0730. உளரெனினும் இல்லாரொடு ஒப்பர்
0730. Ulareninum Illaarodu Oppar
-
குறள் #0730
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
-
அதிகாரம்அவை அஞ்சாமை (Avai Anjaamai)
Not to Dread the Council
-
குறள்உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார். -
விளக்கம்அவைக்கு அஞ்சித் தாம் கற்றவற்றை அவைக்கு ஏற்பச் சொல்ல இயலாதவர் உயிரோடு இருந்தாராயினும் இறந்தவரோடு ஒப்பர்.
-
Translation
in EnglishWho what they’ve learned, in penetrating words know not to say,
The council fearing, though they live, as dead are they. -
MeaningThose who through fear of the assembly are unable to set forth their learning in an interesting manner, though alive, are yet like the dead.
Category:Thirukural
0729. கல்லா தவரின் கடையென்ப
0729. Kallaa Thavarin Kadaiyenba
-
குறள் #0729
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
-
அதிகாரம்அவை அஞ்சாமை (Avai Anjaamai)
Not to Dread the Council
-
குறள்கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்
நல்லா ரவையஞ்சு வார். -
விளக்கம்நூல்களைக் கற்றறிந்திருந்தும் அறிவுடையோர் உள்ள அவைக்கு அஞ்சுகின்றவர், கல்லாதவரைவிடக் கடைப்பட்டவராவர் என்று அறிவுடையோர் கூறுவர்.
-
Translation
in EnglishWho, though they’ve learned, before the council of the good men quake,
Than men unlearn’d a lower place must take. -
MeaningThey who, though they have learned and understood, are yet afraid of the assembly of the good, are said to be inferior (even) to the illiterate.
Category:Thirukural
0728. பல்லவை கற்றும் பயமிலரே
0728. Pallavai Katrum Payamilare
-
குறள் #0728
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
-
அதிகாரம்அவை அஞ்சாமை (Avai Anjaamai)
Not to Dread the Council
-
குறள்பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்
நன்கு செலச்சொல்லா தார். -
விளக்கம்நல்லவர் உள்ள அவையில் அவர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு சொல்லவியலாதவர், பல நூல்களைக் கற்றாராயினும் பயனில்லாதவராவர்.
-
Translation
in EnglishThough many things they’ve learned, yet useless are they all,
To man who cannot well and strongly speak in council hall. -
MeaningThose who cannot agreeably speak good things before a good assembly are indeed unprofitable persons inspite of all their various acquirements.
Category:Thirukural
0727. பகையகத்துப் பேடிகை ஒள்வாள்
0727. Pagaiyagaththup Pedigai Olvaal
-
குறள் #0727
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
-
அதிகாரம்அவை அஞ்சாமை (Avai Anjaamai)
Not to Dread the Council
-
குறள்பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து
அஞ்சு மவன்கற்ற நூல். -
விளக்கம்அவைக்கு அஞ்சுகின்றவன் கற்ற நூல், பகைவர் நடுவே பேடித் தன்மையுள்ளவன் கையில் பிடித்த கூரிய வாளை ஒக்கும்.
-
Translation
in EnglishAs shining sword before the foe which ‘sexless being’ bears,
Is science learned by him the council’s face who fears. -
MeaningThe learning of him who is diffident before an assembly is like the shining sword of an hermaphrodite in the presence of his foes.
Category:Thirukural
0726. வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு
0726. Vaaloden Vankannar Allaarkku
-
குறள் #0726
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
-
அதிகாரம்அவை அஞ்சாமை (Avai Anjaamai)
Not to Dread the Council
-
குறள்வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்
நுண்ணவை அஞ்சு பவர்க்கு. -
விளக்கம்வீரம் இல்லாதவர்க்கும் வாட்போருக்கும் என்ன தொடர்பு இருக்கின்றது? அதுபோல் அறிவுடையோர் அவையில் அஞ்சுகின்றவர்க்கும் நூலுக்கும் என்ன தொடர்பு இருக்கின்றது?
-
Translation
in EnglishTo those who lack the hero’s eye what can the sword avail?
Or science what, to those before the council keen who quail? -
MeaningWhat have they to do with a sword who are not valiant, or they with learning who are afraid of an intelligent assembly ?
Category:Thirukural
0725. ஆற்றின் அளவறிந்து கற்க
0725. Aatrin Alavarindhu Karka
-
குறள் #0725
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
-
அதிகாரம்அவை அஞ்சாமை (Avai Anjaamai)
Not to Dread the Council
-
குறள்ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
மாற்றங் கொடுத்தற் பொருட்டு. -
விளக்கம்வேற்று அரசரவையில் கேட்ட கேள்விக்கு அஞ்சாது மறுமொழி சொல்வதற்குத் தருக்க நூற் பொருள் தெரிந்து கற்றல் வேண்டும்.
-
Translation
in EnglishBy rule, to dialectic art your mind apply,
That in the council fearless you may make an apt reply. -
MeaningIn order to reply fearlessly before a foreign court, (ministers) should learn logic according to the rules (of grammar).
Category:Thirukural
0724. கற்றார்முன் கற்ற செலச்சொல்லித்
0724. Katraarmun Katra Selachchollith
-
குறள் #0724
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
-
அதிகாரம்அவை அஞ்சாமை (Avai Anjaamai)
Not to Dread the Council
-
குறள்கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற
மிக்காருள் மிக்க கொளல். -
விளக்கம்கற்றோர் உள்ள அவையில் தாம் கற்றவற்றை அவர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு சொல்லித் தாம் கற்றவற்றைவிட அதிகமான பொருளை அதிகமாகக் கற்றவரிடத்தில் அறிந்து கொள்ளுதல் வேண்டும்.
-
Translation
in EnglishWhat you have learned, in penetrating words speak out before
The learn’d; but learn what men more learn’d can teach you more. -
Meaning(Ministers) should agreeably set forth their acquirements before the learned and acquire more (knowledge) from their superiors (in learning).
Category:Thirukural
0723. பகையகத்துச் சாவார் எளியர்
0723. Pagaiyagaththuch Chaavaar Eliyar
-
குறள் #0723
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
-
அதிகாரம்அவை அஞ்சாமை (Avai Anjaamai)
Not to Dread the Council
-
குறள்பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத்து அஞ்சா தவர். -
விளக்கம்பகைவர் நடுவே அஞ்சாது புகுந்து இறக்க வல்லவர் உலகத்தில் பலராவர்; அவையில் அஞ்சாமல் சென்று சொல்ல வல்லவர் சிலராவர்.
-
Translation
in EnglishMany encountering death in face of foe will hold their ground;
Who speak undaunted in the council hall are rarely found. -
MeaningMany indeed may (fearlessly) die in the presence of (their) foes; (but) few are those who are fearless in the assembly (of the learned).
Category:Thirukural
0722. கற்றாருள் கற்றார் எனப்படுவர்
0722. Katraarul Katraar Enappaduvar
-
குறள் #0722
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
-
அதிகாரம்அவை அஞ்சாமை (Avai Anjaamai)
Not to Dread the Council
-
குறள்கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார். -
விளக்கம்கற்றவர்கள் உள்ள அவையில், தாம் கற்றறிந்தவற்றை அவர்கள் ஏற்குமாறு சொல்லுபவர், கற்றவர்களுள் கற்றவர் எனப்படுவர்.
-
Translation
in EnglishWho what they’ve learned, in penetrating words heve learned to say,
Before the learn’d among the learn’d most learn’d are they. -
MeaningThose who can agreeably set forth their acquirements before the learned will be regarded as the most learned among the learned.
Category:Thirukural
0721. வகையறிந்து வல்லவை வாய்சோரார்
0721. Vagaiyarindhu Vallavai Vaaisoraar
-
குறள் #0721
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
-
அதிகாரம்அவை அஞ்சாமை (Avai Anjaamai)
Not to Dread the Council
-
குறள்வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர். -
விளக்கம்சொற்களைத் தொகுத்துக் கூறும் முறையினை அறிந்தவர், அவையின் தன்மையை அறிந்து, அறிஞர் அவையில் பிழைபடச் சொல்லமாட்டார்.
-
Translation
in EnglishMen, pure in heart, who know of words the varied force,
The mighty council’s moods discern, nor fail in their discourse. -
MeaningThe pure who know the classification of words having first ascertained the nature (of the court) will not (through fear) falter in their speech before the powerful body.
Category:Thirukural
0720. அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால்
0720. Anganaththul Ukka Amizhthatraal
-
குறள் #0720
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
-
அதிகாரம்அவை அறிதல் (Avai Arithal)
The Knowledge of the Council Chamber
-
குறள்அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்
அல்லார்முன் கோட்டி கொளல். -
விளக்கம்அறிவால் தம்மினத்தாரல்லாதார் அவையில் நல்லவர் ஒன்றையும் சொல்லக்கூடாது; அவ்வாறு சொன்னால் தூய்மையற்ற முற்றத்தில் விழுந்த அமிழ்து போன்று வீணாகும்.
-
Translation
in EnglishAmbrosia in the sewer spilt, is word
Spoken in presence of the alien herd. -
MeaningTo utter (a good word) in the assembly of those who are of inferior rank is like dropping nectar on the ground.
Category:Thirukural
0719. புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க
0719. Pullavaiyul Pochchaandhum Sollarka
-
குறள் #0719
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
-
அதிகாரம்அவை அறிதல் (Avai Arithal)
The Knowledge of the Council Chamber
-
குறள்புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
நன்குசலச் சொல்லு வார். -
விளக்கம்நல்லோர் இருக்கும் அவையில், அவர்கள் மனத்தில் பதியுமாறு நல்ல பொருள்களைச் சொல்ல வல்லவர், அறிவிலார் உள்ள அவையில் எதையும் மறந்தும் சொல்லக் கூடாது.
-
Translation
in EnglishIn councils of the good, who speak good things with penetrating power,
In councils of the mean, let them say nought, e’en in oblivious hour. -
MeaningThose who are able to speak good things impressively in an assembly of the good should not even forgetfully speak them in that of the low.
