9
Nov.2014
0900. இறந்தமைந்த சார்புடையர் ஆயினும்
0900. Irandhamaindha Saarbudaiyar Aayinum
-
குறள் #0900
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்பெரியாரைப் பிழையாமை (Periyaaraip Pilaiyaamai)
Not Offending the Great
-
குறள்இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்
சிறந்தமைந்த சீரார் செறின். -
விளக்கம்மிகச்சிறந்த தவமுடைய பெரியோர் சினந்தால் மிகப்பெரிய துணியை உடையவரும் பிழைக்க மாட்டார்.
-
Translation
in EnglishThough all-surpassing wealth of aid the boast,
If men in glorious virtue great are wrath, they’re lost. -
MeaningThough in possession of numerous auxiliaries, they will perish who are-exposed to the wrath of the noble whose penance is boundless.
9
Nov.2014
0899. ஏந்திய கொள்கையார் சீறின்
0899. Yendhiya Kolgaiyaar Seerin
-
குறள் #0899
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்பெரியாரைப் பிழையாமை (Periyaaraip Pilaiyaamai)
Not Offending the Great
-
குறள்ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும். -
விளக்கம்உயர்ந்த கொள்கையுடையோர் சினந்தால், அரசனும் தனது இடைக்காலத்திலேயே அரசநிலை கெட்டு அழிந்துவிடுவான்.
-
Translation
in EnglishWhen blazes forth the wrath of men of lofty fame,
Kings even fall from high estate and perish in the flame. -
MeaningIf those of exalted vows burst in a rage, even (Indra) the king will suffer a sudden loss and be entirely ruined.
9
Nov.2014
0898. குன்றன்னார் குன்ற மதிப்பின்
0898. Kundrannaar Kundra Mathippin
-
குறள் #0898
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்பெரியாரைப் பிழையாமை (Periyaaraip Pilaiyaamai)
Not Offending the Great
-
குறள்குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு
நின்றன்னார் மாய்வர் நிலத்து. -
விளக்கம்மலைபோன்ற பெருமையுடையவர், ஒருவனை அழிந்துபோக வேண்டும் என்று எண்ணினால், அவன் இவ்வுலகில் நிலை பெற்ற செல்வமுடையவனாயினும் தன் குடும்பத்தோடு அழிந்து விடுவான்.
-
Translation
in EnglishIf they, whose virtues like a mountain rise, are light esteemed;
They die from earth who, with their households, ever-during seemed. -
MeaningIf (the) hill-like (devotees) resolve on destruction, those who seemed to be everlasting will be destroyed root and branch from the earth.
9
Nov.2014
0897. வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும்
0897. Vagaimaanda Vaazhkkaiyum Vaanporulum
-
குறள் #0897
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்பெரியாரைப் பிழையாமை (Periyaaraip Pilaiyaamai)
Not Offending the Great
-
குறள்வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்
தகைமாண்ட தக்கார் செறின். -
விளக்கம்தவப்பெருமை மிக்க பெரியோர் கோபித்தால், எல்லா வகையாலும் மாட்சிமைப்பட்ட வாழ்க்கையும், மிக்க பொருளும் என்ன பயனுடையனவாகும்?
-
Translation
in EnglishThough every royal gift, and stores of wealth your life should crown,
What are they, if the worthy men of mighty virtue frown? -
MeaningIf a king incurs the wrath of the righteous great, what will become of his government with its splendid auxiliaries and (all) its untold wealth ?
9
Nov.2014
0896. எரியால் சுடப்படினும் உய்வுண்டாம்
0896. Eriyaal Sudappadinum Uyvundaam
-
குறள் #0896
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்பெரியாரைப் பிழையாமை (Periyaaraip Pilaiyaamai)
Not Offending the Great
-
குறள்எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார். -
விளக்கம்ஒருவன் தீயினால் சுடப்பட்டானாயினும் ஒருவாறு பிழைப்பான்; ஆனால், தவத்தால் பெரியவர்க்குப் பிழை செய்பவர் பிழைக்க மாட்டார்.
-
Translation
in EnglishThough in the conflagration caught, he may escape from thence:
He ‘scapes not who in life to great ones gives offence. -
MeaningThough burnt by a fire (from a forest), one may perhaps live; (but) never will he live who has shown disrespect to the great (devotees).
