9
Nov.2014
1200. உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய்
1200. Uraaarkku Urunoi Uraippaai
-
குறள் #1200
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்தனிப்படர் மிகுதி (Thanippadar Miguthi)
The Solitary Anguish
-
குறள்உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்
செறாஅஅய் வாழிய நெஞ்சு. -
விளக்கம்உன்னோடு வந்து சேராதவர்க்கு, உன்னுடைய துன்ப மிகுதியைச் சொல்லப்புகும் மனமே! வாழ்வாயாக; உனக்குத் துன்பம் செய்யும் கடலைத் தூர்க்க முயல்வாயாக.
-
Translation
in EnglishTell him thy pain that loves not thee?
Farewell, my soul, fill up the sea! -
MeaningLive, O my soul, would you who relate your great sorrow to strangers, try rather to fill up your own sea (of sorrow).
Read more
Category:Thirukural
9
Nov.2014
1199. நசைஇயார் நல்கார் எனினும்
1199. Nasaiiyaar Nalkaar Eninum
-
குறள் #1199
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்தனிப்படர் மிகுதி (Thanippadar Miguthi)
The Solitary Anguish
-
குறள்நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு
இசையும் இனிய செவிக்கு. -
விளக்கம்விரும்பப்பட்டவர் அருள் செய்யாராயினும், அவரிடமிருந்து பிறக்கும் எச்சொற்களும் என் காதுக்கு இனியனவாகும்.
-
Translation
in EnglishThough he my heart desires no grace accords to me,
Yet every accent of his voice is melody. -
MeaningThough my beloved bestows no love on one, still are his words sweet to my ears.
Read more
Category:Thirukural
9
Nov.2014
1198. வீழ்வாரின் இன்சொல் பெறாஅது
1198. Veezhvaarin Insol Peraaathu
-
குறள் #1198
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்தனிப்படர் மிகுதி (Thanippadar Miguthi)
The Solitary Anguish
-
குறள்வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து
வாழ்வாரின் வன்கணார் இல். -
விளக்கம்காதலரிடத்திலிருந்து ஓர் இனிய சொல்லாவது கேட்கப்பெறாமல் பிரிவைப் பொறுத்துக் கொண்டு வாழ்கின்ற பெண்களைப் போல் வலிய நெஞ்சமுடையவர் உலகத்தில் இல்லை.
-
Translation
in EnglishWho hear from lover’s lips no pleasant word from day to day,
Yet in the world live out their life,- no braver souls than they! -
MeaningThere is no one in the world so hard-hearted as those who can live without receiving (even) a kind word from their beloved.
Read more
Category:Thirukural
9
Nov.2014
1197. பருவரலும் பைதலும் காணான்கொல்
1197. Paruvaralum Paithalum Kaanaankol
-
குறள் #1197
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்தனிப்படர் மிகுதி (Thanippadar Miguthi)
The Solitary Anguish
-
குறள்பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்
ஒருவர்கண் நின்றொழுகு வான். -
விளக்கம்ஒருவரிடத்து மட்டும் நின்று இயங்குகின்ற காமன், அவரிடத்துள்ள நோயையும், துன்ப மிகுதியையும் அறியமாட்டானோ?
-
Translation
in EnglishWhile Kaman rushes straight at me alone,
Is all my pain and wasting grief unknown? -
MeaningWould not cupid who abides and contends in one party (only) witness the pain and sorrow (in that party)?
Read more
Category:Thirukural
9
Nov.2014
1196. ஒருதலையான் இன்னாது காமம்காப்
1196. Oruthalaiyaan Innaathu Kaamamkaap
-
குறள் #1196
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்தனிப்படர் மிகுதி (Thanippadar Miguthi)
The Solitary Anguish
-
குறள்ஒருதலையான் இன்னாது காமம்காப் போல
இருதலை யானும் இனிது. -
விளக்கம்ஆண் பெண் இருபாலருள், காமம் ஒரு பக்கத்தில் இருத்தல் துன்பமாகும்; காவடியைப் போல் இரண்டு பக்கமும் ஒத்திருக்குமானால் இன்பம் செய்வதாகும்.