Category:Thirukural
0718. உணர்வ துடையார்முன் சொல்லல்
0718. Unarva Thudaiyaarmun Sollal
-
குறள் #0718
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
-
அதிகாரம்அவை அறிதல் (Avai Arithal)
The Knowledge of the Council Chamber
-
குறள்உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர்சொரிந் தற்று. -
விளக்கம்தாமே அறியும் அறிவுடையார் முன்பு ஒன்றைச் சொல்வது, வளர்கின்ற பயிர் நின்ற பாத்தியுள் தண்ணீரை ஊற்றுவது போன்றதாகும்.
-
Translation
in EnglishTo speak where understanding hearers you obtain,
Is sprinkling water on the fields of growing grain! -
MeaningLecturing to those who have the ability to understand (for themselves) is like watering a bed of plants that are growing (of themselves).
Category:Thirukural
0717. கற்றறிந்தார் கல்வி விளங்கும்
0717. Katrarindhaar Kalvi Vilangum
-
குறள் #0717
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
-
அதிகாரம்அவை அறிதல் (Avai Arithal)
The Knowledge of the Council Chamber
-
குறள்கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்
சொல்தெரிதல் வல்லார் அகத்து. -
விளக்கம்குற்றமின்றிச் சொற்களை ஆராய்வதில் வல்லவர் உள்ள அவையில், பல நூல்களையும் கற்றறிந்தவரின் கல்வியானது விளங்கித் தோன்றும்.
-
Translation
in EnglishThe learning of the learned sage shines bright
To those whose faultless skill can value it aright. -
MeaningThe learning of those who have read and understood (much) will shine in the assembly of those who faultlessly examine (the nature of) words.
Category:Thirukural
0716. ஆற்றின் நிலைதளர்ந் தற்றே
0716. Aatrin Nilaithalarndh Thatre
-
குறள் #0716
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
-
அதிகாரம்அவை அறிதல் (Avai Arithal)
The Knowledge of the Council Chamber
-
குறள்ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்
ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு. -
விளக்கம்அகன்ற நூற்பொருளை அறிந்து, அதன் மெய்ம்மையை உணர வல்லவர் அவையின் முன்பு ஒருவன் சொற்குற்றப்படுதல், ஒழுக்க நெறியில் செல்கின்றவன் நிலைதளர்ந்து வீழ்வது போலாகும்.
-
Translation
in EnglishAs in the way one tottering falls, is slip before
The men whose minds are filled with varied lore. -
Meaning(For a minister) to blunder in the presence of those who have acquired a vast store of learning and know (the value thereof) is like a good man stumbling (and falling away) from the path (of virtue).
Category:Thirukural
0715. நன்றென்ற வற்றுள்ளும் நன்றே
0715. Nandrendra Vatrullum Nandre
-
குறள் #0715
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
-
அதிகாரம்அவை அறிதல் (Avai Arithal)
The Knowledge of the Council Chamber
-
குறள்நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்
முந்து கிளவாச் செறிவு. -
விளக்கம்தம்மைவிட அறிவால் மேம்பட்டவர் இருக்கும் அவையில் முன்னே சென்று ஒன்றைச் சொல்லாத அடக்கம், நல்லன என்று சிறப்பித்துச் சொல்லப்பட்ட குணங்களுள் நல்லதாகும்.
-
Translation
in EnglishMidst all good things the best is modest grace,
That speaks not first before the elders’ face. -
MeaningThe modesty by which one does not rush forward and speak in (an assembly of) superiors is the best among all (one’s) good qualities.
Category:Thirukural
0714. ஒளியார்முன் ஒள்ளிய ராதல்
0714. Oliyaarmun Olliya Raathal
-
குறள் #0714
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
-
அதிகாரம்அவை அறிதல் (Avai Arithal)
The Knowledge of the Council Chamber
-
குறள்ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணம் கொளல். -
விளக்கம்அறிவுடையோர்முன் அறிவுடையோராகப் பேசுதல் வேண்டும். அறியாதவர்முன் அறியாதவர் போல் பேசுதல் வேண்டும்.
-
Translation
in EnglishBefore the bright ones shine as doth the light!
Before the dull ones be as purest stucco white! -
MeaningMinisters should be lights in the assembly of the enlightned, but assume the pure whiteness of mortar (ignorance) in that of fools.
Category:Thirukural
0713. அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர்
0713. Avaiyariyaar Sollalmer Kolbavar
-
குறள் #0713
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
-
அதிகாரம்அவை அறிதல் (Avai Arithal)
The Knowledge of the Council Chamber
-
குறள்அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்
வகையறியார் வல்லதூஉம் இல். -
விளக்கம்அவையின் தன்மையை அறியாது ஒன்றைச் சொல்ல முற்படுபவர், சொல்லின் வகையையும் அறியார்; சிறந்த படிப்பும் அவர்க்குப் பயன்படுவதில்லை.
-
Translation
in EnglishUnversed in councils, who essays to speak.
Knows not the way of suasive words,- and all is weak. -
MeaningThose who undertake to speak without knowing the (nature of the) court are ignorant of the quality of words as well as devoid of the power (of learning).
Category:Thirukural
0712. இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக
0712. Idaitherindhu Nangunarndhu Solluga
-
குறள் #0712
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
-
அதிகாரம்அவை அறிதல் (Avai Arithal)
The Knowledge of the Council Chamber
-
குறள்இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்
நடைதெரிந்த நன்மை யவர். -
விளக்கம்சொற்களின் வகையை ஆராய்ந்தறிந்த நல்லறிவுடையவர், சமயமறிந்து குற்றப்படாமல் தெளிந்து சொல்வாராக.
-
Translation
in EnglishGood men to whom the arts of eloquence are known,
Should seek occasion meet, and say what well they’ve made their own. -
MeaningLet the good who know the uses of words speak with a clear knowledge after ascertaining the time (suited to the court).
Category:Thirukural
0711. அவையறிநது ஆராய்ந்து சொல்லுக
0711. Avaiyarindhu Aaraindhu Solluga
-
குறள் #0711
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
-
அதிகாரம்அவை அறிதல் (Avai Arithal)
The Knowledge of the Council Chamber
-
குறள்அவையறிநது ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர். -
விளக்கம்சொற்களைப் பயன்படுத்தத் தெரிந்த தூய குணமுடையவர், தாம் சொல்லும்போது அவையை அறிந்து ஆராய்ந்து சொல்வாராக.
-
Translation
in EnglishMen pure in heart, who know of words the varied force,
Should to their audience known adapt their well-arranged discourse. -
MeaningLet the pure who know the arrangement of words speak with deliberation after ascertaining (the nature of) the court (then assembled).
Category:Thirukural
0710. நுண்ணியம் என்பார் அளக்குங்கோல்
0710. Nunniyam Enbaar Alakkungkol
-
குறள் #0710
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
-
அதிகாரம்குறிப்பறிதல் (Kuripparithal)
The Knowledge of Indications
-
குறள்நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்
கண்ணல்லது இல்லை பிற. -
விளக்கம்நுட்பமான அறிவுடையவர் என்றிருக்கும் அமைச்சர், அரசனது கருத்தை அளக்கும் கோலாவது, அராயுங்கால் அவனது கண்களேயன்றி வேறு இல்லை.
-
Translation
in EnglishThe men of keen discerning soul no other test apply
(When you their secret ask) than man’s revealing eye. -
MeaningThe measuring-rod of those (ministers) who say “we are acute” will on inquiry be found to be their (own) eyes and nothing else.
Category:Thirukural
0709. பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும்
0709. Pagaimaiyum Kenmaiyum Kannuraikkum
-
குறள் #0709
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
-
அதிகாரம்குறிப்பறிதல் (Kuripparithal)
The Knowledge of Indications
-
குறள்பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்
வகைமை உணர்வார்ப் பெறின். -
விளக்கம்கண்களின் குறிப்பு வகைகளை அறிய வல்லவரைப் பெற்றால், பிறர் மனத்திலுள்ள பகைத் தன்மையையும் நட்புத் தன்மையையும் அவர்களின் கண்களே தெரிவித்துவிடும்.
-
Translation
in EnglishThe eye speaks out the hate or friendly soul of man;
To those who know the eye’s swift varying moods to scan. -
MeaningIf a king gets ministers who can read the movements of the eye, the eyes (of foreign kings) will (themselves) reveal (to him) their hatred or friendship.
Category:Thirukural
0708. முகம்நோக்கி நிற்க அமையும்
0708. Mugamnokki Nirka Amaiyum
-
குறள் #0708
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
-
அதிகாரம்குறிப்பறிதல் (Kuripparithal)
The Knowledge of Indications
-
குறள்முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி
உற்ற துணர்வார்ப் பெறின். -
விளக்கம்மனத்தில் நிகழ்வதைக் குறிப்பால் உணர்ந்து, நேர்ந்த துன்பத்தைத் தீர்ப்பாரைப் பெற்றால், அவர் முகத்தைப் பார்த்து நிற்றலே துன்பத்தை ஒழிப்பதற்குப் போதுமானது.
-
Translation
in EnglishTo see the face is quite enough, in presence brought,
When men can look within and know the lurking thought. -
MeaningIf the king gets those who by looking into his mind can understand (and remove) what has occurred (to him) it is enough that he stand looking at their face.
Category:Thirukural
0707. முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ
0707. Mugaththin Muthukkuraindhathu Undo
-
குறள் #0707
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
-
அதிகாரம்குறிப்பறிதல் (Kuripparithal)
The Knowledge of Indications
-
குறள்முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்
காயினும் தான்முந் துறும். -
விளக்கம்ஒருவன் விருப்பம் கொண்டாலும் வெறுப்பு அடைந்தாலும் முகம் அதனை அறிந்து மலர்ந்தும் சுருங்கியும் காட்டும்; ஆகையால் அந்த முகம்போல அறிவு மிக்கது வேறு உண்டோ?
-
Translation
in EnglishThan speaking countenance hath aught more prescient skill?
Rejoice or burn with rage, ’tis the first herald still! -
MeaningIs there anything so full of knowledge as the face ? (No.) it precedes the mind, whether (the latter is) pleased or vexed.
