்க்குச் சேணிகவா இன்பம்
0869. Seruvaarkkuch Chenikavaa Inbam
-
குறள் #0869
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்பகைமாட்சி (Pagaimaatchi)
The Might of Hatred
-
குறள்செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா
அஞ்சும் பகைவர்ப் பெறின். -
விளக்கம்நீதி அறியாது அஞ்சும் பகைவரைப் பெற்றால் அவரை எதிர்த்துப் பகைகொள்ளுவோர்க்கு உயர்ந்த இன்பங்கள் நீங்காது நிற்கும்.
-
Translation
in EnglishThe joy of victory is never far removed from those
Who’ve luck to meet with ignorant and timid foes. -
MeaningThere will be no end of lofty delights to the victorious, if their foes are (both) ignorant and timid.
9
Nov.2014
0868. குணனிலனாய்க் குற்றம் பலவாயின்
0868. Kunanilanaaik Kutram Palavaayin
-
குறள் #0868
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்பகைமாட்சி (Pagaimaatchi)
The Might of Hatred
-
குறள்குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு
இனனிலனாம் ஏமாப் புடைத்து. -
விளக்கம்நற்குணமில்லாது பல குற்றங்களை உடையவனானால், அவனுக்கு யாரும் துணையாகமாட்டார்; அதுவே பகைவர்க்கு நன்மையாகும்.
-
Translation
in EnglishNo gracious gifts he owns, faults many cloud his fame;
His foes rejoice, for none with kindred claim. -
MeaningHe will become friendless who is without (any good) qualities. and whose faults are many; (such a character) is a help to (his) foes.
9
Nov.2014
0867. கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற
0867. Koduththum Kolalvendum Mandra
-
குறள் #0867
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்பகைமாட்சி (Pagaimaatchi)
The Might of Hatred
-
குறள்கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து
மாணாத செய்வான் பகை. -
விளக்கம்ஒரு தொழிலைத் தொடங்கி, அதற்குப் பொருந்தாதவற்றைச் செய்வானது பகையைப் பொருள் கொடுத்தேனும் கொள்ள வேண்டும்.
-
Translation
in EnglishUnseemly are his deeds, yet proffering aid, the man draws nigh:
His hate- ’tis cheap at any price- be sure to buy! -
MeaningIt is indeed necessary to obtain even by purchase the hatred of him who having begun (a work) does what is not conductive (to its accomplishment).
9
Nov.2014
0866. காணாச் சினத்தான் கழிபெருங்
0866. Kaanaach Chinaththaan Kazhiperung
-
குறள் #0866
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்பகைமாட்சி (Pagaimaatchi)
The Might of Hatred
-
குறள்காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்
பேணாமை பேணப் படும். -
விளக்கம்தன் நிலைமை, பிறர் நிலைமை என்றவற்றை எண்ணிப் பாராதவனாய் மற்றவர் மீது சினம் கொள்பவன் மிக்க காமமும் உடையவனானால் பகைவரால் எளிதில் வெல்லப்படுவான்.
-
Translation
in EnglishBlind in his rage, his lustful passions rage and swell;
If such a man mislikes you, like it well. -
MeaningHighly to be desired is the hatred of him whose anger is blind, and whose lust increases beyond measure.
9
Nov.2014
0865. வழிநோக்கான் வாய்ப்பன செய்யான்
0865. Vazhinokkaan Vaaippana Seiyaan
-
குறள் #0865
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்பகைமாட்சி (Pagaimaatchi)
The Might of Hatred
-
குறள்வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
பண்பிலன் பற்றார்க்கு இனிது. -
விளக்கம்நல்வழியைக் கருதான்; நல்லனவற்றைச் செய்ய மாட்டான். பழியை நோக்க மாட்டான்; நற்பண்பு இல்லான்; இத்தகையவன் பகைவரால் எளிதில் வேல்லத்தக்கவனாவான்.
-
Translation
in EnglishNo way of right he scans, no precepts bind, no crimes affright,
No grace of good he owns; such man’s his foes’ delight. -
Meaning(A) pleasing (object) to his foes is he who reads not moral works, does nothing that is enjoined by them cares not for reproach and is not possessed of good qualities.
9
Nov.2014
0864. நீங்கான் வெகுளி நிறையிலன்
0864. Neengaan Veguli Niraiyilan
-
குறள் #0864
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்பகைமாட்சி (Pagaimaatchi)
The Might of Hatred
-
குறள்நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது. -
விளக்கம்சினம் நீங்கான்; தன் மனத்தை நிறுத்தி ஆள மாட்டான். இத்தன்மை உடையவனாய் ஒருவன் இருந்தால் எப்போதும் எங்கும் யாவர்க்கும் எளியவன் ஆவான்.
-
Translation
in EnglishHis wrath still blazes, every secret told; each day
This man’s in every place to every foe an easy prey. -
MeaningHe who neither refrains from anger nor keeps his secrets will at all times and in all places be easily conquered by all.
