9
Nov.2014
1000. பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம்
1000. Panbilaan Petra Perunjchelvam
-
குறள் #1000
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
-
அதிகாரம்பண்புடைமை (Panbudaimai)
Courtesy
-
குறள்பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யால்திரிந் தற்று. -
விளக்கம்பண்பில்லாதவன் பெற்ற பெருஞ்செல்வம், நல்ல ஆவின்பால் அதனை வைத்த பாத்திரத்தின் குற்றத்தால் கெட்டது போன்றதாகும்.
-
Translation
in EnglishLike sweet milk soured because in filthy vessel poured,
Is ample wealth in churlish man’s unopened coffers stored. -
MeaningThe great wealth obtained by one who has no goodness will perish like pure milk spoilt by the impurity of the vessel.
9
Nov.2014
0999. நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு
0999. Nagalvallar Allaarkku Maayiru
-
குறள் #0999
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
-
அதிகாரம்பண்புடைமை (Panbudaimai)
Courtesy
-
குறள்நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள். -
விளக்கம்மற்றவரோடு அளவளாவி மனத்தில் மகிழ்கின்ற குணம் இல்லாதவர்க்கு, மிகப்பெரிய உலகம் பகற்காலத்திலும் இருளில் கிடப்பது போல் தோன்றும்.
-
Translation
in EnglishTo him who knows not how to smile in kindly mirth,
Darkness in daytime broods o’er all the vast and mighty earth. -
MeaningTo those who cannot rejoice, the wide world is buried darkness even in (broad) day light.
9
Nov.2014
0998. நண்பாற்றார் ஆகி நயமில
0998. Nanbaaratraar Aagi Nayamila
-
குறள் #0998
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
-
அதிகாரம்பண்புடைமை (Panbudaimai)
Courtesy
-
குறள்நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்
பண்பாற்றார் ஆதல் கடை. -
விளக்கம்நட்புச் செய்யாதவராகி நன்மையல்லாதவற்றைச் செய்பவர்களிடத்தும் இனியவராக நடவாமை அறிவுடையோர்க்குக் குற்றமாகும்.
-
Translation
in EnglishThough men with all unfriendly acts and wrongs assail,
‘Tis uttermost disgrace in ‘courtesy’ to fail. -
MeaningIt is wrong (for the wise) not to exhibit (good) qualities even towards those who bearing no friendship (for them) do only what is hateful.
9
Nov.2014
0997. அரம்போலும் கூர்மைய ரேனும்
0997. Arampolum Koormaiya Renum
-
குறள் #0997
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
-
அதிகாரம்பண்புடைமை (Panbudaimai)
Courtesy
-
குறள்அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லா தவர். -
விளக்கம்மக்களுக்குரிய நல்ல குணங்கள் இல்லாதவர், அரத்தின் கூர்மை போல் கூரிய புத்தியுடையவராயினும் மரத்தைப் போன்றவராவர்.
-
Translation
in EnglishThough sharp their wit as file, as blocks they must remain,
Whose souls are void of ‘courtesy humane’. -
MeaningHe who is destitute of (true) human qualities (only) resembles a tree, though he may possess the sharpness of a file.
9
Nov.2014
0996. பண்புடையார்ப் பட்டுண்டு உலகம்
0996. Panbudaiyaarp Pattundu Ulagam
-
குறள் #0996
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
-
அதிகாரம்பண்புடைமை (Panbudaimai)
Courtesy
-
குறள்பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன். -
விளக்கம்நல்ல பண்பு உடையவர்களின் ஒழுக்கத்தால் உலகம் நடைபெறுகின்றது; அவர்கள் இல்லையென்றால் உலக ஒழுக்கம் மண்ணில் புதைந்து மறைந்துவிடும்.
-
Translation
in EnglishThe world abides; for ‘worthy’ men its weight sustain.
Were it not so, ‘twould fall to dust again. -
MeaningThe (way of the) world subsists by contact with the good; if not, it would bury itself in the earth and perish.
9
Nov.2014
0995. நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி
0995. Nagaiyullum Innaa Thigazhchchi
-
குறள் #0995
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
-
அதிகாரம்பண்புடைமை (Panbudaimai)
Courtesy
-
குறள்நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு. -
விளக்கம்விளையாட்டிலும் ஒருவரை இகழ்தல் துன்பம் தருவதாகும். ஆகையால், உலக இயல்பறிந்து நடப்பவரிடத்தில் பகையிருந்தாலும் நல்ல குணங்கள் விளங்கும்.
-
Translation
in EnglishContempt is evil though in sport. They who man’s nature know,
E’en in their wrath, a courteous mind will show. -
MeaningReproach is painful to one even in sport; those (therefore) who know the nature of others exhibit (pleasing) qualities even when they are hated.
9
Nov.2014
0994. நயனொடு நன்றி புரிந்த
0994. Nayanodu Nandri Purindha
-
குறள் #0994
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
-
அதிகாரம்பண்புடைமை (Panbudaimai)
Courtesy
-
குறள்நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டும் உலகு. -
விளக்கம்நீதியையும், அறத்தையும் விரும்புதலால் பிறர்க்குப் பயன்படுவாரது குணத்தை உலகத்தவர் கொண்டாடுவர்.
-
Translation
in EnglishOf men of fruitful life, who kindly benefits dispense,
The world unites to praise the ‘noble excellence.’ -
MeaningThe world applauds the character of those whose usefulness results from their equity and charity.
9
Nov.2014
0993. உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால்
0993. Uruppoththal Makkaloppu Andraal
-
குறள் #0993
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
-
அதிகாரம்பண்புடைமை (Panbudaimai)
Courtesy
-
குறள்உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க
பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு. -
விளக்கம்உறுப்புகளால் மக்கள் தோற்றம் பொருந்தியிருப்பது பொருத்தம் ஆகாது; நல்ல குணத்தால் பொருந்தியிருப்பதே பொருத்தமாகும்.
-
Translation
in EnglishMen are not one because their members seem alike to outward view;
Similitude of kindred quality makes likeness true. -
MeaningResemblance of bodies is no resemblance of souls; true resemblance is the resemblance of qualities that attract.
9
Nov.2014
0992. அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல்
0992. Anbudaimai Aandra Kudippiraththal
-
குறள் #0992
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
-
அதிகாரம்பண்புடைமை (Panbudaimai)
Courtesy
-
குறள்அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு. -
விளக்கம்அன்புடையனாயிருத்தலும், உயர்ந்த குடிப்பிறப்பும் ஆகிய இவ்விரண்டும், பண்புடையவர் என்று சொல்லப்படுவதற்கு வழியாகும்.
-
Translation
in EnglishBenevolence and high born dignity,
These two are beaten paths of courtesy. -
MeaningAffectionateness and birth in a good family, these two constitute what is called a proper behaviour to all.
9
Nov.2014
0991. எண்பதத்தால் எய்தல் எளிதென்ப
0991. Enbathaththaal Eithal Elithenba
-
குறள் #0991
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
-
அதிகாரம்பண்புடைமை (Panbudaimai)
Courtesy
-
குறள்எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
பண்புடைமை என்னும் வழக்கு. -
விளக்கம்எல்லாரிடத்தும் எளிதில் கண்டு பெசுவதற்கேற்ற நிலையில் இருத்தலால், பண்புடையவர் என்று சொல்லப்படுகின்ற தன்மையை அடைதல் எளிது என்று அறிஞர் கூறுவர்.
-
Translation
in EnglishWho easy access give to every man, they say,
Of kindly courtesy will learn with ease the way. -
MeaningIf one is easy of access to all, it will be easy for one to obtain the virtue called goodness.