9
Nov.2014
0960. நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும்
0960. Nalamvendin Naanudaimai Vendum
-
குறள் #0960
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
-
அதிகாரம்குடிமை (Kudimai)
Nobility
-
குறள்நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு -
விளக்கம்ஒருவன் நன்மையை விரும்பினால், அவனிடத்தில் நாணம் இருக்க வேண்டும். அவ்வாறே குடியின் உயர்வை விரும்பினால், அவன் எல்லோரிடத்திலும் பணிந்து நடத்தல் வேண்டும்.
-
Translation
in EnglishWho seek for good the grace of virtuous shame must know;
Who seek for noble name to all must reverence show. -
MeaningHe who desires a good name must desire modesty; and he who desires (the continuance of) a family greatness must be submissive to all.
9
Nov.2014
0959. நிலத்தில் கிடந்தமை கால்காட்டும்
0959. Nilaththil Kidanthamai Kaalkaattum
-
குறள் #0959
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
-
அதிகாரம்குடிமை (Kudimai)
Nobility
-
குறள்நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல். -
விளக்கம்நிலத்தின் இயல்பை அதனிடத்தே முளைத்த முளையானது காட்டிவிடும். அதுபோல, ஒருவன் வாயிலுண்டாகும் சொற்கள் அவன் பிறந்த குலத்தின் இயல்பைக் காட்டும்.
-
Translation
in EnglishOf soil the plants that spring thereout will show the worth:
The words they speak declare the men of noble birth. -
MeaningAs the sprout indicates the nature of the soil, (so) the speech of the noble indicates (that of one’s birth).
9
Nov.2014
0958. நலத்தின்கண் நாரின்மை தோன்றின்
0958. Nalaththinkan Naarinmai Thondrin
-
குறள் #0958
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
-
அதிகாரம்குடிமை (Kudimai)
Nobility
-
குறள்நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும். -
விளக்கம்ஒருவனுக்கு நல்ல குணத்தில் விருப்பமின்மை உண்டானால், அவனது குலப்பிறப்பில் உலகத்தவர் ஐயங்கொள்வர்.
-
Translation
in EnglishIf lack of love appear in those who bear some goodly name,
‘Twill make men doubt the ancestry they claim. -
MeaningIf one of a good family betrays want of affection, his descent from it will be called in question.
9
Nov.2014
0957. குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம்
0957. Kudippirandhaar Kanvilangum Kutram
-
குறள் #0957
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
-
அதிகாரம்குடிமை (Kudimai)
Nobility
-
குறள்குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து. -
விளக்கம்உயிர்ந்த குடியில் பிறந்தவரிடத்தில் உண்டாகும் குற்றம், வானத்திலுள்ள சந்திரனிடத்தில் உள்ள களங்கம் போல் பலர் அறிய விளங்கித் தோன்றும்.
-
Translation
in EnglishThe faults of men of noble race are seen by every eye,
As spots on her bright orb that walks sublime the evening sky. -
MeaningThe defects of the noble will be observed as clearly as the dark spots in the moon.
9
Nov.2014
0956. சலம்பற்றிச் சால்பில செய்யார்மா
0956. Salampatrich Chaalpila Seiyaarmaa
-
குறள் #0956
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
-
அதிகாரம்குடிமை (Kudimai)
Nobility
-
குறள்சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
குலம்பற்றி வாழ்தும்என் பார். -
விளக்கம்குற்றமற்ற தம் குடிப்பண்புடன் வாழ்வோர் என்போர், வஞ்சனையாகக் குலத்திற்குப் பொருந்தாத தொழில்களைச் செய்ய மாட்டார்.
-
Translation
in EnglishWhose minds are set to live as fits their sire’s unspotted fame,
Stooping to low deceit, commit no deeds that gender shame. -
MeaningThose who seek to preserve the irreproachable honour of their families will not viciously do what is detrimental thereto.
9
Nov.2014
0955. வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும்
0955. Vazhanguva Thulveezhndhak Kannum
-
குறள் #0955
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
-
அதிகாரம்குடிமை (Kudimai)
Nobility
-
குறள்வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பில் தலைப்பிரிதல் இன்று. -
விளக்கம்பழமைதொட்டு வருகின்ற உயர்ந்த குடியிலே பிறந்தவர் கொடுக்கும் பொருள் சுருங்கியபோதும் தமது உயர் குணங்களிலிருந்து நீங்க மாட்டார்.
-
Translation
in EnglishThough stores for charity should fail within, the ancient race
Will never lose its old ancestral grace. -
MeaningThough their means fall off, those born in ancient families, will not lose their character (for liberality).
9
Nov.2014
0954. அடுக்கிய கோடி பெறினும்
0954. Adukkiya Kodi Perinum
-
குறள் #0954
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
-
அதிகாரம்குடிமை (Kudimai)
Nobility
-
குறள்அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர். -
விளக்கம்அடுக்கிய பலகோடி அளவினதாகிய பொருளைப் பெற்றாலும், உயர்ந்த குடியில் பிறந்தவர் தம் குடியின் சிறப்புக் குறைவதற்குக் காரணமான செயல்களைச் செய்ய மாட்டார்.
-
Translation
in EnglishMillions on millions piled would never win
The men of noble race to soul-degrading sin. -
MeaningThough blessed with immense wealth, the noble will never do anything unbecoming.
9
Nov.2014
0953. நகைஈகை இன்சொல் இகழாமை
0953. Nagaieegai Insol Igazhaamai
-
குறள் #0953
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
-
அதிகாரம்குடிமை (Kudimai)
Nobility
-
குறள்நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகையென்ப வாய்மைக் குடிக்கு. -
விளக்கம்உயர்ந்த குடியில் பிறந்தவர்க்கு, வறியவர் வருங்கால் முகமலர்ச்சியும், உள்ளன கொடுத்தலும், இன்சொல் பேசுதலும், பிறரை இகழாமையுமாகிய நான்கும் உரிய குணங்களாகும்.
-
Translation
in EnglishThe smile, the gift, the pleasant word, unfailing courtesy
These are the signs, they say, of true nobility. -
MeaningA cheerful countenance, liberality, pleasant words, and an unreviling disposition, these four are said to be the proper qualities of the truly high-born.
9
Nov.2014
0952. ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம்
0952. Ozhukkamum Vaaimaiyum Naanumim
-
குறள் #0952
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
-
அதிகாரம்குடிமை (Kudimai)
Nobility
-
குறள்ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார். -
விளக்கம்உயர்ந்த குடியில் பிறந்தவர்கள் நல்லொழுக்கம், உண்மை, நாணம் ஆகிய மூன்று குணங்களிலிருந்தும் தவறி நடக்கமாட்டார்கள்.
-
Translation
in EnglishIn these three things the men of noble birth fail not:
In virtuous deed and truthful word, and chastened thought. -
MeaningThe high-born will never deviate from these three; good manners, truthfulness and modesty.
9
Nov.2014
0951. இற்பிறந்தார் கண்அல்லது இல்லை
0951. Irpirandhaar Kanallathu Illai
-
குறள் #0951
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
-
அதிகாரம்குடிமை (Kudimai)
Nobility
-
குறள்இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு. -
விளக்கம்உயர்ந்த குடியில் பிறந்தவரிடத்தல்லாமல் மற்றவரிடம் நடுவு நிலைமையும் நாணமும் இயல்பாக ஒரு சேர அமைவதில்லை.
-
Translation
in EnglishSave in the scions of a noble house, you never find
Instinctive sense of right and virtuous shame combined. -
MeaningConsistency (of thought, word and deed) and fear (of sin) are conjointly natural only to the highborn.