Category:Thirukural
0706. அடுத்தது காட்டும் பளிங்குபோல்
0706. Aduththathu Kaattum Palingupol
-
குறள் #0706
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
-
அதிகாரம்குறிப்பறிதல் (Kuripparithal)
The Knowledge of Indications
-
குறள்அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம். -
விளக்கம்தன்னையடுத்த பொருளின் நிறத்தைத் தான் கொண்டு காட்டும் பளிங்குபோல, ஒருவன் மனத்தில் இருப்பதை அவன் முகம் காட்டும்.
-
Translation
in EnglishAs forms around in crystal mirrored clear we find,
The face will show what’s throbbing in the mind. -
MeaningAs the mirror reflects what is near so does the face show what is uppermost in the mind.
Category:Thirukural
0705. குறிப்பிற் குறிப்புணரா வாயின்
0705. Kurippir Kuripunaraa Vaayin
-
குறள் #0705
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
-
அதிகாரம்குறிப்பறிதல் (Kuripparithal)
The Knowledge of Indications
-
குறள்குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்
என்ன பயத்தவோ கண். -
விளக்கம்குறித்ததைக் காண வல்ல கண்கள், பிறர் குறிப்பினை அறியவில்லையாயின், ஒருவனுக்கு அவற்றால் என்ன பயன்?
-
Translation
in EnglishBy sign who knows not sings to comprehend, what gain,
‘Mid all his members, from his eyes does he obtain? -
MeaningOf what use are the eyes amongst one’s members, if they cannot by their own indications dive those of another ?.
Category:Thirukural
0704. குறித்தது கூறாமைக் கொள்வாரோ
0704. Kuriththathu Kooraamaik Kolvaaro
-
குறள் #0704
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
-
அதிகாரம்குறிப்பறிதல் (Kuripparithal)
The Knowledge of Indications
-
குறள்குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை
உறுப்போ ரனையரால் வேறு. -
விளக்கம்ஒருவன் மனத்தில் நினைத்ததை அவன் சொல்லாமலே அறிய வல்லவரோடு, அவ்வாறு அறிய மாட்டாதவர் உறுப்பால் ஒத்திருப்பினும் அறிவால் வேறுபட்டவராவர்.
-
Translation
in EnglishWho reads what’s shown by signs, though words unspoken be,
In form may seem as other men, in function nobler far is he. -
MeaningThose who understand one’s thoughts without being informed (thereof) and those who do not, may (indeed) resemble one another bodily; still are they different (mentally).
Category:Thirukural
0703. குறிப்பிற் குறிப்புணர் வாரை
0703. Kurippir Kurippunar Vaarai
-
குறள் #0703
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
-
அதிகாரம்குறிப்பறிதல் (Kuripparithal)
The Knowledge of Indications
-
குறள்குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
யாது கொடுத்தும் கொளல். -
விளக்கம்குறிப்பினால் மனத்தில் உள்ள கருத்தை அறியும் தன்மையுடையவரை அரசர் தமது உறுப்புகளுள் யாதொன்றைக் கொடுத்தாயினும் தமக்குத் துணையாகக் கொள்ளுதல் வேண்டும்.
-
Translation
in EnglishWho by the sign the signs interprets plain,
Give any member up his aid to gain. -
MeaningThe king should ever give whatever (is asked) of his belongings and secure him who, by the indications (of his own mind) is able to read those of another.
Category:Thirukural
0702. ஐயப் படாஅது அகத்தது
0702. Aiyap Padaaadhu Agaththathu
-
குறள் #0702
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
-
அதிகாரம்குறிப்பறிதல் (Kuripparithal)
The Knowledge of Indications
-
குறள்ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல். -
விளக்கம்ஒருவனது மனத்தில் உள்ளதை ஐயப்படாமல் அறிய வல்லவனைத் தெய்வத்துக்குச் சமமாக மதிக்க வேண்டும்.
-
Translation
in EnglishUndoubting, who the minds of men can scan,
As deity regard that gifted man. -
MeaningHe is to be esteemed a god who is able to ascertain without a doubt what is within (one’s mind).
Category:Thirukural
0701. கூறாமை நோக்கிக் குறிப்பறிவான்
0701. Kooraamai Nokkik Kuripparivaan
-
குறள் #0701
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
-
அதிகாரம்குறிப்பறிதல் (Kuripparithal)
The Knowledge of Indications
-
குறள்கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக் கணி. -
விளக்கம்ஒருவன் நினைப்பதை அவன் சொல்லாமலே முகத்தைப் பார்த்து அறிபவன், எப்பொழுதும் கடல் சூழ்ந்த உலகத்தவர்க்கு ஓர் அணியாவான்.
-
Translation
in EnglishWho knows the sign, and reads unuttered thought, the gem is he,
Of earth round traversed by the changeless sea. -
MeaningThe minister who by looking (at the king) understands his mind without being told (of it), will be a perpetual ornament to the world which is surrounded by a never-drying sea.
Category:Thirukural
0700. பழையம் எனக்கருதிப் பண்பல்ல
0700. Pazhaiyam Enakkaruthip Panballa
-
குறள் #0700
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
-
அதிகாரம்மன்னரைச் சேர்ந்தொழுகல் (Mannaraich Cherndhozhugal)
Conduct in the Presence of the King
-
குறள்பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்
கெழுதகைமை கேடு தரும். -
விளக்கம்அரசனுக்கு யாம் பழைய பழக்கமுடையோம் எனக் கருதித் தகாதனவற்றைச் செய்யும் உரிமை கேட்டினைத் தரும்.
-
Translation
in EnglishWho think ‘We’re ancient friends’ and do unseemly things;
To these familiarity sure ruin brings. -
MeaningThe (foolish) claim with which a minister does unbecoming acts because of his (long) familiarity (with the king) will ensure his ruin.
Category:Thirukural
0699. கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத
0699. Kolappattem Endrennik Kollaatha
-
குறள் #0699
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
-
அதிகாரம்மன்னரைச் சேர்ந்தொழுகல் (Mannaraich Cherndhozhugal)
Conduct in the Presence of the King
-
குறள்கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்கற்ற காட்சி யவர். -
விளக்கம்கலக்கமற்ற தெளிந்த அறிவினையுடையார், ‘அரசனால் நாம் நன்கு மதிக்கப்பட்டோம்’ என்று எண்ணி, அவன் விரும்பாதவற்றைச் செய்யமாட்டார்.
-
Translation
in English‘We’ve gained his grace, boots nought what graceless acts we do’,
So deem not sages who the changeless vision view. -
MeaningThose whose judgement is firm will not do what is disagreeable (to the sovereign) saying (within themselves) “We are esteemed by the king”.
Category:Thirukural
0698. இளையர் இனமுறையர் என்றிகழார்
0698. Ilaiyar Inamuraiyar Endrigazhaar
-
குறள் #0698
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
-
அதிகாரம்மன்னரைச் சேர்ந்தொழுகல் (Mannaraich Cherndhozhugal)
Conduct in the Presence of the King
-
குறள்இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற
ஒளியோடு ஒழுகப் படும். -
விளக்கம்மன்னரை ‘இவர் நமக்கு இளையவர், இவர் எமக்கு உறவினர்’ என்று இகழாது அவரது நிலைக்கு ஏற்றவாறு ஒழுகுதல் வேண்டும்.
-
Translation
in EnglishSay not, ‘He’s young, my kinsman,’ despising thus your king;
But reverence the glory kingly state doth bring. -
MeaningMinisters should behave in accordance with the (Divine) light in the person of kings and not despise them saying, “He is our junior (in age) and connected with our family!”.
Category:Thirukural
0697. வேட்பன சொல்லி வினையில
0697. Vetpana Solli Vinaiyila
-
குறள் #0697
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
-
அதிகாரம்மன்னரைச் சேர்ந்தொழுகல் (Mannaraich Cherndhozhugal)
Conduct in the Presence of the King
-
குறள்வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல். -
விளக்கம்அரசன் விரும்பும் செயல்களை அவனிடம் சொல்லி, பயனில்லாதவற்றை அவன் கேட்டாலும் ஒருபோதும் சொல்லாதிருக்க வேண்டும்.
-
Translation
in EnglishSpeak pleasant things, but never utter idle word;
Not though by monarch’s ears with pleasure heard. -
MeaningMinisters should (always) give agreeable advice but on no occasion recommend useless actions, though requested (to do so).
Category:Thirukural
0696. குறிப்பறிந்து காலங் கருதி
0696. Kuripparindhu Kaalang Karuthi
-
குறள் #0696
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
-
அதிகாரம்மன்னரைச் சேர்ந்தொழுகல் (Mannaraich Cherndhozhugal)
Conduct in the Presence of the King
-
குறள்குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில
வேண்டுப வேட்பச் சொலல். -
விளக்கம்அரசனது குறிப்பறிந்து, தக்க காலம் பார்த்து, வெறுக்காததையும் விரும்புகின்றதையும் அவன் விரும்பும்படி சொல்ல வேண்டும்.
-
Translation
in EnglishKnowing the signs, waiting for fitting time, with courteous care,
Things not displeasing, needful things, declare. -
MeaningKnowing the (king’s disposition and seeking the right time, (the minister) should in a pleasing manner suggest things such as are desirable and not disagreeable.
Category:Thirukural
0695. எப்பொருளும் ஓரார் தொடரார்மற்
0695. Epporulum Oraar Thodaraarmat
-
குறள் #0695
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
-
அதிகாரம்மன்னரைச் சேர்ந்தொழுகல் (Mannaraich Cherndhozhugal)
Conduct in the Presence of the King
-
குறள்எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை
விட்டக்கால் கேட்க மறை. -
விளக்கம்மன்னர் பிறரோடு இரகசியம் பேசும்போது அதனை உற்றுக் கேட்டலும் வற்புறுத்திக் கேட்டலுமின்றி அவராகவே கூறும்பொழுது கேட்க வேண்டும்.
-
Translation
in EnglishSeek not, ask not, the secret of the king to hear;
But if he lets the matter forth, give ear! -
Meaning(When the king is engaged) in secret counsel (with others), ministers should neither over-hear anything whatever nor pry into it with inquisitive questions, but (wait to) listen when it is divulged (by the king himself).