-
Translation
in EnglishLove on one side is bad; like balanced load
By porter borne, love on both sides is good. -
MeaningLust, like the weight of the KAVADI, pains if it lies in one end only but pleases if it is in both.
Read more
Category:Thirukural
9
Nov.2014
1195. நாம்காதல் கொண்டார் நமக்கெவன்
1195. Naamkaathal Kondaar Namakkevan
-
குறள் #1195
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்தனிப்படர் மிகுதி (Thanippadar Miguthi)
The Solitary Anguish
-
குறள்நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ
தாம்காதல் கொள்ளாக் கடை. -
விளக்கம்தாம் காதல் செய்யாதபோது, என்னால் காதலிக்கப்பட்டவர் எனக்கு என்ன இன்பத்தைச் செய்வார்?
-
Translation
in EnglishFrom him I love to me what gain can be,
Unless, as I love him, he loveth me? -
MeaningHe who is beloved by me, what will he do to me, if I am not beloved by him ?
Read more
Category:Thirukural
9
Nov.2014
1194. வீழப் படுவார் கெழீஇயிலர்
1194. Veezhap Paduvaar Kezheeeyalar
-
குறள் #1194
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்தனிப்படர் மிகுதி (Thanippadar Miguthi)
The Solitary Anguish
-
குறள்வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்
வீழப் படாஅர் எனின். -
விளக்கம்பிறரால் மதிக்கப்பட்டாலும் பெண்கள், தம் கணவரால் விரும்பப்படாராயின் நல்வினைப் பயன் பொருந்தாதவராவர்.
-
Translation
in EnglishThose well-beloved will luckless prove,
Unless beloved by those they love. -
MeaningEven those who are esteemed (by other women) are devoid of excellence, if they are not loved by their beloved.
Read more
Category:Thirukural
9
Nov.2014
1193. வீழுநர் வீழப் படுவார்க்கு
1193. Veezhunar Veezhap Paduvaarkku
-
குறள் #1193
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்தனிப்படர் மிகுதி (Thanippadar Miguthi)
The Solitary Anguish
-
குறள்வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே
வாழுநம் என்னும் செருக்கு. -
விளக்கம்விரும்பப்படுகின்ற கணவரால் விரும்பப்படுகின்ற மகளிர்க்கு, நாம் இன்பமாக வாழ்கின்றோம் என்னும் செருக்கு ஏற்றதாகும்.
-
Translation
in EnglishWho love and are beloved to them alone
Belongs the boast, ‘We’ve made life’s very joys our own.’ -
MeaningThe pride that says “we shall live” suits only those who are loved by their beloved (husbands).
Read more
Category:Thirukural
9
Nov.2014
1192. வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால்
1192. Vaazhvaarkku Vaanam Payanthatraal
-
குறள் #1192
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்தனிப்படர் மிகுதி (Thanippadar Miguthi)
The Solitary Anguish
-
குறள்வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அளிக்கும் அளி. -
விளக்கம்காதலிக்கின்ற பெண்களுக்கு அவரைக் காதலிக்கின்ற கணவர் செய்யும் கருணையானது, உயிர் வாழ்கின்றவர்களுக்கு மழை அளவறிந்து பெய்தது போலாகும்.
-
Translation
in EnglishAs heaven on living men showers blessings from above,
Is tender grace by lovers shown to those they love. -
MeaningThe bestowal of love by the beloved on those who love them is like the rain raining (at the proper season) on those who live by it.
Read more
Category:Thirukural
9
Nov.2014
1191. தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர்
1191. Thaamveezhvaar Thamveezhp Petravar
-
குறள் #1191
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்தனிப்படர் மிகுதி (Thanippadar Miguthi)
The Solitary Anguish
-
குறள்தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்துக் காழில் கனி. -
விளக்கம்தம்மால் விரும்பப்பட்ட கணவரால், தாமும் விரும்பப்பெற்ற மகளிர், காமநுகர்ச்சியாகிய விதையில்லாத பழத்தைப் பெற்றவர் ஆவர்.
-
Translation
in EnglishThe bliss to be beloved by those they love who gains,
Of love the stoneless, luscious fruit obtains. -
MeaningThe women who are beloved by those whom they love, have they have not got the stone-less fruit of sexual delight ?
Read more
Category:Thirukural