9
Nov.2014
0870. கல்லான் வெகுளும் சிறுபொருள்
0870. Kallaan Vegulum Siruporul
-
குறள் #0870
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்பகைமாட்சி (Pagaimaatchi)
The Might of Hatred
-
குறள்கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்
ஒல்லானை ஒல்லா தொளி. -
விளக்கம்அறிவில்லாதவனை எதிர்த்துப் போர் செய்யும் சிறு முயிற்சியால் பொருளைப் பெறாதவனை, எக்காலத்தும் புகழ் அடையாது.
-
Translation
in EnglishThe task of angry war with men unlearned in virtue’s lore
Who will not meet, glory shall meet him never more. -
MeaningThe light (of fame) will never be gained by him who gains not the trifling reputation of having fought an unlearned (foe).
9
Nov.2014
0869. செறுவார்க்குச் சேணிகவா இன்பம்
0869. Seruvaarkkuch Chenikavaa Inbam
-
குறள் #0869
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்பகைமாட்சி (Pagaimaatchi)
The Might of Hatred
-
குறள்செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா
அஞ்சும் பகைவர்ப் பெறின். -
விளக்கம்நீதி அறியாது அஞ்சும் பகைவரைப் பெற்றால் அவரை எதிர்த்துப் பகைகொள்ளுவோர்க்கு உயர்ந்த இன்பங்கள் நீங்காது நிற்கும்.
-
Translation
in EnglishThe joy of victory is never far removed from those
Who’ve luck to meet with ignorant and timid foes. -
MeaningThere will be no end of lofty delights to the victorious, if their foes are (both) ignorant and timid.
9
Nov.2014
0868. குணனிலனாய்க் குற்றம் பலவாயின்
0868. Kunanilanaaik Kutram Palavaayin
-
குறள் #0868
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்பகைமாட்சி (Pagaimaatchi)
The Might of Hatred
-
குறள்குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு
இனனிலனாம் ஏமாப் புடைத்து. -
விளக்கம்நற்குணமில்லாது பல குற்றங்களை உடையவனானால், அவனுக்கு யாரும் துணையாகமாட்டார்; அதுவே பகைவர்க்கு நன்மையாகும்.
-
Translation
in EnglishNo gracious gifts he owns, faults many cloud his fame;
His foes rejoice, for none with kindred claim. -
MeaningHe will become friendless who is without (any good) qualities. and whose faults are many; (such a character) is a help to (his) foes.
9
Nov.2014
0867. கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற
0867. Koduththum Kolalvendum Mandra
-
குறள் #0867
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்பகைமாட்சி (Pagaimaatchi)
The Might of Hatred
-
குறள்கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து
மாணாத செய்வான் பகை. -
விளக்கம்ஒரு தொழிலைத் தொடங்கி, அதற்குப் பொருந்தாதவற்றைச் செய்வானது பகையைப் பொருள் கொடுத்தேனும் கொள்ள வேண்டும்.
-
Translation
in EnglishUnseemly are his deeds, yet proffering aid, the man draws nigh:
His hate- ’tis cheap at any price- be sure to buy! -
MeaningIt is indeed necessary to obtain even by purchase the hatred of him who having begun (a work) does what is not conductive (to its accomplishment).
9
Nov.2014
0866. காணாச் சினத்தான் கழிபெருங்
0866. Kaanaach Chinaththaan Kazhiperung
-
குறள் #0866
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்பகைமாட்சி (Pagaimaatchi)
The Might of Hatred
-
குறள்காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்
பேணாமை பேணப் படும். -
விளக்கம்தன் நிலைமை, பிறர் நிலைமை என்றவற்றை எண்ணிப் பாராதவனாய் மற்றவர் மீது சினம் கொள்பவன் மிக்க காமமும் உடையவனானால் பகைவரால் எளிதில் வெல்லப்படுவான்.
-
Translation
in EnglishBlind in his rage, his lustful passions rage and swell;
If such a man mislikes you, like it well. -
MeaningHighly to be desired is the hatred of him whose anger is blind, and whose lust increases beyond measure.
