9
Nov.2014
1190. பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே
1190. Pasappenap Perperuthal Nandre
-
குறள் #1190
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்பசப்புறு பருவரல் (Pasappuru Paruvaral)
The Pallid Hue
-
குறள்பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்
நல்காமை தூற்றார் எனின். -
விளக்கம்முன்பு மகிழ்வித்துச் சேர்ந்தவர் இன்று அருளாமல் இருப்பதை ஊரார் தூற்றமாட்டாராயின், ‘நான் பசலை அடைந்தேன்’ என்று பெயர் பெறுதல் நல்லதே.
-
Translation
in English‘Tis well, though men deride me for my sickly hue of pain;
If they from calling him unkind, who won my love, refrain. -
MeaningIt would be good to be said of me that I have turned sallow, if friends do not reproach with unkindness him who pleased me (then).
9
Nov.2014
1189. பசக்கமன் பட்டாங்கென் மேனி
1189. Pasakkaman Pattaanken Meni
-
குறள் #1189
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்பசப்புறு பருவரல் (Pasappuru Paruvaral)
The Pallid Hue
-
குறள்பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்
நன்னிலையர் ஆவர் எனின். -
விளக்கம்பிரிவுக்கு யான் உடன்படும் படியாகச் செய்தவர் நல்ல நிலையினராவராயின், என் உடம்பில் முன் படர்ந்தது போலப் பசலை படர்வதாக.
-
Translation
in EnglishWell! let my frame, as now, be sicklied o’er with pain,
If he who won my heart’s consent, in good estate remain! -
MeaningIf he is clear of guilt who has conciliated me (to his departure) let my body suffer its due and turn sallow.
9
Nov.2014
1188. பசந்தாள் இவள்என்பது அல்லால்
1188. Pasanthaal Ivalenbathu Allaal
-
குறள் #1188
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்பசப்புறு பருவரல் (Pasappuru Paruvaral)
The Pallid Hue
-
குறள்பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத்
துறந்தார் அவர்என்பார் இல். -
விளக்கம்‘இவள் பசலை நிறமடைந்தாள்’ என்று என்னைப் பழித்துக் கூருவதன்றி, ‘இவளை அவர் பிரிந்து சென்றுவிட்டார்’ என்பார் யாருமிலர்.
-
Translation
in EnglishOn me, because I pine, they cast a slur;
But no one says, ‘He first deserted her.’ -
MeaningBesides those who say “she has turned sallow” there are none who say “he has forsaken her”.
9
Nov.2014
1187. புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன்
1187. Pullik Kidanthen Pudaipeyarndhen
-
குறள் #1187
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்பசப்புறு பருவரல் (Pasappuru Paruvaral)
The Pallid Hue
-
குறள்புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
அள்ளிக்கொள் வற்றே பசப்பு. -
விளக்கம்காதலரைத் தழுவிக் கிடந்தேன். சிறிது விலகினேன். அவ்வளவில் அள்ளிக் கொள்ளுவது போலப் பசலை என் உடம்பு முழுவதும் பரவி நின்றது.
-
Translation
in EnglishI lay in his embrace, I turned unwittingly;
Forthwith this hue, as you might grasp it, came on me. -
MeaningI who was in close embrace just turned aside and the moment I did so, sallowness came on me like something to be seized on.
9
Nov.2014
1186. விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல்
1186. Vilakkatram Paarkkum Irulepol
-
குறள் #1186
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்பசப்புறு பருவரல் (Pasappuru Paruvaral)
The Pallid Hue
-
குறள்விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு. -
விளக்கம்விளக்கின் ஒளிகுறையும் சமயத்தைப் பார்த்து இருள் வருவது போல் காதலரின் சேர்க்கை முடியும் சமயம் பார்த்துப் பசலை நிறம் நெருங்கிவரும்.
-
Translation
in EnglishAs darkness waits till lamp expires, to fill the place,
This pallor waits till I enjoy no more my lord’s embrace. -
MeaningJust as darkness waits for the failing light; so does sallowness wait for the laxity of my husband’s intercourse.
