9
Nov.2014
0860. இகலானாம் இன்னாத எல்லாம்
0860. Igalaanaam Innaatha Ellaam
-
குறள் #0860
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்இகல் (Igal)
Hostility
-
குறள்இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்
நன்னயம் என்னும் செருக்கு. -
விளக்கம்ஒருவனுக்கு இகலால் துன்பங்கள் எல்லாம் உண்டாகும்; அதற்கு மாறான நட்பினாலே நல்ல நீதி என்னும் பெருஞ்செல்வம் உண்டாகும்.
-
Translation
in EnglishFrom enmity do all afflictive evils flow;
But friendliness doth wealth of kindly good bestow. -
MeaningAll calamities are caused by hatred; but by the delight (of friendship) is caused the great wealth of good virtues.
9
Nov.2014
0859. இகல்காணான் ஆக்கம் வருங்கால்
0859. Igalkaanaan Aakkam Varungkaal
-
குறள் #0859
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்இகல் (Igal)
Hostility
-
குறள்இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை
மிகல்காணும் கேடு தரற்கு. -
விளக்கம்ஒருவன் தனக்கு ஆக்கம் வரும்போது இகலை நினைக்க மாட்டான். ஆனால் அவன் தனக்குக் கேடு வரும்போது இகலை எதிர்த்து வெல்ல எண்ணுவான்.
-
Translation
in EnglishMen think not hostile thought in fortune’s favouring hour,
They cherish enmity when in misfortune’s power. -
MeaningAt the approach of wealth one will not think of hatred (but) to secure one’s ruin, one will look to its increase.
9
Nov.2014
0858. இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம்
0858. Igalirku Edhirsaaithal Aakkam
-
குறள் #0858
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்இகல் (Igal)
Hostility
-
குறள்இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை
மிக்லூக்கின் ஊக்குமாம் கேடு. -
விளக்கம்இகலுக்கு எதிராக ஒதுங்கி நடத்தல் ஆக்கத்தைக் கொடுக்கும்; அதனை மிகுதியாக மேற்கொண்டால், அது செல்வத்தின் அழிவினை உண்டாக்கும்.
-
Translation
in English‘Tis gain to turn the soul from enmity;
Ruin reigns where this hath mastery. -
MeaningShrinking back from hatred will yield wealth; indulging in its increase will hasten ruin.
9
Nov.2014
0857. மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார்
0857. Migalmeval Meipporul Kaanaar
-
குறள் #0857
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்இகல் (Igal)
Hostility
-
குறள்மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்
இன்னா அறிவி னவர். -
விளக்கம்இகலை விரும்பும் தீய அறிவுடையவர் வெற்றி அடைவதற்குக் காரணமான உண்மைப் பொருளை அறிய மாட்டார்.
-
Translation
in EnglishThe very truth that greatness gives their eyes can never see,
Who only know to work men woe, fulfilled of enmity. -
MeaningThose whose judgement brings misery through its connection with hatred cannot understand the triumphant nature of truth.
9
Nov.2014
0856. இகலின் மிகலினிது என்பவன்
0856. Igalin Migalinithu Enbavan
-
குறள் #0856
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்இகல் (Igal)
Hostility
-
குறள்இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை
தவலும் கெடலும் நணித்து. -
விளக்கம்இகல் கொள்வது மிகவும் இனியது என்று எண்ணுபவனது வாழ்வு, பிழைபடுதல் சிறிது நேரத்தில் உண்டு; கேட்டுப் போதலும் சிறிது நேரத்தில் உண்டு.
-
Translation
in EnglishThe life of those who cherished enmity hold dear,
To grievous fault and utter death is near. -
MeaningFailure and ruin are not far from him who says it is sweet to excel in hatred.
9
Nov.2014
0855. இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை
0855. Igalethir Saaindhozhuga Vallarai
-
குறள் #0855
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்இகல் (Igal)
Hostility
-
குறள்இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே
மிக்லூக்கும் தன்மை யவர். -
விளக்கம்இகல் உண்டானபோது எதிர் நிற்காமல் அதன் எதிரே சாய்ந்து ஒழுக வல்லவரை வெல்ல எண்ணும் ஆற்றல் உடையவர் யார்?
-
Translation
in EnglishIf men from enmity can keep their spirits free,
Who over them shall gain the victory? -
MeaningWho indeed would think of conquering those who naturally shrink back from hatred ?
9
Nov.2014
0854. இன்பத்துள் இன்பம் பயக்கும்
0854. Inbaththul Inbam Payakkum
-
குறள் #0854
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்இகல் (Igal)
Hostility
-
குறள்இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின். -
விளக்கம்துன்பங்களுள் பெருந்துன்பமாகிய மாறுபாடு இல்லையாயின், அஃது இன்பங்களுள் மேலான இன்பத்தைக் கொடுக்கும்.
-
Translation
in EnglishJoy of joys abundant grows,
When malice dies that woe of woes. -
MeaningIf hatred which is the greatest misery is destroyed, it will yield the greatest delight.
9
Nov.2014
0853. இகலென்னும் எவ்வநோய் நீக்கின்
0853. Igalennum Evvanoi Neekkin
-
குறள் #0853
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்இகல் (Igal)
Hostility
-
குறள்இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்
தாவில் விளக்கம் தரும். -
விளக்கம்இகல் என்று சொல்லப்படும் துன்பம் தரும் நோயை ஒருவன் நீக்கினால் அது அழிவில்லாமைக்குக் காரணமாகிய கெடாத புகழை அவனுக்குக் கொடுக்கும்.
-
Translation
in EnglishIf enmity, that grievous plague, you shun,
Endless undying praises shall be won. -
MeaningTo rid one-self of the distressing dtsease of hatred will bestow (on one) a never-decreasing imperishable fame.
9
Nov.2014
0852. பகல்கருதிப் பற்றா செயினும்
0852. Pagalkaruthip Patraa Seyinum
-
குறள் #0852
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்இகல் (Igal)
Hostility
-
குறள்பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
இன்னாசெய் யாமை தலை. -
விளக்கம்பிரிவு உண்டாக்கக் கருதி ஒருவன் விரும்பாதவற்றைச் செய்தாலும், தான் அவனுக்குப் பகையைக் கருதித் துன்பந் தருவனவற்றைச் செய்யாதிருப்பதே சிறந்தது.
-
Translation
in EnglishThough men disunion plan, and do thee much despite
‘Tis best no enmity to plan, nor evil deeds requite. -
MeaningThough disagreeable things may be done from (a feeling of) disunion, it is far better that nothing painful be done from (that of) hatred.
9
Nov.2014
0851. இகலென்ப எல்லா உயிர்க்கும்
0851. Igalenba Ellaa Uyirkkum
-
குறள் #0851
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்இகல் (Igal)
Hostility
-
குறள்இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்
பண்பின்மை பாரிக்கும் நோய். -
விளக்கம்எல்லா உயிர்களுக்கும் பிரித்தல் என்னும் தீய குணத்தை வளர்க்கும் நோயை, அறியுடையோர் ‘பகை’ (இகல்) என்று கூறுவார்.
-
Translation
in EnglishHostility disunion’s plague will bring,
That evil quality, to every living thing. -
MeaningThe disease which fosters the evil of disunion among all creatures is termed hatred by the wise.