9
Nov.2014
0863. அஞ்சும் அறியான் அமைவிலன்
0863. Anjum Ariyaan Amaivilan
-
குறள் #0863
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்பகைமாட்சி (Pagaimaatchi)
The Might of Hatred
-
குறள்அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக்கு. -
விளக்கம்அஞ்ச வேண்டியவற்றுக்கு அஞ்சான்; அறிய வேண்டியவற்றை அறியான்; மற்றவருடன் பொருந்தி நடவான்; மற்றவர்க்கு எதையும் அளிக்க மாட்டான். இத்தகையவன் பகைவர்க்கு எளியவன் ஆவான்.
-
Translation
in EnglishA craven thing! knows nought, accords with none, gives nought away;
To wrath of any foe he falls an easy prey. -
MeaningIn the estimation of foes miserably weak is he, who is timid, ignorant, unsociable and niggardly.
9
Nov.2014
0862. அன்பிலன் ஆன்ற துணையிலன்
0862. Anbilan Aandra Thunaiyilan
-
குறள் #0862
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்பகைமாட்சி (Pagaimaatchi)
The Might of Hatred
-
குறள்அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்
என்பரியும் ஏதிலான் துப்பு. -
விளக்கம்இனத்தார்மேல் அன்பில்லாதவனாகவும், வலிமையான துணை இல்லாதவனாகவும் தானும் வலிமை இல்லாதவனாகவும் உள்ள ஒருவன் எவ்வாறு பகைவரை வெல்வான்?
-
Translation
in EnglishNo kinsman’s love, no strength of friends has he;
How can he bear his foeman’s enmity? -
MeaningHow can he who is unloving, destitute of powerful aids, and himself without strength overcome the might of his foe ?
9
Nov.2014
0861. வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக
0861. Valiyaarkku Maaretral Oombuga
-
குறள் #0861
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்பகைமாட்சி (Pagaimaatchi)
The Might of Hatred
-
குறள்வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை. -
விளக்கம்தம்மைவிட வலியாரிடத்தில் பகையாக எதிர்த்து நிற்றலை விடுதல் வேண்டும்; தம்மைவிட மெலியவர் மீது பகை கொண்டு போர் செய்தலை விடாது விரும்புதல் வேண்டும்.
-
Translation
in EnglishWith stronger than thyself, turn from the strife away;
With weaker shun not, rather court the fray. -
MeaningAvoid offering resistance to the strong; (but) never fail to cherish enmity towards the weak.
9
Nov.2014
0860. இகலானாம் இன்னாத எல்லாம்
0860. Igalaanaam Innaatha Ellaam
-
குறள் #0860
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்இகல் (Igal)
Hostility
-
குறள்இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்
நன்னயம் என்னும் செருக்கு. -
விளக்கம்ஒருவனுக்கு இகலால் துன்பங்கள் எல்லாம் உண்டாகும்; அதற்கு மாறான நட்பினாலே நல்ல நீதி என்னும் பெருஞ்செல்வம் உண்டாகும்.
-
Translation
in EnglishFrom enmity do all afflictive evils flow;
But friendliness doth wealth of kindly good bestow. -
MeaningAll calamities are caused by hatred; but by the delight (of friendship) is caused the great wealth of good virtues.
9
Nov.2014
0859. இகல்காணான் ஆக்கம் வருங்கால்
0859. Igalkaanaan Aakkam Varungkaal
-
குறள் #0859
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்இகல் (Igal)
Hostility
-
குறள்இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை
மிகல்காணும் கேடு தரற்கு. -
விளக்கம்ஒருவன் தனக்கு ஆக்கம் வரும்போது இகலை நினைக்க மாட்டான். ஆனால் அவன் தனக்குக் கேடு வரும்போது இகலை எதிர்த்து வெல்ல எண்ணுவான்.
-
Translation
in EnglishMen think not hostile thought in fortune’s favouring hour,
They cherish enmity when in misfortune’s power. -
MeaningAt the approach of wealth one will not think of hatred (but) to secure one’s ruin, one will look to its increase.
9
Nov.2014
0858. இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம்
0858. Igalirku Edhirsaaithal Aakkam
-
குறள் #0858
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்இகல் (Igal)
Hostility
-
குறள்இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை
மிக்லூக்கின் ஊக்குமாம் கேடு. -
விளக்கம்இகலுக்கு எதிராக ஒதுங்கி நடத்தல் ஆக்கத்தைக் கொடுக்கும்; அதனை மிகுதியாக மேற்கொண்டால், அது செல்வத்தின் அழிவினை உண்டாக்கும்.
-
Translation
in English‘Tis gain to turn the soul from enmity;
Ruin reigns where this hath mastery. -
MeaningShrinking back from hatred will yield wealth; indulging in its increase will hasten ruin.