9
Nov.2014
1185. உவக்காண்எம் காதலர் செல்வார்
1185. Uvakkaanem Kaathalar Selvaar
-
குறள் #1185
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்பசப்புறு பருவரல் (Pasappuru Paruvaral)
The Pallid Hue
-
குறள்உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்
மேனி பசப்பூர் வது. -
விளக்கம்அங்குப் பார்! எம் தலைவர் பிரிந்து செல்கின்றார்! இங்குப் பார்! என் மேனியில் பசலை நிறம் வந்து படர்கின்றது.
-
Translation
in EnglishMy lover there went forth to roam;
This pallor of my frame usurps his place at home. -
MeaningJust as my lover departed then, did not sallowness spread here on my person ?
9
Nov.2014
1184. உள்ளுவன் மன்யான் உரைப்பது
1184. Ulluvan Manyaan Uraippathu
-
குறள் #1184
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்பசப்புறு பருவரல் (Pasappuru Paruvaral)
The Pallid Hue
-
குறள்உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்
கள்ளம் பிறவோ பசப்பு. -
விளக்கம்நான் காதலரை மனத்தில் நினைக்கின்றேன்; நான் பேசுவதும் அவரது நற்குணங்களையே; அவ்வாறு இருந்தும் இப்பசலை நிறம் வஞ்சனையாக என் உடம்பில் பரவுகின்றது.
-
Translation
in EnglishI meditate his words, his worth is theme of all I say,
This sickly hue is false that would my trust betray. -
MeaningI think (of him); and what I speak about is but his excellence; still is there sallowness; and this is deceitful.
9
Nov.2014
1183. சாயலும் நாணும் அவர்கொண்டார்
1183. Saayalum Naanum Avarkondaar
-
குறள் #1183
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்பசப்புறு பருவரல் (Pasappuru Paruvaral)
The Pallid Hue
-
குறள்சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து. -
விளக்கம்அவர் இக்காதல் நோயையும், பசலையையும் எனக்குத் தந்து, கைம்மாறாக என் அழகையும் நாணையும் பெற்றுக் கொண்டார்.
-
Translation
in EnglishOf comeliness and shame he me bereft,
While pain and sickly hue, in recompense, he left. -
MeaningHe has taken (away) my beauty and modesty, and given me instead disease and sallowness.
9
Nov.2014
1182. அவர்தந்தார் என்னும் தகையால்
1182. Avarthanthaar Ennum Thagaiyaal
-
குறள் #1182
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்பசப்புறு பருவரல் (Pasappuru Paruvaral)
The Pallid Hue
-
குறள்அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்
மேனிமேல் ஊரும் பசப்பு. -
விளக்கம்இப்பசலை நிறமானது, காதலர் தந்தார் என்னும் களிப்பு மிகுதியால் என் உடம்பு முழுவதிலும் ஏறிப் பரவுகின்றது.
-
Translation
in English‘He gave’: this sickly hue thus proudly speaks,
Then climbs, and all my frame its chariot makes. -
MeaningSallowness, as if proud of having been caused by him, would now ride on my person.
9
Nov.2014
1181. நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன்
1181. Nayanthavarkku Nalkaamai Nerndhen
-
குறள் #1181
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்பசப்புறு பருவரல் (Pasappuru Paruvaral)
The Pallid Hue
-
குறள்நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
பண்பியார்க்கு உரைக்கோ பிற. -
விளக்கம்காதலர் பிரிந்து செல்வதற்கு நான் உடன்பட்டேன். அவர் பிரிந்த வருத்தத்தினால் என் உடல் நிறம் மாறியதை யாரிடம் சொல்லுவேன்?
-
Translation
in EnglishI willed my lover absent should remain;
Of pining’s sickly hue to whom shall I complain? -
MeaningI who (then) consented to the absence of my loving lord, to whom can I (now) relate the fact of my having turned sallow.