Category:Thirukural
0694. செவிச்சொல்லும் சேர்ந்த நகையும்
0694. Sevichchollum Serndha Nagaiyum
-
குறள் #0694
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
-
அதிகாரம்மன்னரைச் சேர்ந்தொழுகல் (Mannaraich Cherndhozhugal)
Conduct in the Presence of the King
-
குறள்செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்
ஆன்ற பெரியா ரகத்து. -
விளக்கம்சிறப்புமிகுந்த அரசர் அருகில் இருக்கும்போது, மற்றவர் காதிலே மறைவாகச் சொல்லுதலையும், மன்னருடன் சேர்ந்து சிரித்தலையும் நீக்கி நடத்தல் வேண்டும்.
-
Translation
in EnglishAll whispered words and interchange of smiles repress,
In presence of the men who kingly power possess. -
MeaningWhile in the presence of the sovereign, ministers should neither whisper to nor smile at others.
Category:Thirukural
0693. போற்றின் அரியவை போற்றல்
0693. Potrin Ariyavai Potral
-
குறள் #0693
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
-
அதிகாரம்மன்னரைச் சேர்ந்தொழுகல் (Mannaraich Cherndhozhugal)
Conduct in the Presence of the King
-
குறள்போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
தேற்றுதல் யார்க்கும் அரிது. -
விளக்கம்தம்மைக் காத்துக் கொள்ள விரும்பினால், தம்மிடம் பிழைகள் வராமல் காத்துக்கொள்ள வேண்டும்; மன்னர் சந்தேகம் கொண்டு விட்டால், பின்னர் அவரைத் தெளிவித்தல் யார்க்கும் அரிதாகும்.
-
Translation
in EnglishWho would walk warily, let him of greater faults beware;
To clear suspicions once aroused is an achievement rare. -
MeaningMinisters who would save themselves should avoid (the commission of) serious errors for if the king’s suspicion is once roused, no one can remove it.
Category:Thirukural
0692. மன்னர் விழைப விழையாமை
0692. Mannar Vizhaiba Vizhaiyaamai
-
குறள் #0692
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
-
அதிகாரம்மன்னரைச் சேர்ந்தொழுகல் (Mannaraich Cherndhozhugal)
Conduct in the Presence of the King
-
குறள்மன்னர் விழைப விழையாமை மன்னரால்
மன்னிய ஆக்கந் தரும். -
விளக்கம்மன்னர் விரும்பியவற்றைத் தாம் விரும்பாதிருத்தல், அம்மன்னரால் நிலையான செல்வத்தைக் கொடுக்கச் செய்யும்.
-
Translation
in EnglishTo those who prize not state that kings are wont to prize,
The king himself abundant wealth supplies. -
MeaningFor ministers not to cover the things desired by their kings will through the kings themselves yield them everlasting wealth.
Category:Thirukural
0691. அகலாது அணுகாது தீக்காய்வார்
0691. Agalaathu Anugaathu Theekkaaivaar
-
குறள் #0691
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
-
அதிகாரம்மன்னரைச் சேர்ந்தொழுகல் (Mannaraich Cherndhozhugal)
Conduct in the Presence of the King
-
குறள்அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார். -
விளக்கம்அடிக்கடி மனம் மாறுபடும் மன்னரைச் சேர்ந்து பனி செய்வோர், அவரை மிக நீங்காமலும், நெருங்காமலும் நெருப்பினிடத்துக் குளிர் காய்பவர் போன்று நடந்து கொள்ளுதல் வேண்டும்.
-
Translation
in EnglishWho warm them at the fire draw not too near, nor keep too much aloof;
Thus let them act who dwell beneath of warlike kings the palace-roof. -
MeaningMinisters who serve under fickle-minded monarchs should, like those who warm themselves at the fire, be neither (too) far, nor (too) near.
Category:Thirukural
0690. இறுதி பயப்பினும் எஞ்சாது
0690. Iruthi Payappinum Enjaathu
-
குறள் #0690
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
-
அதிகாரம்தூது (Thoothu)
The Envoy
-
குறள்இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு
உறுதி பயப்பதாம் தூது. -
விளக்கம்தான் சொல்லுவது தனக்கு முடிவைத் தருமாயினும், அதற்கு அஞ்சாது, தன் அரசனுக்கு நன்மை தரக்கூடியதைச் சொல்பவனே தூதன்.
-
Translation
in EnglishDeath to the faithful one his embassy may bring;
To envoy gains assured advantage for his king. -
MeaningHe is the ambassador who fearlessly seeks his sovereign’s good though it should cost him his life (to deliver his message).
0689. விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான்
0689. Vidumaatram Vendharkku Uraippaan
-
குறள் #0689
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
-
அதிகாரம்தூது (Thoothu)
The Envoy
-
குறள்விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்
வாய்சேரா வன்கணவன். -
விளக்கம்தன் அரசன் சொன்ன சொல்லை வேற்று அரசரிடம் சென்று சொல்வதற்கு உரியவன், தனக்கு வரும் துன்பத்துக்கு அஞ்சித் தாழ்வான சொல்லை வாய் தவறியும் சொல்லாத உறுதியுடையவனாவான்.
-
Translation
in EnglishHis faltering lips must utter no unworthy thing,
Who stands, with steady eye, to speak the mandates of his king. -
MeaningHe alone is fit to communicate (his sovereign’s) reply, who possesses the firmness not to utter even inadvertently what may reflect discredit (on the latter).
0688. தூய்மை துணைமை துணிவுடைமை
0688. Thooimai Thunaimai Thunivudaimai
-
குறள் #0688
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
-
அதிகாரம்தூது (Thoothu)
The Envoy
-
குறள்தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான் பண்பு. -
விளக்கம்தன் அரசன் சொன்னதை அவ்வாறே சொல்லுவோனது இலக்கணம், பொருள் காமங்களால் தூய்மை இழக்காமையும், அவர் அமைச்சர் துணையாகும் தன்மையும், உண்மையும் ஆகியவை யாகும்.
-
Translation
in EnglishIntegrity, resources, soul determined, truthfulness.
Who rightly speaks his message must these marks possess. -
MeaningThe qualifications of him who faithfully delivers his (sovereign’s) message are purity, the support (of foreign ministers), and boldness, with truthfulness in addition to the (aforesaid) three.
0687. கடனறிந்து காலங் கருதி
0687. Kadanarindhu Kaalang Karuthi
-
குறள் #0687
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
-
அதிகாரம்தூது (Thoothu)
The Envoy
-
குறள்கடனறிந்து காலங் கருதி இடனறிந்து
எண்ணி உரைப்பான் தலை. -
விளக்கம்வகை அறிந்து, சமயம் பார்த்து, இடமறிந்து, சொல்லும் வழியை எண்ணி, அவ்வாறு சொல்லுபவன் சிறந்த தூதனாவான்.
-
Translation
in EnglishHe is the best who knows what’s due, the time considered well,
The place selects, then ponders long ere he his errand tell. -
MeaningHe is chief (among ambassadors) who understands the proper decorum (before foreign princes), seeks the (proper) occasion, knows the (most suitable) place, and delivers his message after (due) consideration.
0686. கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக்
0686. Katrukkan Anjaan Selachchollik
-
குறள் #0686
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
-
அதிகாரம்தூது (Thoothu)
The Envoy
-
குறள்கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்
தக்கது அறிவதாம் தூது. -
விளக்கம்நீதி நூல்களைக் கற்று, பகைவரின் பார்வைக்கு அஞ்சாது தான் சென்ற காரியத்தைப் பகை அரசர் ஏற்கும்படி சொல்லி, காலத்தோடு பொருந்த அதை முடிக்கத்தக்கவனே தூதனாவான்.
-
Translation
in EnglishAn envoy meet is he, well-learned, of fearless eye
Who speaks right home, prepared for each emergency. -
MeaningHe is an ambassador who having studied (politics) talks impressively, is not afraid of angry looks, and knows (to employ) the art suited to the time.
0685. தொகச்சொல்லித் தூவாத நீக்கி
0685. Thogachchollith Thoovaatha Neekki
-
குறள் #0685
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
-
அதிகாரம்தூது (Thoothu)
The Envoy
-
குறள்தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாந் தூது. -
விளக்கம்செய்திகளைச் சொல்லும்போது தொகுத்துச் சொல்லியும், பயனில்லாதவற்றை நீக்கியும், இனிய சொற்களால் மகிழும்படி சொல்லியும் நன்மையைச் செய்பவனே தூதனாவான்.
-
Translation
in EnglishIn terms concise, avoiding wrathful speech, who utters pleasant word,
An envoy he who gains advantage for his lord. -
MeaningHe is an ambassador who (in the presence of foreign rulers) speaks briefly, avoids harshness, talks so as to make them smile, and thus brings good (to his own sovereign).
0684. அறிவுரு வாராய்ந்த கல்விஇம்
0684. Arivuru Vaaraaindha Kalviim
-
குறள் #0684
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
-
அதிகாரம்தூது (Thoothu)
The Envoy
-
குறள்அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன்
செறிவுடையான் செல்க வினைக்கு. -
விளக்கம்இயற்கையறிவும், தோற்றப் பொலிவும், தேர்ந்த கல்வியும் ஆகிய மூன்று தன்மைகளும் உடையவனே தூது செல்லுதல் வேண்டும்.
-
Translation
in EnglishSense, goodly grace, and knowledge exquisite.
Who hath these three for envoy’s task is fit. -
MeaningHe may go on a mission (to foreign rulers) who has combined in him all these three. viz., (natural) sense, an attractive bearing and well-tried learning.
0683. நூலாருள் நூல்வல்லன் ஆகுதல்
0683. Noolaarul Noolvallan Aaguthal
-
குறள் #0683
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
-
அதிகாரம்தூது (Thoothu)
The Envoy
-
குறள்நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்
வென்றி வினையுரைப்பான் பண்பு. -
விளக்கம்வேற்றரசரிடம் சென்று தன் அரசுக்கு வெற்றிதரும் சொல்லைச் சொல்லும் தூதன் இலக்கணம், அரசநீதி கற்று அறிந்தவர்களுள் தான் சிறந்த அறிவுடையவனாக இருத்தலே.
-
Translation
in EnglishMighty in lore amongst the learned must he be,
Midst jav’lin-bearing kings who speaks the words of victory. -
MeaningTo be powerful in politics among those who are learned (in ethics) is the character of him who speaks to lance-bearing kings on matters of triumph (to his own sovereign).