9
Nov.2014
0895. யாண்டுச்சென்று யாண்டும் உளராகார்
0895. Yaanduchchendru Yaandum Ularaagaar
-
குறள் #0895
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்பெரியாரைப் பிழையாமை (Periyaaraip Pilaiyaamai)
Not Offending the Great
-
குறள்யாண்டுச்சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின்
வேந்து செறப்பட் டவர். -
விளக்கம்கொடிய வலிய அரசனின் பகைக்கு உள்ளானவர், எங்கே சென்றாலும் எவ்விடத்தும் பிழைத்திருக்க முடியாது.
-
Translation
in EnglishWho dare the fiery wrath of monarchs dread,
Where’er they flee, are numbered with the dead. -
MeaningThose who have incurred the wrath of a cruel and mighty potentate will not prosper wherever they may go.
9
Nov.2014
0894. கூற்றத்தைக் கையால் விளித்தற்றால்
0894. Kootraththaik Kaiyaal Viliththatraal
-
குறள் #0894
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்பெரியாரைப் பிழையாமை (Periyaaraip Pilaiyaamai)
Not Offending the Great
-
குறள்கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல். -
விளக்கம்வலிமையுடையவருக்கு வலிமையில்லாதவர் தீங்கு செய்தல், தானே வரும் கூற்றுவனை அவன் வருவதற்கு முன்னே கைகாட்டி அழைப்பது போன்றதாகும்.
-
Translation
in EnglishWhen powerless man ‘gainst men of power will evil deeds essay,
Tis beck’ning with the hand for Death to seize them for its prey. -
MeaningThe weak doing evil to the strong is like beckoning Yama to come (and destroy them).
9
Nov.2014
0893. கெடல்வேண்டின் கேளாது செய்க
0893. Kedalvendin Kelaathu Seiga
-
குறள் #0893
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்பெரியாரைப் பிழையாமை (Periyaaraip Pilaiyaamai)
Not Offending the Great
-
குறள்கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்
ஆற்று பவர்கண் இழுக்கு. -
விளக்கம்ஒருவன், தான் கெட்டுப்போக விரும்பினால் பெரியாரைக் கேளாமலே ஒரு செயலைச் செய்க. தன்னைக் கொன்றுகொள்ள விரும்பினால் வலிமையுடையவருக்குக் குற்றம் செய்ய வேண்டும்.
-
Translation
in EnglishWho ruin covet let them shut their ears, and do despite
To those who, where they list to ruin have the might. -
MeaningIf a person desires ruin, let him not listen to the righteous dictates of law, but commit crimes against those who are able to slay (other sovereigns).
9
Nov.2014
0892. பெரியாரைப் பேணாது ஒழுகிற்
0892. Periyaaraip Penaathu Ozhugir
-
குறள் #0892
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்பெரியாரைப் பிழையாமை (Periyaaraip Pilaiyaamai)
Not Offending the Great
-
குறள்பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்
பேரா இடும்பை தரும். -
விளக்கம்ஆற்றல் மிக்க பெரியாரை மதியாமல் நடந்தால், அப்பெரியவரால் நீங்காத துன்பம் உண்டாகும்.
-
Translation
in EnglishIf men will lead their lives reckless of great men’s will,
Such life, through great men’s powers, will bring perpetual ill. -
MeaningTo behave without respect for the great (rulers) will make them do (us) irremediable evils.
9
Nov.2014
0891. ஆற்றுவார் ஆற்றல் இகழாமை
0891. Aatruvaar Aatral Igazhaamai
-
குறள் #0891
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்பெரியாரைப் பிழையாமை (Periyaaraip Pilaiyaamai)
Not Offending the Great
-
குறள்ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை. -
விளக்கம்எடுத்த செயலை முடிக்கும் வல்லமையுடையவரின் வல்லமையை இகழாதிருத்தல், தம்மைக் காப்பவர் செய்துகொள்ளும் காவல்களுக்கெல்லாம் மேலானது.
-
Translation
in EnglishThe chiefest care of those who guard themselves from ill,
Is not to slight the powers of those who work their mighty will. -
MeaningNot to disregard the power of those who can carry out (their wishes) is more important than all the watchfulness of those who guard (themselves against evil).