9
Nov.2014
0865. வழிநோக்கான் வாய்ப்பன செய்யான்
0865. Vazhinokkaan Vaaippana Seiyaan
-
குறள் #0865
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்பகைமாட்சி (Pagaimaatchi)
The Might of Hatred
-
குறள்வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
பண்பிலன் பற்றார்க்கு இனிது. -
விளக்கம்நல்வழியைக் கருதான்; நல்லனவற்றைச் செய்ய மாட்டான். பழியை நோக்க மாட்டான்; நற்பண்பு இல்லான்; இத்தகையவன் பகைவரால் எளிதில் வேல்லத்தக்கவனாவான்.
-
Translation
in EnglishNo way of right he scans, no precepts bind, no crimes affright,
No grace of good he owns; such man’s his foes’ delight. -
Meaning(A) pleasing (object) to his foes is he who reads not moral works, does nothing that is enjoined by them cares not for reproach and is not possessed of good qualities.
9
Nov.2014
0864. நீங்கான் வெகுளி நிறையிலன்
0864. Neengaan Veguli Niraiyilan
-
குறள் #0864
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்பகைமாட்சி (Pagaimaatchi)
The Might of Hatred
-
குறள்நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது. -
விளக்கம்சினம் நீங்கான்; தன் மனத்தை நிறுத்தி ஆள மாட்டான். இத்தன்மை உடையவனாய் ஒருவன் இருந்தால் எப்போதும் எங்கும் யாவர்க்கும் எளியவன் ஆவான்.
-
Translation
in EnglishHis wrath still blazes, every secret told; each day
This man’s in every place to every foe an easy prey. -
MeaningHe who neither refrains from anger nor keeps his secrets will at all times and in all places be easily conquered by all.
9
Nov.2014
0863. அஞ்சும் அறியான் அமைவிலன்
0863. Anjum Ariyaan Amaivilan
-
குறள் #0863
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்பகைமாட்சி (Pagaimaatchi)
The Might of Hatred
-
குறள்அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக்கு. -
விளக்கம்அஞ்ச வேண்டியவற்றுக்கு அஞ்சான்; அறிய வேண்டியவற்றை அறியான்; மற்றவருடன் பொருந்தி நடவான்; மற்றவர்க்கு எதையும் அளிக்க மாட்டான். இத்தகையவன் பகைவர்க்கு எளியவன் ஆவான்.
-
Translation
in EnglishA craven thing! knows nought, accords with none, gives nought away;
To wrath of any foe he falls an easy prey. -
MeaningIn the estimation of foes miserably weak is he, who is timid, ignorant, unsociable and niggardly.
9
Nov.2014
0862. அன்பிலன் ஆன்ற துணையிலன்
0862. Anbilan Aandra Thunaiyilan
-
குறள் #0862
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்பகைமாட்சி (Pagaimaatchi)
The Might of Hatred
-
குறள்அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்
என்பரியும் ஏதிலான் துப்பு. -
விளக்கம்இனத்தார்மேல் அன்பில்லாதவனாகவும், வலிமையான துணை இல்லாதவனாகவும் தானும் வலிமை இல்லாதவனாகவும் உள்ள ஒருவன் எவ்வாறு பகைவரை வெல்வான்?
-
Translation
in EnglishNo kinsman’s love, no strength of friends has he;
How can he bear his foeman’s enmity? -
MeaningHow can he who is unloving, destitute of powerful aids, and himself without strength overcome the might of his foe ?
9
Nov.2014
0861. வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக
0861. Valiyaarkku Maaretral Oombuga
-
குறள் #0861
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்பகைமாட்சி (Pagaimaatchi)
The Might of Hatred
-
குறள்வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை. -
விளக்கம்தம்மைவிட வலியாரிடத்தில் பகையாக எதிர்த்து நிற்றலை விடுதல் வேண்டும்; தம்மைவிட மெலியவர் மீது பகை கொண்டு போர் செய்தலை விடாது விரும்புதல் வேண்டும்.
-
Translation
in EnglishWith stronger than thyself, turn from the strife away;
With weaker shun not, rather court the fray. -
MeaningAvoid offering resistance to the strong; (but) never fail to cherish enmity towards the weak.