0682. அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை
0682. Anbarivu Aaraaindha Solvanmai
-
குறள் #0682
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
-
அதிகாரம்தூது (Thoothu)
The Envoy
-
குறள்அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு
இன்றி யமையாத மூன்று. -
விளக்கம்அன்பும், அறிவும், ஆராய்ந்த சொல்வன்மையுமாகிய மூன்றும் தூது சொல்பவரிடம் இருக்க வேண்டிய இன்றியமையாத குணங்கள்.
-
Translation
in EnglishLove, knowledge, power of chosen words, three things,
Should he possess who speaks the words of kings. -
MeaningLove (to his sovereign), knowledge (of his affairs), and a discriminating power of speech (before other sovereigns) are the three sine qua non qualifications of an ambassador.
0681. அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல்
0681. Anbudaimai Aandra Kudippiraththal
-
குறள் #0681
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
-
அதிகாரம்தூது (Thoothu)
The Envoy
-
குறள்அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. -
விளக்கம்சுற்றத்தாரிடத்தில் அன்புடையனாதலும், உயர் குடியில் பிறத்தலும், மன்னர் விரும்பும் நல்ல குணம் உடையனாதலும் தூது செல்பவனின் தன்மைகள் ஆகும்.
-
Translation
in EnglishBenevolence high birth, the courtesy kings love:-
These qualities the envoy of a king approve. -
MeaningThe qualification of an ambassador are affection (for his relations) a fitting birth, and the possession of attributes pleasing to royalty.
0680. உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக்
0680. Uraisiriyaar Ulnadunkal Anjik
-
குறள் #0680
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
-
அதிகாரம்வினைசெயல்வகை (Vinaiseyalvagai)
Modes of Action
-
குறள்உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்
கொள்வர் பெரியார்ப் பணிந்து. -
விளக்கம்சிறு நாட்டை ஆள்பவர், தம்மைவிட வலியவர் படையெடுத்து வந்தால், தம் குடிகள் கலங்குவதற்கு அஞ்சி சமாதானம் செய்வதற்கு இசைந்தால் அவரைப் பணிந்து அதனை ஏற்றுக்கொள்வர்.
-
Translation
in EnglishThe men of lesser realm, fearing the people’s inward dread,
Accepting granted terms, to mightier ruler bow the head. -
MeaningMinisters of small states, afraid of their people being frightened, will yield to and acknowledge their superior foes, if the latter offer them a chance of reconciliation.
0679. நட்டார்க்கு நல்ல செயலின்
0679. Nattaarkku Nalla Seyalin
-
குறள் #0679
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
-
அதிகாரம்வினைசெயல்வகை (Vinaiseyalvagai)
Modes of Action
-
குறள்நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல். -
விளக்கம்நண்பருக்கு இனியவற்றைச் செய்வதைவிட, பகைவருடன் சேராதிருப்பவரை விரைந்து நட்பாக்கிக் கொள்ளுதல் வேண்டும்.
-
Translation
in EnglishThan kindly acts to friends more urgent thing to do,
Is making foes to cling as friends attached to you. -
MeaningOne should rather hasten to secure the alliance of the foes (of one’s foes) than perform good offices to one’s friends.
0678. வினையான் வினையாக்கிக் கோடல்
0678. Vinaiyaan Vinaiyaakkik Kodal
-
குறள் #0678
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
-
அதிகாரம்வினைசெயல்வகை (Vinaiseyalvagai)
Modes of Action
-
குறள்வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று. -
விளக்கம்செய்கின்ற செயலாலே அது போன்ற மற்றுமொரு செயலை முடித்துக் கொள்ளுதல் வேண்டும்; அஃது ஒரு யானையாலே மற்றொரு யானையைக் கட்டியதோடு ஒக்கும்.
-
Translation
in EnglishBy one thing done you reach a second work’s accomplishment;
So furious elephant to snare its fellow brute is sent. -
MeaningTo make one undertaking the means of accomplishing another (similar to it) is like making one rutting elephant the means of capturing another.
0677. செய்வினை செய்வான் செயன்முறை
0677. Seivinai Seivaan Seyanmurai
-
குறள் #0677
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
-
அதிகாரம்வினைசெயல்வகை (Vinaiseyalvagai)
Modes of Action
-
குறள்செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை
உள்ளறிவான் உள்ளம் கொளல். -
விளக்கம்செயலைச் செய்யத் தொடங்கியவன், அச்செயலின் தன்மைகளை அறிந்தவனது கருத்தை அறிந்து, அதனைச் செய்தல் வேண்டும்.
-
Translation
in EnglishWho would succeed must thus begin: first let him ask
The thoughts of them who thoroughly know the task. -
MeaningThe method of performance for one who has begun an act is to ascertain the mind of him who knows the secret thereof.
0676. முடிவும் இடையூறும் முற்றியாங்கு
0676. Mudivum Idaiyoorum Mutriyaangu
-
குறள் #0676
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
-
அதிகாரம்வினைசெயல்வகை (Vinaiseyalvagai)
Modes of Action
-
குறள்முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்
படுபயனும் பார்த்துச் செயல். -
விளக்கம்ஒரு செயல் முடிவதற்குள்ள முயற்சியும், அதற்கு வரும் இடையூறும், அது நீங்கி முடிந்தால் வரும் பெரும்பயனும் அறிந்து செய்தல் வேண்டும்.
-
Translation
in EnglishAccomplishment, the hindrances, large profits won
By effort: these compare,- then let the work be done. -
MeaningAn act is to be performed after considering the exertion required, the obstacles to be encountered, and the great profit to be gained (on its completion).
0675. பொருள்கருவி காலம் வினையிடனொடு
0675. Porulkaruvi Kaalam Vinaiyidanodu
-
குறள் #0675
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
-
அதிகாரம்வினைசெயல்வகை (Vinaiseyalvagai)
Modes of Action
-
குறள்பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல். -
விளக்கம்ஒரு செயலைச் செய்யுமிடத்துப் பொருள், கருவி, காலம், செயல், இடம் ஆகிய இவ்வைந்தையும் ஐயமற ஆராய்ந்து செய்தல் வேண்டும்.
-
Translation
in EnglishTreasure and instrument and time and deed and place of act:
These five, till every doubt remove, think o’er with care exact. -
MeaningDo an act after a due consideration of the (following) five, viz. money, means, time, execution and place.
0674. வினைபகை என்றிரண்டின் எச்சம்
0674. Vinaipagai Endrirandin Echcham
-
குறள் #0674
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
-
அதிகாரம்வினைசெயல்வகை (Vinaiseyalvagai)
Modes of Action
-
குறள்வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
தீயெச்சம் போலத் தெறும். -
விளக்கம்முடிவு பெறாத செயலும் அடக்கப்படாத பகையும் அணைக்கப் படாத நெருப்பைப் போன்று பின் வளர்ந்து கெடுக்கும்.
-
Translation
in EnglishWith work or foe, when you neglect some little thing,
If you reflect, like smouldering fire, ’twill ruin bring. -
MeaningWhen duly considered, the incomplete execution of an undertaking and hostility will grow and destroy one like the (unextinguished) remnant of a fire.
0673. ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே
0673. Ollumvaa Yellaam Vinainandre
-
குறள் #0673
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
-
அதிகாரம்வினைசெயல்வகை (Vinaiseyalvagai)
Modes of Action
-
குறள்ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
செல்லும்வாய் நோக்கிச் செயல். -
விளக்கம்செய்யமுடியும் இடத்தில் எல்லாம் செயல் செய்தல் நல்லது; செய்யவியலாதபோது தக்க உபாயத்தை ஆராய்ந்து செய்தல் நல்லது.
-
Translation
in EnglishWhen way is clear, prompt let your action be;
When not, watch till some open path you see. -
MeaningWhenever it is possible (to overcome your enemy) the act (of fighting) is certainly good; if not, endeavour to employ some more successful method.
0672. தூங்குக தூங்கிச் செயற்பால
0672. Thoonguga Thoongich Cheyarpaala
-
குறள் #0672
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
-
அதிகாரம்வினைசெயல்வகை (Vinaiseyalvagai)
Modes of Action
-
குறள்தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை. -
விளக்கம்காலம் நீட்டித்துச் செய்யவேண்டிய செயல்களை நீட்டித்துச் செய்தல் வேண்டும்; விரைவில் செய்ய வேண்டியவற்றை விரைவில் செய்ய வேண்டும்.
-
Translation
in EnglishSlumber when sleepy work’s in hand: beware
Thou slumber not when action calls for sleepless care! -
MeaningSleep over such (actions) as may be slept over; (but) never over such as may not be slept over.
0671. சூழ்ச்சி முடிவு துணிவெய்தல்
0671. Soozhchchi Mudivu Thuniveithal
-
குறள் #0671
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
-
அதிகாரம்வினைசெயல்வகை (Vinaiseyalvagai)
Modes of Action
-
குறள்சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது. -
விளக்கம்ஆலோசனையின் எல்லையாவது ஒரு முடிவுக்கு வருதலேயாகும்; அவ்வாறு முடிவுக்கு வந்த பின்னர்க் காலம் நீட்டித்துத் தாழ்த்துதல் குற்றமுடையதாகும்.
-
Translation
in EnglishResolve is counsel’s end, If resolutions halt
In weak delays, still unfulfilled, ’tis grievous fault. -
MeaningConsultation ends in forming a resolution (to act); (but) delay in the execution of that resolve is an evil.
0670. எனைத்திட்பம் எய்தியக் கண்ணும்
0670. Enaiththitpam Eithiyak Kannum
-
குறள் #0670
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
-
அதிகாரம்வினைத்திட்பம் (Vinaiththitpam)
Power in Action
-
குறள்எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டாது உலகு. -
விளக்கம்செய்யும் செயலில் உறுதி கொள்ளாதவரை, அவரிடத்தில் வேறு எந்த வலிமை இருந்தாலும் உலகத்தவர் மதிக்க மாட்டார்.
-
Translation
in EnglishThe world desires not men of every power possessed,
Who power in act desire not,- crown of all the rest. -
MeaningThe great will not esteem those who esteem not firmness of action, whatever other abilities the latter may possess.