9
Nov.2014
0857. மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார்
0857. Migalmeval Meipporul Kaanaar
-
குறள் #0857
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்இகல் (Igal)
Hostility
-
குறள்மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்
இன்னா அறிவி னவர். -
விளக்கம்இகலை விரும்பும் தீய அறிவுடையவர் வெற்றி அடைவதற்குக் காரணமான உண்மைப் பொருளை அறிய மாட்டார்.
-
Translation
in EnglishThe very truth that greatness gives their eyes can never see,
Who only know to work men woe, fulfilled of enmity. -
MeaningThose whose judgement brings misery through its connection with hatred cannot understand the triumphant nature of truth.
9
Nov.2014
0856. இகலின் மிகலினிது என்பவன்
0856. Igalin Migalinithu Enbavan
-
குறள் #0856
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்இகல் (Igal)
Hostility
-
குறள்இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை
தவலும் கெடலும் நணித்து. -
விளக்கம்இகல் கொள்வது மிகவும் இனியது என்று எண்ணுபவனது வாழ்வு, பிழைபடுதல் சிறிது நேரத்தில் உண்டு; கேட்டுப் போதலும் சிறிது நேரத்தில் உண்டு.
-
Translation
in EnglishThe life of those who cherished enmity hold dear,
To grievous fault and utter death is near. -
MeaningFailure and ruin are not far from him who says it is sweet to excel in hatred.
9
Nov.2014
0855. இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை
0855. Igalethir Saaindhozhuga Vallarai
-
குறள் #0855
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்இகல் (Igal)
Hostility
-
குறள்இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே
மிக்லூக்கும் தன்மை யவர். -
விளக்கம்இகல் உண்டானபோது எதிர் நிற்காமல் அதன் எதிரே சாய்ந்து ஒழுக வல்லவரை வெல்ல எண்ணும் ஆற்றல் உடையவர் யார்?
-
Translation
in EnglishIf men from enmity can keep their spirits free,
Who over them shall gain the victory? -
MeaningWho indeed would think of conquering those who naturally shrink back from hatred ?
9
Nov.2014
0854. இன்பத்துள் இன்பம் பயக்கும்
0854. Inbaththul Inbam Payakkum
-
குறள் #0854
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்இகல் (Igal)
Hostility
-
குறள்இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின். -
விளக்கம்துன்பங்களுள் பெருந்துன்பமாகிய மாறுபாடு இல்லையாயின், அஃது இன்பங்களுள் மேலான இன்பத்தைக் கொடுக்கும்.
-
Translation
in EnglishJoy of joys abundant grows,
When malice dies that woe of woes. -
MeaningIf hatred which is the greatest misery is destroyed, it will yield the greatest delight.
9
Nov.2014
0853. இகலென்னும் எவ்வநோய் நீக்கின்
0853. Igalennum Evvanoi Neekkin
-
குறள் #0853
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்இகல் (Igal)
Hostility
-
குறள்இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்
தாவில் விளக்கம் தரும். -
விளக்கம்இகல் என்று சொல்லப்படும் துன்பம் தரும் நோயை ஒருவன் நீக்கினால் அது அழிவில்லாமைக்குக் காரணமாகிய கெடாத புகழை அவனுக்குக் கொடுக்கும்.
-
Translation
in EnglishIf enmity, that grievous plague, you shun,
Endless undying praises shall be won. -
MeaningTo rid one-self of the distressing dtsease of hatred will bestow (on one) a never-decreasing imperishable fame.
9
Nov.2014
0852. பகல்கருதிப் பற்றா செயினும்
0852. Pagalkaruthip Patraa Seyinum
-
குறள் #0852
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்இகல் (Igal)
Hostility
-
குறள்பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
இன்னாசெய் யாமை தலை. -
விளக்கம்பிரிவு உண்டாக்கக் கருதி ஒருவன் விரும்பாதவற்றைச் செய்தாலும், தான் அவனுக்குப் பகையைக் கருதித் துன்பந் தருவனவற்றைச் செய்யாதிருப்பதே சிறந்தது.
-
Translation
in EnglishThough men disunion plan, and do thee much despite
‘Tis best no enmity to plan, nor evil deeds requite. -
MeaningThough disagreeable things may be done from (a feeling of) disunion, it is far better that nothing painful be done from (that of) hatred.
9
Nov.2014
0851. இகலென்ப எல்லா உயிர்க்கும்
0851. Igalenba Ellaa Uyirkkum
-
குறள் #0851
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்இகல் (Igal)
Hostility
-
குறள்இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்
பண்பின்மை பாரிக்கும் நோய். -
விளக்கம்எல்லா உயிர்களுக்கும் பிரித்தல் என்னும் தீய குணத்தை வளர்க்கும் நோயை, அறியுடையோர் ‘பகை’ (இகல்) என்று கூறுவார்.
-
Translation
in EnglishHostility disunion’s plague will bring,
That evil quality, to every living thing. -
MeaningThe disease which fosters the evil of disunion among all creatures is termed hatred by the wise.