9
Nov.2014
1270. பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம்
1270. Perinennaam Petrakkaal Ennaaam
-
குறள் #1270
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்அவர்வயின் விதும்பல் (Avarvayin Vithumbal)
Mutual Desire
-
குறள்பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்
உள்ளம் உடைந்துக்கக் கால். -
விளக்கம்பிரிவாற்றாமல் மனம் உடைந்து காதலி இறப்பாளாயின், பின் அவள் என்னைப் பெறுவதனால் என்ன பயன்? பெற்றால் தான் என்ன பயன்? தழுவினால் தான் என்ன பயன்?
-
Translation
in EnglishWhat’s my return, the meeting hour, the wished-for greeting worth,
If she heart-broken lie, with all her life poured forth? -
MeaningAfter (my wife) has died of a broken heart, what good will there be if she is to receive me, has received me, or has even embraced me?
9
Nov.2014
1269. ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண்
1269. Orunaal Ezhunaalpol Sellumsen
-
குறள் #1269
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்அவர்வயின் விதும்பல் (Avarvayin Vithumbal)
Mutual Desire
-
குறள்ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்
வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு. -
விளக்கம்தூரதேசம் சென்ற காதலர் திரும்ப வரும் நாளை நினைத்து ஏங்கும் மகளிர்க்கு, ஒருநாள் கழிவது ஏழு நாள் கழிவது போலத் தோன்றும்.
-
Translation
in EnglishOne day will seem like seven to those who watch and yearn
For that glad day when wanderers from afar return. -
MeaningTo those who suffer waiting for the day of return of their distant lovers one day is as long as seven days.
9
Nov.2014
1268. வினைகலந்து வென்றீக வேந்தன்
1268. Vinaikalanthu Venreega Venthan
-
குறள் #1268
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்அவர்வயின் விதும்பல் (Avarvayin Vithumbal)
Mutual Desire
-
குறள்வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
மாலை அயர்கம் விருந்து. -
விளக்கம்அரசன் போர் செய்து வெற்றி பெறுவானாக; நானும் என் காதலியை அடைந்து மாலைக் காலத்தில் விருந்து உண்பேனாக.
-
Translation
in EnglishO would my king would fight, o’ercome, devide the spoil;
At home, to-night, the banquet spread should crown the toil. -
MeaningLet the king fight and gain (victories); (but) let me be united to my wife and feast the evening.
9
Nov.2014
1267. புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ
1267. Pulappenkol Pulluven Kollo
-
குறள் #1267
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்அவர்வயின் விதும்பல் (Avarvayin Vithumbal)
Mutual Desire
-
குறள்புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்
கண்அன்ன கேளிர் விரன். -
விளக்கம்கண்போற் சிறந்த காதலர் வந்தால், நான் அப்பொழுது பிணங்குவேனோ, தழுவுவேனோ; அல்லது இரண்டையும் கலந்து செய்வேனோ தெரியவில்லை.
-
Translation
in EnglishShall I draw back, or yield myself, or shall both mingled be,
When he returns, my spouse, dear as these eyes to me. -
MeaningOn the return of him who is as dear as my eyes, am I displeased or am I to embrace (him); or am I to do both?
9
Nov.2014
1266. வருகமன் கொண்கன் ஒருநாள்
1266. Varukaman Konkan Orunaal
-
குறள் #1266
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்அவர்வயின் விதும்பல் (Avarvayin Vithumbal)
Mutual Desire
-
குறள்வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன்
பைதல்நோய் எல்லாம் கெட. -
விளக்கம்என் கணவன் என்றேனும் ஒருநாள் வருவானாக; வந்தால் இத்துன்பம் தரும் நோயெல்லாம் கெடுமாறு இன்பம் அனுபவிப்பேன்.
-
Translation
in EnglishO let my spouse but come again to me one day!
I’ll drink that nectar: wasting grief shall flee away. -
MeaningMay my husband return some day; and then will I enjoy (him) so as to destroy all this agonizing sorrow.