0669. துன்பம் உறவரினும் செய்க
0669. Thunbam Uravarinum Seiga
-
குறள் #0669
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
-
அதிகாரம்வினைத்திட்பம் (Vinaiththitpam)
Power in Action
-
குறள்துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை. -
விளக்கம்துன்பம் மிக வருவதாயினும், இறுதியில் இன்பம் தரும் செயலைத் துணிவோடு செய்தல் வேண்டும்.
-
Translation
in EnglishThough toil and trouble face thee, firm resolve hold fast,
And do the deeds that pleasure yield at last. -
MeaningThough it should cause increasing sorrow (at the outset), do with firmness the act that yield bliss (in the end).
0668. கலங்காது கண்ட வினைக்கண்
0668. Kalangaathu Kanda Vinaikkan
-
குறள் #0668
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
-
அதிகாரம்வினைத்திட்பம் (Vinaiththitpam)
Power in Action
-
குறள்கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கங் கடிந்து செயல். -
விளக்கம்மனம் கலங்காமல் செய்வதாகத் துணிந்த செயலிடத்துப் பின்னர் தளர்ச்சியில்லாது காலம் நீட்டிக்காது செய்தல் வேண்டும்.
-
Translation
in EnglishWhat clearly eye discerns as right, with steadfast will,
And mind unslumbering, that should man fulfil. -
MeaningAn act that has been firmly resolved on must be as firmly carried out without delay.
0667. உருவுகண்டு எள்ளாமை வேண்டும்
0667. Uruvukandu Ellaamai Vendum
-
குறள் #0667
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
-
அதிகாரம்வினைத்திட்பம் (Vinaiththitpam)
Power in Action
-
குறள்உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து. -
விளக்கம்உருண்டு செல்கின்ற பெரிய தேர் அச்சின் சிறிய கடையாணி போன்று பயனுடையவர்களும் உலகில் உள்ளனர். ஆகையால் ஒருவரது உருவத்தின் சிறுமையைக் கண்டு இகழ்தல் கூடாது.
-
Translation
in EnglishDespise not men of modest bearing; Look not at form, but what men are:
For some there live, high functions sharing, Like linch-pin of the mighty car! -
MeaningLet none be despised for (their) size; (for) the world has those who resemble the linch-pin of the big rolling car.
0666. எண்ணிய எண்ணியாங்கு எய்து
0666. Enniya Enniyaangu Yeithu
-
குறள் #0666
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
-
அதிகாரம்வினைத்திட்பம் (Vinaiththitpam)
Power in Action
-
குறள்எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின். -
விளக்கம்ஒரு பொருளை அடைய எண்ணியவர், அதனை அடைவதற்குரிய செயலில் வலிமையுடையவராகப் பெற்றால், எண்ணப்பட்ட பொருளை எண்ணியபடியே அடைவர்.
-
Translation
in EnglishWhate’er men think, ev’n as they think, may men obtain,
If those who think can steadfastness of will retain. -
MeaningIf those who have planned (an undertaking) possess firmness (in executing it) they will obtain what they have desired even as they have desired it.
0665. வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம்
0665. Veereithi Maandaar Vinaiththitpam
-
குறள் #0665
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
-
அதிகாரம்வினைத்திட்பம் (Vinaiththitpam)
Power in Action
-
குறள்வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
ஊறெய்தி உள்ளப் படும். -
விளக்கம்செய்யும் செயலால் பெருமை பெற்று உயர்ந்தவரின் வினைத்திட்பம் நாட்டை ஆளும் மன்னனிடத்தே எட்டி நன்கு மதிக்கப்படும்.
-
Translation
in EnglishThe power in act of men renowned and great,
With king acceptance finds and fame through all the state. -
MeaningThe firmness in action of those who have become great by the excellence (of their counsel) will, by attaining its fulfilment in the person of the king, be esteemed (by all).
0664. சொல்லுதல் யார்க்கும் எளிய
0664. Solluthal Yaarkkum Eliya
-
குறள் #0664
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
-
அதிகாரம்வினைத்திட்பம் (Vinaiththitpam)
Power in Action
-
குறள்சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல். -
விளக்கம்ஒரு செயலைச் செயவோமேனச் சொல்லுதல் எவருக்கும் எளிது; ஆனால், சொன்னது போலச் செய்வது அரியதாகும்.
-
Translation
in EnglishEasy to every man the speech that shows the way;
Hard thing to shape one’s life by words they say! -
MeaningTo say (how an act is to be performed) is (indeed) easy for any one; but far difficult it is to do according to what has been said.
0663. கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை
0663. Kadaikkotkach Cheithakka Thaanmai
-
குறள் #0663
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
-
அதிகாரம்வினைத்திட்பம் (Vinaiththitpam)
Power in Action
-
குறள்கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்
எற்றா விழுமந் தரும். -
விளக்கம்செய்யப்படும் செயலையெல்லாம் மறைத்து முடிவில் வெளிப்படுமாறு செய்வதே வலிமையாகும்; செய்யும் பொது இடையில் வெளிப்பட்டால், அதனால் செய்கின்றவனுக்கு நீங்காத துன்பம் வரும்.
-
Translation
in EnglishMan’s fitting work is known but by success achieved;
In midst the plan revealed brings ruin ne’er to be retrieved. -
MeaningSo to perform an act as to publish it (only) at its termination is (true) manliness; for to announce it beforehand, will cause irremediable sorrow.
0662. ஊறொரால் உற்றபின் ஒல்காமை
0662. Oororaal Utrapin Olkaamai
-
குறள் #0662
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
-
அதிகாரம்வினைத்திட்பம் (Vinaiththitpam)
Power in Action
-
குறள்ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள். -
விளக்கம்பழுதுபடும் செயலைச் செய்யாமையும், பழுதுபட்ட விடத்து மனந்தளராமையுமாகிய இவ்விரண்டும் செயலைச் செய்பவரின் நெறியாகும் என அறிவுடையோர் கூறுவர்.
-
Translation
in English‘Each hindrance shun’, ‘unyielding onward press, If obstacle be there,’
These two define your way, so those that search out truth declare. -
MeaningNot to perform a ruinous act, and not to be discouraged by the ruinous termination of an act, are the two maxims which, the wise say, from the principles of those who have investigated the subject.
0661. வினைத்திட்பம் என்பது ஒருவன்
0661. Vinaiththitpam Enbathu Oruvan
-
குறள் #0661
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
-
அதிகாரம்வினைத்திட்பம் (Vinaiththitpam)
Power in Action
-
குறள்வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற. -
விளக்கம்செயலைச் செய்வதற்கேற்ற உறுதி என்று சொல்லப்படுவது, அதைச் செய்பவனுக்கு உள்ள மன உறுதியேயாகும்; அதத் தவிர மற்றவையெல்லாம் அவ்வளவு சிறந்தனவாகா.
-
Translation
in EnglishWhat men call ‘power in action’ know for ‘power of mind’
Externe to man all other aids you find. -
MeaningFirmness in action is (simply) one’s firmness of mind; all other (abilities) are not of this nature.
0660. சலத்தால் பொருள்செய்தே மார்த்தல்
0660. Salaththaal Porulseithe Maarththal
-
குறள் #0660
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
-
அதிகாரம்வினைத்தூய்மை (Vinaiththooimai)
Purity in Action
-
குறள்சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்
கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று. -
விளக்கம்ஒருவன் தீயசெயல்களால் பொருளைச் சம்பாதித்துக் காத்தல், பச்சை மண் கலத்தில் நீரை ஊற்றிக் காப்பது போலாகும்.
-
Translation
in EnglishIn pot of clay unburnt he water pours and would retain,
Who seeks by wrong the realm in wealth and safety to maintain. -
Meaning(For a minister) to protect (his king) with wealth obtained by foul means is like preserving a vessel of wet clay by filling it with water.
0659. அழக்கொண்ட எல்லாம் அழப்போம்
0659. Azhakkonda Ellaam Azhappom
-
குறள் #0659
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
-
அதிகாரம்வினைத்தூய்மை (Vinaiththooimai)
Purity in Action
-
குறள்அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை. -
விளக்கம்பிறர் அழுது வருந்தும்படி ஒருவன் கொண்ட பொருள், அவனும் அவ்வாறே அழுது வருந்தும்படி போய்விடும். நல்வழியில் வந்த பொருளை முன் இழந்தாலும், அது பின் வந்து பயன் கொடுக்கும்.
-
Translation
in EnglishWhat’s gained through tears with tears shall go;
From loss good deeds entail harvests of blessings grow. -
MeaningAll that has been obtained with tears (to the victim) will depart with tears (to himself); but what has been by fair means; though with loss at first, will afterwards yield fruit.
0658. கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு
0658. Kadindha Kadinthoraar Seithaarkku
-
குறள் #0658
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
-
அதிகாரம்வினைத்தூய்மை (Vinaiththooimai)
Purity in Action
-
குறள்கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்
முடிந்தாலும் பீழை தரும். -
விளக்கம்பெரியோர் விலக்கியவற்றைத் தாமும் விலக்காமல் செய்தவர்க்கு, அவை ஒருவாறு முடிந்தனவாயினும் பின்பு துன்பம் தரும்.
-
Translation
in EnglishTo those who hate reproof and do forbidden thing.
What prospers now, in after days shall anguish bring. -
MeaningThe actions of those, who have not desisted from doing deeds forbidden (by the great), will, even if they succeed, cause them sorrow.
0657. பழிமலைந்து எய்திய ஆக்கத்தின்
0657. Pazhimalaindhu Eithiya Aakkaththin
-
குறள் #0657
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
-
அதிகாரம்வினைத்தூய்மை (Vinaiththooimai)
Purity in Action
-
குறள்பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை. -
விளக்கம்பழியை மேற்கொண்டு இழிந்த செயல் செய்து பெறும் செல்வத்தை விட சான்றோர் செயல் தூய்மையாக இருந்து அடையத்தக்க வறுமையே மேலானது.
-
Translation
in EnglishThan store of wealth guilt-laden souls obtain,
The sorest poverty of perfect soul is richer gain. -
MeaningFar more excellent is the extreme poverty of the wise than wealth obtained by heaping up of sinful deeds.
0656. ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ்
0656. Eendraal Pasikaanbaan Ayinunj
-
குறள் #0656
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
-
அதிகாரம்வினைத்தூய்மை (Vinaiththooimai)
Purity in Action
-
குறள்ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை. -
விளக்கம்தனது வறுமையின் காரணமாக, தன்னைப் பெற்ற தாயின் பசியை நீக்க முடியாது பார்த்திருக்கநேரிடினும், நிறைந்த அறிவினையுடையவர் பழிக்கத் தக்க செயலைச் செய்யாதிருத்தல் வேண்டும்.
-
Translation
in EnglishThough her that bore thee hung’ring thou behold, no deed
Do thou, that men of perfect soul have crime decreed. -
MeaningThough a minister may see his mother starve; let him do not act which the wise would (treat with contempt).
0655. எற்றென்று இரங்குவ செய்யற்க
0655. Etrendru Iranguva Seiyarka
-
குறள் #0655
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
-
அதிகாரம்வினைத்தூய்மை (Vinaiththooimai)
Purity in Action
-
குறள்எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று. -
விளக்கம்தான் செய்த செயல் என்ன தன்மையுடையது என்று நினைத்துப் பின்னர் வருத்தப்படத்தக்கவற்றைச் செய்யாதிருத்தல் வேண்டும்; ஒரு கால் அப்படிச் செய்து விட்டாலும், மீண்டும் அத்தகையவற்றைச் செய்யாதிருத்தல் நல்லது.
-
Translation
in EnglishDo nought that soul repenting must deplore,
If thou hast sinned, ’tis well if thou dost sin no more. -
MeaningLet a minister never do acts of which he would have to grieve saying, “what is this I have done”; (but) should he do (them), it were good that he grieved not.
0654. இடுக்கண் படினும் இளிவந்த
0654. Idukkan Padinum Ilivantha
-
குறள் #0654
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
-
அதிகாரம்வினைத்தூய்மை (Vinaiththooimai)
Purity in Action
-
குறள்இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர். -
விளக்கம்தெளிவான அறிவினையுடையவர், தாம் துன்பப்பட நேர்ந்தாலும், அதன் பொருட்டு இழிவான செயலைச் செய்யமாட்டார்.
-
Translation
in EnglishThough troubles press, no shameful deed they do,
Whose eyes the ever-during vision view. -
MeaningThose who have infallible judgement though threatened with peril will not do acts which have brought disgrace (on former ministers).
0653. ஒஓதல் வேண்டும் ஒளிமாழ்கும்
0653. Ooothal Vendum Olimaazhgum
-
குறள் #0653
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
-
அதிகாரம்வினைத்தூய்மை (Vinaiththooimai)
Purity in Action
-
குறள்ஒஓதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னு மவர். -
விளக்கம்மேன்மையுற வேண்டும் என்று விரும்புவோர், தம்முடைய மதிப்பைக் கெடுப்பதற்குக் காரணமான செயலை விடுதல் வேண்டும்.
-
Translation
in EnglishWho tell themselves that nobler things shall yet be won
All deeds that dim the light of glory must they shun. -
MeaningThose who say, “we will become (better)” should avoid the performance of acts that would destroy (their fame).
0652. என்றும் ஒருவுதல் வேண்டும்
0652. Endrum Oruvuthal Vendum
-
குறள் #0652
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
-
அதிகாரம்வினைத்தூய்மை (Vinaiththooimai)
Purity in Action
-
குறள்என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை. -
விளக்கம்புகழையும், நன்மையையும் கொடுக்காத செயலைச் செய்யாமல் எப்பொழுதும் நீக்குதல் வேண்டும்.
-
Translation
in EnglishFrom action evermore thyself restrain
Of glory and of good that yields no gain. -
MeaningMinisters should at all times avoid acts which, in addition to fame, yield no benefit (for the future).
0651. துணைநலம் ஆக்கம் தரூஉம்
0651. Thunainalam Aakkam Tharooum
-
குறள் #0651
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
-
அதிகாரம்வினைத்தூய்மை (Vinaiththooimai)
Purity in Action
-
குறள்துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம்
வேண்டிய எல்லாந் தரும். -
விளக்கம்ஒருவனுக்குத் துணைவரால் வரும் நன்மை செல்வம் ஒன்றையே கொடுக்கும்; செய்யும் தொழிலின் நன்மை அவன் விரும்பியவற்றை யெல்லாம் கொடுக்கும்.
-
Translation
in EnglishThe good external help confers is worldly gain;
By action good men every needed gift obtain. -
MeaningThe efficacy of support will yield (only) wealth; (but) the efficacy of action will yield all that is desired.
0650. இண்ருழ்த்தும் நாறா மலரனையர்
0650. Inruzhththum Naaraa Malaranaiyar
-
குறள் #0650
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
-
அதிகாரம்சொல்வன்மை (Solvanmai)
Power in Speech
-
குறள்இண்ருழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரையா தார். -
விளக்கம்தாம் கற்றதைப் பிறர் அறியுமாறு விரித்துக் கூறத் தெரியாதவர், கொத்தாக மலர்ந்திருக்கும் மணக்காத மலர் போன்றவராவர்.
-
Translation
in EnglishLike scentless flower in blooming garland bound
Are men who can’t their lore acquired to other’s ears expound. -
MeaningThose who are unable to set forth their acquirements (before others) are like flowers blossoming in a cluster and yet without fragrance.
0649. பலசொல்லக் காமுறுவர் மன்றமா
0649. Palasollak Kaamuruvar Mandramaa
-
குறள் #0649
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
-
அதிகாரம்சொல்வன்மை (Solvanmai)
Power in Speech
-
குறள்பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
சிலசொல்லல் தேற்றா தவர். -
விளக்கம்குற்ற மற்றவையாகச் சில சொற்களைச் சொல்லத் தெரியாதவர், பல சொற்களைச் சொல்லிக் கொண்டிருக்க விரும்புவார்.
-
Translation
in EnglishWho have not skill ten faultless words to utter plain,
Their tongues will itch with thousand words man’s ears to pain. -
MeaningThey will desire to utter many words, who do not know how to speak a few faultless ones.
0648. விரைந்து தொழில்கேட்கும் ஞாலம்
0648. Viraindhu Thozhilketkum Gnaalam
-
குறள் #0648
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
-
அதிகாரம்சொல்வன்மை (Solvanmai)
Power in Speech
-
குறள்விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின். -
விளக்கம்சொல்லவிருக்கும் செய்திகளை ஒழுங்குபடக் கோத்து இனிதாகச் சொல்லவல்லவரைப் பெற்றால், உலகத்தவர் அவர் கூறியவற்றை விரைந்து ஏற்றுக் கொள்வர்.
-
Translation
in EnglishSwiftly the listening world will gather round,
When men of mighty speech the weighty theme propound. -
MeaningIf there be those who can speak on various subjects in their proper order and in a pleasing manner, the world would readily accept them.
0647. சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான்
0647. Solalvallan Sorvilan Anjaan
-
குறள் #0647
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
-
அதிகாரம்சொல்வன்மை (Solvanmai)
Power in Speech
-
குறள்சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது. -
விளக்கம்தான் எண்ணியவற்றைப் பிறர் ஏற்குமாறு சொல்ல வல்லவனாகவும், சொல்ல வேண்டியவற்றை மறவாதவனாகவும், அவைக்கு அஞ்சாதவனாகவும் உள்ளவனைப் பகைவனாகக் கொண்டு வெல்லுதல் எவர்க்கும் அரிது.
-
Translation
in EnglishMighty in word, of unforgetful mind, of fearless speech,
‘Tis hard for hostile power such man to overreach. -
MeaningIt is impossible for any one to conquer him by intrique who possesses power of speech, and is neither faulty nor timid.
0646. வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல்
0646. Vetpaththaanj Chollip Pirarsol
-
குறள் #0646
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
-
அதிகாரம்சொல்வன்மை (Solvanmai)
Power in Speech
-
குறள்வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்
மாட்சியின் மாசற்றார் கோள். -
விளக்கம்பிறர் விரும்புமாறு தாம் சொல்லி, பிறர் சொல்லுவதன் பயனைத் தாம் அறிந்து கொள்ளுதல், குற்றமற்ற உயர்ந்த கொள்கையாகும்.
-
Translation
in EnglishCharming each hearer’s ear, of others’ words to seize the sense,
Is method wise of men of spotless excellence. -
MeaningIt is the opinion of those who are free from defects in diplomacy that the minister should speak so as to make his hearers desire (to hear more) and grasp the meaning of what he hears himself.
0645. சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல்
0645. Solluga Sollaip Pirithorsol
-
குறள் #0645
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
-
அதிகாரம்சொல்வன்மை (Solvanmai)
Power in Speech
-
குறள்சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து. -
விளக்கம்தாம் சொல்லக் கருதிய சொல்லை வெல்லும் சொல்லாகிய வேறு சொல் இல்லாமையை அறிந்து, திறமையாகச் சொல்லுதல் வேண்டும்.
-
Translation
in EnglishSpeak out your speech, when once ’tis past dispute
That none can utter speech that shall your speech refute. -
MeaningDeliver your speech, after assuring yourself that no counter speech can defeat your own.
0644. திறனறிந்து சொல்லுக சொல்லை
0644. Thiranarindhu Solluga Sollai
-
குறள் #0644
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
-
அதிகாரம்சொல்வன்மை (Solvanmai)
Power in Speech
-
குறள்திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூஉங்கு இல். -
விளக்கம்தாம் சொல்லக் கருதியதைச் சொல்லின் திறத்தை அறிந்து சொல்லுதல் வேண்டும். அதனினும் மேம்பட்ட அறமும் பொருளும் இல்லை.
-
Translation
in EnglishSpeak words adapted well to various hearers’ state;
No higher virtue lives, no gain more surely great. -
MeaningUnderstand the qualities (of your hearers) and (then) make your speech; for superior to it, there is neither virtue nor wealth.
0643. கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க்
0643. Kettaarp Pinikkum Thagaiyavaaik
-
குறள் #0643
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
-
அதிகாரம்சொல்வன்மை (Solvanmai)
Power in Speech
-
குறள்கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல். -
விளக்கம்கெட்டவர்களைத் தன்வயமாக்கும் தன்மையுடையதாகவும், கேளாதவர்களும் கேட்க விரும்புமாறும் சொல்வதே சிறந்த சொல் எனப்படும்.