9
Nov.2014
1265. காண்கமன் கொண்கனைக் கண்ணாரக்
1265. Kaankaman Konkanaik Kannaarak
-
குறள் #1265
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்அவர்வயின் விதும்பல் (Avarvayin Vithumbal)
Mutual Desire
-
குறள்காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்
நீங்கும்என் மென்தோள் பசப்பு. -
விளக்கம்நான் என் கணவரைக் கண்ணாரக் காண்பேனாக; அவ்வாறு கண்டால் என் மெல்லிய தோலின் மீதுள்ள பசலை நீங்கும்.
-
Translation
in EnglishO let me see my spouse again and sate these longing eyes!
That instant from my wasted frame all pallor flies. -
MeaningMay I look on my lover till I am satisfied and thereafter will vanish the sallowness of my slender shoulders.
9
Nov.2014
1264. கூடிய காமம் பிரிந்தார்
1264. Koodiya Kaamam Pirindhaar
-
குறள் #1264
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்அவர்வயின் விதும்பல் (Avarvayin Vithumbal)
Mutual Desire
-
குறள்கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்
கோடுகொ டேறுமென் நெஞ்சு. -
விளக்கம்பிரிந்தவர் காதலால் கூடும்படி வருவார் என்று நினைத்து எனது மனம் மரத்தின் கிளை மீது ஏறிப் பார்க்கின்றது.
-
Translation
in English‘He comes again, who left my side, and I shall taste love’s joy,’-
My heart with rapture swells, when thoughts like these my mind employ. -
MeaningMy heart is rid of its sorrow and swells with rapture to think of my absent lover returning with his love.
9
Nov.2014
1263. உரன்நசைஇ உள்ளம் துணையாகச்
1263. Urannasaie ullam Thunaiyaagach
-
குறள் #1263
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்அவர்வயின் விதும்பல் (Avarvayin Vithumbal)
Mutual Desire
-
குறள்உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
வரல்நசைஇ இன்னும் உளேன். -
விளக்கம்இன்பத்தைத் விரும்பாது வெற்றியை விரும்பித் தமது ஊக்கத்தைத் துணைக்கொண்டு சென்றவர், மீண்டும் வருவதை விரும்பி நான் உயிரை வைத்துக் கொண்டிருக்கின்றேன்.
-
Translation
in EnglishOn victory intent, His mind sole company he went;
And I yet life sustain! And long to see his face again! -
MeaningI still live by longing for the arrival of him who has gone out of love for victory and with valour as his guide.
9
Nov.2014
1262. இலங்கிழாய் இன்று மறப்பின்என்
1262. Ilankizhaai Indru Marappinen
-
குறள் #1262
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்அவர்வயின் விதும்பல் (Avarvayin Vithumbal)
Mutual Desire
-
குறள்இலங்கிழாய் இன்று மறப்பின்என் தோள்மேல்
கலங்கழியும் காரிகை நீத்து. -
விளக்கம்விளக்குகின்ற அணி அணிந்த தோழியே! இன்று என் காதலரை மறந்ததால், என் தோள்கள் அழகினை இழந்து மெலியும்; அதனால் வளையல்கள் கழன்று விடும்.
-
Translation
in EnglishO thou with gleaming jewels decked, could I forget for this one day,
Henceforth these bracelets from my arms will slip, my beauty worn away. -
MeaningO you bright-jewelled maid, if I forget (him) today, my shoulders will lose their beauty even in the other life and make my bracelets loose.
9
Nov.2014
1261. வாளற்றுப் புற்கென்ற கண்ணும்
1261. Vaalatrup Purkendra Kannum
-
குறள் #1261
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்அவர்வயின் விதும்பல் (Avarvayin Vithumbal)
Mutual Desire
-
குறள்வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல். -
விளக்கம்காதலர் சென்ற நாட்களை உணர்த்தும் கோடுகளைத் தொட்டு எண்ணியமையால் என் விரல்கள் தேய்ந்தன. அவரது வருகையை எதிர்பார்த்து என் கண்களும் ஒளியிழந்து மங்கின.
-
Translation
in EnglishMy eyes have lost their brightness, sight is dimmed; my fingers worn,
With nothing on the wall the days since I was left forlorn. -
MeaningMy finger has worn away by marking (on the wall) the days he has been absent while my eyes have lost their lustre and begin to fail.