-
Translation
in English‘Tis speech that spell-bound holds the listening ear,
While those who have not heard desire to hear. -
MeaningThe (minister’s) speech is that which seeks (to express) elements as bind his friends (to himself) and is so delivered as to make even his enemies desire (his friendship).
0642. ஆக்கமுங் கேடும் அதனால்
0642. Aakkamung Kedum Adhanaal
-
குறள் #0642
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
-
அதிகாரம்சொல்வன்மை (Solvanmai)
Power in Speech
-
குறள்ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு. -
விளக்கம்ஒருவனுக்கு வாழ்வும் தாழ்வும் அவனுடைய நாவில் பிறக்கும் சொல்லால் வருதலால், சொல்லில் தவறு உண்டாகாமல் காத்துக் கொள்ளுதல் வேண்டும்.
-
Translation
in EnglishSince gain and loss in life on speech depend,
From careless slip in speech thyself defend. -
MeaningSince (both) wealth and evil result from (their) speech, ministers should most carefully guard themselves against faultiness therein.
0641. நாநலம் என்னும் நலனுடைமை
0641. Naanalam Ennum Nalanudaimai
-
குறள் #0641
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
-
அதிகாரம்சொல்வன்மை (Solvanmai)
Power in Speech
-
குறள்நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத்து உள்ளதூஉம் அன்று. -
விளக்கம்சொல்வன்மை என்ற நலம், மற்ற நலன்களுள் அடங்குவதன்று; ஆகையால், நாவின் நலம் என்று சொல்லப்படுகின்ற நலம் ஒருவருக்குச் சிறந்த உடைமையாகும்.
-
Translation
in EnglishA tongue that rightly speaks the right is greatest gain,
It stands alone midst goodly things that men obtain. -
MeaningThe possession of that goodness which is called the goodness of speech is (even to others) better than any other goodness.
0640. முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே
0640. Muraippadach Choozhndhum Mudivilave
-
குறள் #0640
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
-
அதிகாரம்அமைச்சு (Amaichchu)
The Office of Minister of State
-
குறள்முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்
திறப்பாடு இலாஅ தவர். -
விளக்கம்செயலைச் செய்து முடிக்கும் திறமையில்லாத அமைச்சர், செய்யவேண்டிய செயல் பற்றி முறைப்படி ஆலோசித்து வைத்தும், செய்யும் பொது அதனை முடிவாகச் செய்யமாட்டார்.
-
Translation
in EnglishFor gain of end desired just counsel nought avails
To minister, when tact in execution fails. -
MeaningThose ministers who are destitute of (executive) ability will fail to carry out their projects, although they may have contrived aright.
Category:Thirukural
0639. பழுதெண்ணும் மந்திரியின் பக்கத்துள்
0639. Pazhuthennum Mandhiriyin Pakkaththul
-
குறள் #0639
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
-
அதிகாரம்அமைச்சு (Amaichchu)
The Office of Minister of State
-
குறள்பழுதெண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர்
எழுபது கோடி உறும். -
விளக்கம்அருகில் இருந்து தீங்கு செய்ய என்னும் அமைச்சனை விட எழுபது கோடி பகைவர் பக்கத்தில் இருத்தல் நன்மை தரத்தக்கதாகும்.
-
Translation
in EnglishA minister who by king’s side plots evil things
Worse woes than countless foemen brings. -
MeaningFar better are seventy crores of enemies (for a king) than a minister at his side who intends (his) ruin.
Category:Thirukural
0638. அறிகொன்று அறியான் எனினும்
0638. Arikondru Ariyaan Eninum
-
குறள் #0638
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
-
அதிகாரம்அமைச்சு (Amaichchu)
The Office of Minister of State
-
குறள்அறிகொன்று அறியான் எனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன். -
விளக்கம்அறிந்து சொன்னவரின் அறிவையும் அழித்துத் தானும் அறியாமலும் உள்ள அரசனுக்கும் நல்லன கூறுதல் அமைச்சரின் கடமை.
-
Translation
in English‘Tis duty of the man in place aloud to say
The very truth, though unwise king may cast his words away. -
MeaningAlthough the king be utterly ignorant, it is the duty of the minister to give (him) sound advice.
Category:Thirukural
0637. செயற்கை அறிந்தக் கடைத்தும்
0637. Seyarkai Arindhak Kadaiththum
-
குறள் #0637
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
-
அதிகாரம்அமைச்சு (Amaichchu)
The Office of Minister of State
-
குறள்செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல். -
விளக்கம்ஒரு செயலைச் செய்தற்குரிய வழியை நூல் மூலம் அறிந்திருப்பினும், உலக இயல்பையும் அறிந்து, அதன்படி செய்யவேண்டும்.
-
Translation
in EnglishThough knowing all that books can teach, ’tis truest tact
To follow common sense of men in act. -
MeaningThough you are acquainted with the (theoretical) methods (of performing an act), understand the ways of the world and act accordingly.
Category:Thirukural
0636. மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு
0636. Mathinutpam Noolodu Udaiyaarkku
-
குறள் #0636
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
-
அதிகாரம்அமைச்சு (Amaichchu)
The Office of Minister of State
-
குறள்மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
யாவுள முன்நிற் பவை. -
விளக்கம்மதிநுட்பத்தோடு நூலறிவும் உடைய அமைச்சருக்குமுன், பகைவரின் அதிக நுட்பமுடைய உபாயங்கள் எதிர் நிற்கமாட்டா.
-
Translation
in EnglishWhen native subtilty combines with sound scholastic lore,
‘Tis subtilty surpassing all, which nothing stands before. -
MeaningWhat (contrivances) are there so acute as to resist those who possess natural acuteness in addition to learning ?.
Category:Thirukural
0635. அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ்
0635. Aranarindhu Aandramaindha Sollaanenj
-
குறள் #0635
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
-
அதிகாரம்அமைச்சு (Amaichchu)
The Office of Minister of State
-
குறள்அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந்
திறனறிந்தான் தேர்ச்சித் துணை. -
விளக்கம்அறங்களை அறிந்து, அறிவு நிறைந்த சொல்லையுடையவனாய், எப்பொழுதும் செயல்களைச் செய்யும் வழிகளை அறிந்தவன், ஆலோசனை கூறுதற்குரிய துணையாவான்.
-
Translation
in EnglishThe man who virtue knows, has use of wise and pleasant words.
With plans for every season apt, in counsel aid affords. -
MeaningHe is the best helper (of the king) who understanding the duties, of the latter, is by his special learning, able to tender the fullest advice, and at all times conversant with the best method (of performing actions).
Category:Thirukural
0634. தெரிதலும் தேர்ந்து செயலும்
0634. Therithalum Therndhu Seyalum
-
குறள் #0634
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
-
அதிகாரம்அமைச்சு (Amaichchu)
The Office of Minister of State
-
குறள்தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்
சொல்லலும் வல்லது அமைச்சு. -
விளக்கம்செய்வதற்குரிய செயல் பற்றி ஆராய்தல், ஆராய்ந்து செய்தல், அறிவுரைகளைத் துணிந்து சொல்லுதல் ஆகியவற்றில் வல்லவனே அமைச்சனாவான்.
-
Translation
in EnglishA minister has power to see the methods help afford,
To ponder long, then utter calm conclusive word. -
MeaningThe minister is one who is able to comprehend (the whole nature of an undertaking), execute it in the best manner possible, and offer assuring advice (in time of necessity).
Category:Thirukural
0633. பிரித்தலும் பேணிக் கொளலும்
0633. Piriththalum Penik Kolalum
-
குறள் #0633
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
-
அதிகாரம்அமைச்சு (Amaichchu)
The Office of Minister of State
-
குறள்பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
பொருத்தலும் வல்ல தமைச்சு. -
விளக்கம்பகைவரின் துணைவரைப் பிரித்தல், தம் துணைவரைப் பேணல், தம்மை விட்டுப் பிரிந்தவரைத் தம்மோடு சேர்த்தல் ஆகியவற்றில் வல்லவனே அமைச்சனாவான்.
-
Translation
in EnglishA minister is he whose power can foes divide,
Attach more firmly friends, of severed ones can heal the breaches wide. -
MeaningThe minister is one who can effect discord (among foes), maintain the good-will of his friends and restore to friendship those who have seceded (from him).
Category:Thirukural
0632. வன்கண் குடிகாத்தல் கற்றறிதல்
0632. Vankan Kudikaaththal Katraridhal
-
குறள் #0632
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
-
அதிகாரம்அமைச்சு (Amaichchu)
The Office of Minister of State
-
குறள்வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு
ஐந்துடன் மாண்டது அமைச்சு. -
விளக்கம்அஞ்சாமை, நற்குடிப்பிறப்பு, நாட்டைக் காத்தல், நீதி நூல்களைக் கற்றறிதல், முயற்சியுடைமை ஆகிய ஐந்திலும் மாட்சிமையுடையவனே அமைச்சனாவான்.
-
Translation
in EnglishA minister must greatness own of guardian power, determined mind,
Learn’d wisdom, manly effort with the former five combined. -
MeaningThe minister is one who in addition to the aforesaid five things excels in the possession of firmness, protection of subjects, clearness by learning, and perseverance.
Category:Thirukural
0631. கருவியும் காலமும் செய்கையும்
0631. Karuviyum Kaalamum Seigaiyum
-
குறள் #0631
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அமைச்சியல் (Amaichchiyal) – Ministers of State
-
அதிகாரம்அமைச்சு (Amaichchu)
The Office of Minister of State
-
குறள்கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்டது அமைச்சு. -
விளக்கம்தொழில் செய்வதற்குத் தேவையான கருவி, அதற்கு ஏற்ற காலம், செய்யும் விதம், செய்யப்படும் அரிய செயல் ஆகியவற்றை நன்கு ஆராய வல்லவனே அமைச்சனாவான்.
-
Translation
in EnglishA minister is he who grasps, with wisdom large,
Means, time, work’s mode, and functions rare he must discharge. -
MeaningThe minister is one who can make an excellent choice of means, time, manner of execution, and the difficult undertaking (itself).
Category:Thirukural